வியாழன், 21 மே, 2020

இந்திய சீனப் போர் – வாசிப்பனுபவம் – இரா. அரவிந்த்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை போர் பற்றிய ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

IF WARS CAN BE STARTED BY LIES, IT CAN BE STOPPED BY TRUTH!

 

இந்த நாளும் நண்பர் இரா. அரவிந்த் அவர்கள் எழுதி அனுப்பிய வாசிப்பனுபவம் ஒன்றையே நாம் பார்க்கப் போகிறோம். ஆங்கில புத்தகம் ஒன்றை தமிழில் மொழி பெயர்த்த புத்தகம் – இந்தியாவின் சீனப் போர் பற்றிய புத்தகம் – வாசிப்பனுபவம் பற்றி தெரிந்து கொள்ள படியுங்களேன்! கிழக்கு பதிப்பக வெளியீடு – கிண்டிலில் 210/- ரூபாய்க்கு கிடைக்கிறது இந்த மின்னூல். ஓவர் டு அரவிந்த்! – வெங்கட் நாகராஜ், புது தில்லி.

*****

இந்திய சீனப் போர் – வாசிப்பனுபவம்

 

தோல்வியில் துவண்டு துள்ளியெழுந்து வளர்ச்சி நோக்கி வீறுநடைபோடும் தேசத்தின் வரலாற்றுப்பாடம்.

ஒரு நாடு சந்திக்கக்கூடாத மிகப்பெரிய அவமானம், போரில் அடையும் படுதோல்வியே. “படுதோல்விஎன்ற ஒரு சொல்லுக்குள் அடங்கியிருப்பது தேசம் சந்திக்கும் மிகப்பெரும் சவால்களான நம்பிக்கைத் துரோகம், தோல்விக்குப் பொறுப்பேற்று மாபெரும் தலைமைகளின் பதவி விலகல், உலக அரங்கில் தலைநிமிரமுடியாத அவமானம், இராணுவத்தின் அதிருப்தியாலும் பொதுமக்களின் அதிருப்தியாலும் ஏற்படக்கூடிய உள்நாட்டுப் பூசல்கள், அரசியலின் நிலையற்ற தன்மை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

 

இப்படி எண்ணற்ற சவால்களை நம்தேசம் 1962 இறுதியிலிருந்து சமாளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வெளிநாட்டவர், அரசுக்குள் நடைபெற்ற உள்விவாதங்களையும், அரசு மறைத்துவைத்த ஹெண்டெர்சன் அறிக்கையையும் வெளியிட முயன்றால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை தானே? அவர் தான் லண்டனில் 1926-ல் பிறந்து திடைம்ஸ்இதழின் போர் நிருபராகி 1959-ல் தெற்காசிய நிருபராகப் புதுதில்லியில் பணியமர்த்தப்பட்ட மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் திரு நெவில் மாக்ஸ்வெல் அவர்கள். காபூல் முதல் இலங்கை வரை விரிவான பயணங்களை மேற்கொண்ட இவர், போர்காலத்தில் தில்லியிலேயே தங்கி நிலவரங்களை உடனுக்குடன் எழுதி ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு 1967-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஓரியெண்டல் அண்ட் ஆஃப்ரிக்கன் ஸ்டடிஸ் (School of Oriental and African Studies) பிரிவில் இணைந்து இந்திய சீனப் போர் நூலை எழுத ஆரம்பித்தார்.

 

1970-ல் ஆங்கிலத்தில் வெளிவந்தஇந்தியாஸ் சைனா வார்” (“India’s China war”) என்ற ந்நூல் பலரின் பாராட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி திரு ஜனனி ரமேஷ் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுஇந்திய சீனப் போர்என்ற நூலாகத் தமிழில் வெளிவந்துள்ளது.

 

