செவ்வாய், 1 ஜூன், 2021

சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி நான்கு - Thillaiakathu Chronicles - துளசிதரன் மற்றும் கீதா



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உண்மை முகத்தோடு வாழ்ந்து விட்டுப் போ! அடுத்தவர் பார்வைக்காக முகமூடியை மாட்டிக் கொள்ளாதே! ஒரு முறை மாட்டிக் கொண்டு விட்டால் சாகும் வரை அதைக் கழற்றுவதற்கான சந்தர்ப்பமே வாய்க்காமல் போய்விடும்!


*****






செப்டம்பர் 2009-இல் ஆரம்பித்த எனது இந்த வலைப்பூ பயணம் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!  இது வரை இந்தப் பக்கத்தில் 2500-க்கும் மேலான பதிவுகளை வெளியிட்டிருக்கிறேன்.  இந்தச் சமயத்தில் வலையுலகு தந்த நட்புகளில் சிலரையும், தில்லி நண்பர்கள் சிலரையும் எனது வலைப்பூ குறித்த அவர்களது எண்ணங்களை எழுதி அனுப்பச் சொல்லி கேட்டிருந்தேன்.  அப்படி எழுதி அனுப்பிய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இது வரை இந்த வரிசையில் மூன்று பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். நான்காவதாக, Thillaiakathu Chronicles வலைப்பூவில் எழுதி வரும் நண்பர்கள் துளசிதரன் மற்றும் கீதா ரெங்கன் ஆகியோர் எனது வலைப்பூவினைப் பற்றியும் அதில் வெளியிடும் பதிவுகள் குறித்தும் எழுதி அனுப்பிய அவரது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  அவரது வேலைகளுக்கு இடையே, எனக்காக தனது எண்ணங்களை எழுதி அனுப்பிய நண்பர்கள் துளசிதரன் மற்றும் கீதா ரெங்கன் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் - அவர்களது எண்ணங்களைப் படிக்கலாம்! 


அதற்கு முன்னர், இந்த வரிசையில் இது வரை வெளிவந்த அனைத்து பகுதிகளின் சுட்டியும் உங்கள் வசதிக்காக இங்கேயே…


சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி ஒன்று - வல்லிம்மா


சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி இரண்டு - சுப்ரமணியன்


சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி மூன்று - எங்கள் பிளாக் ஸ்ரீராம்


*****


எண்ணம் - 4 - தில்லையகத்து துளசிதரன் மற்றும் கீதா ரெங்கன்:


பயணக் காதலனின் வலைப்பயணப் பாதை


ஆதலால் பயணம் செய்வீர்! என்ற தாரக மந்திரத்தை உரைக்கும் பயணக் காதலனாகிய, பயணக் கட்டுரைகளுக்குப் பெயர் பெற்ற எங்கள் நண்பர் திரு வெங்கட்நாகராஜ் – எங்களுக்கு வெங்கட்ஜி – அவரது எழுத்துப் பயணத்தை 2009 ஆம் ஆண்டிலிருந்து வழிநடத்திச் செல்லும் அவரது வலைப்பூவான “சந்தித்ததும் சிந்தித்ததும்” https://venkatnagaraj.blogspot.com பற்றி  எங்கள் ஆத்மார்த்தமான சில வரிகளை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். 


2013ல் நாங்கள் வலைப்பூ தொடங்கி ஒவ்வொரு வலைத்தளமாக அறிமுகமான போது, “ஃப்ரூட் சாலட்” எனும் பகுதி மூலம்தான் வெங்கட்ஜியின் வலைத்தளம் அறிமுகமாகியது, 2014 என்று நினைவு.  வாசித்ததும் மனதைக் கவர்ந்துவிட்டது. 


அதை வாசித்ததும் தோன்றியது இதுதான்.


“எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு”


ஆம்! மிகவும் வித்தியாசமான தனித்துவமான வலைத்தளம் என்று தெரிந்தது. சமீப காலமாக அந்தந்தப் பதிவுக்கு ஏற்ற வாசகம் என்று களை கட்டும் வலைத்தளம். ஆகச் சிறந்த வலைத்தளங்களில் ஒன்றாக இந்த வலைத்தளம் இருக்கிறது என்றால் மிகையல்ல.  நாங்கள் மிகவும் ரசித்து வாசிக்கும் வலைத்தளங்களில் ஒன்று.


வெங்கட்ஜி நம் நாட்டின் தலைநகரில் இருப்பதாலும், நல்ல எழுத்துத் திறமை படைத்தவராக இருப்பதாலும், வட இந்தியா பற்றிய அவரது வித்தியாசமான பல தகவல்கள், கட்டுரைகள், நிகழ்வுகள், சமையல் குறிப்புகள் என்று  வலைத்தளத்தைச் சிறப்பிக்கிறது. 


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பு. அத்தனையும் ரசிக்கும்படியாக இருக்கும். எத்தனை எத்தனை அறியாத தகவல்களை அள்ளித் தருகிறது இந்த வலைத்தளம்!


முன்பு ஃப்ரூட் சாலட் என்ற தலைப்பு இப்போது காஃபி வித் கிட்டுவாக! 


கதை மாந்தர்கள் என்று கதை போல் அனுபவங்கள்.  சாப்பிட வாங்க எனும் பகுதி…


புத்தக விமர்சனம், குறும்படங்கள், பாடல் காணொளிகள், நடனக் காணொளிகள், அனைத்துமே மனதைக் கவரும் வகையில், ஏதோ ஒரு செய்தியை, கருத்தைப் பகிர்வதாகவும் இருக்கும். மிகவும் தரம் மிக்க படைப்புகள்.


புகைப்படங்கள்! இவற்றைப் பற்றிச் சொல்ல அகராதியில் வார்த்தைகளைத் தேட வேண்டும். கண்ணிற்கு விருந்து! மனதிற்கு இதம். வெங்கட்ஜி திறமையான புகைப்படக் கலைஞர் என்பது பளிச்! 


பயணக் கட்டுரைகளில் பகிரும் புகைப்படங்கள் மட்டுமின்றி தான் காணும் நிகழ்வுகள், ரசிக்கும் இயற்கைக் காட்சிகள், வித்தியாசமான மனிதர்கள் மக்களின் வாழ்க்கை முறை என்று மிகவும் மனதைக் கவரும் வகையில் இருக்கும் அனைத்துப் புகைப்படங்களும், அவர் எடுத்துப் பகிரும் காணொளிகளும். 


இடையிடையே தன் நண்பர்களின் தரமான படைப்புகளையும் வெளியிட்டு அவர்களையும் கௌரவிப்பதுண்டு.  


பயணக் கட்டுரைகளைக் குறித்துச் சொல்லவே தேவையில்லை. பயணக் கட்டுரைக்குப் பெயர் பெற்ற தமிழ் வலைத்தளம் என்று அடித்துச் சொல்லலாம். மிக மிக நுணுக்கமான தகவல்கள், பயணத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தகவல்கள், தங்கும் இடங்கள், கிடைக்கும் உணவு, அவற்றிற்கான செலவு, எப்படிச் செல்வது என்ற பல தகவல்கள், அனுபவங்களைத் தாங்கி வருவதால் நாம் அவற்றை ஒரு கைடாக வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். 


அவரது எழுத்தாற்றலும், பதிவுகளைச் சொல்லும் விதமும் எங்களை வியப்படைய வைக்கிறது என்றால் மிகையல்ல.  


