சனி, 18 டிசம்பர், 2021

காஃபி வித் கிட்டு - 137 - கார்ப்பரேட் மருத்துவமனை - பிள்ளையாரும் பூக்களும் - ராணி கி வாவ் - BUSY BEE - கிஷோர் குமார் - கலக்கல் அலுவலர் - சிறகு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WE CAN SAVE MANY RELATIONS, IF WE UNDERSTAND A SIMPLE FACT THAT PEOPLE ARE NOT WRONG. THEY ARE JUST DIFFERENT FROM OUR EXPECTATIONS.

 

******


இந்த வாரத்தின் தகவல் - கார்ப்பரேட் மருத்துவமனை :

 

சமீபத்தில் திருச்சியில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் அங்கே காத்திருந்த போது பார்த்த விஷயங்கள் மனதுக்கு ஒப்பவில்லை.  ஒரே ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்துவிட்டு குடும்பத்தினர், உறவினர் என பத்து பேருக்கும் மேல் அங்கே வந்து காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு, அரட்டை அடிப்பதும், உணவு உண்பதும், உலக அரசியல் பேசுவதும், சிரித்துக் கொண்டும் கலாய்த்துக் கொண்டும், சப்தமாக, அங்கே இல்லாதவர் குறித்து குறை சொல்வதும் என்ன Design-! என்னதான் பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்தாலும் மனதிற்குள் கோபம் பொங்கிக் கொண்டு இருக்கிறது. 

 

மருத்துவமனையில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் இத்தனை பேரையும் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் எனக்குண்டான கேள்விகளில் ஒன்று.... சாதாரணமாக ஒரு Patient உடன் ஒரு Attendant மட்டுமே உள்ளே இருக்கலாம் என்று சொல்வார்கள். இவர்களை மட்டும் எப்படி இப்படி அனுமதிக்கிறார்களோ? கேட்டால் கார்ப்பரேட் மருத்துவமனை என்ற பெருமை பீற்றல் வேறு!


******


இந்த வாரத்தின் நிழற்படம் - பிள்ளையாரும் பூக்களும் :


 

கீழே வைத்திருக்கும் பூ/செடிகள் அழகு தான். ஆனாலும் சிலை வடித்த சிற்பியின் கைவண்ணத்தை மறைக்கும் விதத்தில் (கீழ்ப்புறம் இருக்கும் கலைவண்ணம் மறைந்துவிட்டது) செடிகள் வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்... சிலை இருக்கும் இடம்..... தலைநகர் தில்லியின் விமான நிலையம் இரண்டாம் முனையம்..... நவம்பர் மாதம் எடுத்த படம்...

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: ராணி கி வாவ்

 

2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - அற்புதச் சிற்பங்கள் ராணி கி வாவ்

 

பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 

 

குஜராத் மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று பாடன்.  ஆங்கிலத்தில் Patan முதல் முறை படித்த போது படான் என்று தான் படித்தேன். அதன் பிறகு குஜராத்தி நண்பர் ஒருவரிடமிருந்து அது படான் அல்ல பாட்டண் எனத் தெரிந்து கொண்டேன். பாட்டண் என்ற குஜராத்தி வார்த்தைக்கு பட்டணம் என்ற அர்த்தம்.  பட்டணத்தினை ஆண்ட ராஜா முதலாம் பீம்தேவ் அவர்களின் நினைவாக அவரது பட்டத்து ராணி உதயமதி அவர்கள் அமைத்த ஒரு கிணறு தான் இந்த ராணி கி வாவ் வாவ் என்றால் கிணறு அதுவும் சாதாரண கிணறு அல்ல இது தரைக்குக் கீழே ஏழு அடுக்குகளைக் கொண்ட Step Well என அழைக்கப்படும் கிணறு இது. 

