எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 31, 2015

பத்து எண்றதுக்குள்ளே!நம்ம சினிமா டைரக்டர்களுக்கு, அவங்க எடுக்கற படத்துக்கு என்ன பேர் வைக்கறதுன்னே குழப்பமா இருக்கு.  மனசுல தோணியதை எல்லாம் பேரா வைச்சுடுறாங்க – கதைக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் இருக்கா, இல்லையா அப்படின்னு பார்க்கறதே இல்லை. புதுசா படம் பேரு ஒண்ணும் தோணலையா, இருக்கவே இருக்கு – பழைய படங்களோட பேரு! ஏதாவது நல்ல ஓடுன [தியேட்டர விட்டு இல்லீங்க] படத்தோட பேரை வைச்சு ஒரு படம் எடுக்கறாங்க!

வருஷத்துக்கு 300-400 படம் வெளியிட்டா என்ன தான் பண்ண முடியும்! இதுல தனது படத்துக்கான பெயர் என்று முன் பதிவு செய்து வைத்திருப்பதையும் பயன்படுத்த முடியாதே....  அதனால இப்படியெல்லாம் பேர் வைக்க வேண்டியிருக்கு! 

அது சரி படத்துக்கு பேர் வைக்கறது இருக்கட்டும்....  இந்தப் பதிவுக்கு எதுக்குப்பா பத்து எண்றதுக்குள்ள!அப்படின்னு பேர் வைச்சு இருக்கீங்க – அதைச் சொல்லுங்கப்பு முதல்ல!என்று யாரும் சண்டைக்கு வருவதற்கு முன் நானே சொல்லிடறேன் – பெரிசா ஒண்ணும் காரணமில்லை....  நீங்க பத்து எண்றதுக்குள்ள நானே சொல்லிடறேன்.  இன்னிக்கு சில படங்களோட விளம்பரம் பார்க்கப்போறோம்...  அத்தனையும் அந்தக் கால படங்கள்! சில படங்களோட பேர் கூட நம்மில் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை! கூடவே இன்னும் சில வித்தியாசமான விளம்பரங்கள்!

அந்தமான் காதலிஅப்படின்னு ஒரு படம் வந்தது... 1978-வருடம்னு நினைக்கறேன். அப்படத்திலே வரும் “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!இன்னிக்கும் ரசிக்கும் பாடல்!  ஆனா, இன்னிக்கு நான் சொல்லப் போற படம் இது இல்ல! அந்த படம் “அந்தமான் கைதி.  எம்.ஜி.ஆர், சாரங்கபாணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


இப்படி சில விளம்பரங்களை இந்த சனிக்கிழமையில் பொக்கிஷப் பகிர்வாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! என்ன நண்பர்களே... இந்த விளம்பரங்கள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாமே!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

37 comments:

 1. அக்கால விளம்பரங்கள்
  மனதை மிகிழ்ச் செய்கின்றன ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. எங்கே பிடிச்சீங்க..இவ்ளோ பழசு..கிரேட்

  ReplyDelete
  Replies
  1. சில தீபாவளி மலர்களிலிருந்து......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. இளமை நினைவை இசைக்கும் விளம்பரங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. ஆஹா! பழைய விளம்பரங்கள் சுவாரசியம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 6. ‘அந்தமான் கைதி’ படத்தில் வரும் ’காணி நிலம் வேண்டும்..’ என்ற பாரதியார் பாடல் மிக இனிமையாக இருக்கும். இசையமைப்பாளர் யாரெனத் தெரியவில்லை. ’சம்சாரம்’ மிக பிரபலமான ஏ.வி.எம் படமாச்சே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 7. அனைத்தும் அருமை... பொக்கிசங்கள் தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. விளம்பரங்கள் எல்லாமே அதீத அழகு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காரிகன் ஜி!.

   உங்கள் முதல் வருகை - மிக்க மகிழ்ச்சி.

   Delete
 9. ஆஹா! ஸ்வாரஸ்யமான அனைத்துமே அருமையான பொக்கிஷங்களே.
  இப்போதெல்லாம் ஒரு பாட்டு வெளியானால் அந்தப் பாட்டின் முதல் வரி அல்லது வார்த்தைகள் கூட அடுத்த படத்தின் தலைப்பாகிவிடுகிறது கதைக்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ...நீங்கள் சொல்லுவது போல்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. தமிழ்மண ஓட்டுப்பெட்டியைக் காணவில்லையே...கூகுளார் "வெங்கட்ஜி க்கு எதற்கு ஓட்டுப்பெட்டி! பிரபலமான, சுவாரஸ்யமான, அனைவரையும் கவரும் பதிவராச்சே" என்று நினைத்துவிட்டார் போலும்...

  ReplyDelete
  Replies
  1. பதிவு வெளியிட்ட சமயத்தில் தமிழ் மணத்தில் ஏதோ பிரச்சனை இருந்தது போலும்.

   எதற்கு ஓட்டுப் பெட்டி! ஆஹா நல்ல கேள்வி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. ஸ்த்ரி ஸாகஸம் படம் தவிர மற்ற படங்களைப் பார்த்த நினைவு. அதென்ன கூடவே விளம்பரங்கள் படங்களுக்கல்லவே ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. நினைவில் கொள்ளவேண்டிய பொக்கிஷம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 13. அந்தக்கால விள‌ம்பரங்கள் அனைத்தும் அருமை! ஸ்த்ரீ சகஸம் என்ற ப‌டத்தைப்பற்றி கேள்விப்பட்டதேயில்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 15. இத்தொடரைத் தொடர்ந்து பார்க்கிறேன். சிலவற்றைப் பார்க்கும்போது நான் சிறிய வயதில் பார்த்த விளம்பரங்களைப் போலுள்ளது. அந்த நாள் நினைவும் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 16. வணக்கம்
  ஐயா
  எல்லாம் சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா. த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 17. அந்த கால விளம்பரங்களையும் அதிலுள்ள வாசகங்களையும் இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. போற்றிப் பாதுகாத்து வச்சிருக்கீங்க!
  தாமத ஒட்டு 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 19. பொக்கிஷபகிர்வு அருமை.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....