எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, December 11, 2016

மறக்கமுடியா முகங்கள்…


சில முகங்களை ஒரு முறை பார்த்து விட்டால் மறக்க முடிவதில்லை. அப்படி பார்த்த முகங்கள் சில, என்னைக் கவர, முகம் கொண்டவர்களை புகைப்படமாக எடுப்பது வழக்கம்அப்படி நான் எடுத்த படஙகள் சில இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி…..
 
இதோ படங்கள்…..
 
 

ஒரு இசைக் கலைஞர்
சிரித்தபடியே பாடிக்கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம்.
என்னவொரு குரல் இவருக்கு!
 

குளிருக்கு ஒரு தொப்பி….
எதுக்கு குல்லா போடறாங்கன்னு முகத்தில் ஒரு குழப்பம்….
 

ப்ளீஸ் என்ன ஃபோட்டோ புடிக்காதீங்க!
நான் சோகமா இருக்கேன்!
 

ஆறாவது படிக்கும் சிறுமி…..
அதற்குள் மூக்கு, காது என அனைத்திலும் அணிகலன்கள்….
 

இவளும் ஆறாவது தான்
கண்களில் அப்படி ஒரு குறும்பு….
 

படிப்பது நான்காவது….
ஆனால் முகத்தில் ஒரு தேர்ச்சி தெரிகிறது
 

அங்கிள், என்னையும் ஃபோட்டோ புடிங்களேன்…..
 

முகத்தில் உள்ள சுருக்கங்கள்
அவரது அனுபவ ரேகைகள்
 

அழகுச் செல்லம்
காதில் எத்தனை வளையங்கள்…..
 

அலங்காரம் இல்லாமல் ஒரு அழகி….
 

காதுக்குள் தோடு!
அதுவும் கல் வைத்தது….
 

வண்டி பழசாஇல்லை நான் பழசா
யோசனையில் பெரியவர்….
 

சிந்தனையில் ஒரு பெரியவர்….
தொழில்: விசைப்படகு இயக்குவது!
 

தேநீர் அருந்தும் பெரியவர்….
இன்னிக்கு விற்பனை எப்படி இருக்குமோ?
தொழில்: பொம்மைகள் விற்பது
 

செல்ஃபி எடுக்கும் மாப்பிள்ளை!
பார்த்துலேகத்தி பின்னாடி குத்திடப்போவுது!
 

கண்களில் எதிர்பார்ப்பு….
கொய்யா விற்பவரின் மகன்….
 

மேலே இருக்கும் சிறுவனின் சகோதரி
கொய்யா வண்டியின் ஓரத்தில் தூளி… 
அதனுள்ளே சுகமாய் படுக்கை
 

என்னம்மா கண்ணு, மறக்க முடியா முகங்கள்னு போடும்போது மனிதர்களின் முகம் மட்டும் தானா என்று இந்த ஒட்டகம் கேள்வி கேட்டதால் அதன் க்ளோஸ்-அப் ஒன்று!

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் வெளியிட்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா? படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….
 
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்
 
வெங்கட்.
புது தில்லி.

16 comments:

 1. படங்கள் ஒவ்வொன்றும் நேரில் பார்த்தால்கூட
  இத்துனை நேர்த்தியாகஇருக்க வாய்ப்பில்லை
  மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. தத்ருபமான படங்கள்.... முதலில் உள்ள படங்களின் முகபாவம் அருமை...


  மூக்குத்தி இட்ட பாப்பாக்கள்...ஐயோ ..அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 4. முகங்கள் தோறும் மகிழ்ச்சி..

  எல்லா முகங்களும் அழகு தானே!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. எல்லா முகங்களும் அழகுதானே... :) ஆமாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. உண்மைதான் ஜி! மறக்க முடியாத முகங்கள். அனைத்துமே அருமை அதற்குத் தங்களின் கமென்ட்ஸ் உட்பட.. அக்குட்டிப் பெண்களின் மூக்கில் மூக்குத்தி என்ன பெரிசு!!! ஹப்பா!! அனைத்துப் படங்களும் மிகவும் தெளிவு ஜி! உணர்வுகளுடன்...ஒட்டகமும் அழகு! ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு!

  ReplyDelete
  Replies
  1. குட்டிப் பெண்களின் மூக்குத்தி அழகு... ஆமாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி....

   Delete
 6. மனிதர்களின் முகம் மட்டும் தானா என்ற கேட்ட ஒட்டகம் இதையும் கேட்டிருக்கலாம் ...எல்லாமே வடக்கத்திய மனிதர்களின் முகம் மட்டும் தானா என்று:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி

   Delete
 7. Mugappu pada pongal thaniyagavum azagu!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 8. மறக்க முடியாத படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....