நண்பர்களுக்கு, இனிய
காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன. துக்ககரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன - டால்ஸ்டாய்.
ஊரடங்கு-1 – சூரத் கி கமானி - 12 மே 2020:
Surat ki khamani!!
Gujarati street
food! (Breakfast recipe)
Visa2explore என்ற
இந்த YouTube சேனலை சென்ற வருடம் டெல்லி சென்ற போதிலிருந்து பார்த்து வருகிறேன்.. இந்த
சேனலை வைத்திருக்கும் Harish bali என்பவர் ஒரு food traveller..பல மாநிலங்களுக்குச்
சென்று அங்கிருக்கும் பிரசித்தி பெற்ற உணவுகளை சுவைத்து பகிர்ந்து கொள்வார்.. அவரின்
feedback நமக்கு உதவியாக இருக்கும். ஒருமுறை சுவைக்கலாம், கட்டாயம் சுவைக்கணும் என்று
ரேட்டிங் கொடுத்திருப்பார்..
அப்படித் தான் சென்ற
ஆண்டு நாங்கள் டெல்லியின் கனாட் ப்ளேஸ் மற்றும் கரோல் பாகில் பிரசித்தியான உணவுகளைப்
பற்றி தெரிந்து கொண்டு தேடி சுவைத்தோம்..:)
நேற்று அவரின் குஜராத்
பயண அனுபவங்களை பார்த்த போது கிடைத்தது இந்த ரெசிபி..:) குஜராத்தின் டோக்ளா எனக்கு
மிகவும் பிடித்தது..இது அதையொத்தது தான்! நம்ம ஊர் பருப்புசிலியின் தயாரிப்பு...இதை
காலை உணவாக அங்கு சாப்பிடுவார்களாம்..
பொதுவாகவே எனக்கு
பொரித்த உணவுகளோ, அதிகம் மசாலா சேர்த்த உணவுகளோ பிடிப்பதில்லை...:) சாத்வீகமான முறையில்
ஆவியில் வேகவைத்த ஐயிட்டங்கள் தான் பிடிக்கும்..:)
இந்த ரெசிபி உப்பு,
காரம், புளிப்பு எல்லாம் கலந்த சுவையில் இருக்கும்..ஆவியில் வெந்தது, எண்ணெய் அதிகம்
சேர்க்காதது, வயிற்றுக்கு கெடுதல் செய்யாதது...:) சுவை அபாரம்...
வாய்ப்பு கிடைத்தால்
செய்து சுவையுங்கள்...
செய்முறை இங்கே.....
இணைய வழி வகுப்புகள் - 14 மே 2020:
புது அனுபவம்!!
மகளுக்கு இன்று முதல் பத்தாம் வகுப்புக்கான ஆன்லைன் பாடங்கள் துவங்கி விட்டன.. Biologyல்
plant anatomy பாடத்தை ஆசிரியர் துவங்க ஒவ்வொன்றுக்கும்
கையை உயர்த்தி yes
sir! OK sir! என்றும் மகள் சொல்லிக் கொண்டிருந்தாள்..:)
பார்க்க வித்தியாசமாகத்
தான் இருந்தது..
Whatsapp க்ரூப் உருவாக்கி அதில் எல்லோரையும் இணைத்து அதில் Zoom Appஐ இன்ஸ்டால் செய்யச் சொல்லி பள்ளிக்கான ஐடி தருகிறார்கள்..ஒவ்வொரு பாடத்திற்கான நேரமும் முன்பே சொல்லி விடுகிறார்கள்..அந்த நேரத்திற்கு நாம் தயாராகி வகுப்புக்குள் செல்ல வேண்டும் வீட்டிலிருந்த படியே!!!
முதல் முறை என்பதால் எல்லோருக்கும் வரும் பதட்டம்! வகுப்பு ஆரம்பித்தவுடன்
முதலில் எங்களுக்கு ஆசிரியரின் குரல் கேட்கவில்லை..:) அதன் பிறகு செட்டிங்ஸில் சரி செய்த உடன் குரல் கேட்கவே மகள் பதிலளித்துக் கொண்டும், குறித்துக் கொண்டும் இருந்தாள்..:) ஆனால்....???
ஆசிரியர், Roshni are u there???? என்று கேட்டதும்....பாடம் முடிந்தவுடன் அவள் தோழிகளிடம் பேசியதில், ரோஷ்ணி இன்னிக்கு நீ ஏன் கிளாஸுக்கு வரலை??? என்று கேட்டதும் தான் குழப்பமாகியது...:)) என்னடா இது சோதனை????
