திங்கள், 9 ஆகஸ்ட், 2021

வாசிப்பனுபவம் - மீட்டாத வீணை - சஹானா கோவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்; கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம் - ஔவையார்.


******





சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் சஹானா கோவிந்த் எனும் அப்பாவி தங்கமணி அவர்கள் எழுதிய “மீட்டாத வீணை” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 



வகை: குறுநாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 37

விலை: ரூபாய் 52/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


மீட்டாத வீணை : (குறுநாவல்) (Tamil Edition) eBook : கோவிந்த், சஹானா


******* 


உங்களில் எத்தனை பேர், எந்த விஷயம் குறித்தும் தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் கூகுள் BபாBபாவை நாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள்? நூற்றுக்கு 50 பேராவது இப்படியான பழக்கத்தினை கொண்டிருக்கிறார்கள். அதில் இருக்கும் செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் நம்பகத் தன்மை, உண்மையா பொய்யா என்பதை ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா?  வாட்ஸ் அப் வழி செய்தியோ, முகநூல் செய்தியோ இல்லை இணையத்தில் கொட்டிக் கிடக்கும் எண்ணிலடங்கா தகவல்களோ சரியா தவறா என்பதை ஒரு முறையாவது யோசித்துப் பார்த்ததுண்டா?  அது மட்டுமல்லாது, அதில் இருக்கும் தகவல்களைக் காரணம் கொண்டு தனக்கும் பிரச்சனைகள் வந்து விட்டது என்று யோசித்து உங்களை நீங்களே குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டதுண்டா?  உங்களின் பதில் ”உண்டு” என்பதானால், இந்தக் குறுநாவலை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்!  


வீணை மட்டுமல்ல எந்த ஒரு தந்தி உள்ள இசைக்கருவியும் அதன் தந்தி இருக்கும் வரை மட்டுமே இசைக்க முடியும்.  அது போல வாழ்க்கையும் - தந்தி இருக்கும் போது அதனை மீட்டாமல், பிறகு வருந்துவது எந்த விதத்தில் நியாயம். சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்து, வாழ்க்கையை ருசிக்க வேண்டும் என்பதை மிக அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் நூலாசிரியர் அவரது மீட்டாத விணை குறுநாவல் மூலம்.  


அழகான வாழ்க்கை - மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா என கூட்டுக் குடும்பம்.  அலுவலகத்தில் இருக்கும் ஒரு சக தொழிலாளிக்கு பிரச்சனை - திடீரென இறந்து விடுகிறார்.  அதன் பிறகு கதையின் நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள், மனக் குழப்பங்கள், அதற்கான தீர்வு என அழகாய் கதையை நகர்த்திச் செல்கிறார் நூலாசிரியர்.  குறைவான பக்கங்களில், சொல்ல வரும் கருத்தினை, படிப்பவர்களுக்கு தெளிவாக கடத்தும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.  அவருக்கு வாழ்த்துகள். 


கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் இந்த குறுநாவல் பங்கு பெற்றது.  அந்தப் போட்டியில் வெற்றி பெற அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  


******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


10 கருத்துகள்:

  1. இது முன்னர் அவர் தனது வலைத்தளத்தில் எழுதியிருந்த கதையென்றால் நானும் படித்திருப்பேன்.  சிறந்த கதாசிரியர்.  மனதை வருடும் கதைகள் எழுதி இருக்கிறார்.  நாளால்தொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைத்தளத்தில் எழுதிய கதை தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. வாசகம் அருமை சார். பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும் என்று இதை வேறு விதமாகவும் சொல்வதுண்டு.
    அருமையான நூல்.
    நானும் வாசித்திருக்கிறேன்.
    விமர்சனமும் அருமை.
    இந்நூல் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. புவனா கோவிந்த் எழுதிய சில்லென்று ஒரு காதல் படித்தது இன்னும் நினைவில்.
    இதுவும் நன்றாகத் தான் இருக்கும். மனம் நிறை வாழ்த்துகள்.
    வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....