சனி, 27 பிப்ரவரி, 2021

காஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic - தில்லியில் எஸ்.ரா. - நாதிர் மோஞ்சே - குறை - Insult


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட அடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


காதல் டு கல்யாணம் என்பது ரோஜா கொடுப்பதில் ஆரம்பித்து கொத்தமல்லி, கருவேப்பிலை வாங்கி வருவதில் முடிவதே!


இது எந்த அளவுக்கு உண்மை என்பதை காதலித்து திருமணம் புரிந்தவர்கள் சொல்லலாம்! எனக்கு இந்த Experience இல்லை என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை! ஹாஹா.


******




இந்த வாரத்தின் எண்ணங்கள் - காஃபி வித் கிட்டு-100:



இந்த வலைப்பூவில் முதலில் ஃப்ரூட் சாலட் என்ற தலைப்பில் கதம்பமாக சில விஷயங்களைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.  200 ஃப்ரூட் சாலட் பதிவுகளுக்குப் பிறகு அதை நிறுத்தி விட்டேன்.  சிறிது இடைவெளிக்குப் பிறகு சனிக்கிழமைகளில் “காஃபி வித் கிட்டு” என்ற தலைப்பில் ரசித்த சில விஷயங்களை ஒரு தொகுப்பாக வழங்க ஆரம்பித்து இந்தப் பதிவுடன் 100 காஃபி வித் கிட்டு பதிவுகள் வந்து விட்டன.  சில விஷயங்களைத் தொடங்கும்போது இத்தனை தூரம், இத்தனை நாட்கள் இதனைத் தொடர்வோம் என்று நினைக்காமல் ஆரம்பித்து விடுவதே வழக்கம்.  100 காஃபி வித் கிட்டு பதிவுகளை எழுதி, அவை அனைத்தும் நல்ல வரவேற்பினை அடைந்தது என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி.  இனிமேலும் காஃபி வித் கிட்டு பதிவுகள் தொடரும் - வழமை போல சனிக்கிழமைகளில்! 


இந்த வாரத்தின் நிழற்படம் - நடைப்பயணத்தின் போது...



சென்ற சனிக்கிழமை காலை நடைப்பயணம் செல்லும்போது பனிமூட்டமாக இருந்தது.  அந்தக் காட்சியை எனது அலைபேசியில் படம் எடுத்துக் கொண்டேன். அந்தப் படம் உங்கள்பார்வைக்கு!


இந்த வாரத்தின் விளம்பரம் - Mom’s Magic Biscuit


கேரளத்தின் ஒரு கல்லூரி - வேறு பகுதியிலிருந்து அங்கே படிக்க வரும் ஒரு இளைஞன். கல்லூரிக்கு அருகே இருக்கும் ஒரு தேநீர் கடை. அந்தக் கடையை நடத்தும் மூதாட்டி.  அந்த இளைஞருக்கும் மூதாட்டிக்கும் உருவாகும் பாசப் பிணைப்பு.  பின்னணியில் இசைக்கும் பாடல், கடைசியில் அந்த மூதாட்டி இளைஞரிடம் சொல்லும் வாசகம் என அனைத்துமே மிகவும் பிடித்தது!  பாருங்களேன் நீங்களும் ரசிக்கலாம்!


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - எஸ்.ரா-உடன்


2012-ஆம் ஆண்டு இதே நாளில் எழுதிய பதிவு - கதை வழி நடந்தேன் - எஸ் ராமகிருஷ்ணன் உரையாடல்!  தலைநகர் தில்லியின் தமிழ் சங்கத்திற்கு வந்திருந்த எஸ்.ரா. அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்று வந்தது குறித்து எழுதி இருக்கிறேன்.  பதிவிலிருந்து சில வரிகள் இங்கே…


நேற்று [26.02.2012] மாலை 05.30 மணிக்கு தில்லி தமிழ் சங்கத்தில், பிரபல எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய “கதை வழி நடந்தேன்” நிகழ்ச்சி இருந்தது.    சரியாக 05.30 மணிக்கு விழா துவங்கியது. சங்கச் செயலரின் வரவேற்பு உரைக்குப்பின் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.


பல சமயங்களில் தில்லிக்கு இவர் வந்திருந்தாலும், இவரின் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டது இதுவே முதன் முறை.  கதைகள் எவ்வளவு முக்கியம், அவைகள் நமக்குக் கற்றுக் கொடுப்பது எத்தனை எத்தனை விஷயங்கள் என்பதையெல்லாம் சொன்னார்.  தன்னை அவர் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதை விட ”கதை சொல்லி”, என்றுதான் சொல்லிக்கொள்ள  விரும்புவதாகத் தெரிவித்தார்.