 

சரஸ்வதி ஆற்றின் அருகே பதினொன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த கிணற்றின் ஒவ்வொரு தளத்திலும் அருமையான பல சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.  தண்ணீரை தெய்வ வடிவமாகப் போற்றும் இவர்கள், தண்ணீருக்காக அமைத்த ஒரு தலைகீழ் கோவில் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு சிற்பத்திலும் அத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகளை நீங்கள் காண முடியும்.  தரைத் தளத்திலிருந்து படிகள் வழியே இறங்கிப் போக, ஒவ்வொரு நிலையிலும் சிற்பங்கள், நுட்பமான வடிவங்கள் என பார்த்துக் கொண்டே போகலாம். ஒவ்வொரு சிற்பத்திலும் அத்தனை வேலைப்பாடுகள். கண்களை சிற்பங்களிலிருந்து அகற்றுவது வெகு சிரமம் அத்தனை அழகு அந்தச் சிற்பங்கள். 

 

******

 

இந்த வாரத்தின் தகவல் - Busy Bee :

 

சில நாட்களாகவே/வாரங்களாகவே இங்கே என்னுடைய பதிவுகள் வெளியிடுவதில்லை.  வாரத்தில் ஒரு முறை முன்பு முகநூலில் எழுதிய நூல் அறிமுகம் மட்டும் வெளியிட முடிகிறது.  மற்ற பதிவுகள் எதுவும் எழுத இயலவில்லை.  போலவே நண்பர்களின் வலைப்பதிவுகளையும் படிக்கவோ, அதைக் குறித்து கருத்துரைக்கவோ இயலவில்லை.  நவம்பர் மாதத்தில் ஒரு முறை தமிழகம் வரவேண்டிய சூழலும் அமைந்தது - அதுவும் அவசர கதியில்! இரண்டு வாரங்கள் தமிழகத்தில் இருந்து மீண்டும் தலைநகர் தில்லி! பணிச்சூழல், வீட்டின் சூழல் என அனைத்தும் ஒரே சமயத்தில் பதிவுகள் எழுத இயலாததற்கு காரணமாக அமைந்துவிட்டது.  இப்போதைக்கு இல்லத்தரசி முகநூலில் எழுதி வரும் அவரும் நானும் தொடர், தொடர்ச்சியாக  இங்கேயும் வந்து கொண்டிருக்கிறது .  என்னுடைய பதிவுகள் மீண்டும் எழுத எத்தனை நாட்கள் ஆகும் என்று சொல்வதற்கில்லை!  முடிந்தவரை நண்பர்களுடைய பதிவுகளையாவது படிக்க வேண்டும்.  

 

அலைபேசி வழியாகவே படிக்க/கருத்துரைக்க வேண்டியிருப்பதும் அதிகம் வலைப்பக்கம் வர இயலாத சூழலுக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது.  பல வருடங்களாக நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து கொண்டிருந்த மடிக்கணினி மொத்தமாக முறைத்துக் கொண்டு உன் பேச்சு காய்! என்று சொல்லிவிட்டது.  இனிமேலும் அதனைப் படுத்தி எடுக்கவோ, மருத்துவரிடம் கொடுத்து பகுதிகளை மாற்றவோ மனம் இல்லை.  புதியதாக மடிக்கணினி வாங்கலாமா அல்லது மேஜைக் கணினி வாங்கலாமா எனவும் யோசித்தேன்.  ஆனால் இதுவரை வாங்கவில்லை - எதற்காக வீணாக ஒரு செலவு? என்ற எண்ணமும் வந்துவிட்டது! இந்த வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பதிவு எழுதியிருக்கிறேன். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து நாளொரு பதிவு வெளியிடுவதும் தடைபட்டுவிட்டது. போதும் வலைபதிவுகள் என்ற எண்ணமும் அவ்வப்போது தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது!  தொடர்ந்து எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் குறித்து அவன் செயல்! எழுதும் நாட்டம் இருந்தாலும் சூழல் சரியில்லாமலே இருக்கிறது! பார்க்கலாம்! 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த காணொளி - கிஷோர் குமார் - அதிகார் :

 

