ஞாயிறு, 24 மே, 2020

The School Bag - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள் – ஸ்வாமி விவேகானந்தர்.

 


தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடப் போகும் சிறுவன்.  தனது பிறந்த நாள் பரிசாக, பள்ளிக்கு எடுத்துச் செல்ல ஒரு School Bag வாங்கித் தரும் படி தனது அம்மாவை நச்சரிக்கிறான்.  அப்பா பணியிலிருந்து திரும்பி வரும் போது வாங்கி வருவார் என சமாளிக்கிறார் அம்மா.  ஹிந்தியில் ஒரு வார்த்தை – Ziddi எனச் சொல்வார்கள் – அதாவது அடம் பிடிப்பது. சிறுவன் எனக்கு நான் பார்த்து வைத்த பையை வாங்கித் தந்தே ஆக வேண்டும் என அடம் பிடிக்கிறான்.  மார்க்கெட் மூடிவிடுவார்கள், வாங்கித் தாருங்கள், நீங்கள் வாங்கித் தரவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன், நாளை பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றெல்லாம் சொல்லி அடம் பிடிக்கிறான். அப்படியே தூங்கிப் போகிறான்.  அடுத்த நாள் காலை எழுந்த பிள்ளை நான் பள்ளிக்குப் போகப் போவதில்லை எனச் சொல்லும் போது அம்மா தான் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பையைக் காண்பிக்கிறாள்.  மகிழ்ச்சியில் ததும்புகிறான் சிறுவன்.  “நான் உங்களை ரொம்பவே படுத்துகிறேனோ?” என்று கேட்கும் சிறுவனிடம் அப்படி இல்லை எனச் சொல்லி பள்ளிக்கு அனுப்பி வைக்கிறாள் தாய்.

 

அன்று மகனின் ஏழாம் பிறந்த நாள் – அவனுக்காக வீட்டில் இனிப்பு தயார் செய்து கொண்டிருக்கிறாள் அந்தத் தாய். அப்போது ரேடியோவில் செய்தி.  மகன் படிக்கும் பள்ளியில் குண்டு வெடிப்பு – நூற்றுக்கும் மேலான குழந்தைகள் உயிரிழந்தனர் – செய்தி கேட்டதும் அப்படியே பேதலித்துப் போய் அமருகிறாள் அந்தத் தாய்.  அந்த நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை.  அங்கே யார் வந்திருக்கிறார்கள்?  படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.  மனதைத் தொட்ட குறும்படம்.  தீவிரவாதம் – எங்கே நடந்தாலும் அது சரியில்லை!  அடுத்தவர் உயிரை எடுக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?   உலக அமைதி மட்டுமே தேவை என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ – தீவிரவாதத்தை கையில் எடுத்துக் கொண்டவர்கள்…

 


காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!

 

The School Bag

 

நண்பர்களே, இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி


34 கருத்துகள்:

  1. அப்புறமா சஸ்பென்ஸை எனக்குச் சொல்லி விடுங்கள் வெங்கட்!

    வாசகம் நன்று.

    இன்று அந்த ஹிந்தி வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்.  அந்தப் பெயரில் ஒரு பழைய ஹிந்திப் படம் இருக்கிறதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சஸ்பென்ஸ் - கேஜிஜி கமெண்ட் பார்த்தால் உங்களுக்குப் புரிந்து விடும் ஸ்ரீராம்.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ஹிந்தி வார்த்தை - ஆமாம் திரைப்படம் அப்பெயரில் வந்திருக்கிறது.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை . விவேகானந்தரின் சிந்தனை பொன்மொழி உண்மையானதே..

    குறும்படம் கதையை படித்ததும் இறுதியில் அந்த பையனே திரும்பி வந்து விட கூடாதாவென எதிர்பார்ப்புடன் பார்த்தேன். முடிவு மனதை வாட்டுகிறது. நான் நினைத்த மாதிரி நடந்து விட்டால்.. நடந்துவிடுமென்ற நம்பிக்கையில் இன்றைய நாளை துவக்குகிறேன்.

    தீவிரவாதங்கள் முற்றிலும் ஒழிய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு, அந்தப் பையன் வரவேண்டுமென்று பிரார்த்தனையும் சேர்ந்து கொள்கிறது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      குறும்படம் - மனதை வாட்டும் முடிவு தான்.

      தீவிரவாதம் - அதனால் எந்தப் பலனும் இல்லை - எத்தனை அழிவுகள் - கோர முடிவுகள். நல்லதையே நினைப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகம் நன்று குறும்படம் பிறகு காண்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      குறும்படம் - முடிந்த போது காணுங்கள்.

      நீக்கு
  4. சூப்பர் பதிவு! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. நல்ல நடிப்பு. சிறுவன் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துவிட்டான் என்று காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடித்தவர்கள் இருவருமே சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். சிறுவன் உயிர் பிழைத்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் இல்லையே! :(

      நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
  6. இனிய திருமண நாள் வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  7. இனிய திருமண நாள் வாழ்த்துகள்...

    குறும்படம் உங்களுக்கு எழுந்த கேள்விகளும் மனதில் தோன்றின...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண நாள் வாழ்த்துகளுக்கு நன்றி தனபாலன்.

      விடை இல்லா கேள்விகள் தான் தனபாலன். நன்றி.

      நீக்கு
  8. அன்பின் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இப்போதுதான் கருத்துரைகள் மூலம் அறிந்து கொண்டேன். தங்களுக்கும், சகோதரிக்கும் என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் சகோதரரே..இன்று போல் வாழ்வில் வசந்தம் வீசி என்றும் நலமே வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாசகமும், குறும்படமும் அருமை. படத்தின் முடிவை யூகிக்க முடிந்தாலும் இறுதியில் மனம் பாரமாகத்தான் ஆனது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      குறும்படம் - வேதனையான முடிவு தான்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி பானும்மா...

      நீக்கு
  12. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வெங்கட் ஆதி வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. குறும்படம் மனதை கனக்க வைத்து விட்டது. யாருக்கும் இதுபோல் நிலை வர வேண்டாம் இறைவா ! என்று வேண்ட தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கும் இது போன்ற நிலை வரக்கூடாது - உண்மை தான் கோமதிம்மா... எத்தனை எத்தனை இழப்புகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந்னறி.

      நீக்கு
  14. இனிய திருமணநாள் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. இனிய திருமண நாள் வாழ்த்துகள் வெங்கட் அண்ட் ஆதி.

    குறும்படம் மிகச் சிறப்பு.

    தீவிர வாதம் ஒழியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  16. இனிய திருமண நாள் வாழ்த்துகள்
    வெங்கட் + ஆதி .

    கனக்கும் குறும்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....