முழு பதிவும் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்! அந்தச் சமயத்தில் அவருடன் நானும் சக தில்லி பதிவர்கள் இருவரும் நிழற்படம் எடுத்துக் கொண்டோம்!  அதுவும் இணைப்பில் உண்டு!


venkatnagaraj: கதை வழி நடந்தேன் - எஸ் ராமகிருஷ்ணன் உரையாடல்


இந்த வாரத்தின் ராஜா காது கழுதை காது - குறை!


காலை நேரம் நடைப்பயணத்தின் போது:  


சாலைகளில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்மணி தனது அலைபேசியில்…


“நீ வேலைக்கு வரும்போது எனக்கும் சேர்த்து பராட்டா கொண்டு வந்துடு!  ஒண்ணே ஒண்ணு போதும்!  ஆனா, எப்பவும் நீ செய்யற மாதிரி செஞ்சுடாதே - நீ பராட்டா ரொம்ப தடிமனா செய்யற! பராட்டா ரொம்பவும் தடியா இருக்கக் கூடாது!! ஸாஃப்ட்-ஆவும் இருக்கணும், மெலிசாவும் இருக்கணும்!”.


உதவி கேட்பது சக பணியாளராக இருந்தாலும், அவரது உணவு தயாரிப்பில் குறை கண்டுபிடிக்கிறாரே, இவர் வீட்டில் வேறு யாராவது சமைத்தால் என்ன ஆகும்? 


இந்த வாரத்தின் உணவு - நாதிர் மோஞ்சே:





நாதிர் மோஞ்சே - அது என்னங்க பெயரே வித்தியாசமா இருக்கே?   சைவமா இல்லை அசைவமா?  எங்கே இருந்து இந்த உணவு வகையைப் பிடிச்சீங்க? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்கலாம்!  சொல்லத்தான் போகிறேன்! 


நாதிர் மோஞ்சே என்பது கஷ்மீர் பகுதிகளில் உட்கொள்ளப்படும் ஒரு சைவ உணவு - ஸ்னாக்ஸ் என்றும் சொல்லலாம்!  இதனைச் செய்வது எதனால் தெரியுமா - தாமரைத் தண்டிலிருந்து தான் இதைச் செய்கிறார்கள். சாதாரணமாக வடக்கில் தாமரைத் தண்டில் சப்பாத்திக்கான தொட்டுக்கையாக உணவு வகை செய்வதுண்டு - நானும் ருசித்திருக்கிறேன் - சமைத்ததில்லை!  தாமரைத் தண்டிலிருந்து செய்யப்படும் ஒரு வகை ஸ்னாக்ஸ் தான் இந்த நாதிர் மோஞ்சே!  வாய்ப்பு கிடைத்தால் ருசிக்க வேண்டும் - தலைநகரில் கிடைக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.  கிடைத்தால் சுவைக்க வேண்டும்! நீங்களும் முடிந்தால் சுவைத்துப் பாருங்களேன்!


இந்த வாரத்தின் ரசித்த படமும் வரிகளும்:





என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

42 கருத்துகள்:

  1. வாசகம் புன்னகைக்க வைத்தது என்றாலும் எனக்குப் பொருந்தாது!

    100 வது காபி வித்  கிட்டு வுக்கு வாழ்த்துகள்.  மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - :)

      வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. எஸ்ரா எழுத்துகள் ஒரு காலத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தன.  அவரது சமீப கால எழுத்துகளை படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்.ரா.வின் சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். சமீப எழுத்துகளை நானும் படித்ததில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பணியாளரின் குறை சொல்தல் "தானம் கொடுக்கற மாட்டை..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”தானம் கொடுக்கற மாட்டை...” அதே தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நாதிர் மோஞ்சே...   வடை போச்சே என்பது போல ஒலிக்கிறது!  தாமரைத்தண்டை எல்லாம் சாப்பிடலாம் என்பதே செய்தி!

    ரசித்த படமும் வரிகளும் டாப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”வடை போச்சே” - ஹாஹா...

      தாமரைத் தண்டில் செய்யப்படும் உணவு சுவையாக இருக்கும் ஸ்ரீராம். வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. தாமரைத் தண்டில் வற்றல் சின்ன வயசிலேயே சாப்பிட்டிருக்கேன் ஸ்ரீராம். மதுரையில் நிறையக்கிடைக்கும். இதுவும் மரச்சீனிக்கிழங்கு அப்பளமும் அம்மாவோடு போச்சு. ஆனால் தில்லியில் குர்காமில் இருந்தப்போ தாமரைத்தண்டு வாங்கிச் சமைச்சிருக்கேன். வெண்டைக்காய் மாதிரி வறுக்கலாம்.

      நீக்கு
    3. தாமரைத் தண்டு வற்றல் - நான் சாப்பிட்டதில்லை. சமையல் செய்ததை சுவைத்ததுண்டு கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    காஃபி வித் கிட்டு 100 ஆவது பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
    உங்கள் காணொளிக் காட்சிகளை மிக விரும்பிப் பார்க்கும் படி
    இருக்கின்றன. நன்றி.