சீனா தான் தம் படைபலத்தால் நமக்கு அநீதி இழைத்து விட்டது என்று நாடு முழுவதும் பரவலாக இருக்கும் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கி நாணயத்தின் மறுபக்கத்தையும் எடுக்காட்டி நம் புரிதலை விரிவாக்கியதே இந்நூலின் சிறப்பு அம்சம் ஆகும். “மனிதர் நடமாட்டம் இல்லாத அக்சாய்சின் போன்ற இடங்களுக்காக ஏன் வீண்சண்டைஎன்ற பொதுமக்களின் கேள்விக்கு எல்லை தொடர்பாக வரலாற்றுடன் தொடர்புடைய எளிமையான விளக்கங்களையும் அரசியல் நெருக்கடிகளையும் அனாயாசமாகப் பதிவிட்டுள்ளார் நூலாசிரியர். “அரசியல் ஒரு சாக்கடைஎன்று ஒதுங்கிக்கொள்ளும் பெரும்பாலான மக்களும் மாபெரும் இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் இளைஞர்களும் இந்நூலிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டியது ஆள்பவர்களுக்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தை அவர்கள் விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டே திட்டமிட்டு மேம்படுத்துதல், நாட்டின் கௌரவம் குறையாமல் அண்டை நாடுகளுடன் சுமூக உறவுகளைப் பேணல், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல், எதிர்க்கட்சிகளின் கண்மூடித்தனமான எதிர்ப்புகளைச் சமாளித்தல், துறை அதிகாரிகளை இலகுவாக இயங்கச் செய்து பொருட்கள் மற்றும் சேவைகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்தல் போன்ற எண்ணற்றச் சிக்கல் மிக்கப்பொறுப்புகள் உள்ளன என்பது தான். ஆள்பவர்களுக்குக் குறிப்பிடப்பட்ட மேற்கண்ட பொறுப்புகளை நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உங்கள் மேலாளர்களுக்கும் பொருத்திப் பார்க்கும் நுண்ணறிவை வளர்த்துக்கொள்வதின் மூலம் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பட உங்கள் திறமையைச் செலுத்தி வாழ்வில் இமாலய உயரங்களைத்தொட இந்நூல் உதவும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

பிரதமர் நேரு அவர்களின் அரசு மேற்கூறியவற்றுள் எந்த அளவு வெற்றிகரமாகச் செயல்படுத்தி எந்தெந்த இடங்களில் எதிரியின் பலத்தைக் கணிக்காமல் தோல்வி கண்டது என்பதைத் திம்மையா-கிருஷ்ணமேனன் விவகாரம், உம்ராவ்சிங்-சென் விவகாரம் போன்ற எண்ணற்ற உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டி களத்தில் உள்ளவர்களின் உள்ளீடுகள் மதிப்பட வேண்டியதின் அவசியம் புலனாகிறது.

 

சொந்த படைவலிமை இல்லாமல் வெறும் பேச்சு வல்லமை மூலமும், உலக நாடுகளின் ஆதரவு மூலமும், நீங்கள் கோரும் எல்லைகளிய அடைந்து விடமுடியாது என்பது இந்தியாவிடமிருந்து அனைத்து நாடுகளும் கற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான ஆனால் இன்றியமையாத பாடமாகும். இராஜதந்திர ரீதியில் படைவலிமையைச் சீனா செய்த அளவுக்குப் பெருக்கத் தவறிய இந்தியாவின் உள்விவகாரங்களையும் குறைகளையும் தெளிவாக்கிய ஆசிரியர், இவற்றைச் சீனா எப்படி வெற்றிகரமாகச் செய்து காட்டி வல்லரசு ஆனது என்பதை அறியும் ஆவலையும் அதைத் தெரிவிக்கும் நூல்களைத் தேடும் தூண்டுதலையும் வாசகர்களுக்கு அளித்துள்ளார்.

 

அத்தூண்டுதலைப் பெற்ற மகிழ்ச்சியோடு இந்நூலை அனைவரும் படித்து மேற்கூறப்பட்ட பலன்களைப் பெற்மாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இந்நூல் முறையே ஆங்கிலத்திலும் தமிழிலும் பின்வரும் சுட்டிகளில் கிடைக்கிறது.

 

India's China War


இந்தியாவின் சீனப் போர்


வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் மீண்டும் சந்திப்போம்...


அன்புடன்,


இரா. அரவிந்த்


24 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகத்துடன் தொடங்கியிருக்கும் பதிவு. புத்தகம் புதிய அறிமுகம். படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
  2. //மனிதர் நடமாட்டம் இல்லாத அக்சாய்சின் போன்ற இடங்களுக்காக ஏன் வீண் சண்டை//

    அற்புதமான கேள்வி சிந்திக்க வைக்கிறது. விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சண்டைகள் சின்னச் சின்ன ஆசைகளால் உருவாகும் விஷயங்கள் தான்.

      சிந்திக்க வைத்த கேள்வி - நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. படிக்கணும். இந்திய சீன போர் நடந்த பொழுது உண்மைகள் பல வெளியில் வரலை. கிழக்கின் மீது எனக்கு ஒரு விமர்சனம் உண்டு. கிண்டிலில் வெளியிடும் பொழுது Kindle unlimited ஆப்ஷன் தருவதே இல்லை அவர்கள். எல்லா புத்தகமும் அனைவரும் வாங்க இயலாது. அவர்களுக்கு Kindle unlimited வர பிரசாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நிறுவனங்கள் கிண்டிலில் வெளியிடும்போது Kindle Unlimited தருவதில்லை. ஆமாம் அது ஒரு குறையே.

