எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 29, 2016

WhatsApp திரட்டி – வலைப்பதிவர்களுக்கான குழு
தமிழ் மொழியில் வலைப்பதிவுகள் எழுதும் ஒவ்வொருவருக்கும் தங்களது எழுத்து பலரையும் சென்றடைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு. அதற்காகவே திரட்டிகளில் தங்களது பதிவுகளை இணைப்பது வழக்கம்.   இண்ட்லி, தமிழ் 10, தேன்கூடு, தமிழ்மணம் என பல திரட்டிகள் இருந்தாலும், பெரும்பாலானவை ஆரம்பித்த சில மாதங்களிலே காணாமல் போய்விட்டன.  சற்றே அதிக காலம் தாக்குப்பிடித்த தமிழ்மணம் திரட்டியும் சமீப காலமாக சிறப்பாகச் செயல்படுவதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் தாக்கத்தினால் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுபவர்களும் குறைந்து வருகின்றனர். 

வலையுலகில் சற்றே சுணக்க நிலை தான். அந்த நிலையைப் போக்க அவ்வப்போது நல்ல முயற்சிகளை புதுகை வலையுலக நண்பர்கள் எடுத்து வருகிறார்கள்.  சென்ற வருடம் பதிவர் சந்திப்பு, அதற்கு முன்னர் நடந்த பயிற்சிப் பட்டறை, தொடர்ந்து சென்ற மாதமும் சுமார் 100 பேருக்கு இலவசமாக வலைப்பூ தொடங்குவது எப்படி என்பது பற்றியும் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றியும் ஒரு நாள் முழுவதும் சிறப்புப் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். இது ஒரு பாராட்டத் தக்க முயற்சி.  இதே வழியில் புதுகை நண்பர்கள் முத்து நிலவன் ஐயா அவர்களும் செல்வகுமார் அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுடன் சேர்ந்து மற்றுமொரு நல்ல விஷயத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நல்ல விஷயம்….

வலைப்பதிவர்களுக்கான ஒரு WhatsApp திரட்டி. ”தமிழ் வலைப்பதிவகம்” என்ற ஒரு திரட்டியை ஆரம்பித்து தமிழில் வலைப்பதிவுகள் எழுதி வரும் அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக இணைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவகம் குழுவிற்கென்று சில கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்….

காலை, மாலை, இரவு வணக்கங்கள், படங்கள், காணொளி/லி, தகவல்கள், விசாரிப்புகள், மற்றும் பல உரையாடல்கள் தவிர்க்க வேண்டும்.

முதல் கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்று. பல குழுக்களில் வணக்கம் சொல்லி வரும் படங்கள் தான் அதிகம்! நான் WhatsApp குழுக்களில் அதிகம் இல்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு குழுவில் என்னைச் சேர்த்துவிட, இப்போது தினமும் காலை அலைபேசியினைத் திறந்தால் ஒவ்வொரு முறையும், வணக்கங்கள், காணொளி/லிகள், படங்கள் என நூறுக்கும் குறையாமல் இருக்கின்றன. குழு தமிழர்களுக்கான குழு என்றாலும், இக்குழுவில் வரும் பல செய்திகள், பஞ்சாபி, ஹிந்தி, ஹர்யான்வி என எல்லா மொழியிலும் வருகிறது! பெரும்பாலான நாட்களில் மொத்தமாய் Clear Chat! செய்ய வேண்டியிருக்கிறது! அத்தனையும் பார்க்க நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

தங்கள் வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும். புதிதாக இணைபவர்கள் பதிவின் இணைப்பினை கொடுப்பதோடு, தங்கள் பெயர் மற்றும் ஊர் விவரங்களை கொடுத்தால் அவரவர் அலைபேசியில் விவரங்களைச் சேமித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

புதியவர்களின் தளத்திற்குச் சென்று Followers-ஆக இணைந்து அவர்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து ஊக்கம் அளிக்கவும் இந்த திரட்டி பயன்படும்.

