ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

முகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


போராடு… உன்னால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள், இதை நீ எப்படிச் செய்தாய் என்று கேட்கும்படி… போராடு!


******





 

முகநூல், முகரக்கட்டை பொஸ்தகம் இப்படி எப்படியெல்ல்மோ இந்த ஃபேஸ்புக்-ஐ அழைக்கிறார்கள். இதனால் என்ன பலன் இருந்து விடப்போகிறது - வெட்டி அரட்டைக்கும், அரசியல் விவாதங்களுக்கும், காமெடி மீம்ஸ்களுக்கும் மட்டுமே தானா இந்த ஃபேஸ்புக்.  இதனை நல்ல விதத்தில் பயன்படுத்தவே முடியாதா என்ன?  சரியான விதத்தில் பயன்படுத்தினால் எல்லாமே நல்லது தான் - முகநூலாக இருக்கட்டும், ட்விட்டர் ஆக இருக்கட்டும் - இப்போது இதற்குப் போட்டியாக இந்தியாவில் வந்திருக்கும் ”KOO” ஆக இருக்கட்டும் - அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்று சொல்வதைப் போல முகநூல் இப்போதெல்லாம் வீண் சண்டைகளுக்கும், விவாதங்களுக்கு மட்டுமே பயன்படுகின்றன.  இது தவிர பெண் பெயரில் இருக்கும் கணக்குகளை மட்டுமே பார்க்கும் சில கும்பல்களுக்கும் இது உதவியாக இருக்கிறது!  சமீபத்தில் கூட நண்பர் பரிவை சே. குமார், தனது முகநூல் கணக்கு பெண் பெயரில் இருப்பதால் இருந்த தொல்லைகளைப் பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது.  


சரி எதற்கு இந்த முகநூல் பற்றிய புராணம்…  முகநூல்-ஐ நடத்துபவர்கள் அவ்வப்போது அதற்காக சில விளம்பரங்களைச் செய்வதுண்டு.  அப்படியான ஒரு விளம்பரம்/குறும்படம் தான் இன்றைக்கு, இந்த ஞாயிறில் பார்க்கப் போகிறோம்.  இது பஞ்சாபி/ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு!  அதனால் தைரியமாகப் பார்க்கலாம்.  பாருங்களேன்!



என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் விளம்பரம்/குறும்படம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்களேன்!  நாளை வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

18 கருத்துகள்:

  1. காணொளி பின்னர்தான் காணவேண்டும்.  பேஸ்புக்கில் எனக்கும் சில அனுபவங்கள்...   சமீபத்தில் பிரென்ட் ரிக்வஸ்ட் கொடுத்து நட்பானவர்களில் ஒருவர் கருணை இருந்தால் ஆதரவற்றவர்களுக்கு பணம் கொடு என்று நாளும் கேட்கிறார்.  இன்னொரு நண்பர் - அவரும் ஆண்தான் என்று நினைக்கிறேன் - நட்பிலிருந்து வெளியில் வந்துவிட்டேன்) முத்தங்களாகப் பறக்க விடுகிறார்...  என்னென்னமோ எழுதுகிறார்..  இன்னொருவர் கால் மீ கால் மீ என்கிறார்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.

      முகநூலில் நான் அவ்வளவாக உலா வருவதில்லை. என் பதிவுக்கான சுட்டி கொடுப்பதோடு சரி. அந்த நேரத்தில் சில இற்றைகளைப் பார்ப்பதுண்டு. முத்தங்களாகப் பறக்க விடுகிறார் - ஹாஹா... எஞ்சாய்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சஃபர் படத்தில் இன்னொரு கிஷோர்குமார் பாடலும் அற்புதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜன்னல் மாறி விழுந்துவிட்ட கமெண்ட்!  ஸாரி..

      நீக்கு
    2. கிஷோர் குமார் பாடல்கள் இனிமை தான். :) ஜன்னல் மாறி விழுந்தாலும் ரசிக்கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஜன்னல் மாறி விழுந்த கமெண்ட் - :) புரிந்தது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குறும்படம் கொஞ்சம் பார்த்தேன். உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன. மிச்சத்தை மத்தியானம் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குறும்படம் ரசித்தேன். வழக்கம்போல தெரிவு செய்யும் முறை சிறப்பு.
    அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது களப்பணி சிறக்க வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  7. மிக நன்றி வெங்கட்.
    இது போல முக நூல் வழியாகச் சாதனை
    மனத்தை நிறைவாக்குகிறது. எத்தனை உழைப்பு ,எத்தனை நேர்மை,எத்தனை அன்பு.

    அருமையான பகிர்வு. அருமையான குறும்படம்.
    நல் விஷயங்களையே பகிர்வோம் .நல்லதையே நினைப்போம்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்களும் விளம்பரமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. நல்விஷயங்களையே பகிர்வோம் - அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....