திங்கள், 14 ஜூலை, 2014

நைனிதால் – பயணம் - முடிவும் செலவும்

ஏரிகள் நகரம் – பகுதி 20

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18 19

ஏரிகள் நகரம் தொடரின் பத்தொன்பதாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

இந்த இடத்தில் ஒரு தங்கும் விடுதியும் உண்டு.  தங்குபவர்கள் தங்களுக்குத் தேவையான உணவினை எடுத்துக் கொண்டு வருவது நல்லது. இங்கே சமைக்கும் வசதிகள் இருந்தாலும் தேவையான பொருட்களை ராம்நகரிலிருந்து தான் வாங்கிக் கொண்டு வரவேண்டும். இந்த இடத்தின் சுற்றுவட்டாரத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து வரும் ஒன்றிரண்டு பேர் இங்கே தேநீர் கடை வைத்திருக்கிறார்கள்.  சுற்றுலாப் பயணிகள் இங்கே தேநீர் அருந்தி சீதா தேவியை தரிசித்து திரும்புகிறார்கள். நாங்களும் சில நிமிடங்கள் அந்த இயற்கை எழிலை ரசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து மீண்டும் ராம் நகரை நோக்கி பயணிக்க ஆயத்தமானோம்.

 அடுத்தது என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!


சிறிது நேரம் அந்தக் காட்டிற்குள் இருந்தது ரம்மியமானதாக இருந்தது.  இப்படி வனப் பகுதிக்குள் செல்வது இது மூன்றாவது முறை.  மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஷிவ்புரி மாவட்டத்தின் மாதவ் தேசியப் பூங்காவிற்கும், மத்தியப் பிரதேசத்தின் இன்னுமொரு வனமான பாந்தவ்கர் வனப் பிரதேசத்திற்கும் சென்று வந்தது குறித்து எனது முந்தைய பயணத் தொடர்களில் எழுதி இருக்கிறேன்.



அந்த்த் தொடர்களை படிக்காதவர்களின் வசதிக்காக இங்கே அத்தொடர்களின் முதல் பகுதிக்கான சுட்டி இங்கே தருகிறேன்.

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது [பகுதி-1 இங்கே....  அப்படியே நூல் பிடிச்சு போனா மொத்தம் 27 பகுதிகள் படிக்கலாம்!]

ஜபல்பூர்-பாந்தவர்கர் [மொத்தம் பன்னிரெண்டு பகுதிகள்.  பகுதி-1 இங்கே].



காட்டிற்குள் கிடைத்த சுகாபனுவத்தினை மீண்டும் அசைபோட்டபடியே வாகனத்தில் அமர்ந்தோம். போகும்போது தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓட்டுனர் வீரப்பனும் காட்டின் அமைதியை முழுதாக நாங்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்தினுடனோ என்னமோ பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.  மீண்டும் காட்டுப் பாதைகளில் மாலைச்சூரியன் தனது கதிர்களை மரங்களுக்கு ஊடே பாய்ச்சி விளையாட நாங்களும் அமைதியாக அந்த இயற்கையின் எழிலை ரசித்தபடி ராம் நகரில் இருக்கும் வன இலாகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.



அங்கே தில்லியில் இருந்து எங்களை தனது வாகனத்தில் அழைத்து வந்த ஓட்டுனர் பப்பு காத்திருக்க, ராம்நகரிலிருந்து புறப்பட்டோம். புறப்படும் முன் ஜிம் கார்பெட் வந்த அடையாளமாக ஏதாவது பொருள் வாங்கலாம் என்று Souvenir Shop தேடினோம்.  சில கடைகளில் தொப்பி, சாவிவளையம், டீ-ஷர்ட் என்று விற்றார்கள் – நன்றாக இல்லை, போலவே விலையும் மிக அதிகம்.  ஒரு டீ-ஷர்ட் மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் தேநீர் அருந்தி, தில்லியை நோக்கிய பயணம் தொடர்ந்தது.



பயணத்தில் சின்னச் சின்னதாய் அனுபவங்கள்.... பொதுவாகவே வடக்கில் வாகனங்கள் ஓட்டுவதில் நிறைய இடர்கள் – எல்லோரும் தான் மட்டுமே முன்னால் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள். Traffic Jam அவ்வப்போது ஏற்படும் ஒரு விஷயம் – நெடுஞ்சாலைகளில் மூன்று, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இப்படி மாட்டிக் கொண்டதுண்டு. இருக்கும் குறுகிய சாலையில் இரண்டு ட்ரையிலர் மாட்டிய ஒரு ட்ராக்டர் – முழுவதும் கரும்பு இருக்க, சாலையில் நிறுத்தி விட்டு எங்கேயோ சென்றிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டியிருந்தது!



நல்ல வேகத்தில் வாகனத்தினை ஓட்டிக் கொண்டு வந்த பப்பு இரவு உணவிற்காக போகும் போது நிறுத்திய அதே கஜ்ரோலாவில் நிறுத்தினார். உணவு முடித்து தில்லி நோக்கி பயணித்தோம். இரவு பன்னிரெண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். இரண்டு நாட்கள் பயணமாகச் சென்று அந்த இரண்டு நாட்களில் பார்த்த இடங்கள், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.