வலைத்தளம் பற்றிய சந்தேகங்கள்/பிரச்சனைகள் ஆகியவற்றை இங்கே தெரிவித்தால் தீர்வு தர நண்பர் தனபாலன் காத்திருக்கிறார். பிரச்சனைக்கான தீர்வு தெரிந்த மற்றவர்களும் உதவிட வசதியாக இருக்கும்.  

இது போன்ற சில கட்டுப்பாடுகள் தவிர வேறு சில விஷயங்களும் நண்பர் தனபாலன் தனது பதிவில் சொல்லி இருக்கிறார். அதற்கான இணைப்பு இதோ!


இது ஒரு நல்ல விஷயம். இந்த திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவது பதிவர்களின் கையில் தான் இருக்கிறது. இப்போது தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதால் சிலர் கட்டுப்பாடுகளை படிக்காமல் வணக்கங்கள், காணொளி/லி என இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்று காலை அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னர் எல்லா இற்றைகளையும் பார்த்துவிட்டுச் சென்றேன். இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து அலைபேசியை உயிர்ப்பிக்க, தமிழ் வலைப்பதிவகம் குழுவிலிருந்து மட்டும் 77 இற்றைகள்! – அதில பல தவிர்க்க வேண்டிய செய்திகள்! மற்ற குழுவிலிருந்து 50 இற்றைகள்! இதைத் தவிர குடும்ப குழுமத்திலிருந்தும் சில இற்றைகள். அத்தனையும் படிக்க முடியுமா?

இந்த நல்லதோர் வசதியை சிறப்பாகப் பயன்படுத்துவது, பதிவர்களான நம் கையில் தான் இருக்கிறது. குழுவில் இணைபவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.  புதிது புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கி, சீரிய பல செயல்களைச் செய்து வரும் புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்…..

இக்குழுவில் எனது முதல் இணைப்பும் இந்தப் பதிவாகத்தான் இருக்கப் போகிறது! நல்லதோர் திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவோம். நமது ஆக்கங்கள் பலரையும் சென்றடைய இந்த திரட்டியைப் பயன்படுத்துவோம்!

தொடர்ந்து ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

26 comments:

 1. Replies
  1. இந்த வசதியை ஏற்படுத்திய தங்களுக்கும் நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 2. நல்லதொரு தகவல்.. எனது Fb ல் கண்டேன்..

  ஆனால் கணினியில் தரவிறக்கம் செய்யும்போது -

  This type of file can harm to your computer..
  Are you sure you want to download ChromeSetup.exe?..

  - என்று எச்சரிக்கை வருகின்றது..

  பயனுள்ள தகவலை வழங்கிய திரு தனபாலன் அவர்களுக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. இந்த கேள்விக்கு தனபாலன் அவர்கள் பதில் சொல்வார் என நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. மிகவும் நன்றி சார்... இதைக்கூட நம் தமிழ் வலைப்பதிவகம் குழுவில் சொல்வதை தவிர்க்கிறேன்...

  இந்த திரட்டியின் வெற்றி - அனைத்து வலைப்பதிவர்கள் கையில் தான் உள்ளது... நன்றி... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது முயற்சி வெற்றி பெறட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. இது நமது திரட்டி ,உரிய முறையில் பயன்படுத்தி கொண்டு பலன் அடைவோம் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 5. Replies
  1. தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்திவேல்.

   Delete
 6. ஆம்! வெங்கட்ஜி! நாம் இதனைச் சிறப்பான முறையில் பயன்படுத்தி வெற்றிபெறச் செய்வோம்!

  நாங்களும் இதைப் பற்றித்தான் பதிவு எழுதி இக்குழு திரட்டியில் முதல் இணைப்பாக இணைத்துள்ளோம்...

