வியாழன், 10 அக்டோபர், 2024

அம்பாள் கொலுவிருக்கும் நவராத்திரி - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




நவராத்திரி குறித்த எண்ணங்களை ஒரு பதிவாக இன்றைக்கு திருமதி விஜி வெங்கடேஷ் வெளியிடுகிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


அலங்காரப் படிகள்தோறும் பல வடிவங்களில் அம்பாள் கொலுவிருக்கும் நவராத்திரி:



வாழ்வின் ஒவ்வொரு நிலையும் வளர்ச்சியும் பரிணாமமுமே கொலுவின் பல படிகளாக பிரதிபலிக்கின்றன. அதுவும் அவளின் மாயையே. அவற்றில் உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் நாம் பயணிப்பதும் அவள் அருளாலேதான்🙏🏻


அவள் அருளாலேயே அவள் அடி பற்றி வணங்கி அப் படி களை பற்றி மனதில் படி யுமாறு சொல்ல முனைகின்றேன்🙏🏻🙏🏻🙏🏻


பூமியில் பிறந்து தவழ்ந்து முதல் அடி வைப்பது முதல் படி;


படி ப்பெனும் ஆழியில் மூழ்கி பட்டமெனும் முத்தெடுக்கும் மாணவப் பருவம்  இரண்டாம் படி;


சம்பளத்துடன் பயணப் படி பஞ்சப் படி கிடைக்கும் உத்யோகம் மூன்றாம் படி.


Matrimony  தகவல் படி மனதுக்குப் பிடி த்த நம்

ஆசைப் படி அமைந்த துணையைக் கரம் பிடிப்பது நான்காம் படி;


உள்ளூரிலும், திரைகடல் ஓடியும் திரவியம் சேர்த்து படிப்படி யாய் முன்னேற்றம் காண்பது ஐந்தாம் படி;


பிள்ளைகள் படி த்து நல்ல வேலையைப் தேடிப் பிடி த்து பின் நம் சொல்லுக்குக் கீழ் படி ந்து உற்ற துணை தேடிக் கொள்வது ஆறாம் படி;


பேரக் குழந்தைளின் மழலை மொழியில் மகிழ்ந்து, படி ப்பித்தும், படி ப்பதைக் கேட்டு ரசிப்பதும் ஆனந்திப்பதும் ஏழாம் படி;


தீர்த்த யாத்திரையில் படி த்துறைகளில்  கால் நனைத்து கர்மா கரைய மூழ்கி எழுந்து படி கள் ஏறி இறைவனைச் சேவிப்பது ஏழாம் படி;  


படி இருக்கு, பார்த்துப் போ எனும் அக்கறை மொழி கேட்டு பிடி ப்புக்காக கோல் பிடி க்கும் நிலை  எட்டாம் படி;


பிடி ப்புக்கள் மெல்லத் தளர வாழ்க்கை நிகழ்வுகளின் படி மானங்களை மனம் அசைபோட, உற்ற துணை நமைப் பிரிய, அம்பாள் தாளினைப் பிடி த்து அவளிடம் அனாயாச முடி வை இரைஞ்சுவதும் நம் கர்மாப் படி அது அமைவதும் ஒன்பதாம் படி; அதுவே இறுதிப் படி!


படி களின் வாயிலாக வாழ்வின் ஒப்பற்ற  படி ப்பினைகளை  அறிவுறுத்தும் கொலுப் படி கள் நாம் எடுத்து வைக்கும் நல் அடி கள்! 



துர்கா லக்ஷ்மி சரஸ்வதி மூவராகவும் இருக்கும் இராஜ ராஜேஸ்வரி திருக் கழல்கள் போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻


விஜி வெங்கடேஷ்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

10 அக்டோபர் 2024

4 கருத்துகள்:

  1. படிப்படியாக படி படிஎன்று படிகளின் சிறப்புகளைச் சொல்லியிருப்பதைப் படித்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    நவராத்திரி கொலு படிகளுடன் நம் வாழ்வில் நாம் கடக்கும் படிகளையும் இணைத்து சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய பதிவை ரசித்துப் படித்தேன். சகோதரிக்கு அன்பார்ந்த வாழ்த்துகள்

    "எட்டு எட்டாய் உலக வாழ்வை பிரிச்சிக்கோ" என்ற ரஜினி பாடல் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு படியின் சிறப்புகளையும் படிப்படியாகச் சொல்லியிருப்பதை ரசித்தேன். இந்தப் படிகளின் படி பொம்மைகள் வைத்தால்? என்று என் கற்பனை சிறடித்தது!!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....