அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
அப்பா – மனைவி இல்லாமல் தானாகவே பெண் குழந்தையை வளர்க்கும்
பொறுப்புள்ள ஒரு அப்பா. ஒரு பழைய ஆட்டோவை தினம்
தினம் ஓட்டி அதில் வரும் பணத்தில் தன் மகள் விரும்புவனவற்றை எல்லாம் வாங்கித் தரும்
அப்பா. ஆனால் அப்படி வாங்கித் தரும் எவையுமே
அந்த மகளுக்குப் பிடிக்கவில்லை. காரணம் அத்தனை சிறப்பாக இல்லை – அவள் படிக்கும் பள்ளியில்
இருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் தன்னை பார்க்கும்போது அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை
அவளுக்கு! போதாதென்று அப்படி கூடப் படிக்கும் மாணவ மாணவிகள் இந்தப் பெண்ணை ரொம்பவே
படுத்துகிறார்கள். முதல் காட்சியிலேயே அவளது
காலணிகளை உதைத்துத் தள்ளி எடுக்க வரும் அப்பெண்ணை நடுவில் நிற்க வைத்து சுற்றிச் சுற்றி
வந்து மாணவ, மாணவியர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
அவளுக்கு தனது அப்பாவின் மீது அடங்க முடியாத அளவிற்குக் கோபம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் அந்தப் பெண் Peer Pressure அவஸ்தைகள்
அனுபவிக்கும் போதும் அப்பாவின் மீது கோபம் வருகிறது. அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் எரிந்து விழுகிறார்.
அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து, போதாத குறைக்கு
வீட்டிலுள்ள பொருட்களை விற்றேனும் மகளுக்கு தேவையானதை வாங்கித் தந்தாலும் மகளுக்கு
மகிழ்ச்சி இல்லை. ஒரு நாள் ரொம்பவே கோபமாக மகள் திட்டிவிட்டு பள்ளிக்குச் செல்ல, மனதளவில்
உடைந்து போய், அவர் வாங்கி வைத்த ஒரு அலைபேசியை வீட்டில் மகள் பார்க்கும்படி வைத்து
ஒரு கடிதமும் எழுதி வைக்கிறார். பிறகு அழுதபடியே
ஆட்டோவினை ஓட்டிக்கொண்டு செல்கிறார். அழுத
போது வரும் கண்ணீரைத் துடைக்க, எதிரே வரும் வாகனத்துடன் மோதிக்கொள்கிறார். அந்த இடத்தில் அந்தப் பெண்ணும் வேறு ஒரு வாகனத்தில்
இருக்க ஓடி வந்து பார்த்தபோது தான் தெரிகிறது அடிபட்டது தனது அப்பாவென. வீடு திரும்பி அப்பாவின் கடிதத்தினைப் படிக்கும்போது
தான் ஒவ்வொரு பொருளையும் வாங்க தனது அப்பா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப்
படிக்கப் படிக்க கண்களில் கண்ணீர் பெருக்கு!
ரொம்பவே சிறப்பாகச் செய்திருக்கிறார் அந்த அப்பா பாத்திரத்தில் நடித்த நடிகர். பெண்ணும் நன்றாகவே நடித்திருக்கிறார். பாருங்களேன்.
பெற்றவர்கள் தங்கள் மக்களுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை பிள்ளைகள் உணர்ந்து கொள்வது கடினம் தான் – தானும் பெற்றோராக ஆகும்போதே தம் பெற்றோரின் வலிகளை உணர்கிறார்கள் இல்லையா…
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!
நண்பர்களே, இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
நல்ல மெஸேஜ்.
பதிலளிநீக்குமிக நெகிழ்வான குறும்படமாய் இருக்கும் என்று தெரிகிறது.
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குநெகிழ்வான குறும்படம் தான். முடிந்தால் பாருங்கள்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் மிக அருமை. குறும்படம் பார்த்தேன். வாசகத்தில் கனமான மனது குறும்படத்தை பார்க்கையிலேயே இன்னமும் கனமாகி கண்களில் கண்ணீர் மழையை வருவித்து விட்டது.
தாய், தந்தை பாசங்கள் பின்புதான் உணரபடுகின்றன. அது உணரப்படும் போது பாசங்களை கொட்டியவர்களின் நிலை ஆண்டவன்தான் அறிவார். இந்த படத்தில் நடிப்பவர்களும் நன்றாக நடித்துள்ளனர். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
முதலில் உணர்வதில்லை. பிறகு தான் உணர்கிறோம் - பெற்றோரின் பாசத்தினை என்பது உண்மை.
அற்புதமான காணொளி...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.
நீக்குசிறப்பான காணொளி... நன்றி...
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குஅருமையான காணொலி
பதிலளிநீக்குநன்றி ஐயா
காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகாணொளி குறும்பட மனதை நெகிழச் செய்துவிட்டது. அருமையான படம். வாசகமும் அதற்கேற்றாற் போல்.
பதிலளிநீக்குதுளசிதரன்
காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குபடம் மனதை என்னவோ செய்துவிட்டது ஜி. குழந்தைகள் தங்கள் தந்தை தங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை எண்ணி நடந்து கொள்ள வேண்டும். நன்றாக எடுத்திருக்கிறார்கள். அப்பாவாக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். சிறப்பான படம்
பதிலளிநீக்குகீதா
அப்பாவாக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் - உண்மை. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குகாணொளி மனம் இளகிவிட்டது.
பதிலளிநீக்குபலரும் தாங்கள் பெற்றோரான பின்தான் உணர்கிறார்கள்.
பெற்றோரான பின் தான் உணர்கிறார்கள் என்பது உண்மை தான் மாதேவி.
நீக்குநன்று ஜி இணையம் பிரச்சனை பிறகு காண்கிறேன்.
பதிலளிநீக்குஇணையம் பிரச்சனை - பரவாயில்லை கில்லர்ஜி. முடிந்த போது பாருங்கள்.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குகுறும்படம் மிக அருமை.
நிறைவில் கண்ணீர் வந்து விட்டது.அப்பா இருக்கும் போது உணரமுடியாமல் போய் விட்டதே!
வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குஇருக்கும்போது ஒருவரின் அருமை பெருமைகள் புரிவதில்லை - பெரும்பாலானவர்களுக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குவாசகமும் குறும்படமும் மனதை கலங்க வைத்துவிட்டன.
ஏன் இந்தக் குழந்தைகளுக்கு
பெற்றோரின் அன்பு புரியாமல் போகிறது.
விளங்காத புதிர்.
அப்பா,மகள் இருவரின் நடிப்பும் மிக மிக அருமை.
வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
நீக்குஉண்மை தான் - பெற்றோரின் அன்பு பல சமயங்களில் குழந்தைகளுக்குப் புரிவதே இல்லை. அப்பாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
குறும்படம் பார்த்தேன்.. மிக அருமை. எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !!! ...
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.
நீக்கு