சனி, 30 மே, 2020

காஃபி வித் கிட்டு – மாற்றம் – நாடன் பாட்டு – ஆசிரியர் – சம்பளம் – பீஹார் டைரி - திரிவேணி சங்கமம்


காஃபி வித் கிட்டு – பகுதி 69

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்.


இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

கேரளத்திலிருந்து நாடன் பாட்டு ஒன்று – தாளம் போட வைக்கும் பாட்டு – ஒரு முறை கேட்டு ரசிக்கலாம்! கேட்டுப் பாருங்களேன்!

https://www.youtube.com/watch?v=DROAfxm_N54

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

National breakfast day celebrations – Mac விளம்பரம் ஒன்று.  ஒரு ஆசிரியர் – பல வருடங்களாக குழந்தைகளுக்கு பாடம் எடுத்து, ஓய்வு பெறப் போகிறார். அந்த நேரம், அந்த நாள் அவருக்கு முக்கியமான ஒன்று. அதனை அவரிடம் படித்தவர்கள் எப்படி கொண்டாடப் போகிறார்கள்.  பாருங்களேன்.


அடுத்த மின்னூல் வெளியீடு - திரிவேணி சங்கமம்: என்னுடைய பதினேழாவது மின்னூல் - அமேசான் தளத்தில் பதினொன்றாவது மின்னூல்...


2012-ஆம் ஆண்டு இரண்டு நாள் பயணமாக வாரணாசி மற்றும் ப்ரயாக்ராஜ் என அழைக்கப்படும் (இ)அலஹாபாத் நகரத்திற்குச் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் ஒரு தொடராக எழுதி இருந்தேன். அந்தத் தொடரினை தற்போது தொகுத்து இந்த மின்னூல் வழி வெளியிடுவதில் மகிழ்ச்சி. காசி அலஹாபாத் செல்ல நினைப்பவர்களுக்கு இந்த மின்னூல் ஒரு வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன். வழமை போலவே இந்த மின்னூல் வழி நிறைய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்திற்குப் பிறகு, மஹா கும்பமேளா சமயத்திலும் சில வருடங்கள் முன்னர் நடந்த கும்பமேளா சமயத்திலும் அங்கே சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்களையும் இணையத்தில் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொண்டதுண்டு. முடிந்தால் அவையும் தனி மின்னூலாக வெளியிடுகிறேன். திரிவேணி சங்கமம் மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...பீஹார் டைரி மின்னூல் - தரவிறக்கம்


 

பீஹார் மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து மின்னூலாக வெளியிட்டது நினைவில் இருக்கலாம். பீஹார் டைரி என்ற தலைப்பில் வெளியான அந்த  மின்னூல் வரும் செவ்வாய் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

என்னுடைய அனைத்து மின்னூல்களின் பட்டியலுக்கான சுட்டி:

மின்புத்தகங்கள் பட்டியல்

இந்த வாரத்தின் கோரா கேள்வி பதில்:

"உங்கள் சம்பளம் என்ன" என்று யாராவது உங்களிடம் கேட்டால், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்:  எனக்கு தூரத்து சொந்தத்தில் ஒரு மாமா ஒருவர் இருக்கிறார். அவர் புலனாய்வுத் துறையில் இருந்திருந்தால், கேப்டன் பிரபாகரனுக்கு சவால் விட்டிருப்பார். தவறிப் போய், ஒரு அரசாங்க கடைநிலை உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் கேள்விக் கேட்டு, நாம் ஒரு பதிலளிக்கும் முன்னரே, அதிலிருந்து மற்றொரு கேள்வியினை தோற்றுவிக்கும் அதிசூர பராக்கிரமம் நிறைந்தவர். அதோடு விடாமல் இன்னும் பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுப்பார். சம்பளம் சொன்னால், அதில் எவ்வளவு பி.எப் எவ்வளவு பிடிக்கறாங்க, எல்.டி.சி எவ்வளவு கொடுக்கறாங்கன்னு, அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டே இருப்பார். நான் சமீபத்தில் அவரைப் பார்த்தபோது கூட, அவர் எனது சம்பளம் பற்றிக் கேட்டபோது, நான் சம்பளத்தைக் குறைத்து சொன்னபோது, அவர் உடனே பொய் சொல்லாதே ? என்று சந்தேகத்துடனே ஒப்புக் கொண்டார். இவரைப் போல், தேவையற்ற கேள்விகளை கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