அதிகார் எனும் படத்திலிருந்து கிஷோர் குமார் அவர்களின் குரலில் இந்த பாடல் - கமாத்தா ஹூன் பகுத் குச்! - நான் சம்பாதிப்பதை நீ செலவு செய்து விடுகிறாய் என்று கணவன் மனைவியிடம் சொல்வது போல அமைந்த பாடல்! காலம் காலமாய் சொல்லப்படும் விஷயம்! உண்மையோ பொய்யோ இன்றைக்கும் இந்த விஷயம் பேசப்படும் விஷயமாகவே இருக்கிறதுகாணொளி இங்கே இணைக்க முடியாதபடி செய்திருக்கிறார்கள் என்பதால் பாடலின் காணொளி சுட்டி கீழே

 

Kamaata Hoon Bohut Kuch - Kishore Kumar, Geeta Dutt, Adhikar song - YouTube

 

******

 

அரசு அலுவலக  கலாட்டா - கலக்கல் அலுவலர் :

 

கிட்டத்தட்ட 31 வருடம் மத்திய அரசுப் பணியில் இருக்கிறேன்.  பல விந்தை மனிதர்கள் இங்கே நிறைந்து இருக்கிறார்கள்.  ஒரு சாரார் உழைத்துக் கொண்டிருக்க, ஒரு சாரார் தங்களது திறமையாலும், சாதுர்யத்தாலும் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு அலுவலர் பற்றிய தகவல் இது! பாராளுமன்றம் கூடுகின்ற நாட்களில் வேலைகள் அதிகம் இருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களைத் தருவது சிக்கலான வேலை.  பதில் சொல்லவும் வேண்டும், ஆனால் சொல்லும் பதில் சிக்கல்களை அரசாங்கத்திற்குத் தராமலும் இருக்க வேண்டும்! நிறைய யுக்திகளைக் கையாள வேண்டியிருக்கும்.  இப்படி பதில் அளிப்பது திறமைக்குச் சவால் விடும் வேலை.  எல்லோராலும் செய்து விடமுடியாது.  அதனால் ஒரு அதிகாரி தனது கீழ் வேலை செய்யும் அலுவலரிடம் கோப்பை தயார் செய்து, முடிந்த அளவு பதில் தயாரித்து ஒன்றிரண்டு வரிகளில் கோப்பை சமர்ப்பிக்கச் சொல்ல, அந்த அலுவலர் தயாரித்த குறிப்பு கீழே இருக்கும்படி இருந்தது! 

 

QUESTION ADMITTED

REPLY ATTEMPTED

FILE SUBMITTED.

 

அவ்வளவே தான்!  அதிகாரி ஒன்றிரண்டு வரி என்று சொன்னால் இப்படியா? என்று கேட்க, அடுத்த முறை அதே அலுவலர் எழுதிய குறிப்பு என்ன தெரியுமா?

 

RECEIPT IS A LETTER…

OFFICER KNOWS BETTER!

 

அதன் பிறகு அந்த அலுவலரிடம் எந்த வேலையும் சொல்வதற்கு தயங்குவார் அவரது அதிகாரி! 

 

*****

 

இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - சிறகை விரிப்போம்


 

இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - உங்களுக்கும் பிடிக்கலாம்!

 

*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

  

36 கருத்துகள்:

  1. ரொம்ப நாளாக வலைப்பதிவுகளிலோ இல்லை பின்னூட்டங்களிலோ உங்கள் இருவரையும் காணோமே என நினைத்தேன்.

    எல்லாம் நல்லபடியாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது சூழல் பரவாயில்லை நெல்லைத் தமிழன். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நீங்கள் சொல்லும் ஆஸ்பத்திரி அனுபவங்கள் எனக்கும் உண்டு.  நெருங்கிய உறவிலேயே நடந்திருக்கிறது.  சொன்னால் நமக்குதான் கெட்டபேர்.


    பிள்ளையார் சிலையை சற்றே உயரமாக வைத்துவிடலாம்!

