செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கல்லூரி நாட்கள் பகுதி ஐந்து - நட்பும் படங்களும் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீங்கள் செய்த நன்மை தீமைகளை காலம் குறித்து வைத்துக் கொண்டு, காலமும் நேரமும் வரும் போது அதை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கும். 


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை நான்கு பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


சென்ற பகுதியில் இறுதியாண்டில் எங்கள் மூவருக்கும் வந்த அசாத்திய தைரியத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! எவ்வளவோ பேர் வகுப்புகளை கட் அடித்து சினிமாவுக்குச் சென்ற போதெல்லாம் எங்களுக்கு வராத தைரியம்! அன்று மட்டும் ஏனோ வந்தது..:) அப்படி என்ன தான் செய்தோம்??


இறுதியாண்டுக்கு வந்துவிட்டோம்..கல்லூரியை விட்டுப் வெளியேறிய பின்னால் இனி எப்போது சந்திக்க முடியுமோ என்பதெல்லாம் தெரியாது..:) தொலைபேசி, அலைபேசி இல்லா நாட்களாயிற்றே!! தொடர்பு கொள்ளவும் வழியில்லையே! அதனால்....!!! அதனால்...!!


Aptechலிருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அன்று நாங்கள் மூவரும், சிவில் டிபார்ட்மெண்ட்டில் எங்களுக்கு நெருங்கிய தோழி ஒருத்தியும், Production engineering Tanuja (இமாச்சல பெண்) நினைவிருக்கிறதா! நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினோம்..:)



அனைவரும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு, ஹாஸ்டலுக்குச் சென்று தனுஜாவையும் அழைத்துக் கொண்டு, (தனுஜாவிடம் எப்படி உரையாடி புரிய வைத்தோம் என்று இன்று நினைத்தாலும் சிரிப்பு தான்!! அவளும் எங்களை நம்பி வந்தாள்!!) கல்லூரியை விட்டு வெளியே வந்து பேருந்தைப் பிடித்தோம்..:) எங்கு செல்கிறோம்?? அது சஸ்பென்ஸ்..:)


ஒருவழியாக என் வீட்டுக்கு எல்லோரும் வந்து சேர்ந்தோம்..:) என்னது!!! வீட்டுக்கு போவதற்கா இந்த பீடிகை என்று கோபம் கொள்ளாதீர்கள்..:) அங்கு  என்ன செய்தோம்! அம்மாவை  எப்படி சமாளித்தேன்..:) பிறந்தது முதலே வளர்ந்த இடமான ஹவுசிங் யூனிட் மக்களே அன்று எங்கள் நால்வரையும் வேடிக்கை பார்த்தார்கள்..:) அப்படி என்ன தான் செய்தோம்! 


சிவில் தோழி யாரிடமிருந்தோ கேமரா கொண்டு வந்திருந்தாள்..!! ஸ்டூடியோவில் ஒரு ரோல் போட்டுக் கொண்டோம். அப்புறம் என்ன!!  எங்கள் வீட்டின் உள்ளே, மாடிப்படிகளில், ரேஸ்கோர்ஸ் வாக்கிங் ரோட்டில், ஓரங்களில் இருந்த புல்வெளியில், என வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்...:) ஹா..ஹா..ஹா. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா..:))


என் அம்மாவின் புடவைகள் மற்றும்  தம்பியின் உடைகளை எல்லோரும் மாற்றி மாற்றி உடுத்திக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்..:)) தனுஜாவுக்கும் புடவை கட்டி விட்டார் அம்மா! 


அம்மா அப்போது வடாம்/வத்தல் விற்பனை செய்து கொண்டிருந்தார் என்பதால் வீட்டின் அலமாரிகளில் வடாம்களை பேக் செய்து  பாக்கெட்டுகளாக வைத்திருந்தோம்! அவையெல்லாம் சாட்சிகளாக புகைப்படங்களில் இருக்கும்..:) அன்று அதையெல்லாம் யார் கவனித்தார்கள்..:) கிடைத்த வாய்ப்பை விடலாமா!! பின்பு ரோலை டெவலப் செய்து நாங்கள் நால்வரும் ஆளுக்கொரு ஆல்பமும் போட்டுக் கொண்டோம்..:) 


அன்றைய சந்தோஷத் தருணங்களை அனுபவித்த பின் அவரவர் வீட்டுக்கும் திரும்பினார்கள்.. அடுத்த நாள் நடக்கப் போகும் பெரும் சம்பவத்தை நினைக்காது இருந்து விட்டோம்!! அது என்னவென்று அடுத்த பகுதியில் சொல்கிறேனே...


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. தஞ்சை மதுரையில் நானும் ஹவுசிங் யூனிட்டில் இருந்தவன்! உங்கள் சம்பவம் சுவாரஸ்யமாக இருக்கிறது. மறுநாள் என்ன அடைந்தது என்று றிய ஆவல். அம்மாவுக்குத் தெரியும் என்பதால் பெரிய ஆபத்து இருந்திருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் ஹவுசிங் யூனிட்டில் வசித்தவரா! மிக்க மகிழ்ச்சி! என்ன பண்ணினோம் என்பது அம்மாவுக்கு தெரிந்ததால் ஆபத்து இல்லை தான் ஆனால் கல்லூரியில்??

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. அசாத்திய தைரியத்திலும் பொறுப்புணர்வை விட்டு விடவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  3. மலரும் நினைவுகளாக சந்தோஷத் தருணங்களை அழகாய் சொல்லி வந்தீர்கள் ஆதி, அடுத்து நடக்க போவதை அறியாமல் என்று பயம் காட்டி விட்டீர்கள்.

    அது என்னவென்று அறிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் சற்றும் எதிர்பாராதது தான் அம்மா.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சுவாரஸ்யமான நினைவோட்டங்கள்...
    அடுத்து நிகழ்ந்தவைகளை கேட்க ஆவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியில் தெரிந்து விடும்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. வீட்டுக்குத்தானே வந்தீர்கள் ஊர் ஒன்றும் சுற்றலையே.

    மறுநாள் தப்பித்தீர்கள்தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களைப் பொறுத்த வரை ஊர் சுற்றவில்லை தான்..ஆனால் கல்லூரியைப் பொறுத்த வரை??

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  10. கல்லூரிக்கு கட்!!
    அதுவே பெரிய சந்தோஷம். அருமையாக
    எழுதி இருக்கிறீர்கள்.
    அடுத்து வருவதை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....