வெள்ளி, 16 டிசம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 187 – பெண்ணைப் பெற்றவன் பாக்கியசாலி – நல்லாசிரியர் - ATM


இந்த வார செய்தி:

ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே சொக்கம்பட்டியில் தமிழரசி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் சிவக்குமார். ஆண்டுதோறும் ஜனவரியில் மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வில், தனது பள்ளி மாணவர்களை கட்டாயம் பங்கேற்க வைத்து கல்வி உதவித்தொகை பெற்று தருகிறார்.

அவர் கூறியதாவது:- வகுப்பு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் மனத்திறனை கண்டறிந்து உணவுடன் கூடிய பாடம் நடத்துவதால் மாவட்ட அளவில் சாதனை புரிந்து வருகிறோம். அதனால் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே எனது நோக்கம். தவிர படிக்கும் காலத்திலே மாணவன் தனது படிப்பு செலவை தானே சமாளிக்கும் தன்னம்பிக்கையை உண்டு பண்ண முடிகிறது, என்றார்.

பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியேறினாலும், அவர்களை தொடர்ந்து கண்காணித்து மேல் படிப்பு மற்றும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார் சிவக்குமார்.

நன்றி: தினமலர்.  நல்லாசிரியர் சிவக்குமார் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:


விளக்கம் எதுவும் தேவையில்லை இல்லையா!

இந்த வார குறுஞ்செய்தி:

மனதைக் கட்டுப்படுத்தப் பழகியவனுக்கு மனமே உற்ற தோழன்; கட்டுப்படுத்த தவறியவனுக்கு ஆபத்தான பகைவன்.

இந்த வார காணொளி:

ஒரு நல்ல ஆசிரியர் இப்படித்தான் இருக்க வேண்டும்….. பாருங்களேன்.




இந்த வார கார்ட்டூன்:




இந்த வார புகைப்படம்:



Spotted owl! சமீபத்தில் எடுத்த படம். இதற்கு ஒரு வரம் உண்டு – தனது தலையை 180 டிகிரி வரை திருப்ப முடியும்! அதாவது பின்புறம் நடப்பதைப் பார்க்க முடியும்! அப்படிப் பார்த்தபோது எடுத்த படம்….. பிடித்திருக்கிறதா…..

படித்ததில் பிடித்தது:

பெண்ணைப் பெற்றவர் பாக்யசாலி….

தசரத மஹாராஜா தனது புதல்வர்களோடு ஜனக மஹாராஜாவின் நாட்டுக்குப் பயணம் செய்கிறார் – திருமணத்திற்காக….  மக்களும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஜனக மஹாராஜா வரவேற்பு கொடுப்பதற்காக, தனது நாட்டின் எல்லையில் தகுந்த ஏற்பாடுகளோடு காத்திருக்கிறார்.  சந்தித்த போது, தசரத மஹாராஜா, ஜனகரின் காலில் விழ, அதிர்ச்சியடைந்த ஜனக மஹாராஜா அவரைத் தடுத்து, “ஐயா என்ன காரியம் செய்தீர்கள்….  நீங்கள் என்னை விட மூத்தவர், பேரரசர்…  நீங்கள் என் காலில் விழ நினைக்கிறீர்களே?” என்று கேட்க, அதற்கு தசரத மஹாராஜா சொன்ன பதில்….

”ஜனகா, நீ பெண்ணைப் பெற்றவன், எனது மகனுக்கு கன்யா தானம் செய்து கொடுக்கப்போகிறவன், நான் தானம் பெறப்போகிறவன்….  தானம் கொடுப்பவன் பெரியவனா இல்லை தானம் அதாவது யாசகம் பெறப்போகிறவன் பெரியவனா, நீயே சொல்….  தானம் கொடுப்பவன் தானே பெரியவன். பெண்ணைப் பெற்றவன் பாக்யசாலி. அதனால் நான் உன் காலில் விழுவதில் தவறில்லை” என்று சொன்னாராம்….

இது உண்மையாக நடந்ததா என்பதை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம் – ஆனால் சொல்ல வந்த விஷயம் – “பெண்ணைப் பெற்றவன் பாக்யசாலி” என்பது பிடித்திருந்தது!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  4. ரொம்ப நல்லா இருந்தது. சந்தடி சாக்குல பெண்ணை (ஒரு பெண்ணைப்) பெற்றவர் பாக்கியசாலினு சொல்லிட்டீங்க. ஒப்புக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தடி சாக்கில்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பழக்கலவை சுவையோ சுவை!

    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி......

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்...

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  10. இந்த பாக்கியம் எனக்கு இல்லாமல் போச்சேன்னு வேதனைப் படுகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  11. சிவக்குமாரின் சேவை பாராட்டுக்குரியது.ஜனகன் பாக்கியசாலி ஆனது ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. சிவக்குமாரின் சேவையைப் போற்றி வாழ்த்துவோம்!

    அம்மாவின் ஷூவையும் ரசித்தோம் காணொளியையும் ரசித்தோம்.

    படம் ரொம்பவே அழகு ஜி! மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள்!! வாழ்த்துக்கள்!

    ஆமாம் பெண்ணைப் பெற்றவர் பாக்கியசாலிதான். அதனால் கதையும் பிடித்திருந்தது!!!

    அனைத்துமே அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  13. பன்னீர்செல்வம் கார்ட்டூன் ரசிக்க வைத்தது. பெண்ணைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் தான் என்பது இப்போதைய காலத்தில் உணரவே வைக்கிறது. மற்றவையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  14. அனைத்தும் அருமை...
    கார்ட்டூன் சூப்பர்...
    பெண்ணைப் பெற்றவன் பாக்யசாலி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....