வியாழன், 18 பிப்ரவரி, 2021

ஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட ஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய் - Will Rogers.


******






நேற்று பள்ளியிலிருந்து வந்த மகள், அம்மா! உன் புராணம் தான் ஸ்கூல்ல ஓடுது! என்றாள்.


நான் என்ன கண்ணா பண்ணேன்?? ஃபீஸ் கட்டத் தானே வந்தேன்! என்றேன் பதறியபடி.


அதில்லமா! என் ஃப்ரண்ட்ஸ், ஏண்டி! உங்கம்மா பண்ற சாக்லேட், ஸ்வீட் எல்லாம் நீ மட்டும் தான் சாப்பிடுவியான்னு கேட்டாங்க!


ஆமா! வீட்டுல நான் தானே இருக்கேன்னு சொன்னேன்.


எங்கம்மா சாக்லேட் பண்ணுவாங்கன்னு  எப்படித் தெரியும்னு கேட்டேன்!

உன்னோட சேனல  பார்ப்பாங்களாம்மா! சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க.  அவங்களோட  ஃபேவரிட் ரோஸ்மில்க் ஜெல்லி, மலாய் கேக், மில்க் சாக்லேட் என்று வரிசையாக சொன்னார்களாம்...🙂


என்னோட பயாலஜி மிஸ் கூட சொன்னாங்கம்மா..டைம் கிடைக்கும் போது அம்மாவோட சேனல் பார்ப்பேன்னு சொன்னாங்க..என்றாள்.


சில நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து தோழி ஒருவர் பேசுகையில்,  'உன்னோட வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு புவனா! ஒரு பொருள் இல்லன்னா அதுக்கு பதிலா என்ன யூஸ் பண்ணலாம்னு சொல்றது எனக்கு பிடிச்சது! என்றார்.


சென்ற வாரத்தில் ஒருநாள், ரோஷ்ணியம்மா! பனீர் செய்யறது இவ்வளவு ஈஸின்னு இப்போ தாங்க தெரிஞ்சுகிட்டேன் என்றார் குடியிருப்புத் தோழி.

என் மாமி ஒருவர், ஆப்பிள் பேடா நானும் பண்ணிப் பார்த்தேண்டா கண்ணு!  என் ஃப்ரண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணேன்! என்றார்.


இவை எல்லாவற்றையும் விட வாராவாரம் வீடியோ பப்ளிஷ் பண்ணினதும், வீடியோ பார்த்துட்டு முதல் லைக் நான் தான் போட்டேன் என்று சொல்லும் என் கணவர்..🙂 


பேசிப் பார்க்கும் போது சரியா இருந்தது. ரெக்கார்ட் பண்ணும் போது ஒளறிட்டேன்! என்பேன்.


"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல..50 வீடியோவாவது போட்டாத் தான் கொஞ்சம் புரிபடும்." ''வாரம் ஒரு வீடியோ  போடறதே பெரிய விஷயம்' நீ பாட்டுக்கு செய்!  என்பார்..🙂


Adhi's kitchen சேனல் ஆரம்பித்து ஐந்து மாதங்களாகிறது. எனக்குப் பிறகு எங்கள் குடும்பத்திலேயே என் அத்தைப் பெண்ணும், மாமா பெண்ணும் கூட சேனல் ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எல்லாம் views நிறைய இருக்கும். அவர்களுக்கு நிறைய contacts இருக்கலாம்! எனக்கு அப்படியல்ல! 50 views தாண்டினால் அது பெரிய விஷயம்..🙂


அதை விட  இது போன்று நட்புகளும், உறவுகளும்  சொல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடேது! இல்லையா! எனக்கான அடையாளத்தை தேடிக் கொண்டிருந்த மனதும் சற்று சமாதானமாகியுள்ளது..🙂 


*****


பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. வாழ்த்துகள். தொடர்ந்து காணொளி போடுவதுதான் முக்கியம்னு படித்தேன். திடுமெனெ பார்வையாளர்கள் exponentialஆக அதிகரிக்கும், அதற்கு தொடர்ந்து காணொளி போடணும் என்று சொல்லியிருந்தார்கள்.

    உங்கள் சானலைப் பார்த்த பிறகுதான், இணையத்தில் தேடி தில்பசந்த் மற்ற செய்முறைகளையும் பார்த்து வீட்டில் செய்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்பசந்த் - வீட்டில் செய்து பார்த்தது அறிந்து மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

      நீக்கு
  3. வாழ்த்துக்கள் ஆதி. எல்லோரும் விரும்பி பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி.

    //அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல..50 வீடியோவாவது போட்டாத் தான் கொஞ்சம் புரிபடும்." ''வாரம் ஒரு வீடியோ போடறதே பெரிய விஷயம்' நீ பாட்டுக்கு செய்! என்பார்..🙂//

    இந்த உற்சாக வார்த்தைகள் மேலும் உயர உதவும்.
    உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  வாழ்வின் சந்தோஷ தருணங்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் தொடர்ந்து காணொளி போடுவது பெரிய விடயம்தான்.

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி அடையலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி அடையலாம் - உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துகள் ஆதி. தொடர்ந்து போட்டு இதிலும் வெற்றியுடன் பரிமளிக்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாழ்த்துக்கள் மேடம்.
    பெரும்பாலும் ரெண்டாம் லைக் போடுவது நான்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரும்பாலும் ரெண்டாம் லைக் போடுவது நான் தான்// மகிழ்ச்சியும் நன்றியும் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....