ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே....


பட்டாம்பூச்சி யாருக்குத் தான் பிடிக்காது. சிறு வயதில் பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனை முயற்சிகள் செய்திருப்போம்.  சில சமயங்களில் அப்படியே நம் கைகளுக்குள் அகப்பட்டாலும் நம்மிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்வதைப் பார்க்கும்போதே நமக்கு பரிதாபம் ஏற்பட்டு விட்டுவிடுவோம்.  சிறுவயதில் இப்படி சில தவறுகள் செய்திருந்தாலும், பட்டாம்பூச்சியை பார்த்து ரசிக்க இப்போதும் தவறுவதில்லையே.....

பட்டாம்பூச்சியை பாடு பொருளாக வைத்து எத்தனை எத்தனை கவிதைகள்.....  அது மட்டுமல்ல, ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் தங்கள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர்.  ஒரு பட்டாம்பூச்சி கவிதை பார்க்கலாமா?

என் கைகளுக்குள்
கை வைத்து
பிடித்து வைத்த
பட்டாம்பூச்சியைப்
பக்குவமாகத் தருகிறாய்
உற்றுப் பார்க்க
விரல்களை விலக்குகையில்
முட்டி மோதிப் பறந்து
செல்கிறது..
கைகளுக்குள்ளிருந்து
"காதல்"

இலக்கியத்தில் பட்டாம்பூச்சி இருக்கிறதா என்பதை தெரிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும். கள்ளழகர் பற்றிய பாடல் ஒன்றில் ஆண்டாள் பட்டாம்பூச்சியைப் பற்றி பாடியதாக நினைவு.

அது சரி பட்டாம்பூச்சி பற்றி இன்றைக்கு ஏனிந்த பதிவு.  நான் எடுத்த சில பட்டாம்பூச்சி படங்களை இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்வதற்காகத் தான்! இதோ பட்டாம்பூச்சிகள் உங்கள் ரசனைக்கு!


அட... இங்கே நிறைய தேன் கிடைக்கும் போல இருக்கே!.....


இந்த மொட்டுகளும் பூவானால் தேன் கிடைக்குமே!..... என்று யோசிக்கிறதோ?


 புல்லில் ஏதாவது இருக்குமோ!.....


என் எடை கூட தாங்கவில்லையே இப்பூ!


கொஞ்சம் கொஞ்சமா தேன் குடிக்கணும்....  நிறைய வேல இருக்கு!


 மண்ணுக்குள்ளும் மது இருக்குமோ?


எங்களுக்குள் போட்டி......  

என்ன நண்பர்களே பட்டாம்பூச்சிகளை ரசித்தீர்களா? சொல்லுங்களேன்...

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

36 கருத்துகள்:

  1. பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா பாடல் நினைவில் வந்ததும் உங்கள் பேஸ்புக் பதிவில் பகிர்ந்தும்விட்டேன்.

    சின்ன வயதில் பட்டாம் பூச்சியை பிடித்து நூலில் கட்டி பட்டம் பிடித்து விளையாடிய நினைவும் வந்தது. படங்கள்அழகு!விடுமுறையை மிகச்சிறப்பாக கொண்டாடுகின்றீர்கள் போலும்,வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூப் பூவாய் பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா... இனிமையான பாடல். நானும் உங்கள் ஃபேஸ்புக் இற்றையில் கேட்டு ரசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  2. அழகிய பட்டாம்பூச்சிகள்! வண்ணத்திப்பூச்சிப் பூங்காவிலே எடுத்தவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  3. அழகிய படங்கள்.

    ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே... பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே... வண்ணத்துப் பூச்சி பறக்குது பல வண்ணங்கள் காட்டிச் சிரிக்குது.. ஒ பட்டர்ஃப்ளை... பட்டர்ஃப்ளை... போன்ற பாடல்கள் முதல் முயற்சியில் சட்டென நினைவுக்கு வருவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்பாடல்கள் நினைவுக்கு வந்தன. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பட்டாம்பூச்சி படங்களும் பதிவும் அருமை.

    //ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் தங்கள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர். //

    வயிற்றுக்குள் = மனசுக்குள் ....... என இருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசுக்குள்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  5. பட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலே ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.புகைப்படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. எல்லா படங்களும் அழகு, அதிலும் முதல் படம் நேரில் பாக்குறமாதிரியே இருக்கு.

    முன்பிருந்த வீட்டில் பட்டாம்பூச்சிகள் வரும். ஆனால் படம் எடுக்க முடியாத வேகத்தில் பறந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டாம்பூச்சி படம் எடுக்க நிறையவே பொறுமை வேண்டும்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

      நீக்கு
  8. அருமையாப் படம் பிடிச்சிருக்கீங்க. ஸ்ரீரங்கத்துல இம்புட்டு இருக்கா..? :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்கத்திலிருந்து கொஞ்சம் தள்ளி தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா.

      நீக்கு
  9. எங்க எடுத்தீங்கன்னு சொல்லலையே... அகஸ்மாத்தாகப் பார்த்தவைகளா அல்லது, பார்க்கில், சுற்றிப் படம் எடுத்தவைகளா? நீங்கள் எடுத்துள்ள 3 வகைகளும் சாதாரணமாகக் கண்ணில் தட்டுப்படுபவைகள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே எடுத்தேன்.... வண்ணத்துப்பூச்சி பூங்காவில்.... சாதாரணமாகக் கண்ணில் தட்டுப்படுபவை தான்! ஆனாலும் தில்லி போன்ற பெரு நகரங்களில் காணக் கிடைப்பதில்லை.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. பட்டாம் பூச்சி கவிதையையும், புகைப்படங்களையும் ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. எல்லாமே ஜோர் முதலாவது கனஜோர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      நீக்கு
  14. வண்ணத்துப்பூச்சிகள் என்றுமே அழகுதான்
    ... பூச்சியை பிடிக்கிறேன்னு தவளை மாதிரி குப்புற கிடக்கும் போது பாக்குறவன் பயந்திருப்பானுவளே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவளை மாதிரி! இல்லை நான் ஒட்டகச் சிவிங்கி மாதிரி! ஒட்டகச் சிவிங்கி படம் பிடித்ததை சிலர் ரசித்து படம் பிடித்தார்கள்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்.

      நீக்கு
  15. #சிறு வயதில் பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனை முயற்சிகள் செய்திருப்போம். #
    இப்போதும் முயற்சி தொடர்கிறதே ,கேமராவில் பிடிக்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி தொடர்கிறது காமிராவில் பிடிக்க! உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  16. வண்ணத்துப்பூச்சி (எங்க பேச்சு வழக்கில் பாப்பாத்தி) பிடிச்சி அதோட இறகு கலர் கையில் ஒட்ட விளையாண்ட நாட்களை மறக்க முடியுமா அண்ணா...
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாத நினைவுகள் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  17. வண்ணத்து பூச்சியை பட்டாம் பூச்சி என்றும் சொல்லாமோ....??? த.ம்10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணத்துப் பூச்சி, பட்டாம்பூச்சி, பாப்பாத்தி என்று எத்தனை பெயர்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.

      நீக்கு
  18. ஓ! Butterfly என பாடவேண்டும்போல் இருக்கிறது பட்டாம்பூச்சிகளின் படங்களைப் பார்க்கும்போது. தாங்கள் எடுத்துள்ள படங்களை புகைப்பட போட்டிக்கு அனுப்பலாம். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு பாடத் தோன்றியதா.... பாடிவிடுங்கள்!

      புகைப்படங்களை ரசித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....