பிறகு என் தம்பியிடம் Zoom வழியாகவே பேசி பிரச்சனையை சரி செய்து, சில விஷயங்களையும் தெரிந்து கொண்டாள்...:) வாட்ஸப்பில் தான் இன்னிக்கு வகுப்பை கவனித்ததாகவும், தன்னுடைய ஆடியோவும், வீடியோவும் தான் சரியில்லையென்று
சொன்னாள்...:) ஆக, மகள் இன்னிக்கு
absent...:))
நினைத்துப் பார்த்தால் எனக்கு சிரிப்பாகவும்,
பாவமாகவும் இருந்தது...இவளின் குரலோ, உருவமோ ஆசிரியருக்குத்
தெரியவில்லை...ஆனால் இவள் ஒவ்வொன்றுக்கும்
பதிலளித்துக் கொண்டிருந்திருக்கிறாள்...:))
ஆசிரியர்களுக்கும் இது நிச்சயம் புது அனுபவமாகத் தான் இருந்திருக்கும்.. ஒரு கையில் செல்ஃபோனை வைத்துக் கொண்டு, சார் போர்டில்
diagramஐ காண்பிக்கிறேன்
என்று வீட்டின் கப்போர்டுகளையெல்லாம் சுற்றிக் காண்பித்தார் என்றாள்...:))
கொரோனாவால் ஒவ்வொருவருக்கும்
கிடைக்கும் அனுபவங்கள் தான் எத்தனை!!!! இன்னும் சில வருடங்கள் கழித்து சொல்லிக்கலாம்...என் பத்தாம் வகுப்பில் ஆன்லைன் வகுப்புகளின் வழியாகத் தான் படித்தேன் என்று...
ஊரடங்கு – 2: இராஜகோபுரம் வரை – 14 மே 2020
இரண்டு மாதங்களுக்குப்
பிறகு இன்று ராஜகோபுரம் வரை சென்று வந்தோம்..குக்கர் கேஸ்கெட், பேட்டரிக்கு விடும்
Distilled water என்று ஒருசில அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது.. தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததில் இரண்டு மாதமாகி விட்டது...:) அப்படியே ஒரு ரவுண்ட் வந்தோம்...
முன்பு இருந்த கும்பல் இப்போது இல்லை..கடைகளும் பெரும்பாலானவை திறந்திருந்தன..ஒருசில கடைகள் மூடியிருந்தது..மொபைல் கடை இல்லை..Temper
glass மாற்றணும் Head setம்
வாங்கணும்!!
சாலையில் 50 சதவிகிதம் பேர் முகக்கவசம் அணிந்து செல்கிறார்கள்..ஒரு சிலர் தாடைக்குக் கீழே மாட்டிக் கொண்டு யாரையாவது பார்த்தால் மூக்குக்கு மேல் இழுத்து விட்டுக் கொள்கிறார்கள்...:) நாங்களும் முகக்கவசம் அணிந்தே சென்று வந்தோம்.. அணிந்த சில நிமிடங்களிலேயே நாம் விடும் மூச்சுக்காற்றே
அனல் காற்றாய் தாடையை தாக்குகிறது...உயிர் காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் தலைவணங்குகிறேன்..🙏 🙏
வீட்டுக்கு வந்தவுடன் நேரே சென்று கைகளையும், கால்களையும் சுத்தம் செய்து கொண்டு அப்படியே ஒரு மூடி டெட்டால் விட்டு குளியலையும் முடித்தோம்..வாங்கிய எல்லாவற்றையும்
துடைத்து எடுத்து வைக்கணும்..இனி வெளியே சுற்றல் இப்போதைக்கு அல்ல!!!
உலக குடும்ப தினம் – 15 மே 2020:
திரைப்படங்களில் கடைசியில் 'சுபம்' என்று போடும் போது எல்லோரும் பல்வரிசை தெரிய சிரித்துக் கொண்டிருப்பார்களே... அந்தச் சிரிப்பு எப்போதும் நம்மைச் சார்ந்த உறவுகளிடம் இருக்குமா என்றால் சந்தேகம் தான்!!அப்படியிருந்தாலும் அதில் சுவாரஸ்யம் இருக்காது இல்லையா!!
சண்டை, சச்சரவு, கேலி, கிண்டல், விட்டுக் கொடுத்தல், அனுசரித்தல், மன்னிப்பு, பொறுமை காத்தல், உதவி செய்தல் என்று இவற்றையெல்லாம்
கடந்து வந்தால் தான் உறவுகள்!!
