எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 24, 2013

நெஞ்சில் சுரந்த அருள் - ”தாய்” சிறுகதைசில மாதங்களுக்கு முன்னர் தில்லியில் இருக்கும் சக பதிவர் கயல்விழி முத்துலெட்சுமி சாகித்ய அகாதெமி வெளியீடான ந. பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்புத்தகத்தினை படிக்கக் கொடுத்தார். அவ்வப்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது எங்களுக்கு வழக்கம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 32 கதைகள். தொகுத்து அளித்தவர் திரு வெங்கட் சாமிநாதன் அவர்கள்.விஞ்ஞானத்துக்குப் பலி எனும் கதையில் ஆரம்பிக்கும் இந்தப் புத்தகத்தில் கடைசி கதை பஞ்சகல்யாணி. ஒவ்வொரு கதையிலும் படிப்பவர்களை கூடவே பயணிக்கச் செய்யும் வித்தை எனக்கு மிகவும் பிடித்தது.

அடகு என்னும் சிறுகதையில் காசு இல்லாத கொடுமைக்கு, பத்து ரூபாய் கடனுக்காக கட்டிய மனைவியையும் மகனையும் மூன்று மாதத்திற்கு அடகு பேசி வைத்த கதையை சொல்கிறார். மாதாமாதம் சம்பளம் வாங்கி அதில் தண்ணி அடித்துவிட்டு மனைவியை மீட்காது இருந்து விட கடைசியில் மீட்டானா இல்லையா என்பதைச் சொல்கிறது இச் சிறுகதை.

ஒவ்வொரு சிறுகதையும் உங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் ஒரே ஒரு கதையின் சுருக்கத்தினை மட்டும் இங்கே உங்களுக்காகத் தருகிறேன். இக்கதையின் தலைப்பு “தாய்”.

தாய்

ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். விழுந்தடித்து ஓடும் நக்ஷத்திரங்களையும், மசிச்சித்திரங்கள் போன்ற மரங்களையும், நீர்ப்பரப்புகளையும் இருளைப் பிளந்து செல்லும் ‘சர்ச்லைட்வெளிச்சத்தையும் மாறி மாறிப் பார்க்கும் லயத்திலிருந்த என்னை, ஒரு குழந்தையின் அழுகை சப்தம் பிடித்திழுத்தது. ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்த கழுத்தை உள்ளுக்கிழுத்தேன்.

இப்படி ஆரம்பிக்கிறது கதை. குழந்தை அழுதது எனச் சொன்னது உலர்ந்த சரீரத்தோடு கூடிய நாயுடு ஸ்திரியின் ஒன்பது மாதக் குழந்தை. பிள்ளைக்குக் கொஞ்சம் எடுத்து விடேன்என ஒரு கிழவி சொல்ல, “எல்லாம் ஆயிடுச்சு, மொக்கு மொக்குன்னு குடிச்சுட்டுக் கத்துது. இம்மே பாலிலே; ரத்தம் தான் வரும்என்று சொல்கிறாள் அந்தத் தாய். அக்குழந்தை பாலில்லாத மார்பின் வேதனையை அறியாது ஸ்திரீயின் மடிமீது போய் ஏறிற்று. அதை அவள் அலுப்புடன் தள்ள, ஐந்து நிமிஷம் விடாது அலறித் தீர்த்து பிறகு தூங்கி விட்ட்து.

பின்பக்கத்திலிருந்து “ளொள், ளொள்என்று இருமிக்கொண்டே ஒரு குழந்தை அழத்துடங்கிற்று. நாங்கள் அதை முதலில் சட்டை செய்யவில்லை. அடுத்தாற்போல, கரகரப்பான ஒரு ஆண்பிள்ளைக் குரல், “ஆராரோ ஆரிர்ரோ ஆளப் பொறந்தானோ....  அடிச்சாரைச் சொல்லியளு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்என்று குழந்தையை சமாதானப்படுத்த முயன்றதும் எழுந்திருந்து திரும்பிப் பார்த்தேன். நாயுடு ஸ்த்ரீயும் எழுந்து பார்த்தாள்.  

