எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 5, 2013

ஃப்ரூட் சாலட் – 40 – ஏ.கே. 47 – மனைவிக்கு தாஜ்மஹால் – கண் சிமிட்டாதே!


இந்த வார செய்தி:பட உதவி: கூகிள்பஞ்சாப் மாநிலத்தில் வண்டிகளுக்கான சில பதிவு எண்களை ஏலம் விடுவது வழக்கம். வண்டிகளை பதிவு செய்யும் போது வரிசையாக வந்து கொண்டிருப்பதில் சில எண்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை ஏலம் விட்டு நிறைய சம்பாதிக்கிறது அரசாங்கம். சென்ற மாதம் இப்படி ஒரு ஏலத்தில் எடுக்கப்பட்ட வண்டிகளின் பதிவு எண்கள் பல லட்சங்களை பஞ்சாப் மாநிலத்திற்குச் சம்பாதித்துக் கொடுத்தது!

பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாநிலத்தில் கடோவால் கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயி. தனது Honda Activa வாகனத்திற்கு பதிவு செய்யும்போது இப்படி ஏலத்தில் தேர்ந்தெடுத்த எண் PB-07 AK-47. இந்த வண்டி வாங்கிய விலை ரூபாய் 53,000/- ஆனால் மேலே சொன்ன பதிவு எண்ணை ஏலத்தில் வாங்கியது எவ்வளவுக்கு எனத் தெரியுமா? கொஞ்சம் நஞ்சம் அல்ல – ரூபாய் ஏழு லட்சத்திற்கு!

ஐந்து லட்சம் வரை இவருக்குப் போட்டி இருந்திருக்கிறது. ஏழு லட்சத்திற்கு இவர் ஏலம் எடுத்திருந்தாலும், இவர் எண்ணைப் பெற்ற பிறகு சொன்னது இன்னும் அதிர்ச்சி தந்தது – இந்த எண்ணிற்காக 13 லட்சம் வரை செலவு செய்ய இவர் தயாராக இருந்திருக்கிறார்!

இந்த விவசாயி குல்பீர் சிங் தன்னிடம் இருக்கும் Skoda Laura வண்டிக்கும் இப்படி தான் ஒரு எண்ணை ஏலத்தில் எடுத்திருக்கிறார் முன்னரும் – என்ன எண் தெரியுமா? PB-38 0001இப்போது ஏலத்தில் எடுத்த எண்ணையும் ஒரு Fortuner வண்டி வாங்கி அதற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்யப் போவதாக சொல்லி இருக்கிறார்.

பஞ்சாபில் இதுபோல வண்டியின் பதிவு எண்களை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் நிறையவே.  PB-07 AK-56 , CH-01 0007, CH-01 0001 போன்ற எண்களையும் ஏலத்தில் எடுப்பவர்கள் உண்டு. இந்த வருடத்தின் ஏலத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்திற்கு ஏலத்தில் கிடைத்த பணம் ஒரு கோடிக்கு அருகே. சாதாரணமாக பதிவு செய்வதற்குக் கிடைக்கும் பணத்தினை விட இது பல மடங்கு அதிகம்!

ஒவ்வொருவருக்கு ஒரு வித ஆசை! இவர்களுக்கு இப்படி ஒரு விளம்பர ஆசை! பஞ்சாபிகள் மட்டும் தான் இப்படி என எண்ணி விடாதீர்கள்! கேரளாவிலும் இந்த ஆசை உள்ளவர்கள் உண்டு. KL-01 AK-47 எண்ணை ஒருவர் ரூபாய் 2.95 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததுண்டு! என்னவோ, இந்த எண்கள் கொண்ட வாகனத்தில் வந்து வரிசையாக மக்களைச் சுட்டுத் தள்ளாமல் இருந்தால் சரி!

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஓடும்போது விழுந்து விடுவோம் என நினைப்பவனை விட, விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என நினைப்பவனே ஜெயிப்பான்!

இந்த வார குறுஞ்செய்தி

மனைவி: என்னை நீங்க எவ்வளவு காதலிக்கறீங்க?
கணவன்: ஷாஜஹான் மும்தாஜை காதலிக்கும் அளவுக்கு!
மனைவி: அப்படின்னா நான் இறந்தால் எனக்காக நீங்களும் ஒரு தாஜ்மஹால் கட்டுவீங்களா?
கணவன்: நான் அதற்கான நிலம் கூட வாங்கிவிட்டேன். உன்னாலே தான் தாமதம்!

ரசித்த புகைப்படம்: எங்கிருந்தாவது உணவு கொண்டு வந்து தனது மக்களுக்குத் தருவதில் தாய்ப் பறவைக்கு இருக்கும் பரிவு!  க்ரேட்!

