வியாழன், 1 டிசம்பர், 2016

Orange Roots – மேகாலயாவில் சைவ உணவகம் ….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 71

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

Orange Roots உணவகம்

Wah Kaba நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கைக் காட்சிகளை ரசித்து அங்கே இருக்கும் கடையில் மில்க் மெய்ட் தேநீர் குடித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது.  காலை ஐந்து மணிக்கே கௌஹாத்தியிலிருந்து புறப்பட்டதால் காலை சிற்றுண்டி சாப்பிட எங்கேயாவது நிறுத்த வேண்டும் என எங்கள் ஓட்டுனரிடம் சொல்லிக் கொண்டிருந்தோம்.  அதிகாலை நேரத்திலேயே கறுப்புக் கண்ணாடியோடு வந்த ஓட்டுனர் ராஜேஷ் தலையை ஆட்டினார் என்றாலும் நிறுத்தாது அடுத்த இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.  அப்படி மலைப் பாதைகள் வழியே பயணித்துக் கொண்டிருந்த போது சாலையோர உணவகம் ஒன்று தெரிய, அவரிடம் அங்கேயே சாப்பிடலாம் எனச் சொன்னோம்.  அதற்குள் வண்டி அவ்விடத்தினைக் கடந்திருந்தது.  வண்டியை  திருப்பச் சொன்னோம். 

அந்த சாலையோர உணவகம் – Orange Roots – Pure Vegetarian! வட கிழக்கு மாநிலங்களில் பார்த்த முதல் Pure Vegetarian உணவகம் இது தான்.  வாயிலில் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே செல்ல எங்களைத் தவிர ஒன்றிரண்டு பயணிகள் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  என்ன இருக்கிறது என்று உணவக பணியாளர்களிடம் கேட்கலாம் என நினைக்க, தலையில் தொப்பியோடு, முதுமையிலும் இளமையாக இருந்த ஒருவர் காலை வணக்கம் சொன்னபடியே எங்களிடம் என்ன வேண்டுமென்று ஆங்கிலத்தில் கேட்டார்.  வணக்கம் சொல்லி, என்ன கிடைக்கும் எனக் கேட்க, பராட்டா, ஆலு பூரி, தோசா, இட்லி ஆகியவை கிடைக்கும் எனச் சொல்ல, பூரி சப்ஜி மற்றும் தேநீர் சொன்னோம்.


பூரி சப்ஜி, தேநீர் – நண்பர்கள் குழாம்….

அவராகவே எங்களிடம் பேச்சுக் கொடுத்தார்.  எங்கிருந்து வருகிறோம், என்னென்ன பார்த்தோம் என்ற கேள்விகளோடு எங்கள் பேச்சு ஆரம்பித்தது.  நண்பர்கள் கேரளத்திலிருந்து வருகிறார்கள், நான் தில்லியிலிருந்து வருகிறேன் – நான் ஒரு தமிழன் என்று சொன்னவுடனேயே அவர் தமிழுக்கு மாறினார்!  ஆமாம் அந்த உணவகத்தினை நடத்தும் அவர் ஒரு தமிழர்!  வங்கி ஒன்றில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு மேகாலயாவில் இப்படி ஒரு உணவகத்தினை அதுவும் சைவ உணவகத்தினைத் துவக்கி இருக்கிறார்.  வட கிழக்கு மாநிலங்களில் எங்கேயும் சைவ உணவு கிடைப்பதில்லை, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இந்த வசதி கொடுத்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் இந்த உணவகம். 

