வியாழன், 8 டிசம்பர், 2016

மேகாலயா – Khublei - Thangkharang Park….ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 75

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

Thangkharang Park….

சென்ற பகுதியில் மாஸ்மாய் சுண்ணாம்புக்கல் குகைகள் பற்றிய தகவல்களையும் அங்கே கிடைத்த அனுபவங்களையும் பற்றிப் பார்த்தோம். குகைகளிலிருந்து வெளியே வந்ததும் அங்கே ஒரு பதாகை – அதில் Khublei என்றும் Thank you! என்றும் எழுதி இருந்தது.  Thank you என்பதற்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை.  Khublei என்றால் என்ன என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும்! Khasi மக்கள் நன்றி சொல்வதற்கு இந்த Khublei எனும் வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள்.  எனது பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வரும் உங்களுக்கும் Khublei!

Park Entrance

குகைகளிலிருந்து அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் மேகாலயாவின் சிரபுஞ்சி/சோஹ்ரா பகுதியில் இருக்கும் ஒரு பூங்கா. பூங்காவின் பெயர் Thangkharang Park!  சுமார் 5.5 ஹெக்டேர் பரப்பளவில் மேகாலயா அரசாங்கத்தின் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படும் பூங்கா இது.

பூங்காவின் உள்ளே….

பூங்காவில் உள்ள View Point

சிரபுஞ்சியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தப் பூங்காவிலிருந்து பங்க்ளாதேஷ் சமவெளியினையும் அங்குள்ள சாலைகளையும் நன்று பார்க்க முடியும். 180 Degree View கிடைக்கும் இங்கே! கூடவே Kynrem நீர்வீழ்ச்சி, Khoh Ramhah Rock போன்ற சுற்றுலாத் தளங்களையும் பார்க்க முடியும்.  முந்தைய பகுதிகளில் சொன்னதைப் போலவே நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வீழும் காலங்களில் செல்வது நல்லது. ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம். அந்த சமயங்களில் நிறையவே நீர்வரத்து இருக்கும். அச்சமயங்களில் சென்றால் நீர்வீழ்ச்சிகளின் முழு அழகைக் காண முடியும்.

View Point-லிருந்து மலைப்பாதை….

மலைத்தொடரும் தண்ணீர் இல்லாத நீர்வீழ்ச்சியும்

ஒரு பட்டாம்பூச்சி…..

ஆர்க்கிட் மலர்கள், இப்பகுதிக்கு உரிய செடிகொடிகள் போன்ற சிலவற்றையும், இயற்கையின் எழிலையும் இந்தப் பூங்காவில் பார்க்க வசதி செய்து வைத்திருக்கிறார்கள்.  மிக அழகாய் பராமரிக்கப்பட்ட இப்பூங்காவிலிருந்து அருகே ஒரு பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது [நாங்கள் அங்கே செல்லவில்லை].  பூங்காவிலிருந்து பார்க்கக் கிடைத்த காட்சிகளையும் படம் எடுத்துக் கொண்டோம்.

Ka Khoh Ramhah

Ka Khoh Ramhah:  கொடைக்கானலில் Pillar Rocks பார்த்திருக்கிறோம் அல்லவா, அதே போல மேகாலயாவின் Pillar Rocks இந்த Ka Khoh Ramhah! Motrop என்றும் அழைக்கப்படும் இந்த Pillar Rocks ஒரு பெரிய கூம்பினைப் போல தென்படுகிறது.  இந்தப் பகுதி மக்கள், இதை ஒரு கொடிய அரக்கனுடைய கூம்பு வடிவ கூடை என்றும் சொல்கிறார்கள்.  இதற்குப் பக்கத்திலேயே இன்னும் சிறிய இரண்டு கூம்பு வடிவ பாறைகள் உண்டு. மழைக்காலத்தில் இந்த கூம்புகளின் இடைவெளியிலிருந்து மழை நீர் வெளியேறி நீர்வீழ்ச்சி போல வீழ்வது அருமையான காட்சியாக இருக்குமாம்…..

 Kynrem Falls

Kynrem Falls: மேகாலயாவில் இருக்கும் நீர்வீழ்ச்சிகளிலேயே அதிக உயரத்தில் இருந்து வீழும் நீர்வீழ்ச்சி இது தான்.  மூன்று நிலைகளில் தண்ணீர் வீழ்வது அருமையான காட்சி.

இந்த இடங்களை Thangkharang பூங்காவிலிருந்தே பார்த்து அங்கிருந்து நாங்கள் நேராகச் சென்றது Orange Roots உணவகம். மதிய உணவு அங்கே தான் என்று சில பகுதிகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறேன். பத்து நாட்களுக்குப் பிறகு திருப்தியாக ஒரு மதிய உணவு. நன்றாகவே இருந்தது. சாப்பிட்டு மீண்டும் உரிமையாளர், மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் பார்த்த இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 கருத்துகள்:

 1. இப்படி அருமையான இடங்களைப் பற்றிய பயணக் கட்டுரைகளைத் தரும் தங்களுக்கும் Khublei!

  முதலில் நன்றி!!! இதோ மேலும் வாசித்துவிட்டு வருகிறோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... உங்களுக்கும் Khublei!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 2. அழகோ அழகு...பில்லர் ராக்ஸ் மற்றும் அந்த நீர்வீழ்ச்சி Kynrem Falls...இதில் கொஞ்சம் நீர் இருந்தது போலும்....மற்றவை எல்லாம் வறண்டிருக்க இதுவேனும் நீருடன் இருப்பதைப் பார்த்ததும் மகிழ்வாக இருந்திருக்கும் இல்லையா ஜி...

  தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவுகளுக்கு நான் இடும் பின்னூட்டங்கள் வந்து சேர்வதில்லையா? பதிவுகளில் காணோம் துளசி அண்ணா,கீதாக்கா

   நீக்கு
  2. உங்கள் கேள்விக்கு கீதாஜி விரைவில் பதில் சொல்லுவார்!

   தங்களது வருகைக்கு மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
  4. நிஷா நீங்கள் இடும் ஒரு பின்னூட்டம் வந்தது. வேறு வந்ததாகத் தெரியவில்லையே நிஷா...

   நீக்கு
  5. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
  6. அப்படியா? தட்டச்சு இட்டு விட்டு செண்ட் செய்யாமல் விட்டு விட்டேனா என தெரியவில்லை.பல நேரம் வேலை மிகுதியில் தட்டச்சிட்டதை சேமிக்க பதிவு செய்ய மறந்து போய் அப்படியே விட்டு விடுகின்றேன். என்னுடைய பல பதிவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லக்கூட முடியவில்லை. இனி கவனிக்கின்றேன். உங்கள் அன்பான பதிலுக்கும் நன்றி.

   நீக்கு
 3. ஆகா
  கண்ணுக்கு இனிய காட்சிகள்
  நன்றி ஐயா
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. வழக்கம் போல அழகான படங்கள்.. மகிழ்ச்சியான சுற்றுலா..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. உங்கள் இந்த பயணக்கட்டுரைத்தொடர் தொடர்ந்து படிக்கின்றேன். பின்னூட்டம் தான் இட முடியவில்லை. அத்தனையும் அருமை, அசத்தல் அனுபவங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணக் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பது அறிந்து மகிழ்ச்சி. முடிந்த போது பின்னூட்டம் இடுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
 7. அழ்கான காட்சிகள்! சுவாரஸ்ய தகவல்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....