புதன், 14 ஏப்ரல், 2021

அரிசி தேங்காய் பாயசம் - இலை வடாம் - மெஹந்தி - மண்டலா ஆர்ட் ட்ரே - ஃப்ரிட்ஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


BELIEVE IN YOURSELF, FACE STRONGLY THE TROUBLES THAT BRING YOU DOWN.


******




சஹானா இணைய இதழில் - அரிசி தேங்காய் பாயசம்:





தமிழ்ப் புத்தாண்டு வரப் போகிறது அல்லவா! இதுபோன்ற பண்டிகை நாட்களில் செய்ய ஏற்றதொரு இனிப்பு ரெசிபியை சஹானாவில் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஏப்ரல் மாத போட்டிக்கான பதிவு இது. இணைப்பில் சென்று பார்க்கலாம்.


அரிசி தேங்காய் பாயசம்


******





சஹானா இதழின் ஏப்ரல் மாத வீடியோ போட்டியில் மகளும் பங்கேற்றுள்ளாள். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்ல நாமே நம்மை அழகுபடுத்திக் கொள்ள மெஹந்தி போட்டுக் காண்பித்துள்ளாள். அவளது யூட்யூப் சேனலிலும் இருக்கிறது. 


மெஹந்தி


******


இலைவடாம் - நினைவுகளும் காணொளியும்!





இந்த வாரம் Adhi's kitchen சேனலில் வடாம் சீரிஸில் அடுத்ததாக இலை வடாம் அல்லது தளிர் வடாம் என்று சொல்லப்படுகிற ரெசிபியைத் தான் வீடியோவில் செய்து காண்பித்துள்ளேன்.


இலை வடாம்


முதன்முதலில் இந்த வடாமை சுவைத்தது திருவரங்கத்தில் தான்.வ்என் சீமந்தத்திற்குப் பிறகு நான் திருவரங்கத்தில் தான் இருந்தேன். அப்போது மாலை நேரங்களில் கோவில் வரை நடைப்பயிற்சியாக சென்று வருவேன். மாதம் ஆகி விட்டதால் துவஜஸ்தம்பம் என்று சொல்லப்படுகிற கொடிமரத்தை தாண்டி சன்னிதி வரை செல்லக்கூடாது என்பதால் கம்பர் மண்டபம், மணல்வெளி வரை சென்று விட்டு திரும்பி விடுவேன் 🙂


Large and heavy baby ஆக இருந்ததால் அப்புறம் அதுவும் முடியவில்லை 🙂 மகள் உயரம்! பின்பு மொட்டைமாடியில் தான் நடை 🙂 கோவிலுக்கு நடைப்பயிற்சி செய்த போது எனக்கு அறிமுகமானார் ஒரு தாத்தா! என்னைப் பற்றி விசாரித்து ஒருநாள் வீட்டுக்கு வந்தார்.


கையில் அடுக்கடுக்காக 20 க்கும் மேற்பட்ட வாழையிலைத் துண்டுகள். அதனுடன் பேரீச்சையும் மல்லிகையும் வேறு 🙂 யாரிடமோ சொல்லி செய்து தரச் சொல்லியிருக்கிறார். சுடச்சுட இருந்தது. வாய்க்கு பிடித்திருந்தால் இப்படியே எடுத்து சாப்பிட்டு பாரும்மா! இல்லையென்றால் காயவைத்து பொரித்தும், சுட்டும் சாப்பிடலாம் என்று தந்தார் 🙂


அதை இலையிலிருந்து எடுத்து காயவைத்து வைத்திருந்தார் என் மாமியார். பின்பு பிரசவமான பின் பத்திய சாப்பாட்டிற்கு தினமும் ஒன்றாக அதை சுட்டுக் கொடுப்பார். எப்படி சாப்பிட்டாலும் சுவை தான் 🙂 இலைவடாம் என்றால் அந்த தாத்தா தான் நினைவில் உள்ளார்.


தாத்தா இப்போது இல்லை என்றாலும், அவர் வீட்டை கடந்து போகும் போதெல்லாம் "ஏ! வாடா வாடா வாடா! உன்னை பார்க்கவே முடியலையே!” என்று சொன்னது தான் நினைவுக்கு வரும் 🙂


******


Roshni's corner - மண்டலா ஆர்ட் - ட்ரே





மகளின் சேனலில் இந்த வாரக் காணொளியாக அலங்காரப் பொருளாகவும், பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ள Tray ஒன்றை செய்துள்ளாள்..செய்வது எளிது தான். அதில் மண்டலா ஆர்ட்டும் செய்து அழகுபடுத்தி இருக்கிறாள்.


How to make DIY Trays at home + decoration by dot mandala


காணொளிகளை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.


******


Fridge-இல் வைக்கக்கூடாதவை: 




திருமணமான புதிதில் ஒருநாள் டெல்லியில் நாங்கள் இருந்த பகுதியில் செவ்வாயன்று நடைபெறும் வாரச் சந்தைக்குச் (மங்கள் பஜார்) சென்றோம். காய்கறி, பழங்கள், துணிமணி, பாத்திரங்கள், காலணிகள், வளையல் பொட்டு இத்யாதிகள் என்று சகலமும் இங்கு கிடைக்கும்.


இரண்டு பேருக்கு கால் கிலோ வாங்கினாலே போதும். ஆனால் எல்லாவற்றிலும் அரைக்கிலோ வாங்கிக் கொண்டோம். தெரியவில்லை 🙂 அதோடு பழங்களும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்.


