திங்கள், 30 ஆகஸ்ட், 2021

வாசிப்பனுபவம் - கல்யாண சந்தை - சி ந உதயசூரியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Harry Potter பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


NEVER LET A BAD SITUATION BRING OUT THE WORST IN YOU.  BE STRONG AND CHOOSE TO BE POSITIVE.


******







சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் சி ந உதயசூரியன் அவர்கள் எழுதிய “கல்யாண சந்தை” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 76

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


கல்யாண சந்தை (Tamil Edition) eBook : உதயசூரியன் , சி ந


******* 


”கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப் பார்”, “பெண்ணைப் பெற்றவர்கள் தன் மகளை கரை சேர்ப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுகிறார்கள்” ”பெண்ணுக்குத் திருமணம் முடித்து விட்டால் என் பாரம் தீர்ந்து விடும்” என்றும் இப்படி பல வாக்கியங்களை நாம் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.  பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் இருக்கும் கஷ்டங்கள் பற்றி பலர் பேசினாலும், தங்களது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பதில் இருக்கும் கஷ்டங்கள் குறித்து பேசியவர்கள் குறைவே!  “உனக்கென்ண்டா, ராஜா மாதிரி இரண்டு பையன்களைப் பெத்து வச்சுருக்கே!, ஜாம் ஜாம்-னு கல்யாணம் நடக்கும்” என்று எத்தனையோ வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள்!  இப்படியெல்லாம் சொல்வதால் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் எந்த வித பிரச்சனையுமே இல்லையா?  


இருக்குங்க!  நிறைய பிரச்சனை இருக்கு! அதுவும் சமீப காலத்தில் ஆண்களுக்கும் திருமணம் நடப்பதில், அப்படியே நடந்தாலும் அந்த திருமணம் நிலைத்து நீண்ட காலம் தொடர்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.  சின்னச் சின்ன பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து வரை சென்ற திருமணங்கள் - குறிப்பாக பெண் வீட்டினர் தங்களது பெண்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு திருமணம் ஆன சில நாட்களில் விவாகரத்து கோரிய சம்பவங்கள் உண்டு! ஆண்களுக்கு திருமணம் நடப்பதில் இருக்கும் சிக்கல்கள், அப்படியே நடந்தாலும் விவாகரத்து ஆனவர்கள் போன்ற விஷயங்களைத் தனது “கல்யாண சந்தை” மின்னூல் வழி சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் சி.ந. உதயசூரியன். 


மூன்று இளைஞர்கள் - ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள் என்றாலும், நடுநடுவே வந்து விட்டு காணாமல் போகும் நிறைய கதாபாத்திரங்களும் இக்கதையில் உண்டு.  அந்த இளைஞர்களில் ஒருவருக்கும் ஒரு பெண்ணுக்கும் இருக்கும் நட்பு - அது காதலா இல்லை வெறும் நட்பா என்பதையும் சொல்லி இருக்கிறார்.  சின்னச் சின்ன சம்பவங்களைக் கோர்த்து ஒரு கதையாக இல்லை இல்லை கட்டுரை போல சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.  இன்னும் கொஞ்சம் கவனம் கொண்டு எழுதினால் நல்லதொரு கதையாக உருவாக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.  முடிந்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்!


******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


பின்குறிப்பு:  அன்பின் நண்பர்களுக்கு, ஒரு செய்தியும் உங்களுக்குத் சொல்லிவிடுகிறேன்!  இந்தப் பதிவு எனது வலைப்பூவில் 2600-ஆவது பதிவு என்பது தான் அந்தச் சந்தோஷச் செய்தி.  தொடர்ந்து வாசித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

12 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம்.  நன்றி.

    2600 வது பதிவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  மென்மேலும் உயர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  3. நல்லதொரு நூல் அரிமுகத்திற்கும் 2600 பதிவுகளை எட்டியதற்கும் வாழ்த்துக்கள் சார்.
    நூலை விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  6. 2600 இனிய வாழ்த்துகள். தொடர்க வெற்றிகள்.

    விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. 2600-வது பதிவு - வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....