வெள்ளி, 1 அக்டோபர், 2021

முகப்புத்தகத்திலிருந்து - கதை கேட்க ஒரு APP - எடுபிடி வேலைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிமூன்றாம் ஆண்டில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும் நல்ல புத்தகங்களால் திறக்கப் படுகின்றன. 


******


ரகசியமாய் ஒரு ரகசியம்! - Storytel App - 12 செப்டம்பர் 2021:





எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் கதைகளை பக்கம் பக்கமாய், நிதானமாய், மனதில் உள்வாங்க சில வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து,  என புத்தகங்களாய் அதன் வாசனையுடன் ஆழ்ந்து போயிருக்கிறேன். சிலவற்றை வாங்கி சேமித்தும், சிலவற்றை இரவலாகவும் கூட  வாங்கி வாசித்திருக்கிறேன்.


அதற்கு அடுத்த கட்டமாக மின்னூல்கள். பராமரிப்பு தேவையில்லை, இடத்தை அடைக்காது என்று இதில் சில வசதிகள். இப்போது அதற்கு அடுத்த நிலையில் வாசிக்கவே வேண்டாம்! கதையை காதில் கேட்டுக் கொண்டே நம் வேலைகளை கவனிக்கலாம்..என்று இதில் சில வசதிகள். தாத்தா பாட்டிகள் கதை சொன்னது போய் யார் யாரோ நமக்கு கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...🙂


சென்ற வாரத்தில் Storytel App இன்ஸ்டால் செய்து சப்ஸ்கிரிப்ஷன் கட்டியதும் முதலில் நான் கேட்க ஆரம்பித்த கதை எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் 'ரகசியமாக ஒரு ரகசியம்'! கீர்த்தனா என்பவர் கதையை நல்ல உச்சரிப்புடன், Voice Modulationம் கொடுத்து சொல்கிறார். Storytelல் புத்தகங்களுக்கு பக்கங்கள் கிடையாது. மணிநேரங்கள் தான் இருக்கும். 5 மணிநேரங்கள் செலவிட்டு கேட்க வேண்டிய கதை இது!


கொல்லிமலையில் உள்ள சித்தர்பட்டி என்ற ஊரும், அங்கே சித்தர்கள் உருவாக்கிய சித்தேஸ்வர ஸ்வாமி கோவிலும், அங்கே உள்ள சக்தி வாய்ந்த கால பைரவரும், அதிசய சுனையும் என கேட்க ஸ்வாரசியமாக உள்ளது. 


புத்தகமாக வாசித்து மனத்திரையில் காட்சிகளை கண்முன் நிறுத்துவது போல் இதில் கண்மூடி காட்சிகளை மனத்திரையில் கொண்டு வரலாம் என்பதற்குள் தூங்கி விடும் அபாயம் இருக்கிறது..🙂 ஒருநாள் Headsetல் கதை கேட்டபடியே தூங்கியிருக்கிறேன். 2 வது Chapterல் தூங்கி 6 வது Chapterல் விழித்த போது... கீர்த்தனா காதுக்குள் "பிரசாத் அங்கே வந்தான்" என்றார்..🙂 யாரவன் பிரசாத்??? என்று முழித்தேன்...🙂 பின்பு பின்னோக்கி சென்று கேட்க ஆரம்பித்தேன்..🙂


நீங்களும் இந்த வித்தியாசமான அனுபவத்தை வாய்ப்பு கிடைத்தால் அனுபவியுங்கள்.


******


எடுபிடி வேலைகள் - 16 செப்டம்பர் 2021:


வீட்டில் எடுபிடி வேலை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. வீட்டு வேலை போக, அத எடு! இத எடு! அதை எடுத்துக் குடு! இதுல என்ன இருக்கு பாரு! என்று இதற்கெல்லாம் அளவீடே இல்லை..🙂 


சின்னக் குழந்தை கூட தானாகவே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறது. ஆனால் இந்த பெரிய குழந்தை இருக்கே..:))


