வியாழன், 16 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி பன்னிரெண்டு - தமிழ்வழிக் கல்வி - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


என் வெற்றிகளை வைத்து என்னை எடை போடாதீர்கள். மாறாக, நான் எவ்வளவு தடவை தோல்வியிலிருந்து மீண்டு வந்தேன் என்பதை வைத்து எடை போடுங்கள் - நெல்சன் மண்டேலா.


******





கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை சில பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பத்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினொன்றாம் பகுதி


சென்ற பகுதியில் கல்லூரி நாட்களில் எங்களுக்கு இருந்த சினிமாக் கனவை எப்படி நிறைவேற்றிக் கொண்டோம் என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் கல்லூரி என்றால் உடனே இதுவும் நினைவுக்கு வந்துவிடும் என்று சொல்லக்கூடிய விஷயத்தை பற்றிப் பார்க்கலாம்.


கல்லூரி நாட்கள் என்றால் கலாட்டாக்களும், அரட்டையும், செமஸ்டர் தேர்வுகளும் நினைவுக்கு வருவது போல் அரியர்ஸும் நினைவுக்கு வரும். எத்தனை அரியர்ஸ் வைத்திருக்கிறோம் என்று பெருமையாக சொல்பவர்களும் உண்டு..:) சரி! என்ன தான் சொல்ல வரீங்க என்று கேட்கிறீர்களா??


தமிழ் வழிக் கல்வி!


என்னுடைய பள்ளிநாட்கள் எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் தமிழ் வழியில் பயின்றவள். கல்லூரியில் அடியெடுத்து வைத்ததும் புரிந்தும் புரியாத நிலை..:) கணிதத் தேர்வு என்றாலே ஜுரம் வந்து விடும் எனக்கு. ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எல்லாமே புரிந்து போனதால் விளையாட்டு போல கணக்கு போட்டு பார்க்க 99/100 பெற்றேன். ஆனால்??


கல்லூரியில் முதல் ஆண்டு Maths 1, Maths 2ல் Algebra, calculas என்று 11+, 12+ கணக்குப் பாடங்கள் எங்களை பயமுறுத்தியது. வகுப்பில் புரிகிற மாதிரி தான் இருக்கும். பின்பு நானே போட்டுப் பார்க்கும் போது ஒன்றுமே புரியலை..:) என்னடா இது!! செமஸ்டர் தேர்வில் அரியர்ஸ் வைத்து விடப் போகிறோமே என்று கவலை கொள்ள வைத்தது!





எங்கள் பேராசிரியர் ஒருவர் மிகவும் நல்ல மனிதர். பொறுமையாக சொல்லித் தருவார் என்பதால் அவரை எல்லோருக்குமே பிடிக்கும். அப்போது அவருக்கு காலில் ஏதோ பிரச்சினை! Walking stick உதவியுடன் தான் நடந்து கொண்டிருந்தார். எங்களுக்கு அவர் கணக்கு வகுப்புகள் எடுக்கவில்லை என்றாலும் எனக்கும் என் தோழிக்கும் free ட்யூஷன் எடுக்க முன் வந்தார். கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் PSG காலேஜில் இறங்கி அங்கிருந்து நடந்து அவர் வீட்டிற்கு சென்று  கற்றுக் கொண்டோம். அவரிடம் மூன்று மாதங்கள் கற்றுக் கொண்டதில் செமஸ்டரில் பாஸ் பண்ணிவிட்டோம்.


இப்படியாக முதல் ஆண்டு வெற்றிகரமாக தேறிவிட்டோம். ஆனாலும் இரண்டாம் ஆண்டில் விதி வென்றது..:)  Fluid mechanics ல் அரியர்ஸ்! அப்புறம் என்ன செய்ய!  அதை அடுத்த செமஸ்டரில் எழுதி தேர்வானேன். பள்ளிநாட்களில் எளிதாக இருந்த படிப்பு கல்லூரியில் ஏனோ சுமார் தான்..:) குடும்பச் சூழலும் மனதில் இருந்து கொண்டே இருந்ததும் ஒரு காரணம்! பள்ளி பொதுத்தேர்வில் 87 சதவீத மதிப்பெண்கள் அசால்ட்டாக எடுக்க முடிந்த என்னால் கல்லூரியில் 71 சதவீத மதிப்பெண்களே எடுக்க முடிந்தது.