என்னை யாராவது எவ்வளவு சம்பளம் என்று கேட்டால், அது கேட்கும் நபரைப் பொறுத்து விடையானது மாறுபடும். அது அவசியமாகத் தெரிவிக்க வேண்டிய இடமாக இருந்தால்(வங்கி வீட்டுக் கடன், வரி, திருமணம்) தெரிவிப்பேன். மற்ற இடங்களில், குத்துமதிப்பாகத் தான் தெரிவிப்பேன்.

எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் - வேதாத்திரி மகரிஷி

இப்படி உங்களிடம் கேள்வி கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2013-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – தலைநகர் தில்லியில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் திறக்கப்பட்டது பற்றிய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகள்…

திரு நிர்மல் சேதியா எனும் பக்தர் இக்கோவிலுக்காக இடத்தினையும் பொருளுதவியையும் செய்ய, செய்த முடிவினை செயல்படுத்தி 1.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு இடத்தில் கோவிலும் மற்ற வசதிகளும் கிட்டத்தட்ட 11.5 கோடி ரூபாய் செலவில் இப்போது தயாராகி இருக்கிறது.  கோவில் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜே-ப்ளாக், உத்யான் மார்க் [மந்திர் மார்க் அருகே], கோல் மார்க்கெட், புது தில்லி. 

முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...

தில்லியில் திருப்பதி


இந்த வாரத்தின் நகைச்சுவை பொக்கிஷம் ஒன்று: 


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி


34 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்.
  வாசகமும் காப்பியும் அருமை.
  மாக் டி விளம்பரத்துக்கான அருமை ஆசிரியரின்
  படம் மனதை உருக்கியது. எத்தனை தூரம் தாண்டி வந்து போதிக்கிறார்,.
  அவரது மாணவர்களும் அருமை உணர்ந்தவர்கள்.
  மிக மிக நெகிழ்வு. நன்றி வெங்கட்.

  மின் நூல்கள் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

  நாடன் பாட்டு நடனத்தை மிக ரசித்தேன் .மிக அருமை.
  இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சிம்மா..

   மின் நூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நலமே விளையட்டும்.

   நீக்கு
 2. சிறு வாசகமாய் இருந்தாலும் சிறப்பான வாசகம்.

  காணொளி...   தாளம், நடனம், பாடல் என்கிற வரிசையில் ரசித்தேன்!

  திரிவேணி சங்கமம் மின்னூலுக்கு வாழ்த்துகள்.

  என்னிடம் இப்படி யாராவது கேள்வி கேட்டால் என்னிடமிருந்து நீங்கள் சொல்லியுள்ளபடிதான் விடை வரும்!

  ஏற்கெனவே பார்த்தது என்றாலும் விகடன் நகைச்சுவை புன்னகைக்க வைத்தது.  சிறு குறுகுறுப்பும் ஏற்பட்டது!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   உங்கள் பதில் - :)

   நகைச்சுவை - குறுகுறுப்பு - ஹாஹா....

   நீக்கு
 3. பொன்மொழி அருமை
  கேரள நாடன் பாட்டு ரசித்தேன்.

  மின்நூலுக்கு வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழியும் நாடன் பாட்டும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   மின்நூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 4. தங்கள் மின்நூலுக்கு வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 5. பொன்மொழி இப்போது உள்ள நிலைமையை எடுத்துகாட்டுகின்றது. மின்நூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 6. தங்களின் புதிய மின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. காணொளி - மனதைத் தொடும் காணொளி தான் துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 8. மகரிஷி அவர்களின் பொன்மொழியை அறிந்ததில்லை...

  ஆனாலும் எல்லாருக்கும் எல்லா உண்மைகளும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்னும் கருத்துடையவன் நான்...

  நல்ல விசயங்களுடன் இன்றைய பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   எல்லோருக்கும் எல்லா உண்மைகளும் - அவசியமே இல்லை தான்.

   இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஐயா.

   நீக்கு
 9. அனைத்து பகுதியும் அருமை...

  வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னது சரி தான்...

  // "உங்கள் சம்பளம் என்ன...?" என்று, 'உங்களிடம் கேள்வி கேட்டால்...?' //

  "இந்த மாதம் இவ்வளவு தான் சேமிக்க முடியுது" என்று சொல்லி, 'என்னுடைய சம்பளம் என்னவாக இருக்கும்...?' என்று கேள்வி கேட்டவரிடம் கேள்வி கேட்பேன்...! சரியாக சொல்லவில்லை என்றால் 1330 தடவை 1330 குறள்களையும் எழுதச் சொல்வேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   1330 தடவை 1300 குறள்களையும் எழுதச் சொல்வேன் - ஹாஹா... நல்ல பதில் தான்! :)

   நீக்கு
 10. வாசகம் அருமை.
  அனைத்தும் அருமை.காணொளி ஆசியர் நல் ஆசிரியர்தான்.
  வேதாத்திரி மகரிஷி உறவுகள் மேம்பட சொன்ன நல் கருத்திலிருந்து பகிர்ந்தது மகிழ்ச்சி.
  மின்னூலுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றிம்மா...

   நீக்கு
 11. இந்த வாரத்தின் நகைச்சுவை பொக்கிஷம் சிரிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச்சுவை பொக்கிஷம் - பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   நீக்கு
 12. நல்லாசிரியர். மகரிஷி அவர்களின் பொன்மொழியை ஒத்துப்போகிறேன். பாடல் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 13. அனைத்தும்
  நறுக் + சுருக்
  என அமைந்திருந்தன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முஹம்மது நிஜாமுத்தீன்.

   நீக்கு
 14. வாசகத்திலிருந்து கேரளத்தின் நாடன் பாடல் எல்லாமே ரசித்தேன். வேதாத்ரி மகரிஷியின் வரிகள் மிக அருமை. மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் வெங்கட்ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், நாடன் பாட்டு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 15. முதலில் அடுத்த மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஜி.

  வாசகம், வேதாத்ரி மகரிஷி அவர்களின் வரிகள் மிக யதார்த்தம்.

  நாடன் பாடல் மிகவும் பிடித்தது. இது போன்ற பாடல்கள் சில கேட்டுள்ளேன் ஜி முன்பு. தாளகதியோடு கேட்பதற்கு நன்றாக இருக்கும்.

  நகைச்சுவை பொக்கிஷம் ஹா ஹா ஹா ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கீதாஜி.

   வாசகம், மகரிஷியின் வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நாடன் பாட்டு - சில நாட்களாக கேட்டுக் கொணடிருக்கிறேன்.

   நகைச்சுவை பொக்கிஷம் - ரசித்தற்கு நன்றி.

   நீக்கு
 16. ஆனந்தவிகடன் அட்டைப்பட நகைச்சுவையைப் படித்ததும் விகடனின் இப்போதைய நிலைமைதான் மனதில் வந்தது. மின்னூல்கள் வெளியீடுகளுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். இந்த சம்பளம் என்ன என்னும் கேள்வி பல சமயங்களிலும் தங்கலோடு ஒத்திட்டுப் பார்ப்பதற்காக இருக்கும். தன்னைவிடக் கூட வாங்குகிறார்களா, அல்லது குறைவா என ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷம் அடைவார்கள். இது எங்க வீட்டு உறவினர்களிடையே அதிகம் காணப்படும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனந்த விகடன் தற்போதைய நிலை - வேதனை தான் கீதாம்மா...

   ஒப்பீடு செய்யும் மனிதர்கள் - எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் எப்போது பார்த்தாலும், கேட்கும் முதல் கேள்வியே - என்ன சம்பளம் வருது என்பது தான்... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 17. நீங்கள் தந்துள்ள சுட்டியை பயன்படுத்தி உங்களுடைய சில நூல்களை பதிவிறக்கம் செய்து படித்துவருகிறேன் ... நன்றி ! நன்றி !! நன்றி !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல்கள் - தரவிறக்கம் செய்து படிப்பது அறிந்து மகிழ்ச்சி சிவா. மின்னூல்கள் பற்றிய உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....