கோவை டு தில்லி என்று தனி தளம் வைத்திருந்த அவர் மனைவி ஆதி வெங்கட்டும் தற்போது இதே தளத்திலேயே எழுதி வருகிறார். வெங்கட்ஜிக்கு நிகராக அவரும் பல தகவல்கள், தன் அனுபவங்கள், தான் செய்யும் வித விதமான சமையல், அவரது மகளின் கைவேலைப்பாடுகள் என்று கலந்து கட்டி மிகவும் திறமையாக எழுதி வருகிறார். சகலகலா வல்லியாகத் திறம்படைத்த எழுத்துக்களால் வலைப்பூவை அழகுபடுத்துகிறார், மணம் வீச வைக்கிறார்! ஆதியின் அடுக்களை வழி!


ஆதி தன் சமையல் செய்முறைகளை, ஆதியின் அடுக்களை என்ற யுட்யூப் சானலிலும், மகள் ரோஷிணி தன் கைவேலைத் திறமைகளை, ரோஷினி கார்னர் என்ற யுட்யூப் சானலிலும் திறமையாகப் பகிர்ந்து வருகிறார்கள். 


மொத்தம் 36 மின் புத்தகங்கள் வெங்கட்ஜியும், ஆதி வெங்கட்டும் வெளியிட்டுள்ளார்கள் அமேசான் கிண்டிலில்! ஒன்று புஸ்தகாவிலும்/அமேசானிலும்.


நாங்களே எல்லாவற்றையும் சொல்வதை விட, சிறந்த வலைத்தளமாக மிளிர்ந்து வரும் இவ் வலைப்பூவை நீங்களே நேரடியாக வாசித்து மகிழலாமே! உங்கள் மேலான கருத்துகளையும் அங்கு பகிரலாமே! 


ஆயிரமாயிரம் (ஆயிரம் + ஆயிரம்) பதிவுகளுக்கு மேல் எழுதி தான் பெற்ற இன்பத்தை பெருக இவ்வையகம் என்று வாழ்வாங்கு வாழ்ந்துவரும் எழுத்தாளராகிய பயணக்காதலரின் வலைப்பயணப் பாதை மேன்மேலும் வளர்ந்திட, விரிந்திட,  எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!


அன்புடனும், நட்புடனும்


துளசிதரன்


கீதா 


*****


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த வலைப்பூவில் வெளிவரும் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணங்களையும் நிறை குறைகளையும் சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


26 கருத்துகள்:

  1. எதையும் விடாமல்  எலலவற்றையும் சொல்லிச் சிறப்பித்திருக்கிறார் கீதா ...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. துளசிதரன், தி/கீதா இவர்களின் எண்ணங்களும் சுருக்கமாகவும் நிறைவாகவும் வந்துள்ளன. எந்த ஒரு பதிவும் தேவை இல்லை எனச் சொல்ல முடியாது என்பதோடு நடுநிலை என்பதையும் வெங்கட்டிடம் தான் நாம் கற்க வேண்டும். மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசிதரன், தி/கீதா இவர்களின் எண்ணங்களும் சுருக்கமாகவும் //

      ஹா ஹா ஹா ஹா கீதாக்கா சுருக்கத்துக்குக் காரணம் துளசி. (ஆசிரியராச்சே! ஆனா அவரும் பெரிசா எழுதக் கூடியவர்தான்.)

      வெங்கட்ஜி 1000 வார்த்தைகளுக்கு மிகாமல்னு சொல்லியிருந்தார்...(கீதாவைப் பத்தி தெரியுமே!!! ஹா ஹா ஹா ஹா)

      கீதா

      நீக்கு
    2. பதிவு குறித்த தங்கள் எண்ணம் கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஆசிரியராச்சே! ஹாஹா... 1000 வார்த்தை என்பது சாதாரணமாகச் சொன்னது தான் கீதாஜி. இதுவும் சிறப்பாகவே வந்திருக்கிறது. இரண்டு பேரும் சேர்ந்து எழுதி அனுப்பியதற்கு மனம் நிறைந்த நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருமையாக விமர்சித்து இருக்கிறார்கள் தில்லை அகத்தாருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  5. சகோ துளசிதரன், கீதாரங்கன் இருவரும் மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள, உங்களுக்கும் வாழ்த்துக்கள் வெங்கட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நல்ல விளக்கமான பதிவு. ஆராயந்து அருமையாக எழுதி இருக்கிறார்கள். வெங்கட்டின் எழுத்தின் அத்தனை பகுதிகளும் விவரமாக சிறப்பாக விளக்கி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிக்க நன்றி வெங்கட்ஜி. உங்கள் வலையைப் பற்றி எங்கள் கருத்தையும் எழுதச் சொல்லிக் கேட்டதற்கு.

