ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 84
இந்தப்
பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின்
சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற
தலைப்பின் கீழே இருக்கிறது.
எல்லைக்கு அப்பால் வங்க தேசம்....
இந்திய எல்லையில்
அமைக்கப்பட்ட முள்கம்பி வேலிக்கருகே சென்று சிறிது தூரம் நடந்தபடியே இந்திய வீரர்களிடம்
பேசினோம். ஹரியானாவினைச் சேர்ந்த ஒருவர் தில்லியிலிருந்து நான் அங்கே வந்திருப்பது
தெரிந்து என்னிடம் வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அது என்னவோ, அவருக்கு
தானே தில்லி வந்த உணர்வு. தலைநகர் வந்தால் உங்களைச் சந்திக்க வருவேன் என்று சொல்லி
தொடர்புக்கு தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். நானும் அவரது எண்களை வாங்கிக் கொண்டேன்.
வங்க தேச வீரர்களும்
எங்களுடன் முகமன்களை பரிமாறிக்கொண்டு சில விஷயங்களைப் பேசினார்கள். இந்திய எல்லை அகர்தலாவில் இருக்க, வங்க எல்லைப்
பகுதியில் சில கிலோமீட்டர் தூரம் வரை கிராமங்கள் எதுவும் இல்லை. பொருட்களை எடுத்து
வரும் லாரிகள் தான் அங்கிருந்து வருகின்றன.
எதாவது வாங்க வேண்டுமென்றால் சில கிலோமீட்டர் தொலைவு சென்று தான் வாங்க வேண்டியிருக்கிறதாம்
அந்த வங்க தேச வீரர்களுக்கு!
வங்க தேச எல்லையில் வரவேற்பு அறை....
கொடியிறக்க விழா நடந்த
பிறகும் அங்கே இருந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் நாங்கள் புறப்பட்டோம். பல வருடங்கள் கழித்து பார்த்துக் கொண்ட நண்பர்களுக்கு
பிரிய மனதில்லை. எல்லைப் பகுதியில் பார்த்த
நண்பர், எங்களுடன் வந்த நண்பர் சசியை சில மாதங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் வந்து
பார்த்திருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்! தொடர்ந்து நட்பில் இருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள்…
நட்பு தொடர்வது தானே அனைவருக்கும் மகிழ்ச்சி.
அங்கிருந்து ஓட்டுனர்
ஷாந்தனு வண்டியுடன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து அங்கிருந்து புறப்பட்டோம். மதியமே ஒழுங்காக சாப்பிட முடியாததால் அறைக்குச்
சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு சாப்பிட வேண்டும் என முடிவு எடுத்தேன். ஷாந்தனுவிடமும், தங்கிய இடத்தின் நிர்வாகியிடமும்
இரவு உணவு பற்றிக் கேட்க, சைவ உணவுக்கென்று தனி உணவகங்கள் இங்கே கிடைப்பது கடினம் என்று
சொன்னார்கள். சரி சப்பாத்தி கிடைக்குமா என
கேட்க, பக்கத்திலேயே Foodies என ஒரு உணவகம் இருப்பதைச் சொல்லி அங்கே சாப்பிடச் சொன்னார். வட இந்திய உணவு நன்றாக இருக்கும் என்பதையும் சொல்ல,
அங்கே தான் இரவு உணவு!
அகர்தலா மார்க்கெட் பகுதியில்.....
தவா ரொட்டி, ஆலு ஜீரா,
வெஜ் ராய்த்தா என எனக்கு நான் உணவினைச் சொல்ல, நண்பர்கள் சப்பாத்தியுடன் அசைவ உணவு
வாங்கிக் கொண்டார்கள். தங்குமிட நிர்வாகி சொன்ன
மாதிரியே உணவு நன்றாகவே இருந்தது. மதியம் ஒழுங்காகச் சாப்பிடாததால் இரண்டு ரொட்டி அதிகம்
உள்ளே போயிற்று! வயிறும் கொஞ்சம் வாழ்த்தியது! என்னதான் Adjust செய்து கொள்ளலாம் என்றாலும்
சில நாட்களில் முடிவதில்லை!
நாங்கள் தங்கிய இடமும்,
சாப்பிட்ட உணவகமும் இருந்த சாலையின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – Motor
Stand Road! எதற்காக அந்தப் பெயர் வந்தது என்று பார்த்தால், அந்தப் பகுதியில் தான்
பேருந்து நிலையம் – முன் நாட்களில் சிற்றுந்ந்துகள் நிற்குமிடம் இருந்திருக்கிறது.
அகர்தலாவின் Motor Stand Road ரொம்பவே பிரபலமாம்!
இரவு உணவு சாப்பிட்ட
பிறகு அகர்தலா நகரின் சாலைகளில் சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தோம். கடைத் தெருக்கள், உணவகங்கள் என பார்த்துக்கொண்டு
ஆங்காங்கே கிடைக்கும் காட்சிகளை பார்த்தபடியே சென்று திரும்பினோம். அன்றைய தினம் பார்த்த
இடங்களைப் பற்றி பேசியபடியே தங்குமிடம் திரும்பினோம். அடுத்த நாள் அகர்தலாவின் மற்ற இடங்களைப் பார்க்க
வேண்டும் – அதனால் கொஞ்சம் சீக்கிரமாகவே உறங்கி சீக்கிரமாகவே எழுந்திருக்க எண்ணம். கொஞ்சம் தூங்கிவிட்டு வருகிறோம். அது வரை காத்திருங்கள்!
தொடர்ந்து
பயணிப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
பயணக் கட்டுரை இனிக்கிறது. - இராய செல்லப்பா (நியு ஜெர்சியில் இருந்து)
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம். மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா ஐயா.
வங்க தேச எல்லை.. நாங்கள் எல்லாம் நினைத்துக்கூட பார்க்க இயலாத இடங்களுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது பயணக் கட்டுரை - மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்றது..
பதிலளிநீக்குமிகவும் கடமைப்பட்டிருக்கின்றோம்..
உங்கள் பதிவுகளும் மகிழ்ச்சியும் அமைதியும் தருபவை நண்பரே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
இன்னும் நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள காத்திருக்கிறோம்... நன்றி...
பதிலளிநீக்குமுடிந்த அளவிற்கு தகவல்களை தர முயல்வேன் நண்பரே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வரும் உங்களுக்கு எனது நன்றி ஸ்ரீராம்.
நீக்குவங்க தேச எல்லை !! வெங்கட்ஜி அருமையான இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்கின்றீர்கள்!!! உங்கள் நண்பர் சசி அவர்களின் நட்பும் தொடர்வது மகிழ்வான நிகழ்வுதான்!!!
பதிலளிநீக்குதொடர்கின்றோம் ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குபணக்கட்டுரையில் நாங்களும் பயணிக்கிறோம் சகோ,,
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!
நீக்குதொடர்கிறேன் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபயணக் கட்டுரை மிக நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குநல்ல பகிர்வு. தொடரவும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி ஜி!
நீக்குஅத்தனை எளிதாக செல்ல முடியாத இடங்களுக்கு உங்கள் பயணக்கட்டுரை இனிதாக எங்களை அழைத்துச் சென்று கொண்ருக்கிறது! மிகவும் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குநாட்டின் எல்லை வரைக்கும் அழைத்து சென்று விட்டீர்களே:)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குஇந்தியாவின் கிழக்குப் பகுதிகளுக்கே இதுவரை செல்ல முடிந்ததில்லை. உங்கள் பயணம் அங்கெல்லாம் போய் வரும் உண்ர்வைத் தருகிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குவங்க எல்லையும் பபயணமும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு