எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, January 7, 2014

ஹிந்தி எதிர்ப்பும் தில்லி அனுபவங்களும் பட உதவி: கூகிள்

நெய்வேலியின் NLC Boys Senior Secondary School, Block-10 எனும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம். ஒன்பதாவது, அல்லது பத்தாம் வகுப்பாக இருக்க வேண்டும். பள்ளியின் சில மாணாக்கர்கள், மாணவர்கள் இயக்கம் ஒன்றில் தீவிரமாக இருந்தவர்கள்.  தொடர்ந்து சில நாட்களுக்கு மேல் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் – ஏதாவது போராட்டத்தில் குதிப்பார்கள்!

1984/1985 வருடம் இப்படி திடீரென ஒரு நாள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற ஒன்றை நடத்தினார்கள் – பள்ளியிலிருந்து கிளம்பி Block-11-இல் இருக்கும் பெண்கள் உயர் நிலைப் பள்ளியினை பல சைக்கிள்களில் வந்தடைந்தார்கள் – முன்னாலும் பின்னாலும் இயக்கத்தில் தீவிர ஈடுபாடுடன் இருந்தவர்கள் அணையாக இருப்பார்கள் – காரணம் இந்த போராட்டங்களில் ஈடுபாடு இல்லாத என் போன்றவர்கள் தப்பி வீட்டுக்கு [பெண்கள் பள்ளியிலிருந்து இரண்டாம் வீடு என்னுடையது!] சென்று விடக்கூடாது என்பதே!

 பட உதவி: கூகிள்

பெண்கள் பள்ளியின் முன் வந்து சைக்கிள் bell கொண்டு ஓசை எழுப்பி பெண்கள் பள்ளியையும் மூட வைக்கத் திட்டம்.  தொடர்ந்து பதினைந்து இருபது நிமிட போராட்டத்திற்குப் பிறகும் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.  கோபம் கொண்ட சில மாணவர்கள் சாலை ஓரங்களில் இருந்த கருங்கற்களை சரமாரியாக பள்ளியை நோக்கி வீச, சில பல ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. உள்ளேயிருந்து ஒரு ஆசிரியர் தைரியமாக வெளியே வந்து “பள்ளியை மூட முடியாது, ரொம்ப தகறாறு பண்ணா, செக்யூரிட்டியை கூப்பிடுவோம்!என்று சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து நகர ஆரம்பித்தது அங்கிருந்து சைக்கிள் பேரணி!

நேராக பேரணி சென்றது Block-18-ல் உள்ள ஒரு தபால் அலுவலகத்திற்கு! அங்கேயிருந்த ஒரு தகவல் பலகையில் ஹிந்தியில் எழுதியிருக்க, அதை தார் கொண்டு பூசி ஹிந்தியை ஒழித்து விட்டதாக குதூகலம் அடைந்து அனைத்து மாணவர்களும் கலைந்தனர் – நானும் எனது வீட்டிற்குத் திரும்பினேன்.

இப்படியாக இருக்க, கல்லூரி முடிந்ததும் வேலை கிடைத்தது தலைநகர் தில்லியில்! அதுவும் ஹிந்தியைக் கட்டாயமாக பேசியே தீருவேன் என்று இருக்கும் ஊர் – நாம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், ஹிந்தியில் பதில் சொல்வார்கள் – ஒரு சிலர் பஞ்சாபியில் அல்லது ஹர்யான்வி மொழியில்! நான் என்ன சொல்கிறேன் என்பது அவர்களுக்கு புரியாது – அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு ஒரு அக்ஷரமும் புரியாது! சில பல கஷ்டங்களை அனுபவித்த பிறகு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டியதின் அவசியம் புரிய ஹிந்தி பேச கற்றுக் கொண்டேன். பிறகு ஹிந்தியில் எழுதவும், படிக்கவும் கூட கற்றுக் கொண்டேன்.

எல்லோரும் ஹிந்தியில் பேசுவதால் நாங்கள் நண்பர்களாக சேர்ந்து வெளியே போகும்போது தமிழில் சத்தமாக பேசிக் கொண்டு செல்வது வழக்கம். அப்போது பல வித அனுபவங்கள் கிடைத்தண்டு!  சென்ற வாரம் அப்படி பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் பத்மநாபன் அவரது நினைவுகளைப் பற்றிச் சொன்னார்! அவர் என்னை விட மூன்று வருடங்கள் முன்னரே தில்லி வந்தவர்! என்னைப்போலவே ஹிந்தியில் அவரும் பாண்டித்வம் பெற்றவர்! அவரது அனுபவம் அவரது வார்த்தைகளில்....

 பட உதவி: கூகிள்


நானும் இன்னும் மூன்று நண்பர்களும் கரோல் பாக் செல்ல, தில்லியில் அப்போது இருந்த ஃபட்ஃபட்டியா வண்டிக்காக சிவாஜி ஸ்டேடியம் பகுதியில் நின்று கொண்டிருந்தோம். பக்கத்தில் ஒரு ஆள் – நாலடியார், ஓமக்குச்சிக்கு அண்ணன் போல ஒரு தோற்றம் [ஓமக்குச்சி + தலைமுடி நிறைந்த தலை] – ஐந்து அடி தொலைவில் நின்று கொண்டு எங்களைப் பார்த்தபடியே ஹிந்தியில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.  எங்களில் மூன்று பேருக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாது.  நான்காம் நண்பர் ஹிந்தி தெரிந்தவர். அவர் எங்களுக்கு ஒவ்வொரு ஹிந்தியில் திட்டும் சொற்களின் தமிழ் வார்த்தைகளை மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக இவர்களை நோக்கியே அந்த நபர் ஹிந்தியில் திட்டுவது தொடர, ஹிந்தி தெரியாத நண்பருக்கு கோபம் வந்து, அந்த நபரை நோக்கி தமிழில் எத்தனை கெட்ட வார்த்தைகள் இருக்கிறதோ அத்தனையும் உபயோகித்து திட்ட ஆரம்பித்தார்.  அப்போது தான் கதையில் திருப்பம்!

ஹிந்தியில் திட்டிக் கொண்டிருந்த நபர் இதைக் கேட்டவுடன் கொஞ்சம் நேரம் முறைத்து விட்டு தனது மொழியை மாற்றி விட்டார் – ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மாறிவிட, எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி – அவரும் தமிழ்காரர் என்று தெரிந்து! பிறகு என்ன? அதற்குள் ஒரு சர்தார் ஃபட்ஃபட்டியா கொண்டு வர, அவ்விடத்திலிருந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நகர்ந்தோம்.  இப்போது நினைத்தாலும் தமிழில் திட்டிய நண்பரின் அதிர்ச்சியான முகம் முன் நிற்கும்!


பல சமயங்களில் நானும் இம்மாதிரி தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் எனத் தெரியாது ஹிந்தியில் பேசி மாட்டிக் கொண்டிருக்கிறேன். கரோல் பாக் பகுதியின் முக்கிய வியாபார ஸ்தலமான அஜ்மல் கான் ரோடில் 1992-93, வருடத்தின் திங்கள் கிழமை ஒன்றில் மாலையில் வரும் கும்பலில் நாங்களும் சங்கமித்து இருந்தோம். எங்கள் முன்னர் ஒரு பெண் பஞ்சாபி உடையில் நடந்து கொண்டிருக்க, அவர் உடை பற்றியும் நடையழகு பற்றியும் தமிழில் வர்ணித்தபடி சென்று கொண்டிருந்தோம் – கொஞ்சம் சத்தமாகவே, ஆனால் அப் பெண்ணுக்குக் கேட்காத தூரத்தில்!

எதிரே அவரைப் போலவே பஞ்சாபி உடையில் இன்னொரு பெண்மணி - கொஞ்சம் மூத்தவர் வர, இரண்டு பேரும் பேசிக்கொண்ட மொழி – வேறென்ன தமிழ் தான்! தெரிந்த பின் நாங்கள் ஏன் அங்கு இருக்கிறோம். வின்னர் பட வடிவேலு மாதிரி சங்கத்தை கலைத்து அங்கிருந்து ஓட்டம் தான்!

என்ன நண்பர்களே பகிர்வினை ரசித்தீர்களா? 

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

56 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. ( 1 ) ஹிந்தியில் திட்டிய தமிழ் ஆசாமி! நல்ல ஜோக்! அவர் திட்டியதற்கான காரணம் தெரியவில்லை. ( 2 ) இங்கு திட்டியதற்கான காரணம் தெரிந்தது. இரண்டுமே சுவையான அனுபவங்கள்தான். ஹிந்தி ..... ..... என்று தொடங்கிவிட்டு எங்கோ போய் விட்டீர்கள். இங்கே கமெண்ட் போடுபவர்களதான் அடித்துக் கொள்வார்கள். உங்கள் ஸ்டைலே தனி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 3. அன்று ,சைக்கிள் மணி அடித்து ஹிந்தி எதிர்ப்பு .இன்று ஹிந்தி பேசினால்தான் புவ்வா !
  +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. நானும் தில்லியில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன். எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டதுண்டு. அதுபற்றி பின்னர் எழுத இருக்கிறேன். தங்களின் பதிவைப் படித்ததும் திரும்பவும் தில்லிக்கே சென்றது போன்ற உணர்வைப் பெற்றேன். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   உங்கள் தில்லி அனுபவங்களையும் எழுதுங்களேன்.

   Delete
 5. மொழிசுவைப்பகிர்வுகள் ரசிக்கவைத்தன..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. வணக்கம்
  ஐயா.

  தங்களின் அனுபவ பகிர்வு மிக அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்
  த.ம4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. மொழிக்கு மொழி - தித்திப்புத் தான்!..

  தங்களின் கைவண்ணம் அழகு!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 8. நாங்கள் படித்த பள்ளிக்கும் மாணவர்கள் 'ஸ்ட்ரைக்'னு சொல்லி வந்ததுண்டு. உள்ளே இருக்கும் எங்களுக்கோ 'லீவு' விட்டால் போதுமென்றிருக்கும்.

  நல்ல சுவையான அனுபவம். வெளியூரில் இருப்பவர்களுக்கு கட்டாயம் இது வாய்த்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 9. எதிரே அவரைப் போலவே பஞ்சாபி உடையில் இன்னொரு பெண்மணி - கொஞ்சம் மூத்தவர் வர, இரண்டு பேரும் பேசிக்கொண்ட மொழி – வேறென்ன தமிழ் தான்! தெரிந்த பின் நாங்கள் ஏன் அங்கு இருக்கிறோம். வின்னர் பட வடிவேலு மாதிரி சங்கத்தை கலைத்து அங்கிருந்து ஓட்டம் தான்!

  why this kolaveri anna

  ReplyDelete
  Replies
  1. கொலவெறி ? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

   Delete
 10. எந்த மொழியானாலும் தெரிந்திருப்பது நல்லது. தாய் மொழியை மறக்க கூடாது அதே நேரம் மொழி திணிப்பும் கூடாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 11. Sudha DwarakanathanJanuary 7, 2014 at 10:27 AM

  அனுபவங்களை சுவையாக எழுதியது அருமை. அடுத்த முறை நேரம் கிடைக்கும் போது இது போன்ற என் அனுபவங்களை விவரிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா துவாகரநாதன் ஜி! உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்க!

   Delete
 12. ஹா ஹா ஹா... அந்த நண்பரை நினைத்துப் பார்த்தேன்.. எனக்கும் சிரிப்பு தான் வருகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 13. हा .... हा ...

  மிகவும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 14. தங்களுடைய பள்ளி நாட்களின் அனுபவங்களை படித்தபோது எனக்கும் என்னுடைய பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது.
  நன்றி நண்பரே பகிர்ந்துக்கொண்டதற்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. அலுவலக விஷயமாக பாம்பே சென்றதுண்டு( 15 வருடங்களுக்கு முன்பு), எனக்கும் ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில் கேட்பேன். நிறைய இடங்களில் ஹிந்தியில் மறுமொழி கூறி கடுப்பேற்றியிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   இன்றைக்கு பல தில்லி வாழ் தமிழர்களே இப்படித்தான் ஹிந்தியில் பதில் சொல்கிறார்கள்.....