      முடிந்த போது படித்துப் பாருங்கள் எல்.கே.

      நீக்கு

  4. நல்லதொரு புத்தக அறிமுகம் என நினைக்கிறேன் இது போன்ற புத்தங்களை வாங்கி படிக்கும் போது நாம் அறியாத பல தகவல்கள் அறியக் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தக வாசிப்பு நமக்கு பல விஷயங்களை கற்றுத் தருகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  5. ஆவலைத் தூண்டும் விமர்சனம்... நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. என்னை தளராது ஊக்குவிக்கும் அணைவருக்கும் மிக்க நன்றி நன்பர்களே.
    புத்தகத்தைத் தவராமல் வாசியுங்கள்.
    லொயொலா கல்லூரியில் நான் ஆங்கில இலக்கியம் பயிலுகையில் ஒருமுறை எனக்கு குறைவான மதிப்பெண்கள் கிடைப்பதன் காரணம் கேட்டபோது என் பேராசிரியை "எந்த எழுத்தாளரைப் பற்றியும் எழுதும் முன் அவர் பற்றிய ஒரு பொதுவான மேற்கோளோடு துவங்கவும்" என்றார்.
    அது என் மதிப்பெண்களை உயர்த்தியபோதும் அதன் நடைமுறைப் பயன்கள் வெங்கட் ஐய்யாவின் தளப் பதிவுகள் சிறப்பான வாசகத்தோடு துவங்கும்போது தான் எனக்குப் புரிகிறது.
    ஒவ்வொரு பதிவும் அதன் துறை சம்மந்தமான வாசகத்தோடு துவங்குவது மிகச் சிறப்பு.
    மிக்க நன்றி ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதுங்கள் அரவிந்த். தேடித் தேடி வாசிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது.

      உங்கள் கல்லூரி அனுபவங்களையும் மேலதிகத் தகவலாக இங்கே சொல்லி இருப்பது நன்று.

      நீக்கு
  7. தங்களின் விமர்சனம் நூலினைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. ஆகா ... உங்களுடைய புத்தக விமர்சனம் ... புத்தகத்தை படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டது.... மேலும் நீங்கள் சொன்னதுபோல் "சொந்த படைவலிமை இல்லாமல் வெறும் பேச்சு வல்லமை மூலமும், உலக நாடுகளின் ஆதரவு மூலமும், நீங்கள் கோரும் எல்லையை அடைந்து விடமுடியாது என்பது இந்தியாவிடமிருந்து அனைத்து நாடுகளும் கற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான ஆனால் இன்றியமையாத பாடமாகும்" நிதர்சன உண்மை ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா. ஸ்ரிலங்கா, பாக்கிஸ்தான், நேப்பாளம் அணைத்தையும் கடனால் அடிமைப்படுத்திவிட்டது சீனா. தைவான் திபெத் எதுவும் சிறிய படை கொண்டு சீனாவைத் தாக்குபிடிக்க முடியாது அமெரிக்காவே மூக்கை நுழைத்தாலும் கூட. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் இது.

      நீக்கு
  9. நல்ல வாசகம்.
    புத்தக விமர்சனம் அருமை.
    நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  10. நல்லதொரு புத்தக அறிமுகம். விமர்சனம் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் திரு அரவிந்த்.

    துளசிதரன்

    ஹை அரவிந்த் உங்கள் விமர்சனம் ஒவ்வொரு முறையும் சிறப்பாக ஆகிக் கொண்டே வருகிறது. உங்கள் வாசிப்பும் விமர்சனமும் என்னை மிகவும் பிரமிக்க வைக்கும் ஒன்று. தொடர்ந்து உங்கள் வாசிப்பையும் கருத்துகளையும் முன் வையுங்கள். வாழ்த்துகள் பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      அரவிந்த் அவர்களின் பிரமிக்க வைக்கும் வாசிப்பு - உண்மை தான் கீதாஜி. தொடரட்டும் அவரது வாசிப்பு.

      நீக்கு
  11. வெங்கட்ஜி வாசகம் அருமை.

    இங்கு அரவிந்தின் விமர்சனத்தை பதிந்தமைக்கு வாழ்த்துகள். நல்ல வாசகர். விமர்சகர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீத்தா அம்மா. எல்லாம் தங்கள் அணைவரின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதல்களுமே.

      நீக்கு
  12. நல்லதொரு புத்தக அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....