வியாழன், 22 ஏப்ரல், 2021

கதம்பம் - தடுப்பூசி - ஃபலூடா - காக்டெயில் - மகளதிகாரம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மேகங்களின் ஆலயம் மேகாலயா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நல்லவை முதலில் நரகமாகத் தோன்றும் முடிவில் சொர்க்கமாகும்.  தீயவை முதலில் சொர்க்கமாகத் தோன்றும் முடிவில் நரகமாகி விடும் - பகவத் கீதை.


******



தடுப்பூசி - 17 ஏப்ரல் 2021: 





ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம்!! 60+ வந்த போது போட்டுக் கொள்ளவில்லை. இவ்வளவு நாளாகியும் யார் யாரோ எதையோ சொல்கிறார்கள் என்று போட்டுக் கொள்ளவில்லை! அவர்கள் பெற்ற மூன்று குழந்தைகளும் போட்ட பின் தான் அப்பாவும், அம்மாவும் இன்று சம்மதித்து வந்தார்கள்.


எட்டு மணிக்குள்ளாக என் நாத்தனார் சென்று டோக்கன் வாங்கி விட்டு எனக்கு கால் செய்ய, நான் என் மாமனாரையும், மாமியாரையும் அழைத்துச் சென்று நாத்தனாரை அங்கிருந்து அனுப்பி விட, நாங்கள் காத்திருக்கத் துவங்கினோம் - 9:30 முதல் 12:30 வரை!


குழந்தைகள் நலப் பகுதியில் மூத்த குழந்தைகளுக்கு இன்று ஊசிப் போட்டுக் கொண்டாயிற்று 🙂


அங்கிருந்த நேரத்தில் எல்லோரும் பேசிக் கொண்டது: ரெண்டுல எந்த ஊசி நல்லது?? விவேக் ஊசி போட்டு தான் போயிட்டாராம்!! டோக்கனே குடுக்காம வி.ஐ.பிக்களுக்கு மட்டும் முதல்ல விட்டுடறாங்களாம்!! என்று பலவிதமான கேள்விகள், குழப்பங்கள் 🙂 முடிந்தவரை பதில் சொல்லிக் கொண்டிருந்தேன் 🙂


நீ போட்டுட்டியாம்மா?? இல்லங்க! எனக்கு இன்னும் அந்த வயதுவரம்பு வரல! வந்தா கட்டாயமா போட்டுப்பேன் என்றேன்.


அருகிலிருப்போரின் டோக்கன் நம்பரைத் தெரிந்து கொள்வது, அவர்களிடம் பேசி குடும்ப வரலாறை பகிர்ந்து கொள்வது என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள் எங்க வீட்டு பெரியவர்கள். அருகிலிருந்த அம்மா 'உங்க மருமகளா இவ! நல்லா பேசறாளே! இப்படி சொல்றீங்களே! என்றார்..!! ஹா..ஹா..ஹா..🙂


அங்கிருந்த போது லலிதா, சகுந்தலா, பழனியம்மாள் இவர்களுக்கெல்லாம் ஒரு உதவியாக அவர்களின் சீட்டில் பெயர், முதல் ஊசியா, ரெண்டாம் ஊசியா, ஆதார் எண், மொபைல் எண் இவற்றையெல்லாம் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது டோஸ் ஜூன் ஒன்றாம் தேதி.


வீட்டிற்குத் திரும்பும் வழியில் தெரிந்த ஆட்டோ டிரைவரிடம் பேசும் போது தடுப்பூசி போடலையாண்ணே?? என்றேன். அதுல நிறைய பிரச்சனை வருதும்மா; என்னமோ ஆயிடுதாம்! என்கிறார். இன்னும் இவரைப் போன்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.


வாய்ப்புள்ளவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.


******


ஃபலூடா - 18 ஏப்ரல் 2021:





என் கணவரிடம் 'ஃபலூடா எப்படியிருக்கும்?? நான் சாப்பிட்டதே இல்லை!


அதுவா!! சேமியால்லாம் போட்டு சுமாரா இருக்கும்!!