அப்படி எல்லா விதத்திலும் நாமும் அனுசரித்து அவர்களும் விட்டுக் கொடுத்தால் தான் உறவுகள் மேம்படும்.!! நம் பாரத நாடு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் நாடு..அனைவரிடமும் நல்லுறவை மேம்படுத்துவோம்..ஒற்றுமையாய் இருப்போம்..
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!!! குடும்பம் ஒரு கதம்பம்!!
என்ன நண்பர்களே, இந்த
நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப்
பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்…
சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
குஜராத் உணவு முறையைத் தவிர மற்றவற்றை பேஸ்புக்கில் படித்திருந்தேன். டால்ஸ்டாய் சொல்லும் வாசகம் எனக்கு சரியாக புரியவில்லை.
பதிலளிநீக்குடால்ஸ்டாயின் அழியா படைப்புகளில் ஒன்றான அண்ணா கரணிணா நூலின் துவக்க வரி இது.
நீக்குகுடும்பங்களின் மகிழ்ச்சிக்கு ஒரே மாதிரியான காரணம் இருக்கலாம். ஆனால், "வீட்டுக்கு வீடு வாசப்படி" என்ற சொல்லாடலுக்கேர்ப்ப ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனை நிச்சயம் இருக்கும் என்பதே இதன் பொருள்.
இந்நூல் தமிழிலும் திரு சோ தருமன் அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
அணைவரும் இன்று படிக்கவேண்டிய பொருத்தமான புதிணம் இது.
கொராணாவால் டிஜிட்டல் வகுப்புகள், டிஜிட்டல் பணம் என்று பாசிட்டிவ் மாற்றங்கள் வந்திருப்பது சிறப்பு.
ஐய்யாவின் சாப்பிட வாங்க புத்தகத்திலும் இந்தியாவில் புழங்கும் எக்கச்செக்க உணவு வகைகள் உள்ளன.
அதிலும் அந்த குஜராத் ஸ்பெஷல் புளிபோட்ட பாயாசம் ஒரு நாள் எங்களுக்கு செஞ்சு காட்டுங்க.
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அர்விந்த் சார்..
நீக்குகதம்பம் வழக்கம்போல எல்லா விசயங்ளும் அருமை. மாணவ-மாணவிளுக்கு புதுமையான அனுபவம்தான்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்..ஆமாம் மாணாக்கர்களுக்கும் புது அனுபவம் தான்..
நீக்குதற்போது play school வகுப்புகள் போலும் online இல் நடத்துகிறார்கள். laptop இல் headset மாட்டிக்கொண்டு டீச்சர் என்னவோ கையை காலை அசைத்து சொல்வதை 3 வயது பேத்தியும் என்னவோ செய்கிறாள். வேடிக்கையாக இருக்கிறது.
பதிலளிநீக்குலேப்டாப் இருந்தால் லேப்டாப் இல் வாட்ஸாப் போட்டு தெளிவாக பார்க்கலாம். முயற்சி செய்யுங்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா..
நீக்குகதம்பம் அருமை...
பதிலளிநீக்குகுழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது...
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..
நீக்குகதம்பம் தொகுப்பு அருமை. பதிவு தானாகவே வலை ஓலையில் இணைந்திருக்கிறது. குடும்ப தினமா? ம்.. தினமும் ஒரு தினம் வருவதால் எந்த நாளில் என்ன தினம் என்று தெரியவில்லை . என்றாலும் உங்களுக்கு குடும்ப தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த வலைத்தளத்துக்கு டொமைன் வாங்கி விட்டு சப் டொமைன் மூலம் உங்களுக்கு தனி வலைத்தளம் உருவாக்கினால் அழகாக இருக்கும்.
நமது வலைத்திரட்டி: வலை ஓலை
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
நீக்குகதம்பம் வழக்கம்போல அருமை. கொரோனா அனுபவம் நமக்கு பலவற்றைக் கற்றுத்தந்துவிட்டது.
பதிலளிநீக்குஆமாம் ஐயா..தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..
நீக்குVisa2explore அறிமுகத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குநல்லதொரு தளம்..ஹிந்தியில் தான் உரையாடல்..எங்களுக்கு பிடித்திருக்கிறது...தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்..
