வியாழன், 9 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி பத்து - சேமிப்பு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எப்படி உழைப்பதென்று பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்; ஏன் சேமிக்க வேண்டும் என்பதை அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள்.


******





கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை ஒன்பது பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


சென்ற பகுதியில் கல்லூரிக்கு பேருந்தில் சென்ற அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா! அதை எழுதிய போது ஏதோ நானே பேருந்தில் என் கல்லூரிக்கு ஒரு ரவுண்ட் அடித்த உணர்வைத் தந்தது..:) இந்தப் பகுதியில் இன்னும் சில விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.


கல்லூரியில் படித்த போது அப்பா என் செலவுகளுக்காக மாதம் 100 ரூ கொடுப்பார். பேருந்துக் கட்டணம், எப்போதாவது தேநீர் குடிக்க என அதை பயன்படுத்திக் கொள்வேன்.. மீதி  சேமிப்பு..:) இது போன்று சிறுவயதிலிருந்தே சேமிக்கும் பழக்கம் எனக்கிருந்தது..:) சமயத்தில் அப்பாவுக்கே செலவுக்கு கொடுத்து அதை அவர்  திருப்பித் தரும் போது பத்து, இருபது கூடுதலாக தரும் படி கேட்டு வாங்கிக் கொள்வேன்..:) அப்பாவும் சந்தோஷமாகத் தருவார்...:) 


கல்லூரியில் பயின்ற போது தான் அப்பா எனக்காக ஸ்டேட் பாங்கில் கணக்கு துவங்கிக் கொடுத்தார். அப்போது அவினாசி சாலைக்கு செல்லும் வழியில் கிளை அலுவலகம் ஒன்று இருந்தது. வங்கி பரிவர்த்தனைகள் தெரிய வேண்டுமென்பதற்காக என்னையே அதில் பணத்தைப் போடவும், எடுக்கவும் சொல்வார். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு 'இனி எல்லாமே அவர் தான்! உனக்காக இனிமே தனியா எதுவும் இருக்கக்கூடாது' என்று சொல்லி கணக்கை முடித்து விட்டார்..:) அப்போது என் சேமிப்புக் கணக்கில் இருந்த பணத்தில் திருமணத்திற்காக வெள்ளியில் தட்டு, கொலுசு மற்றும் மெட்டியும் வாங்கிக் கொண்டேன்..:)


1000 ரூக்கு 4 ட்ரஸ்!


கல்லூரியில் சேரும் சமயம் அப்பா என் உறவினர் ஒருவரிடம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்து என்னை அழைத்துச் சென்று கல்லூரிக்கு அணிந்து செல்ல சுடிதார்கள் வாங்கித் தரச் சொன்னார். அப்போது உறவினர் பணிபுரிந்த இந்தியன் வங்கியிலேயே என்னை விட்டுவிட்டு வாங்கிக் கொண்டு வரும்படி சொல்லி விட்டுச் சென்றார். அப்போதைய விலையில் 1000 ரூபாய்க்கு நல்லதாக நான்கு சுடிதார் செட்கள் வாங்க முடிந்தது. வெள்ளையில் பச்சையும், ஆரஞ்சு நிறத்திலுமாக  பெரிய பூக்கள் போட்டு ஒன்றும், மெஜந்தா நிறத்தில் சின்ன சின்ன பூக்கள் போட்டு ஒன்றும், lavender நிறத்தில் ஒன்றும் (நான்காவது நினைவில் இல்லை..:) என நான்கு செட்கள் வாங்கிக் கொண்டேன். முன்பே என்னிடம் இரண்டு சுடிதார்கள் இருந்தது..:) இவை தான் என் கலெக்‌ஷன்ஸ்..:)


பள்ளிநாட்களில் எங்கள் வீட்டுக்கு எதிரே டெல்லிக்கு வாக்கப்பட்டு போன ஒரு அக்கா இருந்தார். நல்ல உயரமாகவும், தலைமுடி நீளமாகவும் அழகாக இருப்பார்..:) அவரிடம் சொல்லி இரண்டு, மூன்று சுடிதார் செட்கள் டெல்லியிலிருந்து வாங்கித் தந்தார் அம்மா. பச்சையில் எம்ப்ராய்டரி செய்தது, வெள்ளையில் தங்க நிற பிரிண்ட் போட்டது, க்ரீம் கலரில் பெரிய பூக்களால் எம்ப்ராய்டரி செய்தது என ஒவ்வொன்றும் அழகாக இருந்தன. ஆனால்! உயரம்?? சுடிதார் bottom என் கனுக்காலில் முடிந்து விடுமளவு தான் இருக்கும்..:) Alter செய்தாலும் சரியாக இருக்காது. அதனால் கல்லூரிக்கு போகும் போது என்னிடம் இரண்டு செட்கள் மட்டும் தான் இருந்தன..:)