இப்படித் தான் போய்க் கொண்டிருந்தது...🙂


சென்ற முறை டெல்லிப் பயணத்தில் என்னென்னமோ சாப்பிட்டு இங்கே இந்த முகநூல் சமுத்திரத்தில் பகிர்ந்து கொண்டிருந்தேன்...🙂 


நம்ம வித்யா சுப்ரமணியம் மேடமை டெல்லிப் பயணத்தில் சந்தித்த போது கூட 'தினமும் எதையாவது போட்டு என்னால சாப்பிட முடியாம வெறுபேத்தற' என்றார் 🙂 ஹா..ஹா..ஹா..


அப்படித்தான் ஒருநாள் அங்கு 'குல்ஃபி ஃபலூடா' சுவைத்தோம். நன்றாக இருந்தது. இணையத்தில் தேடியதில் விதவிதமான ஃபலூடா ரெசிபிக்கள் கிடைத்தது.


இதோ இந்த வாரம் Adhi's kitchen சேனலில் Royal falooda. பாருங்களேன்.


ஃபலூடா


******


கலக்கல் காக்டெயில் - 19 ஏப்ரல் 2021:





4 நெல்லிக்காய், பாதி வெள்ளரி, சின்ன துண்டு இஞ்சி, அரை மூடி எலுமிச்சை அதோடு சிட்டிகை உப்பும், சாட் மசாலாவும் 🙂 எல்லாவற்றையும் மிக்சர் ஜாரில் அரைத்து வடிகட்ட வேண்டியது தான்.


வடக்கில் வாழைப்பழத்தில் கூட சாட் மசாலா தூவி சுவைப்பார்கள் 🙂 அங்கு ருசித்த லெமன் சோடா, ஜல் ஜீராவை நினைவூட்டியது 🙂 மகள் 'அள்ளுது' என்று சொல்லி ருசித்தாள். வெயிலுக்கு ஏற்ற பானம். செய்து பாருங்கள்.


******


மகளதிகாரம் - 20 ஏப்ரல் 2021: 


மகளுக்கு 11th அப்ளிகேஷன் வாங்கி வந்து ஒரு மாசம் ஆச்சு..வாங்கும் போது ஃபோன் நம்பரும் வாங்கி இன்ஃபார்ம் பண்ணுவோம் என்று சொன்னார்கள். இன்று வரை தகவல் இல்லை!!


தலைநகரிலிருந்து நம்ம 'தல' வேறு தினமும், ஸ்கூல்ல இருந்து மெசேஜ் வந்ததா என்று கேட்டுக் கொண்டே இருந்தார் 🙂  சரி! நாமளே இன்னிக்கு கால் பண்ணிக் கேட்டுடுவோம்!  (ஒரு வருஷம் ஆனாலும் இந்த இரண்டு கஜ இடைவெளி விட்ட பாடில்லையே! பகவானே! ட்ரிங்! ட்ரிங்!)


அட்மிஷன் அப்புறம் தான்! நாங்க இன்ஃபார்ம் பண்ணுவோம்!! அப்ளிகேஷனை சப்மிட் பண்ணிட்டீங்க தானே??  (தொலஞ்சேன்)


நான் தான் அன்னிலேர்ந்தே கேட்கறேனே! நமக்கு வேணும்னா நாம தான் கேட்டுக்கணும்! நீ படிச்ச காலத்துலயே இருக்காத புவனா! (நல்லவேளை பேர் ஞாபகத்துல இருக்கே!) நா சொல்லி என்னிக்கு கேட்டுருக்க!!  (19 வருட வாழ்க்கைக்கு  வந்த சோதனை🙂 )


ஹா..ஹா..ஹா..


நம்ம 'தல' எல்லா பதிவிலயும் என்னை இழுக்காம, குறை சொல்லாம இருக்க முடியாதே உன்னால! என்கிறார் 🙂 என் பலமும், பலவீனமும் என் மணவாளனே! 🙂 என்ன செய்ய!!


