எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 8, 2013

ஃப்ரூட் சாலட் – 66 – எம்.எஸ். சிவகுமார் - கல்யாணம்! - தாய்


இந்த வார செய்தி:

தன்னலமறியா மனிதரின் சோக மரணம் 

யாரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளாத சடலங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது, கைவிடப்பட்ட நோயாளிகளை அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைப்பது போன்ற சமூக பொது பணிகளில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வந்தவர் எம். எஸ். சிவக்குமார். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் புதன் கிழமையன்று உதவிக்குகூட யாருமில்லாத பரிதாப நிலையில் உயிரிழந்தார்

56 வயதான எம். எஸ். சிவகுமார், சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகே செவ்வாய்கிழமையன்று பலத்த தலை காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். சிவக்குமாரை அடையாளம் கண்டுக்கொண்ட போலீஸார் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி, புதன் கிழமையன்று உயிரிழந்தார்.

2012-ஆம் ஆண்டு 'தானே' புயலில் சிக்கித் தவித்த ஆறு மாலுமிகளை மீட்க உதவியவர்களில் சிவகுமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த செப்டம்பர் மாதம், எழும்பூரில் சுயநினைவில்லாமல் கிடந்த ஒருவரை மீட்டு, மருத்துமனையில் கொண்டு சேர்த்தார், சிவகுமார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிடவே, அவரது குடும்பத்தை கண்டுபிடித்து உடலை ஒப்படைத்திருக்கிறார். இது போன்று இவர் தொடர்ந்து பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வந்திருத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சேவையை பாராட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அரசு மருத்துவமனையில் விழா ஒன்றை நடத்தி இவரை கௌரவித்தனர்.

எப்போதும் வெள்ளை உடையில் காணப்படும் இந்த சமூக சேவகர், யாரும் பொறுப்பு ஏற்காத சடலங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது தொடர்பாக தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வந்தவர்.

ஆனால், சிவகுமார் புதன்கிழமையன்று இறக்கும்போது அவருடன் உதவிக்குக்கூட யாருமில்லை. பின்னர், சிவகுமாரின் நண்பரான பி. டி. அலிக்கு மருத்துமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம், கேரளாவில் இருக்கும் சிவகுமாரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

                நன்றி – தி இந்து தமிழ் பத்திரிக்கை….

என்ன ஒரு சோகம்! பலருடைய கடைசி பயணத்திற்கு உதவி செய்த ஒரு மனிதருக்கு இந்நிலை! படித்ததில் மனது கனத்தது!

இந்த வார முகப்புத்தக இற்றை:

THE WORLD’S HUNGER IS GETTING RIDICULOUS. THERE IS MORE FRUIT IN A RICH MAN’S SHAMPOO THAN IN A POOR MAN’S PLATE.

இந்த வார குறுஞ்செய்தி

I AM LOOKING FOR A BANK WHICH CAN PERFORM TWO THINGS FOR ME : –

GIVING ME A LOAN, AND THEN ……
..
..
..
..
..
..
..
LEAVING ME ALONE!

ரசித்த படம்: 


அட என்ன அழகு! கொஞ்சி விட ஆசை உங்களுக்கும் வருமே!

ரசித்த பாடல்:

சிவப்பு மல்லி படத்திலிருந்து ரெண்டுக் கன்னம் சந்தனக் கிண்ணம் பாடல் – நான் ரசித்த பாடல் – இதோ உங்கள் ரசனைக்கு!


 
ராஜா காது கழுதைக் காது:

ஒரு பன்மாடிக் குடியிருப்பின் வெளியே, நண்பரைச் சந்திக்கக் காத்திருக்கும் போது, அருகே இருந்த வீட்டினுள்ளே நடந்த சம்பாஷனை:

”என் காலத்துக்குள்ளே உனக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வச்சுட்டா நிம்மதியா போய் சேர்ந்துடுவேன். உன்னைத்தவிர நான் பெத்த எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாச்சு… எனக்கு ஒரே கவலையா இருக்கு….”

“ஏம்மா கவலைப் படறீங்க! நிச்சயம் எனக்கும் கல்யாணம் ஆகும். எனக்குன்னு யாரையாவது படைக்காமலா போயிருப்பான் அந்த ஆண்டவன்!”

புலம்பிக் கொண்டிருந்தது ஒரு தாய். பதில் சொன்னது…….

ஒரு மகள் என்று நீங்கள் நினைத்திருந்தால் நான் பொறுப்பல்ல! பதில் சொன்னது அவரது மகன்!

படித்ததில் பிடித்தது!:

தாய்….

தாயே நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டுகையில்
அருமை அறியாமல்
உன் கையை
தட்டி விட்டிருக்கிறேன்

இன்று நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது…..
 
தூரத்தில் உன் கை.

                கவிதை எழுதியவர் யாரோ?

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. நல்ல மனிதரின் மரணம் மனதைப் பாதித்த விஷயம்.