    பதிவைப் பற்றி கருத்து சொன்ன ஸ்ரீராம், கீதாக்கா, கில்லர்ஜி, கரந்தை சகோ, கோமதிக்கா, வல்லிம்மா மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தினை சிறப்பாக எழுதி அனுப்பித் தந்தமைக்கு நன்றி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமையான வாசகம் ஒரஆண்டு முன் பார்த்த சிவாஜிகனேசன் அவர்களின் எதிரொலி படத்தை ஞாபகப்படுத்தியது.
    துளசி சார் மற்றும் கீதா மேடமின் அணுபவப்பகிர்வும் சுவையாக இருக்கிறது.
    சந்தித்ததும் சிந்தித்ததும் பகுதி வைத்தே இன்னொரு நூல் போட்டுவிடலாம் போல சார்.
    இந்த பிளாக்கை அமேசானில் அறிமுகம் செய்யும் மற்றொரு வழியாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      இதை வைத்தே ஒரு மின்னூல் - ஹாஹா. அப்படி ஒரு எண்ணம் இல்லை அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நன்றி நன்றி வெங்கட்ஜி. உங்கள் வலைப்பூ பற்றிய எங்கள் பார்வையில் விமர்சனத்தைக் கேட்டு இங்கு பதிந்து கௌரவித்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

    பதிவு பற்றி கருத்து சொன்ன அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வேலைகளுக்கு இடையில் எனது வலைப்பூ குறித்த உங்கள் பார்வையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. டிடி, அரவிந்த் இருவருக்கும் பதிவு பற்றிய கருத்திற்கு எங்கள் நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  12. திரு.வெங்கட் அவர்களின் வலைத்தளம் பற்றிய மனம் நிறைந்த கருத்தினை பகிர்ந்த தில்லையகத்து வெள்ளை உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள். திரு வெங்கட் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர்களே இந்த ரெட்டையர்கள்தான் என்பதை பெருமையாக மகிழ்வுடன் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    திரு. வெங்கட் அவர்களின் தெளிவான எழுத்து நடையும் மொழி ஆளுகையும் விஷய ஞானமும் எளிதாக விளங்கச்செய்யும் பாங்கும் வாசிப்பின்பால் அவரது நேசிப்பும் பாராட்டுக்குரியது.

    இவரது பின்னூட்டம் இல்லாத பதிவுகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து வலைதள பதிவுகளையும் வாசித்து தமது கருத்தையும் பாராட்டையும் தெரிவித்து ஊக்கப்படுத்தும் பெருந்தன்மை இவருக்கு இயல்பிலேயே அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

    தில்லையகத்து மூத்தவர்கள்(!!) திரு வெங்கட் அவர்களின் பதிவுகள் - படைப்புகள் குறித்து நேரம் கருதியும் நீளம் கருதியும் சிலவரிகள் மட்டுமே சொல்லி இருந்தாலும் அவை அத்தனையும் திருக்குறள்போல தெள்ளிய வரிவுகள் என்பதில் எள்ளின் முனையளவும் எந்த சந்தேகமும் இல்லை.

    திரு வெங்கட் அவர்களின் பதிவுகளும் ஊக்கமும் தொய்வின்றி தொடர வாழ்த்துகிறேன்.

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோயில்பிள்ளை. தொடர்ந்து எழுதவே ஆசை. எழுதுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....