இந்தப் பயணத்திற்கான மொத்த செலவு – நான்கு பேருக்கு – ரூபாய் 19500/-. இதில் வாகனத்திற்கான செலவு, உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்தும் அடக்கம். தில்லியிலிருந்தே வாகனம் அம்ர்த்திக்கொண்டதால் கொஞ்சம் செலவு அதிகம் – ரயிலில் சென்றிருந்தால் சற்றே குறைந்திருக்கலாம் – ஆனாலும் வசதிகளும் குறைந்திருக்கும். இரண்டு நாட்கள் கிடைத்த மகிழ்ச்சிக்கும் அனுபவங்களுக்கும் இந்த செலவு ஒன்றும் அதிகமில்லை என்று தான் தோன்றியது. 



இந்தப் பயணம் பற்றிய தொடரினை வாசித்து என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பயணங்களில் கிடைக்கும் அனுபவங்கள், காணக்கிடைக்கும் காட்சிகள், சந்திக்கும் புதிய மனிதர்கள் என பல காரணங்கள் இருப்பதால் தொடர்ந்து பயணிப்போம்....


நட்புடன்

வெங்கட்

புது தில்லி…..

44 கருத்துகள்:

  1. நீந்தும் வாத்துகளின் அலையும் கால்கள் - அருமை.

    பயணக்கட்டுரை நல்லபடியாக நிறைவுற்றது. நன்றி. வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் கட்டுரை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெக்ஸ்ட் கட்டுரை..... :) ப்0ர்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

  2. பயணத்தொடரைப் படிக்கும்போது தங்களோடு பயணிப்பது போன்ற உணர்வை உண்டாக்கிவிட்டீர்கள்! தங்கள் செலவில் திரும்பவும் நைனிதால் ‘பார்த்து’விட்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து வந்ததற்கு நன்றி ஐயா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. அருமை! நல்ல விவரங்களுடன் கூடிய பயணத்தொடர். ரசித்தேன்.

    அதிலும் அந்த மூன்றாவது படம், சூப்பர். அதுதானே தங்கும் விடுதி? ஒரு வாரம் அங்கே போய் நிம்மதியா இருக்க ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடம் தங்கும் விடுதி அல்ல.... படகில் பயணம் செய்து அங்கே சற்று நேரம் இருந்து கரை திரும்ப வேண்டிது தான்!

      இப்படி ஒரு இடம் இருந்தால் தங்குவதில் ஆனந்தம் தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

  5. பயணங்கள் இதந் தருபவை. சரித்திரகாலத் தலங்களாகட்டும். இயற்கைகொஞ்சும் இடங்களாகட்டும். போய் வந்த நினைவுகள் பல ஆண்டுகள் கழித்தும் அனுபவில்லச் சுகமே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  6. அருமையான பயணக்கட்டுரை.
    இரண்டு நாட்கள் கிடைத்த அனுபவங்கள், மகிழ்ச்சியை அழகாய் பகிர்ந்து கொண்டீர்கள்.
    மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  7. நைனிடாலை நன்றாக சுற்றி வந்து காண்பித்தீர்கள் ,உங்களின் செலவில் என் share எவ்வளவு என்று சொல்லுங்கள் ,அனுப்பி விடுகிறேன் !
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஷேர்... :))) ஒன்றும் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  8. அருமையான பயணத்துக்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

    நாங்களும் கூடவே பயணித்த மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. தொடர்ந்து படிக்கவில்லையெனினும் புகைப்படங்களும், செய்தியும் ஒரு புத்துணர்வை அளிப்பது நிஜம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  10. அருமையான பயணம் அழகான படங்கள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  11. இனிய பயணத்தில் - தங்களுடன் நாங்களும் என்பதே மகிழ்ச்சி .
    அழகிய படங்களுடனும் விரிவான தகவல்களுடனும் - நினைவில் நிற்கும் பயணத் தொகுப்பு..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  12. இனிதாக, நிறைவாக இருந்தது நிறைவு பெற்ற தொடர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  13. இதுவரை இந்த நைனிடால் தொடரை படிக்கவில்லை. இனிதான் வாசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது தொடரின் பகுதிகள் அனைத்தையும் படித்து விடுங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் கலிங்கநகர்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  15. ரா.ஈ. பத்மநாபன்14 ஜூலை, 2014 அன்று PM 6:07

    நைனிடால் பயணம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. படங்களையும் கட்டுரையினை வாசிக்க வாசிக்க தங்களுடனே பயணித்த ஓர் உணர்வு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பதிவு எல்லாவற்றையும் படித்த போது சுற்றி வந்த அனுபவம் போல உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  19. அருமையான பயணக்கட்டுரை அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  20. எப்படியோ.... நானும் உங்களுடன் பயணித்து விட்டேன்.

    காட்சிகளைப் படம் பிடித்து வேறு காட்டினீர்கள்....
    அனைத்தும் அருமை.
    அடுத்து எங்கே போய் வருவதாக உத்தேசம் நாகராஜ் ஜி.
    ஆதி அக்காவையும் அழைத்துக்கொண்டு போங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. உண்மையில் கூடவே பயணம் செய்வது போன்ற பிரமைதான். காட்சிக்கினிய படங்கள். பயணக் குறிப்புகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  22. இனியபயணத்தில் மகிழ்ச்சியாக தொடர்ந்தோம். தொடர்வோம்....... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....