நீக்குஆன்லைன் கிளாஸ் பிள்ளைகளுக்கு புது அனுபவம். பத்தாவது படிக்கும் பிள்ளைகள் பயபக்தியா கவனிக்குறாங்க. காலேஜ் படிக்கும் பிள்ளைகளில் பாதி ஏமாத்துதுங்க.
பதிலளிநீக்குஇதிலும் அப்படித்தான்.. வீடியோவை ஆஃப் செய்து விடுகிறார்களாம்...:) தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராஜி.
நீக்குகதம்பம் படித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குநீங்க போட்டிருந்த படத்தைப் பார்த்துவிட்டு, வீட்டில் செய்யச் சொல்லியிருக்கேன். ஓமப்பொடி மட்டும் இல்லை (வெளில போயிருந்தவன், மெசேஜைப் பார்க்க விட்டுவிட்டேன். வாங்கலை). நல்லா இருக்கான்னு சாப்பிட்டுப் பார்த்துட்டு எழுதறேன்.
எஸ் ஸார்.. நோ சார்... ஹா ஹா.... ஆன்லைன் படிப்பு, தூக்கத்திலும் எஸ் ஸார் சொல்லவிடாமல் இருந்தால் சரிதான்.
நானும் ஓமப்பொடி இல்லாமல் தான் செய்திருக்கேன்..தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்..
நீக்குநீங்க போட்டிருந்த பலாப்பழ பணியாரைத்தைப் பார்த்து, மாறுதல்களோட செய்துவிட்டேன். எபிக்கு அனுப்ப நினைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபலாப்பழ அப்பத்தை மாற்றங்களுடன் செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி..எல்லோருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்..
நீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குமுகநூலில் பார்த்து படித்தது.
பேரபிள்ளைகள் படிப்பு ஆன்லைனில். உறவினர், நண்பர்கள் வீட்டுக் கல்யாணங்களை ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு. கோவில் திருவிழாக்கள், பிரதோஷம் எல்லாம் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எல்லாம் புது அனுபவம்தான்.
ஆன்லைனில் திருவிழா, கல்யாணங்கள்...இனிமே இப்படித்தான் போல...தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..
நீக்குகொரோனா நம் வாழ்வுச் சூழலை முற்றாக மாற்றிவிடும் போலத்தான் உள்ளது..சூம் வழி பாடங்கள் அதுவும் இனி பழகிவிடும்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..
நீக்குஅனைத்தும் அருமை. ஆன்லைன் வகுப்புகள் தமிழ்நாட்டில் இருக்கிறது இல்லையா. இங்கு கில இடங்களில் இருக்கிறது.
பதிலளிநீக்குகொரொனா நிறையவே நம்மையும் நம் வாழ்வுச் சூழலையும் மாற்றியிருக்கிறது
துளசிதரன்
ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன..தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்..
நீக்குசூரத் கி கம்மன் நன்றாக வந்துள்ள்தே ஆதி, இங்கும் எல்லோருக்கும் பிடிக்கும், லிங்க் பார்க்கிறேன்
பதிலளிநீக்குடெக்னாலஜி இப்படித்தான் சில சமயங்களில் படுத்திவிடுகிறது. சில சமயம் இங்கு வாட்சப் காலில் உனக்குக் கேட்க்குதா என்று நான் கேட்க அங்கிருந்து உனக்குக் கேட்குதா என்று மறுமுனை கேட்க நான் மீண்டும் நீ பேசுவது கேட்குது நான் சொல்வது கேட்குதா என்று மறுமுனை அதையே சொல்ல இப்படிச் சொல்லி சொல்லி கால் மணி நேரம் போக ஹா ஹா ஹா அஹா இதிலேயே நேரம் போவதால் கூடியவரை இப்போது கால்ஸ் குறைத்துக் கொண்டுவிட்டேன், நார்மல் காலுமே பல சமயங்களில் அப்படி ஆகிவிடுகிறது,
கடைசில ரோஷினி இருந்தும் ஆப்சென்ட்!!! ம்ம்ம் என்ன சொல்ல
இப்போது க்ல்யாணம் எல்லாம் ஆன்லைனில் ,,,,
அனைத்தும் ரசித்தேன் ஆதி
கீதா
அனைத்து பகுதிகளையும் ரசித்ததற்கு மிக்க நன்றி கீதா சேச்சி..
நீக்குதொற்றினால் நம் வாழ்வு கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறது இது பல மாதங்கள் நீடிக்கும் என்றே தோன்றுகிறது அப்புறம் இதுவே பழகிப் போய்விடும் என்றும் தோன்றுகிறது...
