ஞாயிறு, 10 மே, 2020

ஆசிரியர் - குறும்படம்



அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.



ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் பற்றி நமக்குச் சொல்லும் ஒரு குறும்படம்.  ஒவ்வொரு ஆசிரியரும் தனது வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியது ஒரு கடமை என நினைக்கும் ஆசிரியர்கள் நிறைய பேர் உண்டு. அப்படி ஒரு ஆசிரியர் பற்றிய படம்.  ஒரு மருத்துவப் பள்ளி – அங்கே படிக்கும் ஒரு மாணவன் ஒரு நாள் வகுப்பிற்கு வரவில்லை – ஆசிரியருக்கு குழப்பம் – ஏன் வரவில்லை எனத் தெரிந்து கொள்ள அவனைத் தேடிச் செல்கிறார். “எனக்கென்று யார் இருக்கிறார்கள்? நான் மருத்துவம் படித்து என்ன ஆகப் போகிறது? என்று விரக்தியின் உச்சத்தில் புலம்புகிறார் அந்த மாணவர். அவரை அரவணைத்து, நீ மருத்துவர் ஆகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும் முதல் நபர் நான் தான். உனக்கு நான் இருக்கிறேன் என அந்த மாணவரை சரியான பாதைக்கு அழைத்து வருகிறார்.

அந்த மாணவர் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுகிறார்.  அதே மருத்துவமனையில் பணிபுரிகின்ற சமயத்தில் ஆசிரியரின் இறப்பு பற்றிய தகவல் வருகிறது. அந்த ஆசிரியர் தனது கடைசி ஆசையாக ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அந்த ஆசை என்ன? குறும்படத்தில் பாருங்களேன்!  சுமார் 10 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம்.  என் மனதைத் தொட்ட குறும்படம்.  உங்களுக்கும் இந்தக் குறும்படம் பிடிக்கலாம்! பார்த்து விட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.



காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


நண்பர்களே, இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

18 கருத்துகள்:

  1. இணைப்பிற்கு சென்று வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் கண்டேன் ஜி. தாய்லாந்து மொழியல்லவா ஆகவே பாசத்துக்கு பஞ்சமில்லை.

      மனம் நெருடலாகியது.

      நீக்கு
    2. குறும்படம் - நெகிழ்ச்சியானதே... உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  2. ஆதரவுக்கு ஒருவராவது இருந்தால்தான் மனதுக்கு ஆறுதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதரிக்க ஒருவராவது தேவை - உண்மை தான் அதுவே ஆறுதல் தரும் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. குறும்படத்தைப் பார்த்தேன். மனத்தைத் தொட்ட படம். இவர் போன்ற ஆசிரியர்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும். படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      இது போன்ற ஆசிரியர்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும் - உண்மை தான் ஐயா.

      நீக்கு
  5. உனக்காக நான் பெருமைப்படுவேன் (I would be proud of you) என்று ஆசிரியர் கூறும்போது நெகிழ்ந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. குறுபடம் அருமை.
    வணங்க வேண்டும் ஆசிரியரை.

    அருமையான ஆசிரியர் கிடைக்க இந்த மாண்வன் கொடுத்து வைத்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  7. பதில்கள்
    1. பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....