செவ்வாய், 27 ஏப்ரல், 2021

கதம்பம் - மாம்பழமும் நுங்கும் - வெள்ளரி காக்டெயில் - சினிமா - கருவேப்பிலை குழம்பு - காதணி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீந்த முடியாத மீன்களை நதி   ஒதுக்கிவிடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும். 


******




ஆதியின் அடுக்களை ரசிகர்கள் - மாம்பழமும் நுங்கும் - 21 ஏப்ரல் 2021: 





அப்ளிகேஷனை பள்ளியில் கொடுக்க கீழே இறங்கிய போது நம்ம குடியிருப்பில் ஏதோ வேலையாக வந்த பெயிண்ட்டர், “நல்லாருக்கீங்களா மேடம்! இப்ப நீங்க செகரட்டரி இல்லையா?” என்று கேட்டு விட்டு, “உங்க 'அடுப்பாங்கர சேனல'!! பார்ப்பேன் மேடம்” என்றார். 🙂 


சமீபத்தில் ஒருநாள் உறவினரிடம் பேசிய போது, “உன் யூட்டியூப் சேனல்லாம் பார்ப்பேன். வெள்ளையா ஒண்ணு, வீட்டிலேயே பண்ணலாம்னு சொல்லிருந்தியே! என்றார்” “வெள்ளையாவா?” “ஆமா! சப்பாத்திக்கு தொட்டுக்க பண்ணுவாங்களே?” “ஓ!! பனீரா??” “ஆமாமா! நீ சொன்ன மாதிரியே ரெண்டு தடவ பண்ணேன். ஈஸியா இருந்தது!” என்றார்.🙂


இன்று வழியில் தென்பட்ட நுங்கு விற்பவர் 'ஒன்று 5 ரூ' என்று சொல்ல வாங்கிக் கொண்டேன். வீட்டிற்கு வந்து புகைப்படத்தை காண்பித்ததும் மகள், எங்கூட தான இருந்த! எப்பம்மா எடுத்த!! என்றாள்.🙂


இந்த வருடம் மாம்பழத்தை பார்க்கவே முடியலையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று பங்கனபள்ளி கி 100 என்று கிடைத்தது 🙂


வெளியில் வெயில் ஜாஸ்தியா தான் இருக்கு. நேற்றிலிருந்து பிரட்டலாக இருக்கு. உவ்வே! வரவா! வர மாட்டேன்! என்றும் சதி செய்கிறது. 🙂 டெல்லி வெயிலில் சன் ஸ்ட்ரோக்கால் அவதிபட்டது நினைவுக்கு வருகிறது. 🙂


******


குக்கும்பர் காக்டெயில் - 22 ஏப்ரல் 2021:





பாதி வெள்ளரிக்காய், 1 மூடி எலுமிச்சை, சிறிதளவு கொத்தமல்லி, உப்பு, சுக்குப்பொடி சேர்த்து அரைத்தால் கிடைக்கும் சுவையான ஜூஸ்! நீங்களும் செய்து, சுவைக்கலாமே!


******


ஒரு குப்பைக் கதை - 24 ஏப்ரல் 2021:





துப்புரவு பணியாளராக பணிபுரியும் ஹீரோவுக்கு பெண் தர மறுக்கின்றனர் பெண் வீட்டார். ஒரு வழியாக பெண் அமைந்து திருமணமும் நடக்கின்றது. சேரி, கூவம், பொதுக் கழிப்பறை, கொசுக்கடி என்று அவளுக்கு பிடிக்காத வாழ்க்கை.


மனைவிக்காக வேறு இடம் மாற்றி புதிய குடித்தனம் துவங்க, அங்கு எதிர் வீட்டில் வசிக்கும் இளைஞரின் மேல் அவளுக்கு ஈர்ப்பு செல்கிறது! ஹீரோ மனைவிக்காக துப்புரவுப் பணியையும் துறக்கிறான். ஆனால் மனைவி அந்த இளைஞருடன் சென்று விடுகிறாள்!


இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால்? அவனுடன் சென்ற பின்பு தான் அவளுக்கு பல விஷயங்கள் புரிய வருகிறது! தான் செய்த தவறு தெரிய வருவதற்குள் அவள் ஒரு கொலையும் செய்ய நேர்கிறது! குப்பை அள்ளுபவனை வெறுத்த அவள், தன் வாழ்க்கை குப்பையாகி விட்டதை உணர்கிறாள். தன் கணவன் செய்த பணியை தொடர்வதாக காண்பிக்கப்படுகிறது.


டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகவும், யோகிபாபு மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் மனதில் சற்று அசைபோட வைத்தது. ரஜினி  சாரின் 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தை தழுவி எடுக்கப்பட்டது போல் இருந்தது. அந்தப் படத்தில் வரும்  'பட்டு வண்ணச் சேலைக்காரி' பாடல் என்னவருக்கு பிடித்த பாடலாக சொல்வார். என்னிடம் பாடிக் காண்பிப்பார்..🙂 


வாய்ப்பு கிடைக்கும் போது இரண்டு படங்களையும் பாருங்களேன்.


******


இந்த வாரக் காணொளி - Adhi's kitchen - கருவேப்பிலைக் குழம்பு:





Adhi's kitchen சேனலில் இந்த வாரம் கறிவேப்பிலைக் குழம்பின் செய்முறை. பாருங்களேன். 


https://youtu.be/tT8ZrwyljHg


******


ரோஷ்ணி கார்னர் - காதணி - காணொளி: 


Roshni's creative corner சேனலில் பழைய காதணிகளை புதிதாக மாற்றிக் காண்பித்துள்ளாள்..Best out of waste!


https://youtu.be/aA1vRN6B3Y0


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


26 கருத்துகள்:

  1. இங்கு சென்னையில் நாங்கள் வாங்கிய மாம்பழம் ரசிக்கவில்லை.  நுங்கு கண்ணில் படவில்லை!

    விதம் விதமாய் காக்டெயில் முயற்சி செய்கிறீர்கள்.  பாராட்டுகள்.


    வெங்கட் 'பட்டுவண்ண சேலைக்காரி' பாடுவதாக கற்பனை செய்து பார்க்கிறேன்.  வெங்கட்..   பாடி வாட்சாப்பின் எனக்கு மட்டும் அனுப்புங்களேன்..  கேட்கிறேன்!

    கறிவேப்பிலைக்கு குழம்பு சுவை.  


    சபாஷ் ரோஷ்ணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று தான் நான் நுங்கு சாப்பிட்டேன்.

      வெங்கட் பாடி கேட்க வேண்டும் - ஹாஹா... ஏன் இந்த விபரீத ஆசை ஸ்ரீராம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆதி அண்ட் வெங்கட்ஜி காலை வணக்கம்

    ஆதி வெரி ஸாரி இன்னும் உங்கள் யுட்யூப் பார்க்கலை ரொம்ப நாளாகிவிட்டது. பார்க்கிறேன் கண்டிப்பாக.

    வெள்ளர் ஜீஸ் சூப்பர். நம் வீட்டிலும் அவ்வப்போது கூட மிளகும் கொஞ்சம் போட்டு செய்வதுண்டு.

    உங்கள் அடுக்களைக்கு ரசிகர்கள் ஆஹா மகிழ்ச்சி! அதுதானே மிக முக்கியம் இல்லையா!

    வெயிலில் அதிகம் போகாமல் உடல் நலனையும் பார்த்துக்கோங்க.

    எனக்கு வெயில் என்றால் ரொம்பவே கஷ்டம் குளிரை சமாளித்துவிடுவேன். பங்களூர் வெயிலே கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. இங்கும் மரங்கள் எல்லாம் வெட்டி பங்களூரும் மற்ற ஊர்களைப் போல ஆகிக்கொண்டு வருகிறது.
    ரோஷ்னி கார்னரும் பார்க்கிறேன்.

    வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கதம்பம் அருமை... கறிவேப்பிலைக் குழம்பின் செய்முறை இணைப்பை மனைவிக்கு அனுப்பி உள்ளேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நுங்கு இங்கு சுளை 15 ரூபாய். நான் வாங்கவில்லை (அடையாறில் சென்ற வருடம் ஒரு சுளை 3 ரூபாய்). மாம்பழ சீசன் ஆரம்பிக்கலை. நல்லா ஆரம்பித்தால் கிலோ 70 ரூபாய்க்கு பதாமி, பங்கனபள்ளிலாம் கிடைக்கும். இப்போ பங்கனப்பல்லி கிலோ 100 ரூ.

    கறிவேப்பிலைக்குழம்பு - செய்முறை பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே இப்போது ஒரு சுளை ஐந்து ரூபாய். இன்னும் சீசன் சரியாக ஆரம்பிக்கவில்லை.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வெயில் கொடுமையாகத்தான் இருக்கிறது மதுரையில்... கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கடுமையான வெயில். சூடு தாங்கலை. சாயந்திரம் தினம் குளிச்சாலும் சில நாட்கள் குளிக்க முடியாமல் போயிடும். அன்னிக்கு ஒரே உடல் எரிச்சல் தான். இன்னிக்கு 3 மணிக்கே ராகுகால விளக்கு ஏற்றிட்டதாலே சாயந்திரம் குளிக்க முடியாது. சூடு இப்போவே தாங்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூடு - அதிகம் தான். தில்லி அளவுக்கு சூடு தெரியவில்லை எனக்கு - வியர்வை தான் இங்கே அதிகமாக இருக்கிறது.

      பதிவு குறித்த உங்கள் கருத்துப் பகிர்வு கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. முகநூலிலும் பார்த்து ரசித்தேன். எனக்கு ரோசாப்பூ ரவிக்கைக்காரி படமும், "உச்சி வகிடெடுத்து, பிச்சிப் பூ வைச்ச கிளி!" பாடலும் தான் நினைவில் வந்தது. அதுவும் இன்னிக்குக் காலம்பர இருந்து இந்தப் பாட்டே சுத்திட்டு இருந்தது. இப்போத் தான் கொஞ்சம் மாறி இருக்கு. கருகப்பிலைக்குழம்பு அல்வா போல் இருக்கு பார்க்க! இப்போ வெயில் காலம் என்பதால் நான் புளியோதரை, மிளகு, கருகப்பிலைக் குழம்பு, துவையல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறேன். நேற்றே தேங்காய்த் துவையல் அரைச்சுட்டுச் சாப்பிடவே முடியலை. இனி வெயில் காலம் முடிந்து தான் பண்ணணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கதம்பம் அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.10 ரூபாய்க்கு ஏழு, எட்டு என்று நுங்கு வாங்கிய காலங்களை நினைத்துப்பார்க்கிறேன். கருவேப்பிலை குழம்பு நன்றாக இருக்கிறது.
    இங்கும் மாம்பழம் கிடைக்கிறது, ஆனால் இனிப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் எழுத்து நல்ல கை வந்த கலையாக இருக்கிறது. கறிவேப்பிலை எனக்கு பிடிக்காது. ஆகவே இதனை மனைவிக்கு பரிந்துரைக்கிறேன். பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. நல்லதொரு தொகுப்பு...

    வெகு நாட்களுக்குப் பின் வந்திருகின்றேன்.
    தவறுதலாக என்ன வேண்டாம்... எனது அன்பும் நல்வாழ்த்துகளும் என்றும் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது. சூழல் காரணமாக பல பதிவுகள் படிக்க முடிவதில்லை. உங்கள் சூழல் புரிகிறது. முடிந்த போது வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி முரளிதரன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கதம்பம் நன்று. ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....