அரசுக் கல்லூரி என்பதால் திங்கள் முதல் வெள்ளி வரை தான் எங்களுக்கு வகுப்புகள் இருக்கும்! கல்லூரிக்கென வாங்கிய உடைகளை வகுப்புகளுக்கு தகுந்தாற் போல் போட்டுக் கொள்வேன். வொர்க்‌ஷாப் இருக்கும் நாட்களில் Dark colour உடைகளும், மற்ற நாட்களில் மற்றதுமாக அணிந்து செல்வேன். மூன்றாண்டு கல்லூரி நாட்களின் இடையே இரண்டு தீபாவளி வந்ததில் இரண்டு புது சுடிதார்கள்  கிடைத்தது..:) மூன்றாண்டு கல்லூரிப் பருவத்தில் பாவாடை தாவணி அல்லது புடவை அணிந்து சென்றது மிகவும் அரிது..:) இரண்டு, மூன்று முறை இருக்கலாம்..:) ஏனென்றால் எங்களின் துறை அப்படி..:) 


முதலாம் ஆண்டு மட்டும் ஓவர்கோட்டை அன்றாடம் வீட்டிற்கு கொண்டு வந்து கொண்டிருந்தேன்! அதன் பிறகு பெண்கள் அறையில் எங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு விட்டோம்..:) இப்போ சீனியர் ஆகிவிட்டோமல்லவா! வெள்ளியன்று கல்லூரியின் பெண்கள் அறையில் வைத்திருக்கும் ஓவர்கோட்டையும் வீட்டிற்கு கொண்டு வந்து விடுவேன். சனிக்கிழமை காலை  உடைகளையும், ஓவர்கோட்டையும் சோப்பில் ஊறவைத்து துவைத்து போடுவேன்! ஞாயிறன்று மதியம் வானொலியில் ஒலிச்சித்திரம் கேட்டவாறு அதை அயர்ன் செய்து கொள்வேன்! 


இப்படியாக அப்போதிருந்த ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுக்கு உண்டான தேவைகளும், செலவுகளும், சேமிப்பும் இருந்தன...:) அதை இன்றைய காலத்தோடு  ஒப்பிட்டால்?? இன்னும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் இருப்பதால் அடுத்த பகுதியில் சொல்கிறேனே..:)


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. கல்லூரி நாட்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அருமையாக இருக்கின்றன.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து படித்து குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார் ஜி.

      நீக்கு
  3. சேமிப்பு குறித்த அணுபவங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  4. கல்லூரி அனுபவங்கள் என்றுமே மறக்க முடியாதவைதான்.
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. அப்பாவின் அறிவுரை என்னைக் கவர்ந்தது.

    தில்லியில் இருந்து டிரஸ் வந்தபோது தெரிந்திருக்குமா வாழ்க்கை தில்லியில் பல வருடங்கள் இருக்கப் போகிறதென்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியிலிருந்து டிரஸ் - ஆமாம். அடுத்து என்ன நடக்குமென்று தெரியாதது தானே வாழ்க்கை..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  6. ஆதி, உங்களின் முந்தைய அனுபவங்களையும் முடிந்த போது வாசித்தேன். மொஹந்தி கலாட்டா, எல்லாமும். நல்ல நினைவுகள். உங்கள் டிப்ளமோ பற்றி நீங்கள் முன்பே கொஞ்சம் சொல்லியிருந்த நினைவு. பொதுவாகப் பெண்கள் எடுக்கத் தயங்கும் நல்ல கோர்ஸ் செய்திருக்கிறீர்கள். திறமையாகவும் இருந்திருக்கிறீர்கள் . இப்போதும் உங்கள் திறமைகள் பளிச்! பாராட்டுகள்!

    இந்த ட்ரெஸ் விஷயம் என் கல்லூரி நாட்களில் சொல்ல வேண்டும் என்றால் பசங்க ஈஸ்ட்மென் கலர் வருது பாரு என்று கேலி செய்யும் அளவு!!! அம்மாவின் பழைய புடவைகள் தாவணிகளாய், அதுவும் 3 செட் தான். ஜாக்கெட் மட்டும் அதுவும் அம்மா தைத்துத் தருவதுதான். மாற்றி மாற்றி இந்த செட்தான். பாவாடை முந்தைய வருடங்களில் அணிந்த பாவாடை என்பதால் மேச்சிங்க் எல்லாம் இருக்காது! பள்ளி நாட்களில் இருந்தே வருடத்தில் தீபாவளிக்கு வாங்குவது மட்டுமே புதியது என்று..

