நம்
ஊரில் மாட்டு வண்டி பார்த்திருக்கிறோம், குதிரை வண்டி கூட பார்த்திருக்கிறோம். ஆனால்
கழுதை வண்டி பார்த்ததுண்டா? கழுதை பொதி சுமக்க மட்டுமே பயன்படும் என்று தான் நம்மில்
பலரும் அறிந்திருக்கிறோம். இல்லை கழுதையை வைத்து வண்டி கூட இழுப்பார்கள் என சமீபத்தில்
தான் தெரிந்து கொண்டேன். அப்படி சாலையில் பார்த்த சில காட்சிகள் புகைப்படங்களாக, இன்றைய
ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
படம்-1
அம்மணி, எவ்வளவு நேரம் பேசிக்கிட்டே
நிப்ப, சீக்கிரம் முடி, வூட்டுக்குப் போவலாம்!
படம்-2
மாயமில்ல, மந்திரமில்ல… தானா கொட்டுது
பாரு தண்ணி!
ஒரு சந்திப்பில் பார்த்த காட்சி!
படம்-3
நீங்க ரோடு போட்டுட்டா, அது என்ன
உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா… நாங்களும் நடப்போம்ல!
படம்-4
தண்ணீர் சுமந்து வரும் பெண்…. கேமரா பார்த்து முகம் மூடிக்கொண்டார்!
படம்-5
ஆட்டுக்குத் தீனி… சுமப்பது மனிதன்…..
படம்-6
ஒட்டக சவாரி போலாமா…..
படம்-7
ஐயோ என்ன ஃபோட்டோ புடிக்கிறானே… நான் என்ன பண்ணுவேன்….
படம்-8
”நீ சுகமா தூங்கிட்டு வருவே…. நான் மட்டும் கஷ்டப்படணும்….
எல்லாம் என் தலைவிதி!” என நினைத்தபடிச்
செல்கிறதோ இந்த ஒட்டகம்….
படம்-9
ரயில்வே க்ராஸிங் ஒன்றில் காத்திருந்தபோது….
இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை….
படம்-10
ஆட்டு மந்தையும் அதன் உரிமையாளரும்….
படம்-11
இடம் பெயரும் குடும்பம்….. மொத்த
உடைமைகளும் மேலே, ஆடு உட்பட!
படம்-12
நீங்க மட்டும் தான் கலர் கலரா ட்ரெஸ்
போட்டுக்குவீங்களா….
நானும் போடுவேன்ல!
படம்-13
பெட்ரோல் காலியானா, நிப்பாட்ட வேண்டியது
தான்…
அதுக்கு தான் கழுதை வண்டி வச்சிருக்கணும்
மாப்பு….
படம்-14
மாட்டு மந்தை, ஆட்டு மந்தை பார்த்திருக்கலாம்…
ஒட்டக மந்தை…. பாருங்க!
படம்-15
நான் உன் பேச்சு கா…..
சொல்லி வேறு வேறு பக்கம் பார்த்துக்
கொண்டிருக்கும் ஒட்டகங்கள்…
படம்-16
”என் கால் முட்டி அளவு கூட இல்லை
இந்தப் பொடியன்….
அவன் என்னை வேலை வாங்கறானே…..”
யோசனையில் ஒட்டகம்….
படம்-17
வண்டிகள் காத்திருக்கிறது…
பயணிக்கத்தான் ஆளில்லை!
நீங்க ஒரு ரவுண்டு வரீங்களா?
படம்-18
என்ன தான் பயணம் இனிமையானது என்றாலும்
கவனம் தேவை என்பதைச் சொல்லும் காட்சி…..
படம்-19
கழுதை வண்டி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே
வாரேன்….
முன்னும் பின்னும் கழுதை!
படம்-20
என்னவே என்னைய கூட ஃபோட்டோ பிடிக்கிறயே….
கவனித்த லங்கூர் குரங்கு!
என்ன
நண்பர்களே, இன்றைய தொகுப்பில் நிறைய படங்கள் பயணித்தபடியே எடுத்தவை. வேறு சில சாலைக்காட்சிகளோடு உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த படங்கள், படங்கள் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது என்பதை
எழுதி அனுப்புங்களேன்….
தொடர்ந்து
ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
இந்த "தானாக கொட்டும் தண்ணீர்'க் குழாய் வல்லிமா வீட்டு கொலுவில் சிங்கத்தின் கைவண்ணத்தில் வருடாவருடம் உண்டு.
பதிலளிநீக்குகழுதை அவ்வளவு பாரம் தாங்குமா?
அந்தக் காட்சியைப் பார்த்த உடனேயே வல்லிம்மாவும் சிங்கம் சாரும் தான் நினைவுக்கு வந்தார்கள் - வலைப்பூவில் பார்த்த நினைவும் வந்தது.
நீக்குகழுதை பாரம் தாங்கி இருக்கிறதே - சிறிய வண்டி தான் என்பதால் இருக்கலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆகா
பதிலளிநீக்குஒவ்வொன்றும் அருமையான படங்கள் ஐயா
நன்றி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஒவ்வொரு கவின்மிகு காட்சியும்
பதிலளிநீக்குகவிதையாய் கலைநயமாய்
கண்ணில் நிறைகின்றது..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குபடங்கள் எல்லாம் கொள்ளை அழகு.
பதிலளிநீக்குபயணம் இனிது, காட்சிகளும் இனிது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குபடங்களும் உங்களின் விவரிப்பையும் ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குசாலைக்காட்சிகள் அனைத்தும்
பதிலளிநீக்குமிக மிக அருமை
சாலையில் மாடுகள் விதிப்படி
மையக்கோடு தாண்டாது நடப்பது
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்களுடன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஅழகான காட்சிகளைப் புகைப்படங்களாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்! அருமை!!
பதிலளிநீக்குபோன முறை கூற நினைத்து மறந்தது - முகப்பு புகைப்படம் சூப்பர்ப்!! மிக அருமை!!
முகப்புப் படம் தங்களுக்குப் பிடித்திருந்திருந்த அறிந்து மகிழ்ச்சி. யாரும் இதுவரை ஒன்றுமே சொல்லவில்லையே என நினைத்தேன்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
போக்குவரத்துக்கு இன்னும் கழுதை ,குதிரை , ஒட்டகம் ,இன்னும் சில மிருக காட்சிகளை காணும் போது தோன்றியது .....இந்தியா , என் ஜென்மத்தில் வல்லரசு ஆகாது :)
பதிலளிநீக்குஇந்தியா என் ஜென்மத்தில் வல்லரசு ஆகாது! :)) ஆகும் என நம்புவோம். அதைத் தவிர நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
/நீங்க ரோடு போட்டுட்டா, அது என்ன உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா… நாங்களும் நடப்போம்ல!/ நாங்களும் ரோடில் வேகத்தடைகள் தானே ஒவ்வொரு படமும் ஒவ்வொரு நினைவை எழுப்புகிறது இதையே ஒரு பதிவாக்கி விடலாம்
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் ஒவ்வொரு நினைவை எழுப்புகிறது - இதையே ஒரு பதிவாக்கி விடலாம். உங்கள் நினைவுகளை பதிவாக்குங்களேன். படங்கள் என்னுடையதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
படங்கள் அழகு என்றால் அதற்கான கருத்துக்கள் கலக்கல் அண்ணா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குபயணங்களும் காட்சிகளும் இனிமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஅழகுக் காட்சிகள் ஜி! பயணத்தின் போதே எடுத்தவையா!!!!!!! அசாத்தியமாக இருக்கிறது ஜி!!! அருமை!!
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்கு