திங்கள், 4 மே, 2020

கதம்பம் – ரெமோ சிஸ்டர் – அனுமதி அட்டை - சினிமா - ஓவியம் - சமையல்

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மரத்தில் ஏறமுடியாத மனிதன், தான் ஒரு போதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசிக் கொண்டிருப்பான் – லுட்விக் க்ளாஜஸ்


அனுமதி அட்டை: 19 ஏப்ரல் 2020:எங்களுக்கு திங்கட்கிழமை மட்டும் தான் வெளியே சென்று வர அனுமதி. அதுவும் 2 கிமீ வரை தான் செல்ல இயலும்!  எனக்கு மட்டுமே அனுமதி!

பரவாயில்லை. ஒத்துழைப்பு கொடுப்போம். கொரோனாவை விரட்டுவோம்!

ரோஷ்ணி’ஸ் கார்னர் – ரெமோ சிஸ்டர் – 20 ஏப்ரல் 2020:மகளின் ஓவிய முயற்சியில் இன்று!

REMO Sister!!

ஊரடங்கு – 1:  பார்த்த திரைப்படங்கள் – 20/21 ஏப்ரல் 2020

மேல்நாட்டு மருமகள்:1975ல் வெளிவந்த திரைப்படமாம். மகளும், நானும் சன் லைஃபில் பார்த்தோம். மகளுக்கும் பிடித்திருக்கிறது.

திருவருட்செல்வர்:


இன்று பார்க்கும் திரைப்படம் திருவருட்செல்வர். 1967ல் வெளி வந்திருக்கிறது. ஆண்டவனுக்கு தொண்டு செய்த அடியார்களைப் பற்றிய கதை. திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!!

ஆதியின் அடுக்களையிலிருந்து… – 21 ஏப்ரல் 2020:

சேனைக்கிழங்கு Bபால்ஸ்!YouTube-ல் உலாவிக் கொண்டிருந்த போது சேப்பங்கிழங்கை வைத்து மாலைநேர நொறுக்குத் தீனியாக செய்திருந்ததைப் பார்த்தேன். என்னிடம் சேனைக்கிழங்கு தான் இருந்தது.

பரவாயில்லை! காலையில் சாதம், பருப்பு குக்கரில் வைக்கும் போதே சேனையை வேகவைத்து விட்டேன். இப்போ அதை அரைத்து அத்துடன் உப்பு, காரம், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசைந்து உருட்டிப் போட்டிருக்கிறேன். சாஸுடன் நன்றாகவே இருந்தது.

இதில் வெங்காயம் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். நான் சேர்க்கலை! கடலைமாவு எனக்கு கிடைக்காததால் அது இல்லாத பண்டமாகத் தான் தேடி செய்கிறேன்.

காலையிலேயே யோசித்து ஓரளவு முன்னேற்பாடுகள் செய்து கொண்டால் மாலையில் சட்டென்று செய்து விடலாம். காபி அல்லது டீயுடன் சுவைக்கலாம்.

ரெசிபி இங்கே தான் கிடைத்தது.


ஊரடங்கு – 2 : – 22 ஏப்ரல் 2020
இந்த ஊரடங்கும் பழகிப் போய்விட்டது. எங்கேயும் செல்வதில்லை. ரோஷ்ணியும் தாமதமாக எழுந்து, டீவி, மொபைல், ஓவியம் வரைவது, கிராஃப்ட் செய்வது என்று ஏதேனும் செய்து கொண்டிருக்கிறாள்.  அத்திமலைத்தேவன் ஐந்து பாகங்களும் வாசித்து முடித்து விட்டாள்.Facewash தீர்ந்தால் அதைத் தரச் சொல்லிக் கேட்டிருந்தாள். அதில் மணிபர்ஸ் செய்திருக்கிறாள்.

நம்ம Jeysri Ramesh Deisti கேட்டுக் கொண்ட படி Madhubani painting செய்து கொண்டிருக்கிறாள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ரவையில் கேக் செய்து பார்க்கலாம் என்று செய்திருக்கிறோம். ஒவ்வொன்றையும் கொடுத்துள்ள அளவுகளில் நான் போட கலவையை மகள் தான் தயார் செய்தாள். தானே Mug cake செய்வதாகவும் சொல்லியிருக்கிறாள்.

கேக் ரெசிபி இங்கு....


