எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, December 18, 2016

அற்புதச் சிற்பங்கள் – ராணி கி வாவ்

சமீபத்திய பயணம் ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.


குஜராத் மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்றுபாடன்ஆங்கிலத்தில் Patan – முதல் முறை படித்த போது படான் என்று தான் படித்தேன். அதன் பிறகு குஜராத்தி நண்பர் ஒருவரிடமிருந்து அது படான் அல்ல பாட்டண் எனத் தெரிந்து கொண்டேன். பாட்டண் என்ற குஜராத்தி வார்த்தைக்கு பட்டணம் என்ற அர்த்தம்பட்டணத்தினை ஆண்ட ராஜா முதலாம் பீம்தேவ் அவர்களின் நினைவாக அவரது பட்டத்து ராணி உதயமதி அவர்கள் அமைத்த ஒரு கிணறு தான் இந்த ராணி கி வாவ்வாவ் என்றால் கிணறுஅதுவும் சாதாரண கிணறு அல்ல இதுதரைக்குக் கீழே ஏழு அடுக்குகளைக் கொண்ட Step Well என அழைக்கப்படும் கிணறு இது. 


சரஸ்வதி ஆற்றின் அருகே பதினொன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த கிணற்றின் ஒவ்வொரு தளத்திலும் அருமையான பல சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனதண்ணீரை தெய்வ வடிவமாகப் போற்றும் இவர்கள், தண்ணீருக்காக அமைத்த ஒரு தலைகீழ் கோவில் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு சிற்பத்திலும் அத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகளை நீங்கள் காண முடியும்தரைத் தளத்திலிருந்து படிகள் வழியே இறங்கிப் போக, ஒவ்வொரு நிலையிலும் சிற்பங்கள், நுட்பமான வடிவங்கள் என பார்த்துக் கொண்டே போகலாம். ஒவ்வொரு சிற்பத்திலும் அத்தனை வேலைப்பாடுகள். கண்களை சிற்பங்களிலிருந்து அகற்றுவது வெகு சிரமம்அத்தனை அழகு அந்தச் சிற்பங்கள். 


இந்த இடத்தில் எடுத்த புகைப்படங்களில் சில இங்கேமற்ற விவரங்கள் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.படம்-1: பூமிக்குக் கீழே ஏழு நிலையில் ஒரு கிணறு... 
இப்படம் மேலேயிருந்து எடுத்தது.


படம்-2: இப்படமும் தரைத்தளத்திலிருந்து கீழே இறங்குவதற்கு முன்னர் எடுத்தது.


படம்-3: தூண்களும், ஓரங்களில் சிற்பங்களும்....


படம்-4: பக்கவாட்டுச் சிற்பங்கள் ஒரு பார்வை....படம்-5: விஷ்ணுவின் அவதாரங்களில் இரண்டு - நடுவே சில சிற்பங்கள்.


படம்-6: குதிரையில் ராஜா.... 
கூடவே சேடிப்பெண்களும் சில வீரர்களும்.... 


படம்-7: .... பதினாறு கைகளுடன் ஒரு சிலை.....படம்-8: பக்கவாட்டுச் சிற்பங்கள் ஒரு குறுக்குப் பார்வை....


படம்-9: பக்கவாட்டுச் சிற்பங்கள்....


படம்-10: தூண்களிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள், துளைகள்....


படம்-11: பக்கவாட்டுச் சிற்பங்களில் சில...


படம்-12: காதணி போட்ட தன் முக அழகை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் அழகி......


படம்-13: சிற்பங்களுடன் ஒரு சிற்பம்......
சிற்பங்களை படம் எடுத்தபோது சிறுமியின் படமும் வந்துவிட்டது!படம்-14: வராஹ அவதாரம்....


படம்-15: தும்பிக்கை உடைந்த நிலையில் பிள்ளையார்....


படம்-16: நான் எவ்வளவு அழகு... ஆச்சரியப்படும் பெண்.....
பக்கத்தில் இருக்கும் அலங்கார வளைவிலும் சிற்பங்கள்...


படம்-17: குரங்குடன் விளையாடும் பெண்மணி.... 


படம்-18: ஒரு மூலையில் இரண்டு சிற்பங்கள்....


படம்-19: பாழடைந்த ஒரு சிற்பம்.....

 

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

 

நட்புடன்

 

வெங்கட்

புது தில்லி

31 comments:

 1. குஜராத் மாநிலத்திலுள்ள இந்த அற்புத கலைப் பொக்கிஷத்தைப் பற்றி இணையத்தில் படித்துள்ளேன்..

  நேரில் காண வேண்டும் என்ற ஆவலுண்டு.. காலம் கனியட்டும்..

