செவ்வாய், 20 ஏப்ரல், 2021

கதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - புத்தாண்டு - புல்லட் ஜர்னல் - விவேக்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


BETWEEN YESTERDAY’S MISTAKES AND TOMORROW’S HOPE, THERE IS A FANTASTIC OPPORTUNITY CALLED TODAY. LIVE IT! LOVE IT!  THE DAY IS YOURS!.


******


Watermelon popsicle - 11 ஏப்ரல் 2021:




அடிக்கின்ற வெயிலுக்கு வீட்டில் இருக்கின்ற பழங்களில் ஜூஸாக்கி மோல்டில் விட்டு பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். நாமும் ருசிக்கலாம்..🙂


******


இப்படியும் சிலர் -12 ஏப்ரல் 2021:


சிலருக்கு நம்மளப் பார்த்தாலே Telephone directory, Database, encyclopedia என்று நினைச்சுப்பாங்க போல 🙂 ஆனா! நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லி என்னை நானே டேமேஜ் பண்ணிக்க விரும்பலை :)


அவங்களத் தெரியுமா? இவங்களத் தெரியுமா? அது பத்தி ஏதாவது தெரியுமா? அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்குமா?? என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்கறாங்களே!! இதில் ஏதாவது ஒரு கேள்விக்காவது அவங்களுக்கு பதில் தெரிஞ்சிருக்கா? :) நான் மட்டும் என்னத்த கண்டேன்!!


இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் எனக்கு content கிடைக்குது! இல்லைனா எழுத ஒண்ணுமே இருக்காதுன்னு நக்கல் வேற  அடிக்கிறாங்க :) ஆனா அவங்களே ஒருநாள் content ஆக மாறுவதும் காலத்தின் கோலம் தான் இல்லையா :)


******


தர்பூசணி புட்டிங் -12 ஏப்ரல் 2021:





தர்பூசணிச் சாறுடன், சர்க்கரையும், கார்ன்ஃப்ளாரும் சேர்த்து கொதிக்க வைத்து மோல்டில் விட்டு ஃப்ரிட்ஜில் செட் செய்தால் புட்டிங் ரெடி! இதே போன்று எந்த விதமான பழங்களைக் கொண்டும் புட்டிங் செய்யலாம் 🙂


கார்ன்ஃப்ளாருக்கு பதிலாக அகர் அகர் கொண்டும் புட்டிங் செய்யலாம். அகர் அகர் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது.


******


தமிழ்ப் புத்தாண்டு - 14 ஏப்ரல் 2021:





பிறந்திருக்கும் புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்..வளமுடனும், நலமுடனும் இருக்க பிரார்த்தித்துக் கொண்டேன். மன நிம்மதியுடனும் உடல் ஆரோக்கியமும் தான் பிரதானமானது. நல்லதே நடக்கட்டும்!


அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.


பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தர வல்லது. .

இன்றைய நைவேத்தியமாக அறுசுவைப் பச்சடி, கோதுமை ரவையில் நாட்டுச் சர்க்கரை சேர்த்த இனிப்புப் பொங்கலும், முப்பருப்பு வடையும், அதோடு சாதம், குடைமிளகாய் சாம்பார், வெண்டக்காய் கறி..🙂


கடந்த ஒரு மாதமாகவே ஒரு ஃபோட்டோவுக்கு மேல் சேர்க்கக் கூடாது என்று மார்க் தம்பி சொல்லிவிட்டார் என்பதால் ஒரே ஃபோட்டோ 🙂


******


ரோஷ்ணி கார்னர் - Bullet journal - 15 ஏப்ரல் 2021:








சில நாட்களாக மகளுக்கு இதில் ஆர்வம் கூடியிருக்கிறது. தன்னுடைய டைரியின் அட்டையை மண்டலா ஆர்ட்டால் அலங்கரித்து, மாதங்களையும், நாட்களையும் டிசைன் செய்து அவளின் பொழுதுபோக்குக்கு ஏற்றாற் போல் வடிவமைத்து இருக்கிறாள்.


******


இரங்கல்கள் - விவேக் - 15 ஏப்ரல் 2021:




நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த மனிதர். இவர் வைத்த மரக்கன்றுகள் மண்ணில் பதிந்து வளர்வதைப் போல நம் மனதில் பதிந்து போன மனிதர்.. உங்களின் நகைச்சுவை என்றும் எங்களுக்கு மறக்காது விவேக் சார். ஆழ்ந்த இரங்கல்கள்.


