எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, December 17, 2016

திரிபுரா – உஜ்ஜயந்தா அரண்மனை - அருங்காட்சியகம்….ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 81

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


உஜ்ஜயந்தா அரண்மனை

இந்த காலத்தில் அரசியல்வாதிகள் பெரிய பெரிய பங்க்ளாக்களைக் கட்டி தங்களது சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அந்தக்காலத்து ராஜாக்கள் அரண்மனை கட்டி சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் அரண்மனைக்குள்ளேயே எல்லா வசதிகளும் இருக்கும்படி பார்த்துப் பார்த்து கட்டி ஆண்டு அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ராஜாவும் இதற்காகவே சொத்து சேர்த்திருப்பார்கள் போலும்.  திரிபுரா பகுதியை ஆண்டுவந்த மஹாராஜா ராதா கிஷோர் மாணிக்யா என்பவரும் இப்படி ஒரு அரண்மனையை கட்டி அங்கே வாழ்ந்திருக்கிறார்.


1862-ஆம் ஆண்டு மஹாராஜா இஷான் சந்திர மாணிக்யா அவர்களால் உருவாக்கப்பட்ட அரண்மனை 1897-ஆம் ஆண்டின் பயங்கர பூகம்பத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது.  அதன் பிறகு 1899-1901-ஆம் ஆண்டுகளில் மிகவும் கலைநுணுக்கத்தோடு புதுப்பிக்கப்பட்டது இந்த அரண்மனை. இந்த அரண்மனைக்கு உஜ்ஜயந்தா அரண்மனை என்ற பெயரை வைத்தது ரவீந்திரநாத் தாகூர்! அந்த நாளில் இந்த அரண்மனையைக் கட்ட பத்து லட்சம் செலவானதாம்! உஜ்ஜயந்தா அரண்மனை.  இரண்டு அடுக்கு மாடிகள், அழகிய மாடங்கள், நீரூற்றுகள், நீர்நிலைகள், பூங்கா என அனைத்தும் இங்கே உண்டு. சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த அரண்மனை.  மேற்கூரைகள், அரண்மனையின் மேல்பகுதியில் அமைந்துள்ள மூன்று கோபுரங்கள் என அனைத்துமே பிரம்மாண்டம். நடுவில் அமைந்துள்ள கோபுரம் சுமார் 86 மீட்டர் உயரம்! வெளியிலிருந்து பார்க்கும்போதே பிரம்மாண்டமாகத் தெரியும் இந்த அரண்மனை உட்புறத்தில் எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ராஜ வம்சத்தினரிடமிருந்து 1971-ஆம் ஆண்டு திரிபுரா அரசாங்கம் 25 லட்ச ரூபாய் கொடுத்து இந்த அரண்மனையையும், அதைச் சுற்றி இருந்த மொத்த இடத்தையும் வாங்கியதாம். 1972-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திரிபுரா மாநிலத்தின் சட்டசபை இங்கிருந்து தான் இயங்கிவந்தது.  அதன் பிறகு சட்டசபை மற்றும் மாநில அரசாங்கத்திற்காகவே தனி கட்டிடம் கட்டி முடிக்கப்பட, இந்த அரண்மனை மாநிலத்தின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, 2013-ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு சிற்பங்கள், நாணயங்கள், ஓவியங்கள் என பலவும் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நான்கு பகுதிகளாகப் பிரித்து திரிபுராவின் பாரம்பரியத்தினையும், பழங்குடி மக்கள் வரலாறு என பலவும் இங்கே உங்களால் பார்க்க முடியும்.காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்திருக்கும் இந்த அரண்மனை [ஒரு மணி நேர உணவு இடைவேளை உண்டு] திங்கள் கிழமைகளில் மட்டும் வாராந்திர விடுமுறை. அருங்காட்சியகத்திற்குள் சென்று பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.  அரண்மனைக்கு உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.  கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதித்திருந்தால் நிறைய படங்கள் எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன்.

உஜ்ஜயந்தா அரண்மனை நுழைவாயில்...  

நாங்கள் சென்ற போது பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. ஒரு சில புகைப்படங்கள் வெளியிலிருந்து எடுத்ததை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  திரிபுரா சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இந்த அரண்மனை அருங்காட்சியகம்.  1970-ஆம் ஆண்டிலிருந்தே ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த அருங்காட்சியகம், உஜ்ஜயந்தா அரண்மனையில் 2013-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.

அகர்தலா செல்லும் வாய்ப்பிருந்தால் இந்த அரண்மனை அருங்காட்சியகத்தினையும் பார்த்து ரசித்து வாருங்கள்…. தொடர்ந்து நாங்கள் பார்த்தவற்றை வரும் பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

32 comments:

 1. அழகிய அரண்மனையும் தகவல்களும் கண்டு கொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 2. இதுவும் , மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் போன்றே அழகாக இருக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. திரிபுராவின் அரண்மனையின் அழகுடன் மேலதிக தகவல்கள் அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. அழகிய அரண்மனை. விவரங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 5. மன்னர் காலத்தில்
  விருந்தினர் மாளிகை, ராஜ்பவன்
  மற்றும் பிரதமர் அலுவலகம் எல்லாம்
  அரண்மனைதானே

  ஆகையால் வேண்டியதாகத்தான் இருந்திருக்கிறது
  வெளிப்பார்வை அட்டகாசம்
  உள்ளே கேட்கவேண்டுமா ?

  படங்களுடன் பகிர்வு அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. ராஜாக்களுக்கு இவை எல்லாம் தேவையாக இருந்திருக்கிறது. உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. அந்தக் காலத்து அரசர்கள் நல்ல சுக போகத்துடன் வாழ்ந்தார்கள் என்றாலும் அதன் மூலம் அவர்களது கட்டிடக்கலை வளத்தையும் தெரிந்து கொள்ள உதவுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. அருமையான அரண்மனை. வாய்ப்பு கிடைக்கும்போது அரண்மனை அருங்காட்சியகம் செல்வோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. அருமை தோழர்
  மகிழ்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 12. உஜ்ஜயந்தா அரண்மனை அழகாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. கம்பீரமான அரண்மனை. அந்நாளைய கட்டிடக் கலையின் அழகுக்குச் சான்று. தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. வெளியிலிருந்து எடுத்த படங்களே உஜ்யந்தா அரண்மனையின் அழகைச் சொல்லுகிறது. உள்ளே மிக அழகாக இருந்திருக்கும் என்பதும் தெரிகிறது. பராமரிப்புச் செலவே ஆகும் போல!...தொடர்கின்றோம்...ஜி

  ReplyDelete
  Replies
  1. பராமரிப்பு செலவு - அதிகம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 15. படங்களும் தகவல்களும் அருமை. மற்றவற்றிற்குப் பின்னர் வருகிறேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....