கல்லூரிப் பருவத்தில் அடிக்கடி தலைவலி வந்து கொண்டே இருந்ததால் எங்கள் கல்லூரிக்கு அருகில் அப்போது புதிதாக துவங்கியிருந்த அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அம்மா அழைத்துச் சென்றார். ஒருநாள் முழுவதும் டெஸ்ட் செய்து இறுதியில் - 0.5  பவர் இருப்பதாகச் சொல்லவே அன்றிலிருந்து கண்ணாடி போட்டுக் கொள்ளத் துவங்கினேன். தொடர்ந்து மூன்று வருடங்கள் போட்டுக் கொண்டிருந்தேன்.


கல்லூரி முடிந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் பேருந்தில் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்ணின் துப்பட்டாவில் என் கண்ணாடி மாட்டிக் கொண்டு விட்டது. அந்தப் பெண் இது தெரியாமல் நிறுத்தத்தில் இறங்கி என் கண்ணாடியோடு செல்ல, துரத்திப் பிடித்து ஒருவழியாக வாங்கினேன்..:) இது ஒரு மறக்க முடியாத வேடிக்கையான சம்பவம்.. ஹா..ஹா..ஹா.


உங்களோடு இன்னும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருப்பதால் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. துப்பப்பட்டாவில் மாட்டிய கண்ணாடி...   அருகிலிருந்தவர்கள் கூடவா எடுத்துச் சொல்லி அவரை நிறுத்தவில்லை?  அடப்பாவமே...

    பள்ளியில் நன்றாய் படிப்பவர்கள் கல்லூரியில் கொஞ்சம் கீழே வருவது இயற்கைதான் போல!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரும் கவனித்திருக்க மாட்டார்கள் போல..:) ஆமாம் சார்.பள்ளியில் எளிதாக இருந்தது கல்லூரியில் தடுமாற்றம் தான்..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. அரியர்ஸ்... ஆஹா.. இந்த அனுபவம் பொறுப்பில்லாமலிருந்த எனக்கும் உண்டு.

    கல்லூரியில் புரிந்து படிக்காமல் மனப்பாடம் பண்ணி யூனியில் வரு சப்ஜெக்டில் முதல்வனாக வந்த அனுபவமும் உண்டு.

    தமிழ் வழி, பிறகு ஆங்கிலம் - இந்தச் சங்கடம் இப்போதும் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அனுபவமும் நன்று. ஆமாம் சார். பெரும்பாலானவர்களுக்கு உண்டு.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    அருமையான வாசகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆதி, வருத்தம் மகிழ்ச்சி என்று கலந்து கட்டிய அனுபவங்கள்!

    நானும் தமிழ்வழிக் கல்விதான். அரசுப்பள்ளி, அரசு சார்ந்த பள்ளி.

    ஆதி 71 ஒன்றும் குறைவான மதிப்பெண் இல்லை. நீங்கள் உங்கள் பாடங்களை நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் முந்தைய பதிவுகளில் தெரிந்ததே அதுதானே முக்கியம்.

    ஆம் உங்களைப் போன்ற அதே அனுபவம் தான் எனக்கும் இது அப்போது பலருக்கும் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. வீட்டுச் சூழல்.

    நானும் கல்லூரி போன சமயம் கண்ணாடி அணிய வேண்டியதானது. இது பேருந்தில் கூட்டம் நெருக்கித் தள்ளும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும் கண்ணாடியைப் பாதுகாப்பது. கண்ணாடி என்றதும் என் அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது இங்கு அது பெரிதாகிவிடும்..ஹிஹிஹி

    தொடர்கிறேன் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அனுபவங்களும் அருமை. கண்ணாடி அனுபவங்களை முடியும் போது பகிர்ந்து கொள்ளுங்கள்..

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. வணக்கம் மேடம்.
    வாசகம் அருமை.
    வாசகத்தில் உள்ளதுபோல் தாங்களும் அரியஸிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சி.
    நானும் தமிழ் வழியில் கற்று கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்ந்தபோது ஒரு வருடம் திகைத்தே போனேன்.
    எனிநும் அணைத்தும் இனிதான அணுபவங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  7. கல்லூரி அனுபவங்களை நன்றாக சொல்லி வருகுகிறீர்கள் ஆதி.
    கண்ணாடி அனுபவம் ! உடையாமல் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. கண்ணாடி அனுபவம் சுவாரிசியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.

      நீக்கு
  9. அன்பின் ஆதி அண்ட் வெங்கட்,
    வாழ்வின் வெற்றி தோல்விகள்
    துன்ப இன்பங்கள் இப்படித்தான் அமைகின்றன.

    கண்ணாடியைக் காப்பது கடினம் தான்.
    வேடிக்கையாக எடுத்துக் கொள்ளவும் முடியாது.
    நல்லதொரு பதிவு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  10. கண்ணாடி....சுவாரசியம் சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....