வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கல்லூரி நாட்கள் பகுதி நான்கு - கசப்பான அனுபவங்கள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


GOD IS THE BEST LISTENER; YOU DO NOT NEED TO SHOUT, NOR CRY OUT LOUD. HE HEARS EVEN THE VERY SILENT PRAYER OF A SINCERE HEART.


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை மூன்று பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


சென்ற பகுதியில் கல்லூரி கலாட்டாக்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்  அல்லவா! மிகவும் ஜாலியாக இருந்த நாட்கள்!! 


கல்லூரி என்றால் கலாட்டா மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம்!! கசப்பான சில அனுபவங்களும் உண்டு. அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் ஏற்றுக் கொண்டு எங்கள் படிப்பை முடித்ததே பெரிய விஷயம் என்று தோன்றும்!!


பெண்களான நாங்கள் மூவரும் விரும்பி ஏற்காவிட்டாலும் இயந்திரவியலோடு எங்களைப் பிணைத்துக் கொண்டோம். Fluid mechanics, machine management என்று தியரியாக படிப்பதை விட எங்களுக்கு Machine drawing மற்றும் workshop வகுப்புகள் தான் மிகவும் பிடிக்கும்..:)


ஒரு சில பேராசிரியர்களுக்கு நாங்கள் இயந்திரவியல் துறையை எடுத்தது என்னவோ பிடிக்கலை போல!!  உதாரணமாக... Reading எடுத்து worksheet எழுதி தயார் செய்து காண்பித்தால் அந்தப் பக்கத்தையே கிழித்து எங்கள் மீதே எறிந்து விடுவார் பேராசிரியர். மீண்டும்  Worksheetல் புதிதாக ஒரு பேப்பரை கிழித்த இடத்திலேயே ஒட்டி, மீண்டும் ரீடிங் எடுத்து Row & column வரைந்து printed worksheet போலவே தயார் செய்வோம்.. மீண்டும் அதே!! 


இப்படியே பத்து முறையாவது கிழித்து எறிந்த பின் தான் பரவாயில்லை என்பதாக ஒத்துக் கொள்வார்.!!  இது போன்று பல தருணங்கள்! அப்போதெல்லாம்  அழுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியலை..:) படிப்பை discontinue பண்ணிடலாமா என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் தோன்றியதுண்டு..:( ஆனால்!!


மூவரின் குடும்பச் சூழல்களும் வெவ்வேறு!! ஒரு தோழியின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். இன்னொரு தோழிக்கு அப்பா இல்லை! அம்மாவின் வருமானத்தில் இவளும் இவள் தம்பியும் படிக்க வேண்டும்!


நான் கல்லூரியில் சேரும் போது தான் என் அம்மாவுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. என் தோழிகளின் நிலையை ஒப்பிடும் போது என் அப்பா அரசு ஊழியர், நிலையான வருமானம் என்றாலும் அம்மாவின் மருத்துவ செலவுகளுக்கு நிறைய தேவைப்பட்டது. இதையெல்லாம் நினைத்தே கசப்பான அனுபவங்களை சகித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது...:(


இப்படியிருக்க இறுதியாண்டில் Aptech கம்யூட்டர் சென்டரிலிருந்து CADD (Computer Aided Designing & Drafting) course க்காக விளம்பரப்படுத்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் தவறாமல் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனால் மதியம் எப்போதும் உள்ள வகுப்புகள் இல்லை!!