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்

24 கருத்துகள்:

  1. பேஸ்புக்கிலும் படித்தேன்.  பேஸ்புக்கில் ஒரு  கூடாது என்பது எனக்கு புதிய செய்தி.  ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. விவேக் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

    கதம்பம் வழக்கம்போல் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. கதம்பம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் அருமை

    தங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ரோஷ்ணியின் மண்டேலா டிராயிங் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் மண்டலா ஓவியம் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி எழில் சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆதியின் கதம்பம் வெகு சுவை. வாக்கியமும் நன்று. தினசரி வாழ்க்கைக்கு நல்ல பாடம்.

    தர்பூஸ் பல வடிவங்களில் ஆதியின்
    பரிமாணங்களாக வெளிப்படுகிறது.
    வாழ்த்துகள்.
    அன்பு ரோஷ்ணியின் வரைவுகளும் முயற்சிகளும்
    கண்ணையும் மனதையும் கவர்கின்றன.
    அன்பு ஆசிகள் குழந்தைக்கு.
    முக நூல் போய்ப் படிப்பதைக் குறைத்துக் கொண்டுவிட்டேன்.
    பலவிதங்களில் அது நன்மை.

    கோடை நாட்களில் அனைவரும் பாதுகாப்புடன்
    இருக்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா. முகநூல் பல சமயங்களில் வேதனை தருகிறது. நானும் அங்கே அதிகம் உலவுவது இல்லை. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    கதம்பம் பதிவு அருமை. வெயிலுக்கு ஏற்றாற்போல் பழங்களில் விதவிதமாக செய்து சுவைப்பது நன்றாக உள்ளது. தங்களது தமிழ் புத்தாண்டு சமையல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    தங்கள் மகள் ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமை. அவரது திறமைக்கு என் அன்பான வாழ்த்துகள்.

    நடிகர் விவேக் தீடிரென மறைந்தது மிகவும் வருத்தமான ஒன்று. நகைச்சுவையாக பேசி நடித்து, நம்மை சிந்திக்க வைத்தவர்... என்ன செய்வது? காலந்தான் அவர் இழப்பையும் மாற்றும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. மகளின் ஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கதம்பம் சிறப்பு ...

    தர்பூசணி popsicle ம் , புட்டிங் கும் மிகவும் கவர்ந்தது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம்பம் அருமை. பேஸ்புக்கிலும் படித்தேன்.
    ரோஷ்ணியின் கலை ஆரவம் வளர்ந்து கொண்டு போகிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஹை ஆதி பார்த்து ரொம்ப நாளாச்சு...

    வழக்கம் போல் கதம்பம் மணம் சுவை எல்லாம்...

    ரோஷ்ணி டாப்!!! செமையா வரைந்திருக்கிறாள். மெருகு கூடிக் கொண்டே போகிறது அவள் திறமையில். வாழ்த்துகள் பாராட்டுகள்.

    மண்டலா ஆர்ட் இப்போது ப்ராபல்யமாகி வருகிறது.

    கல்லூரியில் படித்த சமயம் நான் போடும் கோலங்களைப் பார்த்து ஒருவர் - அவர் ஒரு ஓவியர். என்னிடம் நீ மண்டலா ஆர்ட் கற்றுக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டார் அப்போது இதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அது பற்றி தெரியாது என்றதும் அதைப்பற்றி விளக்கம் எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் பல ஆர்ட் இருக்கிறது என்பது தெரிந்துகொண்டேன், மதுபானி, வர்லி, தஞ்சாவூர் பெயிண்ட்டிங்க் என்று பல இருப்பதாக அறிந்தேன். ஆனால் கற்றதில்லை

    விவேக்கின் மரணம் எதிர்பாராத ஒன்று. சின்ன வயது.

    அனைத்தும் ரசித்தேன் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. தர்பூஷணி மட்டுமில்லாமல் கிர்ணிப்பழம், பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராக்ஷை, எலுமிச்சை போன்றவற்றில் கூட சர்க்கரை கொஞ்சமாய்ச் சேர்த்து இப்படி ஐஸ்க்ரீம்/ஐஸ்ப்ரூட் கிண்ணத்தில் ஊற்றி வைக்கலாம். நன்றாக இருக்கும். குழந்தைகள் இருக்கையில் இப்படி நிறையப் பண்ணி வைச்சுப்பேன். அதிலே பையருக்கு உடைக்காமல் எடுக்கத் தெரியாது. அவசரம். பெண் உடைக்காமல் நன்றாய் அழகாய் எடுப்பாள். அது தான் வேண்டும் எனத் தம்பி அக்காவைத் துரத்த, அக்கா அலறிக்கொண்டு ஓடுவாள். வீடு முழுவதும் ஓட்டப்பந்தயம் நடக்கும். இனி வராத நாட்கள் அவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் தந்தமைக்கு நன்றி கீதாம்மா. பழைய நினைவுகள் - மீண்டும் கிடைக்காத சந்தோஷ தருணங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....