அவர் மனைவியும் அவரும் சேர்ந்து உணவகம் தவிர ஒரு Resort-உம் வைத்திருக்கிறார்கள். அங்கே தங்கி, மேகாலயாவின் அழகினை ரசிக்க சிறப்பு சுற்றுலாவும் ஏற்பாடு செய்கிறார்கள்.  Resort-ஐ அவரது மனைவி கவனித்துக் கொள்ள, உணவகத்தினை இவர் கவனித்துக் கொள்கிறார்.  இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு நிர்வாகங்களையும் பொறுப்புடன் கவனித்துக் கொள்வதால் நல்ல வரவேற்பு.  உணவகத்திலும், தங்குமிடத்திலும் மேகாலயாவின் khகாசி பழங்குடி மக்களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கும் வேலை கொடுத்த மகிழ்ச்சி.  பேசிக் கொண்டிருந்தபோதே, பணியாட்களிடம் உணவு தயாராகி விட்டதா என்பதையும் கவனித்துக் கொண்டிருந்தார்.


Orange Roots உரிமையாளர் மற்றும் நண்பர்களோடு நான்….

பெரும்பாலும் பெண்களைத் தான் வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள் – எல்லா வட கிழக்கு மாநிலங்களைப் போல, இங்கேயும் பெண்கள் தான் வேலைகளுக்குச் செல்கிறார்கள் – ஆண்கள் பணி புரிவது ரொம்பவே குறைவு! ஒரு பெண்மணி, சிரத்தையுடன் பூரி சப்ஜி கொண்டு வந்து ஒவ்வொருவருக்காகப் பரிமாற நாங்கள் உணவை ருசித்துச் சாப்பிட்டோம்.  அவ்வப்போது உணவகத்தின் உரிமையாளரும் வந்து எங்கள் தேவைகளைக் கேட்டுக் கொண்டார். 

பெரும்பாலான சாலையோர உணவகங்களில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வாகன ஓட்டிகளுக்கு உணவு இலவசமாகத் தந்து விடுவது வழக்கம். அப்போது தான் அடுத்த முறை அப்பக்கம் வேறு பயணிகளோடு வரும்போது இங்கே அழைத்து வருவார்கள் என்பது அவர்களது கணக்கு.  இந்த உணவகத்திலும் அதே தான்.  ஓட்டுனருக்கு உணவுக்கு எங்களிடம் பணம் வாங்கிக் கொள்ளவில்லை – எங்கள் உணவுக்கு மட்டுமே கொடுத்தால் போதும் என்று சொல்லி விட்டார்.  பொதுவாக இந்த விஷயத்தினை எந்த உணவகமும் பயணிகளிடம் சொல்வதில்லை! இவரோ நாங்கள் கேட்காமலேயே சொல்லி விட்டார்.


Orange Roots உணவகத்தில் பணியாளர்கள்….

உணவும் பிடித்திருந்தது.  உணவகத்தின் அலங்காரங்களும் வெகு அழகாக இருந்தது. உரிமையாளரிடம் நன்றி சொல்லி, அங்கிருந்து புறப்பட்டோம்.

மேகாலயா செல்லும் வாய்ப்பிருந்தால் இவர்களது Resort-ல் தங்கிக் கொண்டு சிரபுஞ்சி மற்றும் சுற்றிலும் உள்ள இடங்களை நீங்கள் பார்க்கலாம்.  குடும்பத்துடன் அங்கே தங்கலாம்.  விருப்பம் இருப்பவர்கள் வசதிக்காக, அவர்களது இணைய தள முகவரி, மற்றும் அலைபேசி எண்களையும் கீழே தந்திருக்கிறேன்.

Cherrapunjee Holiday Resort,
Village Laitkynsew, Cherrapunjee,
Meghayalaya – 793108.

இணையதளம்:  www.cherrapunjee.com

அலைபேசி எண்கள்: +91 96153 38500, +91 94361 15925.

மின்னஞ்சல் முகவரி:  cherrapunjee@hotmail.com

அங்கே கிடைத்த உணவு பிடித்துப் போக, மதிய உணவினையும் அங்கேயே தான் சாப்பிட்டோம் என்பதையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  அது மட்டுமல்லாது, அங்கே பணிபுரியும் khகாசி பெண்களின் அனுமதி பெற்று அவர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  உரிமையாளருடனும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, நல்ல உணவு உண்ட மகிழ்ச்சியில் அடுத்த இலக்கு நோக்கி பயணம் செய்தோம். அந்த விவரங்கள் வரும் பகுதியில்…

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

36 கருத்துகள்:

 1. இன்னமும் கறுப்புக் கண்ணாடிக்கான காரணம் சொல்லவில்லை வெங்கட்!