    நீங்கள் மிகவும் முக்கிய (உறவு) அலைச்சல்களை இருக்கிறீர்கள் என்று தோன்றியது.  அந்த சங்கடங்கள் தீரும்வரை இந்தக் குழப்பமும் இருக்கும்.  பின்னர் சரியாகிவிடும்.  சங்கடங்கள் தீர விக்ன விநாயகனை வேண்டுகிறேன்.

    அலுவலக அனுபவம் புன்னகைக்க வைத்தது.

    நிலைத்தகவல் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு பெரிய குற்றமில்லை. நம்முடைய கஷ்டங்கள் துன்பங்கள், மற்றவர்களுக்கு அப்படியான ஃபீலிங்கைக் கொடுக்காது. எல்லா உணர்வும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவை. அதுவும் தவிர, எந்த உணர்விலும் நம்மால் ஒன்றியிருக்க முடியாது. அதுக்கு அப்புறம் நம் மனது வேறு சப்ஜெக்டைத் தேடும். காரணம் நம் மனம் எதிலும் ஆழாது.

      நீக்கு
    2. சொன்னால் நமக்கு தான் கெட்ட பேர் - உண்மை தான் ஸ்ரீராம். நானும் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன் முன்பு.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. நம் மனம் எதிலும் ஆழாது - உண்மை தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் ஆதி!

    வாசகம் நல்ல வாசகம். உண்மைதான்.

    //குடும்பத்தினர், உறவினர் என பத்து பேருக்கும் மேல் அங்கே வந்து காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு, அரட்டை அடிப்பதும், உணவு உண்பதும், உலக அரசியல் பேசுவதும், சிரித்துக் கொண்டும் கலாய்த்துக் கொண்டும், சப்தமாக, அங்கே இல்லாதவர் குறித்து குறை சொல்வதும் என்ன Design-ஓ! என்னதான் பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்தாலும் மனதிற்குள் கோபம் பொங்கிக் கொண்டு இருக்கிறது. //

    அதே ஜி. பிடிக்காத விஷயம். எனக்கும் கோபம் தலைக்கேறும்!!!

    ஆஸ்பத்திரி நிர்வாகம் கண்டிப்பாக இருக்க வேண்டும். உதவிக்கு ஒரு நபருக்கு மேல் வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்று. சில மருத்துவமனைகளில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டேன். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மருத்துவமனைகளில் மக்களின் தரத்துக்கு ஏற்ப சட்டங்கள் மாற்றுவார்கள்.

    கிணறு சுட்டிக்கு சென்று வந்தேன் பிரமிப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரத்திற்கேற்ப சட்டங்கள் மாறும் - உண்மை தான் கில்லர்ஜி.

      கிணறு சுட்டி - படித்ததற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நாடே கார்ப்பரேட் எனும் போது... ம்... என்னத்த சொல்ல...!?

    வீட்டிற்கு என்றால் மேசைக் கணினி தான் சிறந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிற்கு என்றால் மேசைக் கணினி தான் சிறந்தது - ஆமாம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகமும் செய்திகளும் மிக அருமை சார்.
    தாங்கள் அமைத்து அழுத்தங்களிலிருந்தும் மீண்டு விரைவில் வருவீர்கள்.
    மடிக்கணினி எங்கள் வீட்டிலும் மிகவும் பழையதாகி மின்கலம் தேய்ந்துவிட்டது.
    புதிது வாங்குவதை விலையேற்றம் காரணமாக சற்று தள்ளி வைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பணிச்சூழல், வீட்டின் சூழல் என அனைத்தும் ஒரே சமயத்தில் பதிவுகள் எழுத இயலாததற்கு காரணமாக அமைந்துவிட்டது. //