ராஜா காது கழுதை காது:

சென்னையில் நண்பர் பால கணேஷ் அவர்களோடு ஒரு மாலை நேரத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு பெட்டிக் கடை வாசலில் – ஒரு குடிமகன் பேசியது – “என்னா தண்ணில இருந்தா என்னை ஏமாத்த முடியுமா? பத்து ரூபாய்க்கு இரண்டு தண்ணீ பாக்கெட்டும், ஊருகாயும் கொடுன்னு கேட்டா ஒரு தண்ணி பாக்கெட் தர! ஒழுங்கு மரியாதையா கொடு, நான் போய் இன்னுமொரு கோட்டர் தண்ணி அடிக்கணும்!  

நான் சொல்லி இருப்பது எழுத முடிந்தவை மட்டுமே....  எழுத முடியாதவை – சரளமாய் விழுந்தது நடுநடுவே.

எங்கே செல்லும் இந்தப் பாதை! யாரோ யாரோ அறிவாரோ! :(

ரசித்த காணொளி:

ஒருவரால் இருபத்தி நான்கு மணி நேரம் கண் சிமிட்டாது இருக்க முடியுமா? இருந்திருக்கலாம் இது மட்டும் நடக்காது இருந்திருந்தால்! 
படித்ததில் பிடித்தது:


ஒட்டி உற‌வாடும்
குட்டிப்பூக் கூட்டம்,
பொறாமை கொள்ளும்
காற்றின் சீற்றம்.

உரசும் காற்றினில்
உதிரும் பிஞ்சுக‌ள்,
இருந்தும் கிளை தாழ்த்தி
தரை தொடும் காய்க‌ள்.

கொத்தாய் தொங்கும்
கிளிகளின் மூக்கு,
சத்தாய் விளையும்
சப்பட்டை நாக்கு.

பொன் நிற‌ மேனியில் ...
மென் பட்டு சேலையில் ...
ஊரே தேடிடும்
உன் கனி வண்ணம்.

முக்கனி மூன்றில்
முதன்மை உன்கனி,
சித்திரை வைகாசியில்
மணக்கும் மாங்கனி.

சுவைக்கும் க‌னிக‌ளில்,
எப்புற‌மும் துளையில்லை,
எப்ப‌டி உள் சென்றாய் ?
தொப்பென்று விழும் வண்டே !

எங்கெங்கிலும் மா காய்க்க‌,
இந்திய மா இனிது,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
உல‌க‌ம் சொல்லும் அதை.

மா உந்தன் கிளைகளில்
மர ஊஞ்சல் க‌ட்டி ஆட‌,
தேனான‌ இசைபோல‌
தென்ற‌லும் சேர்ந்துவ‌ர‌,

சிற்றெறும்புக் க‌டி ம‌ற‌ந்தேன்,
சின‌ம்கொள் ம‌ன‌ம் ம‌ற‌ந்தேன்,
ஊண் உண்ணவும் ம‌ற‌ந்தேன்...
உலகையே ம‌ற‌ந்து நின்றேன்!

-          சதங்கா.இந்த வார வலைச்சர அறிமுகங்களில் சதங்கா அவர்களின் வலைப்பூவும் ஒன்று. அவரது வலைப்பூவினைப் படித்த போது அவரது இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நெய்வேலி வீட்டில் மாமரத்தில் தானாக பழுத்த பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட சுவை இக்கவிதை படித்ததில் கிடைத்தது.   தற்போது அதிகமாய் எழுதுவதில்லை என்பது வருத்தம் தரும் விஷயம்.


ன்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. தமிழ் நாட்டிலும் ஏலம் உண்டு சார்.. ஆனால் இந்த அளவிற்கு வருவாய் ஈட்டித் தருமா என்று தெரியவில்லை....

  முகபுத்தக இற்றை அருமை

  ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 2. //நான் அதற்கான நிலம் கூட வாங்கிவிட்டேன். உன்னாலே தான் தாமதம்!//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

  எல்லமே அருமை. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 3. ஓடும்போது விழுந்து விடுவோம் என நினைப்பவனை விட, விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என நினைப்பவனே ஜெயிப்பான்!

  ஃப்ரூட் சாலட்- அருமை. பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. வாரா வாரம் உங்க ஃப்ரூட் சாலட் கருத்துக்கு இனியவையே.

  எப்புறமும் துளையில்லை எப்படி உள்சென்றாய்... மிக ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 5. கணவன் மனைவி உரையாடல்! படித்ததில் பிடித்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 6. தாஜ்மஹால்.. ஹஹஹ கில்லாடிங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி!

   Delete
 7. எல்லா அயிட்டங்களுமே அருமை. கவிதையும் காணொளியும் ஜூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 8. ஃப்ரூட் சலாட் மிகமிக நன்றாக இருக்கிறது சகோ. ரசித்தேன் நானும்.
  உங்களைக்கவர்ந்த கவிதையும் அருமையாக இருக்கிறது.

  பகிர்வுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 9. குல்பீர் சிங், குபேர் சிங்காக இருந்ததால் வண்டிக்கு ஏலத்தில் எண் வாங்கினார். ஏதோ நம்மால முடிஞ்சது இவரப் பார்த்து குபீர் சிங்குனு சிரித்துக் கொண்டு போய் விட வேண்டியதுதான்.