அனைவரும் வீட்டிலேயே இருப்போம். நோய்த்தொற்று பரவாமல் தடுப்போம். நல்லதே நடக்கும்!!


ரோஷ்ணி’ஸ் கார்னர் – மதுபனி ஓவியம் - 22 ஏப்ரல் 2020மகள் வரைந்த மதுபனி ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு…

பீகார் மாநிலத்தில் மதுபனி என்கிற இடத்தில் செய்யப்படும் கலை இது. ஓவியம் வரைந்த பின், Brush pen கொண்டு வண்ணம் தீட்டியிருக்கிறாள்.

ஊரடங்கு – 3 : – 22 ஏப்ரல் 2020

இந்த ஊரடங்கு எட்டி இருந்த  உறவுகளையும், நட்புகளையும் அலைபேசி வழியே இணைத்துக் கொள்ள வைக்கிறது. சென்ற வாரம் கோவையிலிருந்து அப்பாவின் அலுவலக நண்பர் அழைத்திருந்தார். எத்தனையோ சந்தர்ப்பங்களில் உடனிருந்தவர். "கொழந்த! எப்படி இருக்கடா கண்ணு?? மாப்பிள்ள எப்படி இருக்கார்! பொண்ணு என்ன படிக்கிறா?? வாடா கண்ணு நம்ம வீட்டுக்கு! எப்போ வந்தாலும் நம்ம வீட்டுல தான் தங்கணும்" என்றார். அப்பாவே பேசியது போன்று மனதுக்கு நெருக்கமாக இருந்தது.

அதேசமயம் ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிந்திருந்த உறவோ, நட்போ, உலகம் இப்போ இருக்கும் சூழலிலும் கூட மனதை மாற்றிக் கொள்ள மறுக்க வைக்கிறது.

அடுத்தவர்களுக்கும் சந்தர்ப்பம், சூழ்நிலை இருக்கும் என்று எதையும் யோசிக்காமல், கொலை பாதகம் செய்தது போல், அவர்கள் இல்ல விழாவுக்கு வரவில்லை என்பதற்காக உறவையே முறித்துக் கொள்பவர்களை என்ன சொல்வது என்று புரியவில்லை! போன் செய்தாலும், மெசேஜ் செய்தாலும் பதிலில்லை.

ஆனால்! இதுமாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நான் இப்படி நடந்து கொள்ள மாட்டேன்!! என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்!!


என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

30 கருத்துகள்:

 1. இன்றைய வாசகம் வழக்கம் போலவே அருமை. மூல்நாட்டு மருமகள் படத்துக்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன்! உஷா உதுப்பை வைத்து ஒரு ஆங்கிலப் பாடல் போட்டிருப்பார். திருவருட்செல்வர் பாடல்கள் அத்தனையும் தேன். ரோஷ்ணியின் ஓவியத் திறமைகளுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடச்சே... மேல்நாட்டு மருமகள்!

   நீக்கு
  2. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   அட மேல் நாட்டு மருமகள் படத்துக்கு இசை குன்னக்குடியா... படத்தை நான் பார்த்ததில்லை.

   ரோஷ்ணி ஓவியம் - பாராட்டுகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. கதம்பம் ரசித்தேன்.

  ரவை கேக் அழகாக இருக்கு.

  மதுபானி ஓவியம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   ரவை கேக் - நன்றி.

   மதுபனி ஓவியம் - பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 3. சேனைக்கிழங்கு பால்ஸ்.... செய்யும் சந்தர்ப்பம் வெகு விரைவில் வரப்போகுது. பசங்களுக்குப் பிடிக்குமான்னு சந்தேகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்யும் சந்தர்ப்பம் விரைவில் - செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. வாசகம் அருமை யோசிக்க வைத்தது.
  ஓவியம் நன்று

  இந்த தருணத்திலும் எங்கள் உறவில் பழைய பகையை புதுப்பிக்கின்றவர்களை கண்டு வியந்து கொண்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   ஓவியம் - பாராட்டுகளுக்கு நன்றி.

   பழைய பகையை புதுப்பிக்கின்றவர்கள் - ம்ம்ம். என்ன சொல்ல! அவர்கள் போக்கில் விட்டு நாம் முன்னே செல்வதே நல்லது.

