வியாழன், 27 மே, 2021

Post 2500 - 27 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி ஒன்று - வல்லிம்மா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதை மாந்தர்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுங்கள்.  நான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். 


*****






செப்டம்பர் 2009-இல் ஆரம்பித்த எனது இந்த வலைப்பூ பயணம் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!  இதோ இந்த நாளில் வெளியிடும் இப்பதிவு எனது 2500-ஆவது வலைப்பதிவு.  இந்த நாளில் எனது பதிவாக வெளியிடாமல், வலையுலகு தந்த நட்புகளில் சிலரையும், தில்லி நண்பர்கள் சிலரையும் எனது வலைப்பூ குறித்த அவர்களது எண்ணங்களை எழுதி அனுப்பச் சொல்லி கேட்டிருந்தேன்.  அப்படி எழுதி அனுப்பிய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்தப் பதிவில், முதலாவதாக, வல்லிம்மா என நான் அழைக்கும் வல்லிசிம்ஹன் அவர்கள், எனது வலைப்பூவினைப் பற்றியும் அதில் வெளியிடும் பதிவுகள் குறித்தும் எழுதி அனுப்பிய அவரது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 


*****

எண்ணம் - 1 - வல்லிம்மா:


வெங்கட் நாகராஜ் அவர்களை நினைத்ததும் உடனே தோன்றுவது அவரது பயணக் குறிப்புகள், பயணங்கள்.  கச்சிதமாக இடங்களையும் அங்கே போகும் வழி, கிடைக்கும் உணவு, தங்கும் இடம் எல்லாம் அருமையாகச் சிறப்பாகச் சொல்லுவார்.


எந்தப் பயணத்தையும் சுவாரஸ்யமாக ஆக்குவது அவரது எழுத்துத் திறன். தில்லியிலிருந்து சென்னை வந்தால் கூட அதில் ஒரு சம்பவத்தை விவரித்துப் பதிவிடும் உத்சாகம் நம்மையும் விழிப்படைய வைக்கும். 


நம் இணைய தளத்தில் துளசி கோபால், கீதா சாம்பசிவம் எல்லோருமே எழுதி நம் வாழ்க்கையைச் சிறப்பித்திருக்கிறார்கள். திருமதி கோமதி அரசுவும் படங்களோடு பயணங்களைச் சொல்வது நினைவுக்கு வருகிறது.


வெங்கட்டின் பயணங்களுக்குப் பிறகு நான் மிக ரசிப்பது அவரது குறும்படங்களை. நன்மை எங்கே கிடைத்தாலும் சுவீகரித்து நம்மிடம் பகிர்ந்து விடுவார். அதற்காக எவ்வளவு தேடினாரோ தெரியாது. ஆனால் எண்ட் ப்ராடக்ட் அவரது உழைப்புக்கு சாட்சி. எல்லாமே குடும்பம், அன்பு, தியாகம், கல்வி என்று நல்ல தலைப்புகளோடு நம்மை நெகிழ வைக்கும்.


அடுத்து வருவது நம்மை ஈர்க்கும் காப்பி வித் கிட்டு. தில்லி, ஸ்ரீரங்கம், நாட்டு நடப்பு,  நோய்த் தொற்று, நட்புகள் என்று பலவித தகவல்கள். ஒரு அனாவசிய வார்த்தை இருக்காது. ஒரு மிக நேர்மையான மனிதனின் அணுகு முறை இப்படித்தான் இருக்கும் என்பதை  நம்மை உணர வைப்பார். பெற்றோர்கள் நல்லபடியாக வளர்த்த பிள்ளை நம் வெங்கட்.👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏


நிறை குறைகளைச் சொல்ல நினைத்தாலும் என்னால் குறைகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லாமே நிறைதான். மனைவியோ ஒரு அற்புத நல்ல மனுஷி. மகளோ பண்பான புத்திசாலிக் குழந்தை. குடும்பமே இணையத்தில் உலாவுகிறார்கள். தன் குடும்பத்தின் சிறப்பையும் களஞ்சியமாக  ஒவ்வொரு வாரமும் வெளியிடுகிறார். முக நூலுக்கு அடிக்கடி செல்லாத என் போன்றவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். மிகவும் சொன்னால் கண்ணேறு படுமோ என்று நிறுத்திக் கொள்கிறேன். வெங்கட்டின் சமையல் திறனையும் அவரது வலைத்தளத்தில் காணலாம். வெவ்வேறு மாநிலத்தில் கிடைக்கும் சுவையான பண்டங்களை அழகாகப் படம் எடுத்துப் பதிவதும் எனக்கு மிகப் பிடித்த பதிவுகளில் சேரும். அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் அன்பு வாழ்த்துகள். எல்லாத் துறைகளிலும் திறமையைக் காட்டி வரும் வெங்கட் கதை எழுதுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள். 


அவரது, அவர் மனைவி ஆதி வெங்கட் இவர்களின் மின்னூல்களை வைத்து ஒரு நூலகமே ஆரம்பிக்கலாம்:) அவர் மின்னூல் வெளியிட எல்லோருக்கும் உதவுவது என்னை மிகவும் பெருமைப் பட வைக்கிறது. நல்ல குணம், பண்பு நிறைந்த வெங்கட் பூரண ஆயுள், நிறை ஆரோக்கியம் பெற்று குடும்பத்துடனேயே இருக்க வேண்டும். அதற்கு இறைவன் அருள வேண்டும்.


*****


அவரது வேலைகளுக்கு இடையே, எனக்காக தனது எண்ணங்களை எழுதி அனுப்பிய வல்லிம்மாவுக்கு மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் - அவரது எண்ணங்களைப் படிக்கலாம்! 