அடுத்து அப்ளிகேஷனை மகள் பூர்த்தி செய்தாள். அப்பாவின் படிப்பு,  central govt employee என்று எழுதினாள். அடுத்து அம்மா!! எப்போதும் கரண்டி ஆஃபீஸ் (Housewife) தான் 🙂 


கண்ணா! You tuberன்னு எழுதிக்கோயேன்! என்று சொன்னவுடன் அம்மா....!!! என்று அலறி முறைக்கிறாள் :)


நாளைக்கு ராம நவமியா இருக்கு! நாளைக்கு அப்ளிகேஷனை குடுத்துடலாம்! என்று ஏகமனதாக முடிவெடுத்தாச்சு 🙂 குடும்பம் ஒரு கதம்பம்!, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்! இந்த பாட்டெல்லாம் பாடிக் கொள்ளவும் 🙂


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


38 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் ஆதி

    தடுப்பூசி இனிதான் போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஃபெல்லூடா யம்மி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மகிழ்ச்சி. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. திங்கள் அன்று நான் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.  சொந்தக் காரணங்களுக்காக தள்ளிப்போட்டேன் என்று பார்த்தால் சென்றாலும் கோவாக்சின் கிடைத்திருக்காது என்று தெரிந்தது.  ஆனால் வேறு இடத்தில் கிடைக்கும் என்று நேற்று சொன்னார்கள்.  நாளை அங்கு சென்று போட்டுக்கொள்ளலாமா என்று யோசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது டோஸ் தடுப்பூசி - சரியான நேரத்தில் போட்டுக்கொள்ளுங்கள் ஸ்ரீராம். எனக்கு வரும் மே மாதம் ஒன்றாம் தேதி போட்டுக்கொள்ள வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பலூடா  என்று நான் எபபவோ பல வருடங்களுக்கு முன்னால் சுஜாதா கதைகளில் படித்து என்னவாயிருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.  நான்கைந்து வருடங்களுக்கு முன்தான் மதுரையில் அதைச் சுவைக்கும் வாய்ப்பு கிட்டியது...  பூ...   இதானா!!

    மகளின் பள்ளி அட்மிஷன் விவரங்கள் புன்னகைக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபலூடா - எனக்கும் அதன் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை ஸ்ரீராம். மகளின் பள்ளி குறித்த பகிர்வு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஃபலூடாவெல்லாம் ராஜஸ்தான், குஜராத்தில் சாப்பிடணும்! அஹமதாபாதுக்கு ஹிந்தி பரிட்சை எழுதச் சென்றபோது நான் மதிய உணவாக ஃபலூடா தான் சாப்பிட்டேன். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யக் கண்ணாடி தம்பளரில் வழிய வழிய ஃபலூடா!

      நீக்கு
    3. உண்மை தான் கீதாம்மா. ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் சாப்பிட்டது போல வேறு எங்கும் சுவைத்ததில்லை .

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஆதி உங்கள் எழுத்து நடை இப்போது மாறியிருப்பது தெரிகிறது நகைச்சுவையுடன்!

    நானும் ஜி போலத்தான்...பதில் வரவில்லை என்றால் எதுவாக இருந்தாலும் நாமே கூப்பிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். வீட்டில் என்னை என்ன இப்படி ஒரு ஏங்க்சைட்டி பொறுமை இல்லை என்ற பெயர் கிடைக்கும் ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அவர்களுக்கு நம்மால் ஏதேனும் நன்மை உண்டென்றால் மட்டுமே குறிப்பாக பணம் என்றால் மட்டுமே அழைப்புகள் வரும் அல்லாமல் நாம் தான் முனைய வேண்டியிருக்கு

    ஃபெல்லூடா முன்பு நிறைய செய்ததுண்டு. உங்கள் யுட்யூபையும் பார்க்கிறேன் ஆதி ரொம்ப நாளாச்சு பார்த்து..

    காக்டெயில் ஜூஸ் சூப்பர்!!

    "தல" ஹா ஹா ஹா ஹா!

    மகளுக்கு வாழ்த்துகள்!

    உங்கள் புதிய எழுத்து நடையை ரசிக்கிறேன் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதியின் எழுத்து நடையில் மாற்றம் - தொடர்ந்து வாசிக்கும் எனக்குத் தெரியவில்லை கீதாஜி. நல்லதாக இருந்தால் மகிழ்ச்சியே.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. வீட்டில் நானும் யாராவது வந்தால் ஃபலூடா செய்வேன். இப்போல்லாம் பண்ணுவது இல்லை.

      நீக்கு
    3. நாங்கள் வரும்போது சொல்கிறேன! செய்து தாருங்கள் கீதாம்மா

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //நம்ம 'தல' எல்லா பதிவிலயும் என்னை இழுக்காம, குறை சொல்லாம இருக்க முடியாதே உன்னால! என்கிறார் 🙂 என் பலமும், பலவீனமும் என் மணவாளனே! 🙂 என்ன செய்ய!!//
    ரசித்தேன்.


