வியாழன், 4 நவம்பர், 2021

தீபாவளி - வாழ்த்துகள் - எங்கள் வீட்டு காரமும் இனிப்பும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரைக்கு ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“NEVER LEAVE A TRUE RELATION FOR FEW FAULTS; NOBODY IS PERFECT; NOBODY IS CORRECT AT THE END; AFFECTION IS ALWAYS GREATER THAN PERFECTION.


******




மகளின் உடல்நலமின்மை, நவராத்திரி, ஊருக்கு போனது என்று தீபாவளி வரப்போவதற்கான அறிகுறிகளே தெரியாமலேயே  இருந்துவிட்டேன்..:) பிறகு தான் கொஞ்சம் சுறுசுறுப்பாக கருவிகளை கையில் எடுத்தேன்..:) எல்லாம் நல்லபடியாக வரணும்!! ஜானகி அம்மாவின் பாடல்களை கேட்ட படி பலகாரங்களை செய்தேன். 


முதல் தயாரிப்பாக ஓமப்பொடி!




இரண்டாவதாக பூந்தி!




மாலை கார்ன்ஃப்ளேக்ஸ், அவல், கடலை, கறிவேப்பிலை எல்லாம் வறுத்துப் போட்டு உப்பு, காரம் சேர்த்தால் மிக்சர் ரெடி.!


மிக்சர் ரெடி! 




இனி இனிப்பும், மருந்தும் பண்ணனும்!


முதல் இனிப்பாக  கடலைமாவும், பால் பவுடரும் சேர்த்து செய்த பர்ஃபி. 



பதம் சரியாயிருந்தா துண்டம் போட வரணும்..:) இல்லைன்னா அல்வான்னு சொல்லிக்க வேண்டியது தான்..:)


வெற்றி! வெற்றி! வெற்றி!



கடலைமாவு, பால்பவுடர் பர்ஃபி தான்...:)


அதிரசம்!




திருமணமாகி ஆறு மாதங்களில் வந்த தலை தீபாவளிக்கு, 'மாப்பிள்ளைக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்னு சொல்லிருக்காரா! என்று அம்மா கேட்டார்.


அவருக்கு அதிரசம் பிடிக்கும்னு சொன்னார்ம்மா!


அப்போது அம்மாவால் எதுவும் செய்ய முடியாத நிலை. யாரிடமோ ஆர்டர் குடுத்திருந்தார். மற்ற இனிப்புகளோடு 25 அதிரசம் என்று ஆர்டர் குடுத்தார்.


அம்மா நன்றாக இருந்த சமயத்தில் எல்லாம் வருடம் தவறாமல் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு அம்மா தான் அதிரசத்துக்கு பாகு செலுத்தி தருவார்.


நான் இதுவரை பண்ணினதேயில்லை. இரண்டு பேருக்கு மீறிப்போனா பத்து அதிரசத்துக்காக ஈர அரிசியை மெஷினுக்கு சென்று அரைத்து வந்து பாகு செலுத்தி என்று விட்டு விடுவேன்..:)


இந்த முறை ஆச்சி கை கொடுத்தாள்..:) செய்ய சுலபமாக இருந்தது. அடுத்த முறை எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தால் மெஷினுக்கே சென்று அரைத்து வந்து செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.


முள்ளு தேன்குழல்!


முறுக்கு இல்லாத தீபாவளியா!!?




மூன்றாவது இனிப்பாக ரவா உருண்டையும், தீபாவளி மருந்தும்!


இஞ்சி, மிளகு, சீரகம், தனியா, ஓமம், கசகசா, கிராம்பு, ஏலக்காய், உலர்ந்த திராட்சை, அதிமதுரம் என எல்லாவற்றையும் அரைத்து கிளறியிருக்கிறேன். அளவுகள் ஏதும் இல்லை! கண் திட்டம் தான்..:)

அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும்.



******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. கண்கவரும் பட்சணங்கள்.  கலக்கி விட்டீர்கள்.  ஸ்வீட் ஸ்டாலில் பார்ப்பது போல இருக்கிறது.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  3. பட்சணங்கள் செய்வது எளிதல்ல அதற்கு பொறுமை தேவை ஆனால் அதைவிட அப்படி செய்த படங்களை எடுக்க வேண்டும் என்றால் அதுவும் மிக நேர்த்தியாக எடுக்க வேண்டும் என்றால் மிக பொறுமையை முயற்சியும் தேவை ஆனால் இதை எல்லாம் மிக மிக நேர்த்தியாக செய்து முடித்த உங்களுகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஆதி வெங்கட் குட் படங்கள் மனதை கவர்கின்றன... பட்சணங்களை சாப்பிட தூண்டுகிறது ஹும்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    மகளுக்கு உற்சாகம் விரைவில் திரும்பட்டும்.

    பட்சண வரிசை அருமை. டிரே வாங்கணும் என்று ஒரு வருடத்துக்கு மேல் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    பாராட்டுகள். தீபாவளி மருந்து காணொளியில் வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. படங்கள் அழகாக இருக்கிறது
    எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  7. பலகாரங்கள் அனைத்தும் பார்ப்பதற்கே இவ்வளவு அழகாய் இருக்கும்போது ருசிக்கு கேட்கவா வேண்டும்?
    மிக அருமை!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. பட்சணங்களுடன் தீபாவளி சிறப்பு.

    உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  10. உங்கள் அணைவருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தீபாவளி வாழ்த்துக்கள்! அனைத்து பலகாரமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  12. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....