நாற்பது நாற்பந்தைந்து வயது மதிக்கத்தக்க ஆண், பக்கத்தில் பெரிய பையன் – ஆறு வயதிருக்கலாம், இரண்டு வயது பெண் ஒருத்தி, ஒரு கைக்குழந்தை. பெண்ணின் கழுத்தில் அட்டிகை பதக்கம் போல, ஒரு ரப்பர் நிப்பிள் கருப்புக் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

இருமிய குழந்தை கைக்குழந்தை, அதுவும் சாதாரண இருமல் அல்ல, கக்குவான் இருமல். நடுக்குழந்தைக்கும் அதே. மூன்று குழந்தைக்கும் தாய் இறந்து போய் விட, தகப்பனே மூன்றையும் கவனித்துக் கொள்கிறாராம். மீண்டும் குழந்தைகள் இரும, காலண்டை இருந்த தூக்குக் கூடையிலிருந்து ஒரு புட்டியை எடுத்து அதிலிருந்து எதையோ ஒரு அவுன்ஸ் கிளாஸில் ஊற்றி இரண்டு குழந்தைகளுக்கும் கொடுக்கிறார். என்ன மருந்தா கொடுத்தே அதுங்களுக்கு?

சொன்ன பதில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ‘இல்லே, இந்த இருமலுக்கு மருந்து இல்லியாமே. தானே தான் போகணுமாம். குடுக்கல்லே.... நான் கொடுத்தது பிராந்தி

நாயுடு ஸ்த்ரீ எழுந்து போய் ‘பாவம்! தாயில்லாப் புள்ளைங்களா?என்று அங்கலாய்த்தாள்.

அரை மணி நேரம் சென்றிருந்தது. அனைவரும் விதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, கைக்குழந்தை மறுபடியும் இருமலில் துடித்தது. வாயிலிருந்த நிப்பிள் கீழே விழ குழந்தை அழ ஆரம்பித்தது. உட்கார முடியாது அழுகைச் சத்தம். குழந்தையின் தகப்பன் மீண்டும் கூடை நோக்கி கை நீட்ட, அந்த ஸ்த்ரீ சொன்னாள்....

பிராந்தியைத் தொடாதீங்க. பிள்ளையை இப்படி என்கிட்ட குடுங்கஎன்று குறுக்கிட்டாள் நாயுடு ஸ்த்ரீ. குழந்தையை இரு கையாலும் வாங்கித் தன் உலர்ந்த மார்போடு சார்த்திக் கொண்டாள். குழந்தையின் இருமல் ஓய்ந்தது. அவள் நெஞ்சில் அருள் சுரந்தது. ஆனால் மார்பில் பால் சுரந்ததோ என்னமோ!    

என்ன நண்பர்களே “தாய்கதைச் சுருக்கத்தினை ரசித்தீர்களா? இது போல இத் தொகுப்பில் இருக்கும் 32 கதைகளுமே நல்ல கதைகள். சாகித்ய அகாதெமி நூற்றாண்டு விழாவின் போது வெளியிட்டு இருக்கும் இப்புத்தகத்தின் விலை ரூபாய் 110/-. சென்னையில் கிடைக்குமிடம்: சி.ஐ.டி. வளாகம், டி.டி.டி.ஐ. அஞ்சல், தரமணி, சென்னை – 600 013.

மீண்டும் வேறு ஒரு புத்தகத்தினைப் படித்த அனுபவத்தோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

42 comments:

 1. // நான் கொடுத்தது பிராந்தி’//
  படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது.
  //அவள் நெஞ்சில் அருள் சுரந்தது. ஆனால் மார்பில் பால் சுரந்ததோ என்னமோ!” //
  தாய் சிறுகதை நெஞ்சை தொட்டது.
  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 2. அடப்பாவமே சின்னக் குழந்தைக்கு பிராந்தியா...?

  நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபால்ன்.