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த வலைப்பூவில் வெளிவரும் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணங்களையும் நிறை குறைகளையும் சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


24 கருத்துகள்:

  1. பதிவைப் படிக்கும்போது அம்மா பேசுவது போலவே இருக்கிறது.  நூற்றுக்கு நூறு உண்மை சொல்லி இருக்கிறார்.  வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மாவின் குரல் எப்போது கேட்டாலும் ஒரு பாசம் அதில் இருக்கும்...

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையாக சொல்லி இருக்கிறார்கள். பதிவுகள் இன்னும் தொடரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் தொடர வேண்டும் என்பதே ஆசையும். பார்க்கலாம் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உலகம் சுற்றும் வாலிபன் பற்றிய கணிப்பு சிறப்பு... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியா சுற்றும் வாலிபன் - :) வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வல்லிம்மாவின் அணுபவங்கள் உண்மையை பிரதிபலிப்பவை.
    தாங்கள் மேன்மேலும் பல பயனுள்ள பதிவுகளை வெளியிட வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை பிரதிபலிக்கும் அனுபவங்கள் - மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. 2500 வது பதிவு
    சாதனைதான்
    வாழ்த்துகள் ஐயா
    தங்களின் எழுத்துலகப் பயணம் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனை - :) நான் அப்படி நினைக்கவில்லை. இதுவரை எழுத முடிந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வல்லிம்மா அவர்களின் Review கனகச்சிதமாக இருக்கிறது , வாழ்த்துக்கள் நாகராஜ் சார் . இன்னும் நிறைய எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி அபயா அருணா ஜி.

      நாகராஜ் - எனது தந்தையின் பெயர் சுருக்கம்! நான் வெங்கட்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வலைப்பூ குறித்த வல்லிம்மாவின் அருமையான எண்ணங்கள் அனைத்தும் மிகவும் சரியே.
    வாழ்த்துகள் பாராட்டுகள் வெங்கட்ஜி!

    துளசிதரன்

    வல்லிம்மா மிக மிக அழகாக எழுதியிருக்கிறார். என்ன அழகான கருத்துகள் அதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அத்தனையும் 100 சதவிகிதம் உண்மை. அம்மாவின் வார்த்தைகள் அப்படியே பளிச்!

    வெங்கட்ஜி உங்கள் எழுத்துப் பணி தொடர்ந்து மிளிரட்டும்!!

    வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன்/கீதா ஜி. வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. 2500வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. 2500 வது பதிவு! மிகப்பெரிய, அரிய சாதனை!! இந்த சாதனை பீடுநடையோடு மேன்மேலும் தொடர வேண்டும்!
    திருமதி.வல்லிசிம்ஹன் அவர்கள் மிக அழகாக உங்களின் வலைத்தளம் பற்றி சொல்லியிருக்கிறார்கள்! அத்தனையும் மனதின் ஆழத்திலிருந்து வந்த அருமையான கருத்துக்கள்!
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனை என எனக்குத் தோன்றவில்லை மனோம்மா. முடிந்த வரை எழுதுவோம். வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி. வல்லிம்மாவின் கருத்துகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  10. வாசகம் அருமை.
    2500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    //அவர் மின்னூல் வெளியிட எல்லோருக்கும் உதவுவது//
    வல்லி அக்கா சொன்னது போல் அனைவருக்கும் உதவும் குணம் வெங்கட் நாகராஜின் சிறப்பு.

    வாசகம் சொல்வது போல் தானும் வெற்றிபெற்று அன்பு குழந்தை, அன்பு மனைவியும் வெற்றி பெற உதவியது, நண்பர்களுக்கு உதவியது எல்லாம் உண்மை.
    நேரில் வல்லி அக்காவின் அன்பான பேச்சை கேட்பது போலவே இருந்தது .வல்லி அக்கா என்னையும் குறிப்பிட்டது மகிழ்ச்சி.

    //எல்லாத் துறைகளிலும் திறமையைக் காட்டி வரும் வெங்கட் கதை எழுதுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.//

    கதையும் மிக அருமையாக இருந்தது , வல்லி அக்கா சொன்னது போல் நிறைய எழுதுங்கள்.

    வெங்கட் நானும் 2009 ல் தான் பதிவு ஆர்ம்பித்தேன். உங்களின் சாதனை வியக்கவைக்கும் சாதனை.
    வேலைகளுக்கு இடையே இத்தனை எழுதுவது வியப்பான விஷயம். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் பயணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      வாழ்த்திய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அன்பின் வெங்கட்,
    2500 ஆவது பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகளும்
    ஆசிகளும்.
    இன்னும் நிறைய பதிவுகள் ,பயணங்கள்,
    நெய்வேலி நினைவுகள், ஸ்ரீரங்க வாழ்க்கை
    எல்லாம் இப்போது போலவே அருமையாக வரவேண்டும்.

    உங்கள் நண்பர்கள் பத்ம நாபன்,அரவிந்தன் இன்னும்
    பெயர் மறக்கிறது அவர்கள் எல்லாம்
    கூட்டு சேர்ந்து
    நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
    பத்திரமாக நன்றாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா. தங்கள் கருத்துகளை எழுதி அனுப்பியதற்கு நெஞ்சார்ந்த நன்றி. இனியும் பதிவுகள் தொடரவே ஆசை - நேரமும் காலமும் அனுமதித்தால்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இப்படி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கிறதே என் கவனத்தில் வரவில்லை. 2500 அர்த்தமுள்ள பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வல்லி சிம்ஹன் வார்த்தைகள் மனத்திலிருந்து வந்துள்ளன. அனைத்தும் உண்மை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த ஆசிகள்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....