    அப்போதிலிருந்தே மனம் பக்குவம் அடையத் துவங்கியது பொருள் வாங்குவதில், எல்லாவற்றிலும். அத்தனை அனுபவங்கள். ஆசைகள் இல்லை. இப்போது அந்த நாட்களே நல்ல, சிறந்த நாட்கள் என்று தோன்றுகிறது!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவுகளையும் வாசித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. இப்போதும் உங்கள் திறமை - பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த பாராட்டெல்லாம் இணைய உலகில் மட்டும் தான்..:)

      எங்கள் வீட்டிலும் தீபாவளிக்கு மட்டும் தான் புது டிரஸ்..:) மனப்பக்குவம் உண்மை தான். எனக்கும் பெரிதாக ஆசைகளே இல்லை..:) ஆனாலும் அதை பாராட்டுவோரும் இல்லை..:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி உங்கள் பதிவுகள் சிலதும் வாசித்தேன்....பயணம் செல்ல நினைக்கும் இடங்கள் பற்றியது உட்பட. அதுதான் நம்ம ஃபேவரிட் ஆச்சே!!.

    நான் எழுதி வைத்த கருத்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பற்றியது. அதில் நீங்கள் சொல்லியிருந்த கருத்து எனக்கு மிகவும் பொருந்தியது.

    பேக் பேக்கர்ஸ் - ஆம் நானும் மகனும் அந்த லிஸ்டில். அதுவும் பார்க்க நினைத்து நிறைய இடங்கள் குறித்து எல்லாமே தலைகீழாகி அதன் பின் எதுவுமே செல்ல முடியாமல் ஆகிவிட்டது. பயணம் எனக்கு மிக மிக மிகப் பிடித்த விஷயம். அதுவும் அமைதியான ஹிமாச்சல் (இரு முறை சென்றிருக்கிறேன் மிகவும் பிடித்து இங்கேயே செட்டில் ஆக மாட்டோமா என்றும் ஏங்கியதுண்டு!!!) கிராமங்களில் தங்கி நீங்கள் விரும்பியது போல் அதே எண்ணம் உண்டு.
    பெண் என்பதால் அதுவும் சார்ந்திருப்பதால் நினைத்தபடி பயணம் செய்ய முடிவதில்லை.

    இப்போதும் இடங்கள் பல குறித்துக் கொண்டேதான் இருக்கிறேன். மகன் சொல்லிக் கொண்டே இருக்கிறான் - ம்மா உன் உடல் நலனை பார்த்துக்கோ. ஆரோக்கியம் மெயிண்டெய்ன் செய்யணும் அப்பத்தான் நீ நினைப்பது போல் பார்க்க முடியும் ட்ரெக்கிங்க் செய்ய முடியும். சும்மா வயசாயிடுச்சுன்னு சொல்லக் கூடாது' என்று!!!

    இதற்குத்தான் ஆசைப்பட்டாயா கீதா என்று எப்போது வாய்க்குமோ!!!!!!

    உங்களுக்கு நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லவும் பயணம் நிறைவேறவும் வாழ்த்துகள் ஜி! கண்டிப்பாக நிறைவேறும் ஜி! கொரோனாக்காலம் முடியாமலா போகும்?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  9. இளம் வயதிலேயே உங்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய உங்கள் தந்தைக்கு எனது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  10. //வங்கி பரிவர்த்தனைகள் தெரிய வேண்டுமென்பதற்காக என்னையே அதில் பணத்தைப் போடவும், எடுக்கவும் சொல்வார். //

    அப்பா பழக்கியது நல்லது.
    அப்பா சொன்னதும் அருமை.
    இளமை வாழ்க்கை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. அன்றைய கால வாழ்க்கை நினைத்தால் இனிமைதான். எல்லோருடைய தேவைகளும் அளவுடன்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ப்பா..தேவைகள் மிகவும் குறைவு..

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  12. நல்ல நினைவுகளையும் சேமிப்புப் பழக்கங்களையும் விரிவாகச் சொல்லி இருக்கீங்க. அப்போதெல்லாம் தீபாவளி, பிறந்த நாளைக்குத் தான் புது ட்ரெஸ் எடுப்போம். இப்போதெல்லாம் எடுத்துக் கொண்டே இருக்காங்க! அதனால் புதுசின் அருமை புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் மாமி. அப்போதிருந்த ஆர்வம் இப்போதில்லை..

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....