  :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருப்புக் கண்ணாடிக்கான காரணம் - அது தனி பதிவாக வெளி வரும்! விரைவில்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. மறுபடி வந்து பார்த்துச் செல்கிறேன்!

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. மேகாலயாவில் சைவ உணவா
  வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியப்பு தான் எங்களுக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. சுவையோடு சுவையாக இனிய பதிவு.. உணவகத்தைப் பற்றிய அறிமுகம் அருமை..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 5. தலைப்பு விஷயத்தைச் சொன்னாலும்
  பதிவும் படங்களும் இன்னும்
  கூடுதலாக இரசிக்கும்படியாகச் சொன்னது
  பயனுள்ள பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 6. சாலையோர உணவகத்தில் அதுவும் முட்டை கூட சேர்க்காத வெஜ் உணவு நம்பமுடியவில்லை . போன் நம்பர் நோட் பண்ணிக் கொண்டேன் .யாரும் போனால் கொடுக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 7. பரவாயில்லையே,அங்கேயும் நம்மாளு ஹோட்டலா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 8. சாப்பாடு விவரம், விலையையும் (அதிலும் மதிய உணவு) அதன் தரத்தையும் எழுதியிருக்கலாம். வெஜ் உணவகம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலை அப்படி ஒன்றும் அதிகமில்லை. ஐந்து பேர் சாப்பிட்ட காலை உணவு - 500 ரூபாய். மதிய உணவு 750 கொடுத்ததாக நினைவு. தரம் நன்றாகவே இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாசிர் அசனப்பா...

   நீக்கு
 10. அருமையான விவரங்கள்.உணவகத்தில் பணியாளர்கள் சிரித்தமுகம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 12. நல்ல விவரங்கள். அதுவும் தமிழர் அங்கே இப்படியான பணியினைச் செய்வது மகிழ்வாக இருக்கிறது.

  கீதா: அட! சைவ உணவகம்! உணவகம் குறித்த முகவரி எல்லாம் குறித்துக் கொண்டாயிற்று. மிக்க நன்றி வெங்கட்ஜி! சரி கறுப்புக் கண்ணாடியின் ரகசியம் என்னவென்று அறிய ஆவல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோட் பண்ணிக் கொண்டிர்களா சரி போகும் போது ஒரு தகவல் கொடுங்க எங்க வீட்டம்மாவையும் சேர்த்து அனுப்புகிறேன்

   நீக்கு
  2. கண்ணாடி ரகசியம் - விரைவில் தெரியும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
  3. நல்ல திட்டம் மதுரைத் தமிழன். அவர்களுக்கும் கொஞ்சம் சுற்றிப்பார்க்க முடியும். நீங்களும் பூரிக்கட்டையிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்! :))))

   நீக்கு
  4. மதுர சகோ கண்டிப்பாகச் சொல்கின்றேன்....உங்கள் சகோதரியைக் கூட்டிக் கொண்டுச் சென்று உங்களுக்கு வேண்டிய பரிசும் வட இந்தியாவில் நன்றாகக் கிடைக்கும் என்பதால் அதையும் சேர்த்து வாங்கிக் கொடுத்து அனுப்புகிறேன்...ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  5. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு

 13. என் மனைவியை கூட்டி செல்ல ஒரு நல்ல இடம்தான் வெஜிடேரியன் உணவு கிடைப்பதால்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்று வாருங்கள். மற்ற இடங்களுக்குச் செல்லவில்லை என்றாலும், சிரபுஞ்சி சென்று அங்கிருக்கும் சுற்றுலாத் தலங்களைப் பார்க்கலாம். சீசனில் சென்றால் நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 15. மிகவும் உபயோகமான பதிவு! தொடரட்டும் உங்கள் பணி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இமயவரம்பன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....