   Delete
 3. தமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் இணைத்து முதலாம் வாக்கும் அளித்திட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 4. தாய் கதை சுருக்கம் கதையை படிக்கத் தூண்டுகிறது. நல்ல சிறுகதை தொகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.ந.பிச்ச மூர்த்தி அவர்களின் காதிலை படித்ததில்லை. முடிந்தால் வாங்கிப் படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. ரசித்தேன் ரசித்தேன்....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 6. நிச்சயமாக ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 7. என்ன இப்படி காலை நேரத்துலே கண் கலங்கி இருக்குது. கம்ப்யூட்டரை ரொம்ப நேரம் பார்த்துகினே
  இருக்காதீக அப்படினு சொன்னா கேட்டாதானே.... என்றாள் என் வூட்டு அம்மா.

  இத கொஞ்சம் படிச்சு பாரு. அப்படின்னு இதக் காமிச்சேன்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. அடடா.... கதை கஷ்டப்படுத்திடுச்சா உங்கள?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 8. ந.பிச்சமூர்த்தி அவர்களின் கதைகள் உயிரோட்டம் கொண்டவை.
  எங்கள் காலத்தியவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .நீங்களும் படித்ததையும் கயல்விழி
  கொடுத்ததையும் அறிந்து மிக மகிழ்ச்சி. அந்தக் காலத்தில் குழந்தை பிறந்ததுமே தாய்க்குப் பிராந்தி கொடுப்பார்கள். ஒரு ஸ்பூன் அளவு.
  நான் சொல்வது 60 வருடங்களுக்கு முன்னால்:)

  ReplyDelete
  Replies
  1. //எங்கள் காலத்தியவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .நீங்களும் படித்ததையும் கயல்விழி
   கொடுத்ததையும் அறிந்து மிக மகிழ்ச்சி.//

   :))))) எதையும் படிப்பதுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 9. தன் குழந்தையை பால் இல்லை என்று தள்ளிவிடுபவள், அடுத்த குழந்தை தாயில்லாமல் படும் அல்லலை கண்டு மனம் பொறுக்காமல் மார்பில் அணைத்துக் கொள்வது மனதை நெகிழ வைத்தது.

  நீங்கள் போட்டிருக்கும் படம் யாருடையது? ந. பிச்சமூர்த்தி?

  புத்தக விமரிசனம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா... அது திரு ந. பிச்சமூர்த்தி அவர்களின் படம் தான்.... இணையத்திலிருந்து எடுத்தது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா......

   Delete
 10. நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றிய அறிமுகம். மிக்க நன்றி, வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. சுவையான தொகுப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. சுவையான தொகுப்பு தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. கொடுமை! வேறுவார்த்தை இல்லை! சொல்ல!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.....

   Delete
 13. நெஞ்சைத்தொட்டது சிறப்பான அறிமுகம் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 14. அருமையான கதை
  சுவை குன்றாமல் கதைச் சுருக்கம்
  சொன்னவிதம் மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. அருமையான கதைப்பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 16. ந. பிச்சமூர்த்தியின் அந்தக் கதை நச்சென்று மனதை பிடித்து உலுக்கியது. இன்றைக்கும் அவர் கதைகளை ரசிக்கிறவர்கள் இருப்பது மனதுக்கு ஆசுவாசம் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. நா. பிச்சைமுத்து அவர்களைப் பற்றி தெரியும்.
  ஆனால் படித்ததில்லை.
  சந்தர்ப்பம் கிடைத்தால் வாங்கி படித்துவிட வேண்டும்
  என்ற ஆவலை கொடுத்தது உங்களின் பதிவு.
  பகிர்விற்கு நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 18. என்ன வல்லி உங்க காலம் எங்க காலம்ன்னு .. நீங்க எவ்ளோ யங்..:))

  வெங்கட் நீங்க முடிச்சிட்டீங்க.. ஆனா உங்க புக் நான் இன்னும் முடிக்கல..:)

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை.... பொறுமையா படிச்சுட்டு கொடுங்க......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....

   Delete
 19. நல்லதோர் புத்தக அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 20. நல்லதொரு அறிமுகம் வெங்கட்.. நன்றிகள் பல..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 21. Dear kittu,

  Thai kadhai manadhai vurukkivittadhu. Idaipondra pala kadhai surukkangalai veliyidavum.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....