தினமும் என்னவர் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும், 'டீ போடவா' என்பேன். சில நாட்கள் தான் 'போடு' என்பார். அப்போது தான் நானும் குடிப்பேன் 🙂 தனியாக டீ போட்டுக் கொள்ளத் தோணாது 🙂


டீயுடன் ஏதாவது ஸ்நாக்ஸ் அல்லது பழங்கள் கட் பண்ணி கொடுப்பேன். இருவரும் பால்கனியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்போம் 🙂


அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடறீங்களா!! என்று கேட்பேன். வேண்டாம் வேண்டாம் என்றே சொல்லி வந்தார் 🙂 ஒருநாள் வாழைப்பழம் வேணுமான்னு கேட்கறியே!! அது எங்கே இருக்கு! கண்லயே தட்டுப்படலையே! என்றார் 🙂


அதுவா! ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு ஃப்ரிட்ஜ் உள்ள தான் வெச்சிருக்கேன்! என்றதும் அப்படியொரு சிரிப்பு அவரிடத்தில்!!! எதுக்குனு தெரியாமல் முழித்தேன் 🙂 கேட்கவும் பயம் 🙂


எங்க அத வெளில எடு! என்றார். கேரிபேக் உள்ளே வைத்திருந்த வாழைப்பழம் கருகருவென்று என்னவென்றே தெரியாத ஏதோவொன்றாக பயமுறுத்தியது :)


வேற என்னென்ன உள்ள வெச்சிருக்கிற!! உருளைக்கிழங்கு, வெங்காயம் கூட அன்னைக்கு வாங்கினோமே!! உள்ள வெச்சிருக்கிறயா?? என்றார்.


மிகவும் கவலையுடன், இடம் இல்லாததால வெளில தான் இருக்கு!! என்றேன் :)


வெகுளித்தனமாக இருந்த நாட்கள் 🙂 இப்பவும் ஒரு சில விஷயங்களில் அப்படித்தான் 🙂


******


நண்பர்களே, இந்த நாளின் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் விக் என்கிறட் நித்தி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. புத்தாண்டு வாழ்த்துகள். கதம்பம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நெல்லைத் தமிழன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இன்னிக்கு இந்த அரிசி+தேங்காய்ப் பாயசம் தான் நம்ம வீட்டில் புத்தாண்டுக்கு! தேங்காயை நான் நிறையவே போடுவேன் அரைக்கும்போதும். பின்னரும் தேங்காய்ப் பால் எடுத்துச் சேர்ப்பதும் உண்டு. இன்னிக்கு அப்படித் தான் பண்ணிட்டுக் கனிந்த வாழைப்பழத்தையும் நறுக்கிச் சேர்த்தேன். என்ன பண்ணி என்ன? நம்ம ரங்க்ஸுக்கு அந்த ஒரு கரண்டிப் பாயசம் தான். நான் இரண்டு கரண்டி! மீதி விநியோகம்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வீட்டிலும் அரிசி தேங்காய் பாயசம் - மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இந்தப் பாயசத்தை முகநூல், சஹானா ஆகியவற்றிலும் பார்த்தேன். ஆதி வர வர பட்டையைக் கிளப்புகிறார். இலை வடாம் என் அம்மாவும் பண்ணுவார். ஆனால் அரிசியை அரைத்து அல்ல. மைதாவில் பண்ணுவார். நாங்க பொரித்தே சாப்பிட்டிருக்கோம். சுடலாம் என்பதும், அப்படியே சாப்பிடலாம் என்பதும் பின்னாட்களில் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் பகிர்ந்தவை இங்கேயும்.

      சுட்டுச் சாப்பிடுவதும் எனக்கும் பிடிக்கும் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நான் ஆப்பிள் பழங்களைக் கூட இப்போல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதில்லை. கொய்யா, வாழைப்பழம், மாதுளை போன்றவை உடனுக்குடன் செலவு ஆயிடும். ஆகவே பப்பாளி வாங்கினால் அதைப் பாதி நறுக்கி மீதியை வைப்பது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் சாதனப் பெட்டியில் அனைத்தும் வைக்கத் தகுந்தவை அல்ல. தேவைப்பட்ட நேரத்தில் வாங்குவதே இப்போது எனக்கு வழக்கமாக இருக்கிறது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ரோஷ்ணியின் கற்பனை வளமும் கைவேலைகள் செய்யும் திறனும் கூடிக் கொண்டே வருகிறது. சுத்திப் போடச் சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளைப் பாராட்டியதற்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. உருளைக்கிழங்கு வெங்காயம் ப்ரிட்ஜில் வைக்கவில்லை என்றாலும் வாழைப்பழம் ஆரம்பத்தில் நாங்களும் ப்ரிட்ஜில் வைத்திருக்கிறோம்!

    இலவடாம் அல்லது இலைவடாம் கொஞ்சம் புளிப்பாக இருக்கவேண்டும் இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்களும் வாழைப்பழத்தினை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறீர்களா ஸ்ரீராம்! :)

      கொஞ்சம் புளிப்பாக - ஆமாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    தாத்தாவின் அன்பு நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      வாழ்த்தியமைக்கு நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. தங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கதம்பம் அருமை. அனைத்தையும் ரசித்தேன். குழந்தை ரோஷ்ணிக்கு அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வடாம் எனக்கு பிடித்தமானது.
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
    கதம்பம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....