செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

கதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும் நானும் - பனீர் - Wall Hanging


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட உள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப்பனுபவங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள். நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்!


******




சஹானா - புத்தக வாசிப்புப் போட்டி - 1 ஃபிப்ரவரி 2021:







சஹானா இணைய இதழ் நடத்திய ஜனவரி மாத புத்தக வாசிப்புப் போட்டி பற்றி முன்னர் பகிர்ந்து இருந்தது நினைவில் இருக்கலாம். இந்த பிப்ரவரி மாதப் போட்டியிலும் என் புத்தகம் இடம்பெறுகிறது. வாசிப்பில் விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்குபெறலாம்.  மொத்தம் பதினைந்து நூல்கள் பங்குபெறுகின்றன.  அதற்கு வாசிப்பனுபவத்தினை/விமர்சனத்தினை எழுதுபவர்கள் பரிசு பெறுவார்கள்.  அதிக விமர்சனம் பெற்ற மின்னூலுக்கும் பரிசு உண்டு.  போட்டி பற்றிய தகவல்களை சஹானா இணைய இதழின் தளத்தில் காணலாம். சமீபத்தில் வெளியிட்ட எனது புத்தகமான “Adhi’s Kitchen Recipes (ஆதியின் அடுக்களையிலிருந்து)”  இந்தப் போட்டிக்கான 15 மின்னூல்களில் ஒன்று! 



தவலை அடை - 4 ஃபிப்ரவரி 2021:



சஹானா இணைய இதழின் ஃபிப்ரவரி மாதப் போட்டிக்கான என்னுடைய பங்களிப்பு. இணைப்பு இங்கே. வாசித்து பாருங்களேன். வெளியிட்ட தோழிக்கு அன்பான நன்றி.



வாசிப்பும் நானும் - 6 ஃபிப்ரவரி 2021:


வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்ட எனக்கு சென்ற வாரம் முழுவதும் இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தில், சஹானா புத்தக வாசிப்புப் போட்டிக்காக சில மின்னூல்களை வாசித்து அதற்கு வாசிப்பனுபவங்களை எழுதுவதில் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்தது.


என்னுடைய மின்னூலுக்கும் தோழமைகள் சிலர் தங்கள் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.  மிக்க மகிழ்ச்சி. இந்த குழுமத்தை துவக்கி வாய்ப்பைக் கொடுத்த இனிய தோழி Bhuvana Govind-க்கு மனமார்ந்த நன்றிகள்.❤️


முதன்முதலாக பனீர் - 6 ஃபிப்ரவரி 2021:


ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையில் ஆரம்பித்து ஒன்பதாம் வகுப்பு வரை ஹிந்தி பிரச்சார சபா மூலம் ஆறு தேர்வுகள் (விஷாரத்) எழுதி பாஸ் செய்தேன். முதல் மூன்று பரீட்சைகள் எங்கள் மேல் வீட்டில் இருந்தவரிடம் கற்றுக் கொண்டேன்.


அதன் பின் சரியாக டீச்சர் கிடைக்காமல் அங்குமிங்கும் அலைந்து, ஒரு பரீட்சைக்கு நானே படித்தும் பாஸ் செய்யும் நிலை.🙂 அதில் விஷாரத் முதல் நிலைக்கு கோவையின் 'அஞ்சு முக்கு' ஏரியாவில் உள்ள சக்தி ஹிந்தி சென்டரில் பயின்றேன்.


அங்கு அப்போது நான் மட்டும் தான் பள்ளி மாணவி.🙂 எல்லோருமே வேலைக்காகவும், பிரமோஷனுக்காகவும் ஹிந்தி கற்ற  அக்காக்களும், அண்ணாக்களும் தான் 🙂


அந்த சென்டரில் நடந்த விழா ஒன்று!! அதில் ஒரு தட்டில் வைத்து சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாகவும், வெள்ளையாகவும் இருந்த ஒன்றும், தொட்டுக்கையாக  சிகப்பான க்ரேவியில் துண்டங்களாக மெத்தென்ற பக்குவத்திலும் இருந்ததும் தரப்பட்டது!!!


இதெல்லாம் என்னவென்றே அதற்கு முன் பார்த்ததில்லை 🙂 சாப்பிடுவதா?? வேண்டாம் என்று சொல்லி விடலாமா? சைவம் தானா?? அம்மாவுக்குத் தெரிந்தால்?? என்று பலவாறு யோசித்து வேண்டாம் என வந்துவிட்டேன். 🙂


இந்தக் கதையை வடக்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என் மாமாவிடம் சொன்ன போது அவர் சிரித்துக் கொண்டே, அதன் பெயர் நான்! தொட்டுக்கையாக தந்தது பனீர் பட்டர் மசாலா! ரொம்ப ருசியாக இருக்கும் எனவும் சொன்னார் :)


நான் முதன்முதலாக பனீரை பார்த்த கதை எப்படியிருக்கு நட்புகளே!!


ஆதி’ஸ் கிச்சனில் பனீர் செய்முறை - 6 ஃபிப்ரவரி 2021:


இன்று Adhi's kitchen சேனலில் தோழி Priyasaki Ammu-வின் நேயர் விருப்பத்திற்காக பனீர் செய்முறை தான் பகிர்ந்து கொண்டுள்ளேன் 🙂


பனீர் செய்முறை


பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.


ரோஷ்ணி கார்னர் - 7 ஃபிப்ரவரி 2021:


சஹானா இணைய இதழில் மகளின் பதிவு இன்று வெளிவந்துள்ளது..வாய்ப்பு கொடுத்த சஹானா இணைய இதழுக்கு நன்றிகள்.❤️ பதிவுக்கான சுட்டி கீழே!


DIY - Wall Hanging - Roshni Venkat


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததா என்பதை பின்னூட்டம் மூலம் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கதம்பம் பகிர்வின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கதம்பமாலை தொகுத்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருமையான கதம்பம்.
    வாழ்த்துக்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கதம்பம் ரசித்தேன்.  பனீர் மகாத்மியம் பேஸ்புக்கிலும் படித்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கதம்பம் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....