திருமணமானதும் ஒரு பர்சனல் அஸிட்டெண்ட் அப்பாயிண்ட் செய்து விட்டதைப் போல எல்லாவற்றையும் எடுத்துக் கொடுக்க வேண்டும்  இல்லையென்றால் நினைவூட்ட வேண்டும்..🙂


பர்ஸ், ஐடி கார்டு, செல்ஃபோன், லஞ்ச் பேக், பென் ட்ரைவ் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாச்சானு கேட்கணும்..🙂


சரி! இருபது வருஷம் தான் ஆச்சே! தெரிஞ்சது தானே! எதற்கு இந்தப் புலம்பல்னு நீங்க கேட்கறது புரிறது!! இருங்க இன்னிக்கு நடந்த கதையை சொல்றேன்.


காலைநேர பரபரப்பில் மகளை ஸ்கூலுக்கு தயார் பண்ணி அனுப்பி விட்டு, பெரியம்மாவுக்கும், பெரிய குழந்தைக்கும் காலை டிஃபனை கொடுத்து விட்டு, பசி வயிற்றைக் கிள்ள எனக்காக தோசை வார்ப்பதற்குள் பெரிய குழந்தை வெளியே கிளம்பியாச்சு..🙂


சரி! தோசையை சாப்பிடுவோம் என்று அமர்ந்தவுடன் டீப்பாயின் மேல் கண்ணில் பட்டது  மூக்கு கண்ணாடி! அட ராமா! கண்ணாடி எடுத்துண்டு போகலையா?? போன தடவை கண்ணாடியை மறந்துட்டு வந்ததால் இங்கே ஒன்று வாங்கினேன்..ஒருவேளை அத எடுத்துட்டு போயிருப்பாரோன்னு நினைப்பதற்குள் விஷயம் என்னவென்று தெரிந்துவிட்டது..🙂


கண்ணாடி என நினைத்து எடுத்துச் சென்றது என் செல்ஃபோனை..🙂


இந்தக் கண்ணாடியால் நான் படும் பாடு இருக்கே!! வெளியே செல்லும் போது அதை என் ஹேண்ட் பேகில் போட்டுக் கொள்ள வேண்டும்..கையில் எடுத்துச் சென்று ஏதோ ஒரு கடையில் வைத்து விட்டு, உன்கிட்ட கொடுத்தேனே என்று சொல்ல, நான் இல்லையென்று சொல்ல, வந்த வழியே மீண்டும் சென்று ஒவ்வொரு கடையாக கேட்டு அதை கண்டெடுத்தேன்..🙂 இப்படியாக அன்றாடம் ஏதோ ஒரு கதை..🙂


உங்க வீட்டிலும் இப்படித் தானா??


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. கதையை பிறர் வாசிக்கக் கேட்பது எனக்கு அவ்வளவு சரிப்படாது. ஒன்றாது!  நம் மன பாவங்களுக்கு ஒத்துவராது என்று தோன்றும்.  பொன்னியின் செல்வன் ஆடியோ டிவிடி வாங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது.  இதுவரை கேட்டதில்லை!  மேலும் நீங்கள் ஆள்வது போல கேட்க ஆரம்பிக்கும்போதே தூங்கி விடுவேன்!  இந்த வகையில் எனக்கு வேளுக்குடி நிறையவே உதவி இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வகையில் எனக்கு வேளுக்குடி நிறையவே உதவி இருக்கிறார்!// :)))))

      நீக்கு
    2. எனக்கும் இது வித்தியாசமான அனுபவம் தான்..ஆழ்ந்து போக முடியலை..

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    3. :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  2. நன்றி ஐயா
    கதைச் சொல்லி செயலியை முயன்று பார்க்கிேறன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்து பாருங்கள் ஐயா. புத்தகம் வாசிப்பது போல இருக்காது. ஆனால் ஒருசிலருக்கு ஒத்து வரலாம்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. தூங்கி விடுவோம் என்றால் அவசியம் கேட்க வேண்டும் அவ்வப்போது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  4. கதை சொல்லி மூலம் கதை கேட்கும் ஆர்வம் இருக்கிறது...முயன்று பார்க்கவேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்து பாருங்கள் சார். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு
  5. 'எடுபிடி வேலைகள்' கட்டுரை ஏற்கனவே முகநூலில் படித்திருக்கிறேன். ஆடியொவில் சில கதைகள் கேட்டிருக்கிறேன். ஓகே! என்ன இருந்தாலும் நாமே படிக்கும் அனுபவம் தனிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானும்மா. புத்தகம் வாசிப்பது போலில்லை..