  இற்றை சூப்பர். குறுஞ்செய்தி சிரிப்பு. அழகிய குழந்தை.

  சிவப்பு மல்லி பாடல் எனக்கும் மிக, மிகப் பிடிக்கும். மனம் தொட்ட கவிதை. ராஜா காது... இன்றைய உண்மை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. எம்.எஸ்,சிவகுமாரின் நிலையைப் படிக்கையிலேயே மனம் கனக்கத்தான் செய்தது! சிவப்பு மல்லி பாடல் எனக்கும் பிடிக்கும். கறப்பான முகத்தில் வெள்ளைப் பல்லைக் காட்டி நடிகர் சந்ரசேகர் சிரிப்பதே அழகாக இருக்கும்! தாய் பற்றிய கவிதையும் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete

 3. தன்னலமறியா மனிதரின் சோக மரணம் மனதை கனக்க வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 4. ஃப்ரூட் சாலட்- கனக்க வைக்கிறது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. தன்னலம் கருதாத மனிதரின் அவல மரணம் மிகச் சோகம்.
  இனி யாரும் தர்ம நியாயங்களோடு கருணை உள்ளத்தோடு
  வாழவே அஞ்சுவர். இதனால் இறைவன் உணர்த்தும் நீதி தான் என்ன ?
  இப்படி இருந்தால் எப்படி தர்மம் தழைக்கும் ? வாத்தியார் பிள்ளை
  என்றும் மக்கு தானா ? தர்மத்திற்குக் கூலி அதர்மமா ? உள்ளம்
  கொதிக்கிறது. இறை சிந்தனை ஆட்டம் கொள்கிறது.
  மற்ற பகுதிகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 6. என்ன ஒரு சோதனை நல்ல மனிதருக்கு. எப்படி இறந்தாரோ.ஒன்றுமே தெரியவில்லையா.
  மனம் மிகக் கனத்தது வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 7. சிவப்பு மல்லி பாட்டு என் ஆல்டைம் ஃபேவரிட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....

   Delete
 8. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாடுபவர்களில் ஹீரோ தாடிக்காரர் ,ஹீரோயின் முகம் முழுதும் பரு !யார் கன்னம் சந்தனக் கிண்ணம் என்று புரியாமல் கன்னம் தடவிகொண்டு யோசிக்கிறேன் !
  த.ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. ஊருக்கு உதவியவருக்கு இந்த நிலை...வருத்தம் தான்... திருமணம் குறித்த தாயின் கவலை.... தாய்க்கு எல்லாமே குழந்தைதானே... அதனால்தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 10. உதவும் நெஞ்சத்ததுக்கு ஏன் இந்த நிலை கனத்துப் போனது ..
  குழந்தைப்படம் அழகு.
  தாயின் கவிதை என் தாயை நினைவு படுத்தியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...

   Delete
 11. கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. முதல் செய்தியே படிக்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. சமூக சேவையுள்ளம் கொண்ட நல்லவர்களுக்கே இந்த கதியா? ;(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. தன்னலம் கருதா மனிதரின் இறுதி நிலை மனதை வருந்த செய்துவிட்டது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு ஜி!

   Delete
 14. ஹா ஹா ஹா இனி வருங்காலத்தில் பல மகன்கள் அப்படித்தான் புலம்ப வேண்டி இருக்கும் என்று நினைக்கிறன்.. சீனு உசார் ஆயிருடா :-)))))

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமே உசார் ஆயிரு சீனு! இல்லைன்னா திண்டாட்டம் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 15. சிவகுமாரின் உன்னத சேவை பாராட்டுக்குரியது .அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

   Delete
 16. தாய் பற்றிய கவிதை படித்தவுடன் ஏனோ” அற்றைத் திங்கள் அவெண்ணிலவில் எந்தையும் உளார், எம் குன்றும் பிறர் கொண்டிலார் “ என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது. குறுஞ்செய்தி ஆசை அதிகமாயில்லை...?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 17. சிவகுமாரின் மரணம் குறித்த செய்தி வேதனையானது! ப்ருட் சாலட் சூப்பர்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்....

   Delete
 18. சிவகுமாரின் மரணம், கடைசி கவிதை இரண்டும் மனதை கனக்க வைத்து விட்டது.
  ராஜா காது கேட்ட விஷயமும் அப்படித்தான்.
  குழந்தை கொள்ளை அழகு.. பாடல் பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 19. எம் எஸ் சிவகுமார் பற்றிய சேதி மனதை நிலை குலைய வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 20. சங்கர் கணேஷின் டாப் டென் பாடல்களில் ஒன்று இந்த நான் மிக விரும்பி அடிக்கடி கேட்ட பாடல். அருமையான Romantic Melody! பாடலில் வரும் interlude இசை மிக பிரமாதமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நான் ரசித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் எனத் தெரிந்து மிக்க மகிழ்ச்சி ஜனா சார்.

   Delete
 21. mmmm...
  nalla irunthathu anne..

  kavithai touching..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 22. செய்தி கனக்கவைத்தது.

  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....