   Delete
 16. //ஹிந்தியில் திட்டிய தமிழ் ஆசாமி! நல்ல ஜோக்! அவர் திட்டியதற்கான காரணம் தெரியவில்லை. - தி. தமிழ் இளங்கோ.//

  நாலடியார் நல்ல சோமபான சுகத்தில் இருந்தார். வேறு யாரிடமோ பாரில் ( Bar-ல் ) போரிட்டு அதன் தொடர்ச்சியாக பஸ்நிலையத்திலும் அர்ச்சித்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்துப் பார்த்துப் தொடர்ந்ததுதான் சிக்கலே! ஆனாலும் ஒண்ணு. ஹிந்தியை பூரணமாக கற்றுக் கொண்டது அன்றுதான். நாலடியாரின் அன்றைய கெட்டவார்த்தைகளாஸ்த்திரங்களை எதிர் கொண்டால் அந்த பள்ளி கொண்ட பத்மநாபனே பதறிப் போய் எழுந்திருப்பார். இந்த பாவம் பத்மநாபன் அன் கோ எம்மாத்திரம். புறமுதுகுதான்.


  //[பெண்கள் பள்ளியிலிருந்து இரண்டாம் வீடு என்னுடையது!]//

  அப்படியா!!!!!! ஜொள்ளவேயில்லை! ஸாரி! சொல்லவேயில்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   தமிழ் இளங்கோ அவர்களின் கேள்விக்கு பதில் சொன்னதற்கும் சேர்த்து!

   Delete
 17. உங்களின் பள்ளி அனுபவமும் அருமை. அதைவிட அருமை கரோல்பாக் அனுபவம். நானும் டெல்லி வந்த புதிதில் இதைவிட இன்னும் நல்ல அனுபவங்கள் நிறைய உண்டு.
  நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

  டெல்லி விஜய்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் சந்திக்கும் போது பேசுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. நினைத்தாலே இனிக்கும் ரஜினி-கீதா காட்சி நினைவிருக்கிறதா? :))

  ReplyDelete
  Replies
  1. நினைவிருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 20. டெல்லியில் இதேபோல் ஆட்டோ காரரைப் பற்றித் தமிழில் பேசிக்கொண்டே வந்து அசடு வழிந்த அனுபவம் எனக்கும் உள்ளது.ஆனாலும் இந்தி எதிர்ப்பில் பட்டிருந்தவருக்கு டில்லியில் வேலை!.....
  ஹா......ஹா......ஹா.......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 21. ஒரு முறை பாம்பேயில் ஒரு இடத்துக்குப் போக தமிழர் என்று நிச்சயம் தெரிந்த ஒருவரிடம் வழி கேட்டேன் ( தமிழில்) அவர் மாலும் நஹி என்று சொல்லிக் கொண்டே போய் விட்டார்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   தில்லியிலும் இது போன்றவர்கள் உண்டு... :(

   Delete
 22. சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.

   Delete
 24. அனுபவப் பதிவு அழகாய் அமைந்தது! இரசித்தேன் நண்பரே! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 25. டெல்லி அனுபவங்கள் பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 27. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 28. இந்தி தெரியாத என்னை இங்கு வாழும் தேசி மக்கள் ஒரு இந்தியனாகக்கூட மதிப்பதில்லை. நல்ல பதிவு .

  ReplyDelete
  Replies
  1. பல வட இந்தியர்களுக்கு அவர்கள் பாஷை தேசிய மொழி என அசைக்கமுடியாத நம்பிக்கை..... அதனால் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும், அப்படி தெரியாதவர்கள் இந்தியர்கள் அல்ல என ஒரு எண்ணம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரதேசி @ நியூயார்க்!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....