இந்த வார
செய்தி:
சாராயம் இல்லா கிராமம்!
சரந்தாங்கி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து, அலங்காநல்லுார்
வழியாக, சேந்தமங்கலம் செல்லும் பாதையில் இருக்கிறது இக்கிராமம்.
ஊருக்குள்ளே யாரும் மது குடிக்கக் கூடாது; மீறி குடிச்சா, தண்டம்
கட்டணும். ஊரை விட்டும் தள்ளி வைச்சுடுவோம். ம்ஹும்... அதெல்லாம் அப்போ! இன்னைக்கு,
அந்தளவுக்கு கட்டுப்பாடு இல்லைன்னாலும், ஓரளவு இருக்கு. வெளியூர் விசேஷங்கள்ல குடிச்சுட்டு
வர்ற ஆம்பிளைங்க கூட, அமைதியா வந்து வீட்டுல படுத்துரணும். மத்தபடி, ஊருக்குள்ளே வைச்சு
ஒரு பயலும் குடிக்க முடியாது. ஏன்னா, ஊரைச் சுத்தி, பத்து மைல் துாரத்துக்கு பிராந்தி
கடையே கிடையாது. வர்ற மாதிரி இருந்த கடைகளும், எங்க எதிர்ப்பு காரணமா அப்படியே முடங்கிடுச்சு.
பாருங்க... ஊரைச் சுத்தி இருக்கிற தோப்புகள்ல, உடைஞ்ச பாட்டிலோ, தண்ணீர் பாக்கெட்டோ
எதுவும் இருக்காது' காலமாற்றத்தின் கட்டாயத்தால், கிராமத்தில் ஒரு சிலர் குடிக்கத்
துவங்கியிருந்தாலும், 'மது விற்பனை இல்லாத கிராமம் எங்கள் கிராமம்' என, பெருமையாகச்
சொல்கிறார், சரந்தாங்கி கிராமத்து மூதாட்டி.
சீரும் சிறப்பும்: மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கிளுவ
மலை, வெள்ளைக் கரடி மலைகளின் அடிவாரக் காட்டை ஒட்டி இருக்கிறது இந்த குக்கிராமம். பாறைபட்டி
பஞ்சாயத்தின் ஓர் அங்கமான இக்கிராமத்தில், 1,500 பேர் வசிக்கின்றனர். கிராமத்தை சூழ்ந்திருக்கும்
மலைகள் தந்த சுனை ஊற்றுகளால், நெல் சாகுபடி செய்த மக்கள், தற்போது மழை நம்பும் மானாவாரி
பூமியில் மா, கொய்யா வளர்க்கின்றனர். கிராமத்தின் உபதொழில், கால்நடை வளர்ப்பு. அடிப்படை
வசதிகள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில், தங்களின் அத்தியாவசிய, அவசரத் தேவைக்கு,
அலங்காநல்லுாரை சார்ந்திருக்கின்றனர் கிராமத்தினர். பெரும்பாலும், ஒரே இனத்து மக்கள்
வாழும் இக்கிராமத்தில், ஊர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்புகள் அவர் வசம் ஒப்படைக்கப்படுகின்றன!
இது விதியா? மானாவாரி பூமியில மா, கொய்யா வைச்சு பொழைச்சுக்கிட்டு
இருக்கோம்; மலையில இருந்து ராத்திரி நேரத்துல இறங்குற காட்டெருமைங்க, எல்லாத்தையும்
நாசம் பண்ணிடுதுய்யா!
சரந்தாங்கி: கழிப்பறை வசதி, சாலை வசதி இருக்கு
சரந்தாங்கி: தொழில்வாய்ப்பு, மைதானம், கட்சி கொடிகள் இல்லை
நல்லதொரு கிராமம் பற்றிய செய்தி தினமலர் நாளிதழிலிருந்து….
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த வார குறுஞ்செய்தி:
Only when the last tree
has died, and the last river been poisoned, and the last fish been caught, will
we realize that we cannot eat money!
இந்த வார காணொளி:
நல்லதொரு காணொளி. ஒவ்வொருக்கும்
தேவை இந்த மாதிரி எண்ணம் தான். இந்தியா நமது நாடு. நாம் நம் வீட்டை எப்படி சுத்தமாக
வைத்திருப்போமோ அதே மாதிரி நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா! பாருங்களேன் இந்தச் சிறுமியின் வழியாக சொல்லப்பட்டிருக்கும்
கருத்தை!