பதிலளிநீக்குகீதா
ஆமாம்..இப்போதே பழகி விட்டது..
நீக்குVisa2explore போல கடல்பயணங்கள் சுரேஷ் வலைப்பதிவுகள் நினைவுக்கு வந்தன் சென்ர வருடம் சேலம் ஃபுட்ஸ் பிறகு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது
பதிலளிநீக்குகீதா
சமஸின் சாப்பாட்டு புராணம் கூட இப்படித்தான் இருக்கும்..குறித்து வைத்து கொண்டால் அங்கு போகும் போது சுவைக்கலாம்..:)
நீக்குஓஓ, கமன் டோக்ளாவின் இன்னொரு விதமா? இது சாப்பிட்டிருக்கேன். பதிவும் முகநூலில் பார்த்தேன். இன்றைய பதிவைப் படிக்காததால் என்னனு புரியலை. இங்கே போணி ஆகாது! என்றாலும் சனிக்கிழமை டோக்ளா மட்டும் கொஞ்சமாய்ப் பண்ணினேன். அதுவே கடலைமாவு என்பதால் ராத்திரிக்கு ஒண்ணுமே வேண்டாம்னு அவர் மோர் சாதம் மட்டும் சாப்பிட, நான் ஹார்லிக்ஸ் மட்டும் சாப்பிட்டேன். இதைக் கடலைப்பருப்பை ஊற வைச்சு அரைச்சு அந்த யூ ட்யூபில் சொல்லி இருக்காப்போல் பண்ணிப் பார்க்கணும். நான் கடலைப்பருப்பு வாங்குவதே அரைக்கிலோ. அதை 2 மாசம் வைச்சுப்பேன்!:))))) பார்ப்போம்,
பதிலளிநீக்குஎங்களுக்கு பிடிச்சிருந்தது. கமன் டோக்ளாவை உதிர்த்தால்போல். என் ஒபினியன், மாதுளைதான் இந்த டிஷ்ஷுக்கு கூடுதல் சுவை கொடுக்குதுன்னு. பசங்கள்ட போணியாகணும் என்பதால் குறைவான கொத்தமல்லி.
நீக்குகமனி எனக்கும் ரோஷ்ணிக்கும் மிகவும் பிடித்திருந்தது..தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..
நீக்குசெய்து பார்த்து பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்..
நீக்குகுஜராத் உணவு பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஆன்லைன் வகுப்புகள்... பல அனுபவங்கள்.
இன்று தொடக்கம் தலைநகர் பகல் ஊரடங்கு நீக்கப்பட்டு உள்ளது. மக்கள்தான் கவனமாக நடக்கவேண்டும்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மாதேவி..
நீக்குஅன்பு ஆதி,
பதிலளிநீக்குஅனைத்துப் பதிவுகளும் அருமை. இங்கே டோக்ளா எல்லோருக்கும் பிடிக்கும். அதில் இனிப்பு கலந்திருப்பதால்.
ரோஷ்ணியின் ஆன்லைன் வகுப்பு பிடித்திருந்ததது. சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.
வாசகம்மும் இன்னோரு வகை சுவைதான்.
அன்னா கரீனினா பாவப்பட்ட பெண் ஜன்மம்.
சுவையான தொகுப்புகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. நன்றி ஆதி.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..
நீக்குசோதனை கருத்து...
பதிலளிநீக்குஆல்ப்ஸ் தென்றல் நிஷா அவர்கள்...
சுவிஸ்...
ஆனால் கருத்துரை DD..!
நன்றி! சோதனை வெற்றி தானே! :)
நீக்குவிசா டு எக்ஸ்ப்ளோர் பார்கிறேன் நன்றி சகோ
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்..
நீக்குVisa2explore...குறித்துக் கொள்கிறேன்
பதிலளிநீக்குஇங்கும் இணைய வழி வகுப்புகள் ,..வித்தியாசமாக செல்லுகின்றன ...
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அனுப்ரேம்..
நீக்குஇதில் வாத்தியார் நிலை பாவம். அவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் புரியவில்லை ( சிலர் வாட்ஸ்அப் க்ரூப் உபயோகிக்கவே தடுமாறுகின்றனர்) கஷ்டப்படுகின்றனர்
பதிலளிநீக்குஆமாம் சகோ..மாணாக்கர்களும் வீடியோ ஆஃப் செய்து வைப்பது என்று படுத்துகிறார்கள்..
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி எல்.கே சகோ..