    பேஸ்புக்கில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சி. கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தடுப்பூசி (இரு தவணைகள்) போட்டுக்கொண்டேன். என் மனைவியும் போட்டுக்கொண்டுள்ளார். நண்பர்களை, தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி இதன்மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. நலமே விளையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் மேடம்.
    தடுப்பூசி எனக்கு மே 16 அன்று இரண்டாம் ஸ்டேஜ் போட்டுக்கொள்ளனும்.
    அதன் பக்கவிளைவுகளை விட அதை போடாதனால் வரும் தீ விளைவுகளே அதிகம் என்பது என் ஊகம்.
    எனவே அதை அணைவரும் தைரியமாக போட்டுக்கொள்ளவே பரிந்துறை செய்கிறோம்.
    ஃபலூடா எனக்கு மிகவும் பிடித்த உணவு.
    வீட்டில் இப்ப செய்ய பயப்படுவார்கள், சளி லேசா வந்தாலே பயப்படும் காலம் ஆச்சே?
    சில மாதங்கள் களித்து முயர்ச்சிப்போம்.
    ரோஶ்னியின் புது ஆண்டு கல்விக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்வதே சிறந்தது

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    கதம்ப பதிவு அருமை. இங்கு இனிதான் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அங்கு நடைபெற்ற சுவாரஸ்யமான பேச்சுகளை ரசித்தேன். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இடத்திலும், பிறருக்கு பயனுள்ளதாக நீங்கள் உதவிகள் செய்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

    தாங்கள் கூறியுள்ள உணவு முறைகள் இது வரை சுவைத்ததில்லை. பலூடா முன்பு சேமியா ஐஸ் என்று ஒன்று வருமே... அதை நினைவூட்டுகிறது.

    ரோஷ்ணிக்கு அன்பான வாழ்த்துகள். தங்களின் நகைச்சுவை வார்த்தைகளை மிகவும் ரசித்தேன். அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்வதே சிறந்தது

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தடுப்பூசி போடுதல் அவசியம்தான் ஆனால் மக்களுக்கு அரசின்மீது நம்பிக்கையற்று இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களுக்கு தங்கள் மீதே நம்பிக்கை இல்லை என்றும் சொல்லலாம் - அரசை தேர்ந்தெடுத்ததே அவர்கள் தானே கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கதம்பம் அருமை...

    காக்டெயில் கலக்கி பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. ஃபலூடா - எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. சில கடைகள்ல சரியா பண்ணித்தர மாட்டாங்க.

    விவேக் எபிசோடுக்கு அப்புறம், என்னவோ மனசுல ரொம்பவே கவலை. இரண்டாவது தடுப்பூசி இன்று போட்டுக்கொண்டேன். வளாகத்துக்கே வந்து போட்டுவிட்டாங்க.

    நம்ம ஊர்ல பெரியவங்களை அழைத்துக்கொண்டு தடுப்பூசிக்குச் சென்று வருவதே கொஞ்சம் ரிஸ்கான வேலையாகிவிட்டது. எல்லோரும் மாஸ்க் போட்டுக்கொண்டிருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபலூடா - எனக்கு அதன் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை நெல்லைத்தமிழன்.

      தடுப்பூசி நீங்களும் போட்டுக்கொண்டதில் மகிழ்ச்சி நலமே விளையட்டும்

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. சுவையான கதம்பம் ...

    தடுப்பூசி ...தற்பொழுதைய நிலைமைக்கு மிகவும் அவசியம் ...

    ஃபலூடா...சிறப்பு

    மகளதிகாரம் ....மிக சிறப்பு ..ரசித்தேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. ஃபலூடா , காக்டெயில் இரண்டும் செய்து பார்க்கணும்... பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி எழில் சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. தடுப்பூசி விவரம். மிக அருமை.தல. !உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கார். மிக சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. முகநூலிலும் படித்தேன். தடுப்பு ஊசி இரண்டாவது டோஸ் எங்களுக்கு மே மாதம் சொல்லி இருக்காங்க. ஊசி மருந்து இருக்கானு விசாரித்துக் கொண்டு போகணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மே மாத கடைசியில் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக் கொள்ளுங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....