நாங்கள் மூன்றாண்டுகள் கல்லூரிப் படிப்பிலும் ஒருநாள் கூட கட்டடித்தெல்லாம் எங்குமே சென்றதில்லை.. எங்கள் வகுப்புத் தோழர்கள் ஒருசிலர் சினிமாவுக்கு சென்று வந்து கதையெல்லாம்  சொல்வார்கள்..பேராசிரியர் வரும் வரை அதை சுவாரஸ்யமாக கேட்போம். அதோடு சரி!!  எங்களுக்கு அந்த தைரியமெல்லாம் இல்லை..:)


இப்படியிருக்க Aptech இலிருந்து வந்த அன்று மட்டும் ஒரு அசாத்திய தைரியம் எங்களுக்கு வந்தது..!!! அப்படி எங்கு போனோம்!? அது என்ன விளைவைத் தந்தது?? அடுத்த பகுதியில் சொல்கிறேனே..:)



பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. சில ஆசிரியர்கள் இப்படிதான். கடந்து வந்த பாதை கடினமாகத்தான் இருந்திருக்கிறது. ஆப்டெக் சென்று வந்து என்ன நடந்தது என்று அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்.16 வயதில் அது மிகவும் கடினமாகவே இருந்தது.ஆப்டெக்கிலிருந்து எங்கள் கல்லூரிக்கு தான் வந்திருந்தார்கள். அடுத்த பகுதியில் தெரிந்து விடும்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. //Reading எடுத்து worksheet எழுதி தயார் செய்து காண்பித்தால் அந்தப் பக்கத்தையே கிழித்து எங்கள் மீதே எறிந்து விடுவார் பேராசிரியர்.// - இதுவும் பாருங்க... தன் மாணவர்களை பெர்ஃபக்‌ஷனிஸ்ட் ஆக்குவதற்காகவும் அப்படிச் செய்திருக்கலாம் (மனதையும் இதன் மூலம் உறுதியாக்கிடுவார்). இல்லை பெண்களெல்லாம் இந்தத் துறையிலா என்றும் நினைத்திருக்கலாம். இருந்தாலும், எளிய பின்னணி கொண்ட பெண்களுக்கு அவர் இன்னும் அதரவாக இருந்திருக்கலாம்.

    நானும், biased professors சிலரைக் கடந்துதான் வந்திருக்கிறேன்.

    கல்லூரியில் கட் அடித்து - மாணவிகளுக்கு பெரும்பாலும் அந்தத் தைரியம் குறைவு. மாணவர்கள்-அப்படிச் செய்யாமல் கல்லூரி வாழ்க்கையைக் கடந்துவந்திருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெர்ஃபக்‌ஷனிஸ்ட் - நீங்கள் சொல்வது போல் இருந்தால் நன்றாகத் தானிருக்கும். ஆனால்?? ஏனோ எரிச்சலை மட்டுமே எங்களிடம் காண்பிப்பார். அதுவும் ஒரு அனுபவம்.

      வாஸ்தவம் தான். எங்களுக்கு தைரியம் இல்லை..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  3. சுவாரசியம்.
    தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  5. சில ஆசிரியர்கள் இப்படி அமைந்துவிடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா.வித்தியாசமான மனிதர்கள்.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. இப்படி எல்லாம் ஆசிரியர் இருந்தால்
    பெண்கள் படிப்பதெப்படி!!
    மிக வருத்தமாக இருக்கிறது ஆதி.
    ஆனால் வாழ்வில் பொறுமையை இவர்கள் போதித்து
    விடுகிறார்கள்.
    சலனமில்லாமல் வாழ்வு தொடர ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. வாழ்வில் சகித்துக் கொண்டு போவதை போதித்தவர்கள்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  7. //Reading எடுத்து worksheet எழுதி தயார் செய்து காண்பித்தால் அந்தப் பக்கத்தையே கிழித்து எங்கள் மீதே எறிந்து விடுவார் பேராசிரியர். //

    ஆசிரியர்கள் நண்பர்களை போல் இருந்து கற்றுக் கொடுத்தால் என்ன?

    உங்கள் கல்லூரி அனுபவங்களை படிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ அப்படியில்லை அம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. இப்படி எல்லாம் ஆசிரியர்கள். கடந்து வந்த பாதை சிரமம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  9. சில ஆசிரியர்கள் இப்படி அமைவது நமக்கு கஷ்டமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....