  இந்தவாரக் குறுஞ்செய்தி - சூப்பர்! இனி எந்த மனைவியாவது எனக்காக தாஜ்மஹால் கட்டுவீங்களான்னு கேட்பாங்க.

  கவிதை அழகு!
  //எங்கெங்கிலும் மா காய்க்க‌,
  இந்திய மா இனிது//

  சும்மா சொல்லவில்லை!
  அம்மா போல் வருமா! அம் மா போல் வருமா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 10. ஃப்ரூட் சுவையாய் இருந்தது. தாஜ்மஹல் ஹைலைட் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 11. எல்லாமே அருமை.

  AK 47 நியூஸ் ஏற்கெனவே படித்தேன்.

  புகைப்படம் அழகு.

  காணொளி நான் பார்ப்பதில்லை. (மன்னிக்கவும்!) என்னுடைய கணினி உடனே நின்று தாமதப் படுத்தி விடும் என்பதால்!

  கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   காணொளி பார்ப்பதில்லை - சில சமயங்களில் இப்படித்தான் கணினிக்குப் பிரச்சனை ஏற்படுத்தி விடுகின்றன சில காணொளிகள்.....

   Delete
 12. அனைத்தும் அருமை...

  தித்திக்கும் ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. குருஞ்ச்செய்தி செம ...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜீவன்சுப்பு

   Delete
 14. அத்தனை லட்சமும் கள்ளப்பணத்துல குடுப்பாங்களோ?

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 15. விளம்பர வீடியோ அருமை!
  தாய் பறவையும் குஞ்சும் என்ன பரிவு பாசம்!
  சதங்கா வின் கவிதை ஸ்ரீரங்கத்தில் கோடை விடுமுறையில் சாப்பிட்ட மாம்பழங்களை நினைவுக் கொண்டு வந்தது.
  அருமையான ப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 16. இந்த வார முகப்புத்தக இற்றை, கவிதை காணொளி , பறவை படம் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 17. ஊட்டுக்கிழவியைக்கூப்பிட்டு இந்தா இதப்பாரு அப்படின்னு
  தாஜ் மஹால் ஜோக் காட்டினேன்.
  படிச்சா.

  கிழவா !!
  இந்த தாஜ் கதையெல்லாம் எனக்கு வேண்டாம்.
  ஆஜ் என்ன வாங்கித்தாரே... அன்னி அன்னிக்கு கதையை முடி.

  அப்போதைக்கு இப்போதேகேட்டுவைத்தேன்.
  என் அரங்கத்து பெருமாளே

  என்றாள்.

  சுப்பு தாத்தா.
  ஆஜ் = இன்னிக்கு
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. ஆஹா மாட்டிக்கிட்டீங்களா! இதெல்லாம் படிக்க மட்டும் தான் நல்லா இருக்கும். நம்ம சொன்னா அவ்வளவுதான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 18. சாலட் அருமை குறுஞ்செய்தி சூப்பர்
  மின்னல் வரிகள் கணேஷை பழிக்கு பழி வாங்கியாச்சா

  ReplyDelete
  Replies
  1. அடடா கணேஷ் அண்ணனை பழி வாங்கறதா? அவரு ஒண்ணும் தப்பு பண்ணலையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 19. முதல் தகவல் வியப்பு
  முகபுத்தக வரி அருமை
  குறுஞ்ச்செய்தி ரொம்ப அதிகம்
  படமும் கண்ணொளியும் மிக அருமை
  கவிதை அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 20. நல்ல தொகுப்பு. ரசித்த புகைப்படம் மிக அழகு.

  சதங்கா சிறந்த கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல அருமையான ஓவியரும், சமையலில் நிபுணரும். அவற்றுக்கும் தனித்தனி வலைப்பூக்கள் வைத்துள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. சதங்கா பற்றிய மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 21. தாஜ்மஹால் :))

  முகநூல்செய்தி ,படம்,காணொளி, கவிதைஎன சுவைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. அனைத்துப் பகுதிகளையும் வெகுவாய் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 23. ஏலச் செய்தி படித்து தலை சுற்றியது.
  இப்படியுமா ? கிறுக்குப் பய புள்ளைங்க .
  ம்ம்.. மாம்பழ சீசன் ஆரம்பிச்சாச்சா ?
  ஜில்லென்ற சலாட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 24. ப்ரூட் சாலட் சென்னை வெயிலுக்கு இதமாக நல்ல கனிந்த சுவையுள்ள பழங்கள் சேர்த்ததாக இருந்தது.

  சென்ற மாதம் இப்படி ஒரு ஏலத்தில் எடுக்கப்பட்ட வண்டிகளின் பதிவு எண்கள் பல லட்சங்களை பஞ்சாப் மாநிலத்திற்குச் சம்பாதித்துக் கொடுத்தது!//

  நம்ப ஊர்ல கூட ஜனங்க இப்படி க்ரேசியா இருந்தா டாஸ்மாக்கை எல்லாம் மூடிட்டு அரசு இப்படி சம்பாதிக்கலாமே.

  மொத்தத்தில் ஜில்லென்றொரு அருமையான பதிவு.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!

   Delete
 25. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....