    இன்னும் நிறைய எழுத ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

      காஃபி வித் கிட்டு பதிவுகள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நாய்களுடன் போட்டியிடாத சிறுத்தைக்கான வாசகம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய் - சிறுத்தை வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      நீக்கு
  7. நாதிர் மோஞ்சே கேட்கவே நன்றாக இருக்கிறது. செய்முறை
    தேடிப் பார்க்கிறேன்!!!

    தாமரைத் தண்டின் வடகம் தான் ருசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாதிர் மோஞ்சே - இணையத்தில் செய்முறை இருக்கிறது வல்லிம்மா.

      தாமரைத் தண்டின் வடகம் - சுவைத்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. நடைப் பயணத்தின் போது எடுத்த மூடுபனிப் படமும்,
    காதில் விழுந்த பேச்சும் அருமை.
    அவர் பேசியது மருமகளுடனாக இருக்கலாம்.:))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனிமூட்டம் புகைப்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      //அவர் பேசியது மருமகளுடனாக இருக்கலாம்!// - வாய்ப்பில்லை வல்லிம்மா. Behan (சகோதரி) என்று அழைத்துப் பேசினார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சன் ஃபீஸ்ட் விளம்பரப் படம் மிக அருமை.
    அன்னையர் தினமா இன்று.!!!!
    எப்படித்தான் இவ்வளவு சிறப்பாகப்
    படம் எடுக்கிறார்களோ. தத்ரூபமாக இருந்தது.
    மிக அழகு. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையர் தினம் இல்லைம்மா. ஏதோ ஒரு அன்னையர் தினம் சமயத்தில் வெளிவந்த விளம்பரம் இது.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. 100 காஃபி வித் கிட்டுவுக்கு வாழ்த்துக்கள்.
    தொடர வாழ்த்துக்கள்.
    நடைபயணத்தில் எடுத்த படம் அழகு.
    விளம்பர காணொளி மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. 100-ஐ தொட்டமைக்கு வாழ்த்துகள் ஜி.
    எல்லாமே ரசனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. 100 - தொடர வாழ்த்துகள் ஜி...

    பனிமூட்ட புகைப்படம் ஆகா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      புகைப்படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சென்சுரி அடித்ததற்கு வாழ்த்துக்கள் சார்.
    சென்னையிலும் காலையில் மெல்லிய பனிமூட்டம் இருக்கு.
    வாசகங்கள் அருமை.
    உங்கள் தளத்தில் அசைவ உணவு குறித்த சந்தேகங்கள் எழுவதே இல்லை.
    சைவம் தான் வரும் என்பது தெரியுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இன்றைய காபி வித் கிட்டு ரசிக்கும்படி இருந்தது. 100வது பதிவுக்கு வாழ்த்துகள். இன்னும் 100 பதிவுகள் கடந்த பிறகு புதிதாக என்ன பெயர் வைப்பீர்கள் என்று யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாக என்ன பெயர்! :) ஹாஹா...

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது. மேலும் இன்றைய நூறாவது காஃபி வித் கிட்டுவுக்கு எங்கள் ஆதரவும், வாழ்த்துக்களும்.

    தாங்கள் எடுத்த பனி மூட்ட படம் அழகாக உள்ளது.

    சிறந்த எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் பேச்சு நன்றாக ரசிக்கும்படி உள்ளன.

    விளம்பரம் பிறகு கண்டிப்பாக பார்த்து ரசிக்கிறேன்.

    ராஜா காது வழி கேட்ட செய்திகள் வியப்பாக இருந்தது. ஏதோ போனால் போகிறது என அவர் கொண்டு வரும் உணவை, இவர் இப்படியா குறை சொல்வது?

    இந்த வாரத்திய உணவு பெயர் புதிதாக உள்ளது. தாமரைப்பூவின் நடுவில் இருக்கும் விதைப்பருப்புக்கள் போலிருப்பதை எடுத்து முன்பு சாப்பிட்டுள்ளோம். சுவையாக இருக்கும். அதன் தண்டிலேயே உணவுகள் செய்து சாப்பிடுவது கேள்விபடாதது.
    அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. வழமை போல் அற்புதம்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. காணொளி அருமை..இசை கூடுதல் சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      நீக்கு
  18. 100 காஃபி வித் கிட்டுவுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. விளம்பரப் படம் பார்க்கலை, பார்க்கணும். நூறு காஃபி குடித்தமைக்கு வாழ்த்துகள். நாதிர் மோஞ்சே செய்முறையை இணையத்தில் தேடிப் பார்க்கணும். எஸ்ராவை எல்லாம் ரசித்த காலம் மலை ஏறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. நாதிர் மோஞ்சே செய்முறை இணையத்தில் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....