  அழகிய படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
 2. அற்புத கலைப் பொக்கிஷம் - உண்மை தான். இந்தச் சிற்பங்களில் பல அழிந்தும், நசிந்தும் போனது பெரிய இழப்பு.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

  ReplyDelete
 3. அருமையான படங்கள் வெங்கட்ஜி...வித்தியாசமான கான்செப்ட்... முடிந்தால் நேரில் காண வேண்டும்... Unesco Heritage Siteனு அறிவிச்சா இன்னும் நன்றாக பராமரிக்க வாய்ப்பிருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. சமீபத்தில் தான் இந்த இடத்தினை UNESCO WORLD HERITAGE SITE என அறிவித்தார்கள். இன்னும் அதிக பராமரிப்பு தேவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஒரு நண்பன்.

   Delete
 4. ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கும் இந்த இடத்தைப் பார்க்க எனக்கும் ஆவல். அருமையான புகைப்படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. குஜராத்தில் உள்ள இந்த அற்புத உலகத்தைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. அற்புதமான சிற்பங்கள் ஐயா
  வாழ்வில் ஒரு முறையேனும் இக்காட்சியினை நேரில்
  கண்ணாரக் காண மனம் துடிக்கிறது
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. அனைத்து சிற்பங்களும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. இங்கு நாங்கள் சென்றிருக்கிறோம். உங்களின் கேமராவின் மூலமாக மிகவும் அழகாக அற்புதமாக உள்ளது. பொருத்தமான தலைப்புக்கள் .
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 9. அற்புதமான சிற்பங்கள் பேலூர் ஹளேபேட் நினைவைக் கொணர்ந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. அழகான இடம்.படங்கள் வெகு அழகு.
  ஏழு நிலைகிணறு மிகவும் அழகு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. அற்புதமான சிற்பங்கள். பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 12. அருமையான படங்கள் மனதை ஈர்த்துவிட்டன ஜி!!!

  கீதா: கேள்விப்பட்ட இடம் ஜி! காணும் ஆவல் உண்டு தற்போது தங்கள் படங்களின் மூலம் பார்த்தாயிற்று. ரசித்தீர்களாவா?!!! மயங்கிச் சொக்கியே விட்டேன். அழகோ அழகு!!! அப்படியே ஓயித்துவிட்டேன்....வெங்கட் ஜி ஒன்று சொல்லட்டுமா....நீங்கள் இன்டெர்னாஷனல் அளவு தரம் வாய்ந்த அதாவது வெளிநாட்டவரும் இதை வாசிக்க நேர்ந்தால் இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் அளவிற்குத் தரமான தகவல்களும் படங்களும் தருவதால் இவை அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னாட்டுப் புத்தகமாகச் சந்தையில் வர வேண்டும் என்பது அவா. முன்பு இந்தியாவின் பெருமைஅயி எடுத்துரைக்கும் வகையில் ஒரு ஆல்பம் போல இந்திய அரசு தகவல்துறை தயாரித்த ஒரு புத்தகம் அதாவது அப்போதைய தரத்திற்கு மிக மிக அருமையான புகைப்படங்களுடன் கருப்பு அட்டைகளின் நடுவில் அப்படியே ஆல்பம் போல ஒவ்வொரு மானிலத்தின் சிறப்பையும் சொல்லி ஒரு புத்தகம் வெளியிட்டு என் தந்தை அப்போது இந்தியன் ஹைகமிஷன் இலங்கை தூதரகத்தில் பாஸ்போர்ட் செக்ஷனில் க்ளார்க்காக இருந்ததால் இந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது. இப்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற் போல் வெளியிட்டா இந்தியாவிற்கு நிச்சயமாக சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு உதவும்...பேராசையோ ஜி??!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் - நல்ல ஆசை தான் உங்களுக்கு.... ஆனாலும் தமிழிலேயே புத்தகம் கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது.

   சில வருடங்களாகவே Flickr பக்கத்தில் எனது கணக்கு இருக்கிறது. சில படங்கள் தொகுப்பு அங்கே சேமித்து இருக்கிறேன். ஆனால் அவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளவே இல்லை. இனிமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு. பார்க்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. ஹிஹிஹி, குஜராத் போகாதவங்க எல்லாம் கேள்விப் பட்டிருக்கும் இந்த இடத்தைக் குறித்து இப்போத் தான் தெரிந்து கொண்டேன். தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி. :))))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா உங்களுக்கு இந்த இடம் தெரியாதா.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 14. வாவ் அத்தனையும் அழகு அண்ணா...
  காதணி அணிந்து கண்ணாடி பார்க்கும் பெண் ரொம்பவே கவர்ந்து விட்டாள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 16. நல்ல கலையுணர்வுடன் கட்டப்பட்டதை எண்ணும் போது வியப்பு தான் மேலேழுகிறது.அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன் ஜி!

   Delete
 17. அடடா... எப்படி இந்தப் பதிவைத் தவற விட்டேன்?

  நாங்களும் சில படிக்கிணறுகளைப் பார்த்தோம் குஜராத் பயணத்தில். அழகோ அழகுதான் !

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....