செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கல்லூரி நாட்கள் பகுதி மூன்று - கல்லூரி கலாட்டாக்கள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DON’T BE A PARROT IN LIFE, BE AN EAGLE. A PARROT TALKS WAY TOO MUCH AND CAN’T FLY HIGH BUT AN EAGLE IS SILENT AND HAS THE WILL POWER TO TOUCH THE SKY.


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை இரண்டு பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த இரண்டு பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  



சென்ற பகுதியில் எங்கள் கல்லூரி வளாகம் பற்றியும், அங்கே எங்களுக்கான நெறிமுறைகள் என்னவெல்லாம் இருந்தது என்பது பற்றியும் சொல்லியிருந்தேன். 


முதலாம் ஆண்டில் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நாங்கள் மூன்று பெண்கள் மட்டும் தான் பேசிக் கொண்டிருப்போம். இரண்டாம் ஆண்டிலிருந்து தான்  வகுப்புத் தோழர்களுடனும் அரட்டை அடிக்க ஆரம்பித்தோம்..


வகுப்புகள் போரடித்தால் சினிமா பாட்டு வரிகளை  என் தோழி எழுதித் தர,  வகுப்புத் தோழர் ஒருவர் எங்கள் பின்னாலிருந்து பாடிக் கொண்டிருப்பார்...:) நாங்களும் கருமமே கண்ணாக, காதைப் பாட்டிலும், கண்ணை வகுப்பிலுமாக வைத்திருப்போம்...:) 


அதேபோல் மதிய உணவு வேளையில் பெண்கள் அறைக்குச் சென்றாலும் எங்கள் வகுப்பை மிஞ்சும் அளவு அங்கு கலாட்டாக்கள் இருக்கும்..:) எங்கள் துறைத் தலைவருக்கு தலையில் சொட்டை..:) அவர் எங்களை கடந்து செல்லும் போது, நாகார்ஜூனின் நடிப்பில் வெளியான 'ரட்சகன்' படத்தில் வரும் அப்போதைய ட்ரெண்டிங் பாடலான 'சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா!' என்ற பாடலை எல்லோரும் சேர்ந்து பாடுவார்கள்..:) ஹா..ஹா..ஹா..


வகுப்பில் முதல் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கும் எங்களிடம் புத்தகம் வாங்கித் தான் பேராசிரியர் பாடத்தை நடத்திக் கொண்டிருப்பார்.  ஆனால் அவரையே வரைந்து கொண்டிருப்பாள் என் தோழி...:) அவரது சட்டையில் இரண்டு பாக்கெட்டுகள் இருக்கும். இரண்டுக்கும் மூடிகளும் வைத்து தைத்து இருக்கும்...:) அதில் பட்டன் கூட இருக்கும்...:) ஓவியத்தில் அதையும் சேர்த்து தத்ரூபமாக வரைந்திருப்பாள்...:)


எங்கள் வகுப்புக்கு பின்புறம்  வெட்டவெளியாக இருக்கும். எங்கள் வகுப்பறையும் பெரிய ஹால் போல இடையிடையே நான்கைந்து வெளியேறும் வழிகளுடன் இருக்கும்.. வெட்டவெளியில் எங்கள் டிபார்ட்மெண்ட் தோழர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள்..:) பேராசிரியர் வந்து கொண்டிருக்கிறார் என்றால் நாங்கள் அவர்களுக்கு சைகை காண்பிக்க வேண்டும்..:) அவர்களும் பேராசிரியர் உள்ளே வருவதற்குள் , வகுப்பின் ஏதோ ஒரு கதவு வழியே bat, stump சகிதம் உள்ளே ஓடி வந்துவிடுவார்கள்..:))





பேராசிரியரோ பரிதாபமாக, தம்பிகளா! தயவு செய்து Assignment பண்ணிடுங்கப்பா! என்று சொல்லிக் கொண்டிருப்பார்.   மறுபுறம் என் தோழி 'கையில் திருவோட்டுடன்' அவரையே வரைந்து கொண்டிருப்பாள்..:)


கல்லூரி வாழ்க்கை இப்படி கலாட்டாவுடனேயே சென்றால் நன்றாகத் தான் இருக்கும்..ஆனால்???  நாங்கள் கல்லூரியை Discontinue பண்ணி விடலாம் என்று நினைத்த தருணங்களும் உண்டு!! அடுத்த பகுதியில் சொல்கிறேனே...!!


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்

 

26 கருத்துகள்:

  1. இளமைக்காலங்கள்... திரும்பி வரா இளமைக்கு குறும்புகள், சந்தோஷங்கள்... இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்.மீண்டும் வாராப் பருவம்.

      தங்களின் தொடர் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. என் கல்லூரிக்காலத்தை நினைவுபடுத்திய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. சுவாரஸ்யமான நிகழ்வுகள் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    தங்கள் கல்லூரி கலாட்டாக்கள் நன்றாக இருந்தது. மறக்க முடியாத நினைவலைகள். அப்போதுள்ள மாணவர்களின் குறும்பு செயல்கள் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் பொழுது போக்கானவைதான். (அவர்களும் தங்கள் இளமை பருவத்தை கடந்துதானே வந்திருப்பார்கள்.) ஆனால், சிலர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கண்டிப்பாக இருப்பார்கள். வித்தியாசங்கள் எங்கும் உள்ளதுதானே..! உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாக செல்கிறது. அடுத்த பகுதி நீங்கள் தொடர காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..எல்லோரும் ஒன்று போல இருக்க மாட்டார்கள் தான்!

      தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு
  5. இளமைக் காலத்தை அசை போடுவது அருமை.
    எங்கள் பள்ளியில் கிரிக்கெட் விளையாட முடியாது. ஆனால் ரகசியமாக நேரடி வர்ணணையைக் கேட்போம்.
    மாற்றுத்திறனாளிகள் நிறைந்த எங்கள் பள்ளியில் சிறிது பார்வையுள்ளவரை வைத்து ஆசிரியர்களோ வாடன் அவர்களோ வந்தால் எச்சரிக்கை விடுக்கச் சொல்வோம்.
    அவற்றை மீரியும் மாட்டிக்கொண்டு அடி வாங்கிய சுவையான சம்பவங்களும் ஏராளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பள்ளி அனுபவமும் சுவாரஸ்யமாக உள்ளது.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  7. கல்லூரிக் கலாட்டாக்கள் மறக்க முடியாதவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.

      நீக்கு
  8. கல்லூரிக் காலங்கள்... மறக்க முடியாதுதான். இப்போ யோசிக்கும்போது, எப்படி பொறுப்பற்றவனாக இருந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  9. குறும்புகள் இல்லாத கல்லூரி காலமா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  10. கல்லூரி வாழ்க்கை மறக்கமுடியாத ஒன்று. உங்கள் பதிவு அனைவருக்கும் அவர்களின் கல்லூரி நினைவுகளை நினைவுக்கு கொண்டுவந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.

      நீக்கு
  11. கல்லூரிக்காலம் திரும்பாதா என்னும் ஏக்கம் வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. கல்லூரிக் கால குறும்புகள் அருமை.
    கவலைகள் இல்லாமல் துள்ளி திரிந்த காலம். அடுத்து என்ன ஆவலுடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....