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  6. 2 வது Chapterல் தூங்கி 6 வது Chapterல் விழித்த போது... கீர்த்தனா காதுக்குள் "பிரசாத் அங்கே வந்தான்" என்றார்..🙂 யாரவன் பிரசாத்??? என்று முழித்தேன்...🙂 பின்பு பின்னோக்கி சென்று கேட்க ஆரம்பித்தேன்..🙂//

    ஹாஹாஹாஹாஹா செமையா சிரித்துவிட்டேன் ஆதி!

    நான் ஏதோ ஒன்று ஃப்ரீயாக வந்ததே என்று....யாரோ ஒருவர் நினைவில்லை ஒரு கதையை வாசிக்க சரி கேட்டுப் பார்ப்போமே என்று நினைத்தேன்...ஆனால் ஏனோ அது ஒத்துவரவில்லை. புத்தகம்தான் வாசிக்கப் பிடிக்கும் ஆழ்ந்துவிடுவேன் மனம் நம் குரலில் அல்லது அந்தக் கதாபாத்திரத்தின் குரலை நாமே கற்பனை செய்து அப்படி வாசிப்பது...ஆனால் புத்தகம் வாங்கும் சூழல் இல்லை என்பதால் ஆன்லைனில் ஃப்ரீயாகக் கிடைப்பதை டவுன்லோட் செய்து வாசிப்பதுதான்...ஆடியோ பல சமயங்களில் அப்படியே தூங்கிவிடுவேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நாமே நம் மனக்குரலில் கற்பனையோடு வாசிப்பதே தனி அனுபவம் தான்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. எடுபிடி வேலைகள்// ஹாஹாஹா வீட்டுக்கு வீடு வாசப்படி.

    ஆனால் நானுமே மறந்துவிடுவதுண்டு...மாற்றி எடுத்துச் செல்வது..வேறு ஒன்றுமில்லை மனம் கொஞ்சம் கற்பனை உலகில் இருக்கும் அதான்..!!!.

    நல்ல வாசகம்!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நீங்களும் இப்படி செய்வீர்களா!!

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. ஆடியோவில் கதைகள் கேட்டதில்லை. அப்படியொரு ஆப் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் இரவு டிவி பார்க்கும் போது தூங்கிவிடுவதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிவி பார்க்கும் போது தூங்கினால் இதிலும் அப்படி செய்ய வாய்ப்புகள் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  9. ஒலிவடிவில் புத்தகங்களை கேட்பது வேலை செய்துகொண்டிருக்கும்போது அல்லது பயணம் மேற்கொள்ளும்போது சிறப்பாக இருக்கும்.
    படுத்துக்கொண்டே கேட்பது தூக்கத்தையே வரவைக்கும்.
    அதற்கு நேரடியாக நூலை படிப்பதே கன்களை விழிப்பாக வைக்கும்.
    நானும் இரு வாரம் முன் தலைக்கவசத்தை ஹர்ஷ்பப்பீஸ் கடையிலேயே மறந்து வைத்துவிட்டேன்.
    மறுநாள்தான் ஞாபகம் வந்தது.
    அணைத்து பகுதிகளும் வாசகமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். பயணங்களின் போதும், வேலை செய்யும் போதும் கேட்கலாம்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  10. பதிவு அருமை.
    நானும் நிறைய கதைகள் கேட்கிறேன்.
    வேலைகள் செய்து கொண்டு இருக்கும் போது, ரேடியோவில் பாடல்கள் கேட்பது போல் கதை கேட்கிறேன்.

    எடுபிடி வேலைகள் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா.. ரேடியோ போல் தான் நானும் கேட்கிறேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. நல்ல எடுபிடி.
    எல்லோர் வீட்டிலும் எடுபிடிகள் தேவையாகத்தான் இருக்கிறதுபோலும் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....