   நீக்கு
 5. ஓவியம் மிகவும் அழகு... மணிபர்ஸ் செய்வது, அதையும் விட புத்தகங்களை படிப்பது... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  // இல்ல விழா // நீங்கள் சொல்வது உண்மை ஜி... இத்தனைக்கும் நன்கு படித்தவர்களும், இன்றைய சூழலை உணர்ந்தவர்களும் இவ்வாறு நினைப்பது வேதனை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளைப் பாராட்டியதற்கு நன்றி தலபாலன்.

   சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒன்றும் செய்வதற்கில்லை.

   நீக்கு
 6. கதம்பம் அருமை...தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   நீக்கு
 7. வெப் டெலிகாஸ்டை நேரலை என்று குறிப்பிட்டிருப்பார்களோ? திருச்சூர் பூரம் திருவிழாவும் யாருமே இல்லாமல் நடைபெற்ற படம் வாட்ஸாப்பில் வந்தது. 
  மீனாட்சியின் கருணையும், சுந்தரேஸ்வரரின் அருளும் உலக ரட்சிக்கட்டும். 
  ரோஷ்ணியின் திறமைக்கு ஒரு பெரிய சல்யூட்!. சேனை கிழங்கு பால்ஸ் பார்க்கவே நன்றாக இருக்கிறது. 


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகள் ரோஷ்ணியை பாராட்டியதற்கு நன்றி பானும்மா...

   சேனைக்கிழங்கு பால்ஸ் - சுவையும் நன்றாகவே இருந்ததாகச் சொன்னார்கள். :)

   நீக்கு
 8. ஓவியம் அருமை
  தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. சேலத்திலும் மிக அதிக கட்டுப்பாடு என கேள்வி . அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் லிமிட் அவர்கள் வைக்கும் விதி படி நடக்கிறது என சொன்னார்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு இடத்திலும் சில வேறுபாடுகள் - அதிகாரிகளைப் பொறுத்து இருக்கிறது என நினைக்கிறேன் கார்த்திக்.

   நீக்கு
 10. மகளின் ஓவியம் மிக அழகு, முகங்களை அப்படியே வரைந்து எடுக்கிறார், கெட்டிக்காரி, இப்படியே எங்காவது ஆர்ட் கிளாஸ் க்கு அனுப்பினால், சிறந்த ஓவியராவா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்ட் கிளாஸ் - சிறு வயதில் சென்று கொண்டிருந்தார். இப்பொழுது செல்வதில்லை.

   மகளைப் பாராட்டியதற்கு நன்றி அதிரா.

   நீக்கு
 11. சேனைக்கிழங்கு உருண்டைகள் பிரமாதம். ஆதியும் அசந்து போகாமல்
  தன்னையும் பார்த்துக் கொண்டு ரோஷ்ணியையும் உற்சாகத்துடன் வைத்திருப்பது
  நிம்மதியாக இருக்கின்றது.

  ரோஷ்ணியும் நிலைமை அறிந்து ஆக்க பூர்வமான செயல்களில் மனம் செலுத்துவதும் நன்மை.

  எல்லோரும் இந்த இடர் நாட்களிலிருந்து சீக்கிரமே மீள்வோம்.
  நலம் வாழ வாழ்த்துகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 12. அனைத்தும் முகநூலில் பார்த்து ரசித்தேன்.
  ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
  எங்களுக்கு இன்னும் அந்த அட்டை கொடுக்கப்படவில்லை.

  உறவுகள் இந்த மாதிரி இடர் காலங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் மொழி பேசினால் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  வாசகம் அருமை. விரைவில் இந்த நோய் தொற்று நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மனது தினமும் இறைவனை வேண்டியபடி இருக்கிறது.

  தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு சிற்றுண்டி யும் மனதை கவர்கிறது.

  தங்கள் மகளின் ஓவியங்கள் பெயிண்டிங் அனைத்தும் அழகாக உள்ளது. அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  பார்த்த படங்கள் நல்ல படங்கள்தாம். வேலைகள் போக மிகுதி நேரத்தை இப்படியெல்லாம் செலவழிப்பது இனிமையாகத்தான் இருக்கும். இங்கு இணையம் சரிவர வராததினால் இரண்டு நாட்களாய் பதிவுகளுக்கு வர இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 14. கேக்,பால்ஸ் சுவை. மகளின் கை வண்ணங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....