இந்த வார புகைப்படம்:
இந்தப் படத்தினைப் பாருங்கள்…. இட்லிகளைக்
கோர்த்து கொத்தாக வைத்திருப்பது போல இருக்கிறது! வடை மாலை போல, இட்லி மாலை! இது என்ன,
எங்கே பார்த்தது என்பதை நான் சொல்வதற்குள் வேறு யாராவது சொல்கிறார்களா என்று பார்க்கலாம்!
படித்ததில் பிடித்தது:
ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க
வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று திண்பண்டங்களையும்
மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான். காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது
நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.
அங்கு வயதான பெண்மனி ஒருவர்
புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.
நடந்து வந்த களைப்பில் தாகம்
எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே
பார்த்து கொண்டிருந்தாள். ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றெண்ணி தண்ணீர்
பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி
குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு
அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான்
கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.
அந்த பாட்டியும் மீண்டும்
அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே
இருந்தனர்.
நேரம் ஆக ஆக அம்மா நியாபகம்
வந்தது சிறுவனுக்கு. அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் நடந்தவன்
சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான். பாட்டி அவன்
செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும்
அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.’
நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும்
பார்த்ததில்லை என்றான்.
அதே நேரம் அந்த பாட்டி அவர்கள்
வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவர் மகன்
கேட்டான். ’இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான்
நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார்’ என்றாள்.
அறிமுகம் இல்லாதவர்களிடம்
ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான்.
கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்.
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
கடவுள் கதை மிகவும் பிடித்தது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநல்ல பகிர்வு..கதை அருமை!!
பதிலளிநீக்குஇட்லிக் கொத்து...இட்லி கொத்து போல தெரியலை...கல் அல்லது மணலால் செய்யப்பட்ட சிற்பம் போல தோன்றுகிறது! ;) :)
இட்லிக் கொத்து இல்லை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி....
கடவுள் கதை சூப்பர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
நீக்குஃப்ரூட் சாலட் சுவையாக இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குசரந்தாங்கி நல்லறம்தாங்கி!
பதிலளிநீக்குகாணொளி அருமை! இப்போதெல்லாம் குழந்தைகள்தான் பெரியவர்களுக்கு நற்குணங்களை புகட்ட வேண்டியிருக்கிறது!
இட்லிமாலை! நல்ல கலையுள்ளம் கொண்ட கிராமத்து பெண்மணி கலை நுணுக்கத்துடன் வரட்டி அடுக்கி வைத்திருக்கிறாரோ!
அனைத்தும் அருமை! வாழ்க!
வரட்டி அடுக்கி வைத்திருக்கிறாரோ! :) அட... எல்லோரும் இட்லி என நினைக்க நீங்கள் புதிதாய் ஒன்றை நினைத்து இருக்கிறீர்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
ஃப்ரூட் சாலட் ருசித்தேன்!! அன்பே சிவம் ஈர்த்தது!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குஅருமை அண்ணா...
பதிலளிநீக்குகுறிப்பாக கடவுள் கதை ரொம்ப அருமை...
கேப்பையில் செய்த இட்லியை அடுக்கியது போல் இருக்கு...
கேப்பை இட்லி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
எல்லாம் நல்லா இருந்தது. கல் பீடம் அருமை. எல்லாரும் அவரவர் வீட்டில் ஒருமுறையாவது, இட்லி என்கிற பேரில் இதைப் பார்த்திருப்பார்களே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஎனக்கும் கடவுள் கதை மிகவும் பிடித்தது.
பதிலளிநீக்குபகிர்ந்த விஷயங்கள் அனைத்தும் அருமை.
காணொளி அருமை பேசுவதை விட
செயல்பாடே சிறந்தது என்று உணர்த்தியது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகடவுள் - பிரமாதம். அந்த கிராம மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇதுபோன்ற கிராமரங்கள் பெருக வேண்டும் ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபுடலை இட்லி என்பதை குடலை இட்லி என திருத்தி எழுதியது ஞாபகம் வரவில்லை. அன்புடன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.....
நீக்குஅறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்///// உண்மை. காணொளி அருமை. இட்லி அலங்காரம் பேஸ்புக்கில் பார்த்தேன்.யார் பகிர்ந்ததென்பது நினைவில் இல்லை.
பதிலளிநீக்குஇட்லி படம் - நானே தான் நேற்று முகப்புத்தகத்திலும் இந்தப் படத்தினை பகிர்ந்திருந்தேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.
Anaithaotum rasithom..kaanoli arumai ...padithathil kadavul eerthar...top kathal..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஅந்த காணொளியும் கதையும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.....
நீக்கு