    தெரியும் ஜி. பரவாயில்லை. உங்கள் சூழல் விரைவில் மாறி எல்லாமே நல்லது நடக்கும். பதிவுகளுக்கு வரவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்கள் சூழல் நல்லபடியாக அமைவதுதான் முக்கியம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழல் சரியாக வேண்டும் - பார்க்கலாம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் காஃபி வித் கிட்டு அருமையான பதிவு. உங்களின் எண்ணச் சிதறல்களின் சூழ் நிலைகள் புரிகிறது. உங்களுக்கு அனைத்தும் நல்லவையாக நடக்கவும், மன அமைதி கிடைக்கவும் நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    விநாயகர் சிலை நன்றாக உள்ளது. வாட்சப் நிலைத்தகவலும் அருமை. உடல்/மன நிலைகளை கவனித்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தொடர்ந்து எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் குறித்து அவன் செயல்! எழுதும் நாட்டம் இருந்தாலும் சூழல் சரியில்லாமலே இருக்கிறது! //

    எனக்கும் இது அவ்வப்போது வரத்தான் செய்கிறது வெங்கட்ஜி.

    ஆனால் நீங்கள் வாரத்தில் ஓரிரு பதிவுககேனும் போட முயற்சி செய்யுங்கள. கணினி இல்லை என்றால் கடினம் தான். பதிவு எழுதுவதோ கருத்திடுவதோ. நேரம் நிறைய ஆகும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் எழுத வேண்டும் - பார்க்கலாம் எப்போது முடிகிறது என.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  10. கலக்கல் அலுவலகர்- சிரித்துவிட்டேன்..

    அப்பொழுதே ராணி கி வாவ் பார்த்து பிரமித்து வாசித்தேன் பதிவை. உங்களின் இப்பதிவு நம் கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் வைத்திருந்த சுற்றுலா தளத்திலும் கூட வந்திருந்தது.

    நிலைத்தகவலையும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கல் அலுவலர் - ரசித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      ராணி கி வாவ் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பெரும்பாலான மருத்துவமனைகளில் பணமே பிரதானம் . வேறு என்னத்தை சொல்ல .............
    அப்புறம் அரசு அலுவலரின் குறிப்பு நச் ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மருத்துவமனையில் அமைதி காப்பதே சிறந்தது.

    பாடல் கேட்டேன், "மனமுள்ள மறுதாரம்" படத்தின் இந்தி பதிப்பு போல இருக்கிறது, இதில் பாலாஜி, சரோஜாதேவி பாடுவதாக இந்த பாடல் வரும். தொலைகாட்சியில் பார்த்தேன் பழைய படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதி காப்பதே சிறந்தது - உண்மை தான் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. இந்த ராணி கி வாவ் – வாவ் என்றால் கிணறு முன்பு பார்த்த நினைவு இருக்கிறது, மீண்டும் பார்த்தேன்.

    வாட்ஸப் நிலைத்தகவல் - சிறகை விரிப்போம் சொல்வது உண்மை.
    நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். பதிவு எழுதாமல் இருக்க வேண்டாம். பிதிய மடி கணினி வாங்கி கொள்ளுங்கள். தொடர்ந்து எழுத வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராணி கி வாவ் - மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வழக்கத்தை விட நீளமான பதிவு. பணிச்சுமையும், புறச்சூழலும் உங்களை சோர்வடைய வைத்திருக்கலாம். அதற்காக நிறுத்தி விடாதீர்கள். இதுவும் கடந்து போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் கடந்து போகும் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  15. ஒரு முறை கார்ப்பரேட் மருத்துவமனையின் லவுன்சில் காத்திருந்த பொழுது நாம் இருப்பது மருத்துவமனையா? ஏர் போர்ட் லவுன்சா? என்ற சந்தேகம் வந்தது. அங்கிருந்த காண்டீனில் உணவு பண்டங்களின் விலையும் அப்படித்தான் இருந்தது. ஆனால் வார்டில் யாரையும் அனுமதிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவமனையா அல்லது ஏர்போர்ட் லவுஞ்சா - தில்லியின் ஒரு பிரபல மருத்துவமனை சென்ற போது எனக்கும் இந்த சந்தேகம் வந்தது பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. ராணி கி வாவ் - பார்க்கத் தூண்டும் விவரிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. பதிவினை ரசித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....