  அருமையாக எழுதியுள்ளீர்கள் வெங்கட்ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. என்னுடைய அலுவலக உபயோகத்துக்கு நானும் ஒரு குழு தொடங்கினேன். அலுவலக விஷயங்கள் மட்டும் இங்கு பகிரவும் என்று எவ்வளவு சொல்லியும் அங்கு இது போல நிறைய குட்மார்னிங் குட் ஈவினிங் முன்னேற்றல்கள், போன்றவை இருக்க, நான் ஆரம்பித்த குழுவிலிருந்து நான் விலகி வெளியே வந்து விட்டேன்!

  ஆனால் நாம் கொடுக்கும் லிங்க் வைத்து எத்தனை புதிய நண்பர்கள் நம் தளத்துக்கு வந்து பார்க்கிறார்கள் என்று நாம் அறிய வேண்டுமானால் அப்படி பார்க்கும் நண்பர்கள் ஒரு குறைந்தபட்ச பின்னூட்டமாவது கொடுக்கவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி பார்க்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு பின்னூட்டமாவது கொடுக்க வேண்டும்... அதே தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. நல்ல முறையில் பயன்படுத்தலாம்,, நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 10. நல்ல முயற்சி ஐயா.பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   Delete
 11. அதற்கான கைபேசி இல்லாமல் செயல் படுத்த முடியுமா. வலைப் பதிவுகளில் தொடர்பாளராக இணைத்து தவறாமல் தொடரலாமே. என் பதிவுகளுக்கு 162 பேர் தொடர்பாளர்கள் இவர்களில் வெகு சிலரே இடுகைகளை வாசிக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. அதற்கான கைபேசி இல்லாமல் செயல்படுத்த இயலாது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. அதை, இதை எதை காரணம் சொன்னாலும் ஒரு பதிவின் தன்மை உணர்ந்து படித்து கருத்திட்டு ஊக்கப்படுத்த வேண்டும் எனும் உணர்வுகள் அரிதாகி கேலி, அரட்டை கிண்டல் என அர்த்தமே இல்லாமல் எழுதும் பல பதிவுகளுக்கு வரும் கருத்துரைகள் காணும் போது எத்தனை விதங்களில் முயன்றாலும் மொய்க்கு மொய் எழுதுவது போல் கருத்திட்டால் மட்டும் கருத்திடும் கலாச்சாரத்திலிருந்து நாம் வெளி வராத வரை ஒரே குட்டைக்குள் தான் சுற்றிக்கொண்டிருப்போம்.

  போனிலிருந்து குருப்புக்கள் உருவாகுவதும் கருத்திடுவதும் அவசர அவசியத்தேவைகளுக்கானதாய் இருக்க வேண்டும். என்னை இந்த வாட்ச்சப் குழுமத்தில் இணைத்த பின் கவனிக்காத சில நேரங்களில் 100 கணக்கில் மெசேஜ் வந்து சேர்வதை காணும் போது எந்த லிங்கையும் கிளிக் செய்து படிக்க தோன்றவும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கருத்து. சில பிரச்சனைகள் இருக்கின்றன. நல்லவிதமாக பயன்படுத்துவது ஒவ்வொரு வலைப்பதிவரும் கையில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா

   Delete
 13. இந்தக் குழுவில் சேர்ந்து இரண்டு நாளில் நூற்றுக்கு மேல் செய்திகள் குவிந்து விட்டன. ஏதாவது முக்கிய செய்திகள் வந்தால் அதைக் கவனிக்காமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே இந்தக் குழுவிலிருந்து நான் விலகி விட்டேன்.

  தமிழ்மணம் போல இணையத்தில் செயல்படக்கூடிய குழுதான் சௌகரியம். தேவைப்பட்டால் போய்ப் பார்க்கிறோம். தேவையில்லாவிட்டால் போவதில்லை. அப்படியிருந்தால்தான் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் போல இணையத்தில் செயல்படக்கூடிய குழு தான் சௌகரியம்.....

   இருக்கலாம் ஐயா. போகப்போகத் தெரியும். பார்க்கலாம் எப்படிப் போகிறது என.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப.கந்தசாமி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....