திங்கள், 8 நவம்பர், 2021

மதுரைக்கு ஒரு பயணம் - ஆதி வெங்கட் - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பணமும் புகழும் நிலையானதல்ல. அவை கிடைத்ததும், வாழ்க்கையில் எல்லாமே கிடைத்து விட்டதுபோல் நிம்மதி அடைவது பைத்தியக்காரத்தனம். தொடர்ந்து ஏதாவது சாதனைகளைச் செய்யவேண்டும் என்று துடிப்புடன் செயல்படுவதுதான் உத்தமம்.


******





மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி மூன்று


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி நான்கு


சென்ற பகுதியில் மதுரையிலிருந்து மேற்கொள்ளப் போகும் ஒரு பயணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! அந்தப் பயணத்தைப் பற்றி தான் இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம். எதிர்பாராமல் அமைந்த இனியதொரு பயணமாக இருந்தது.


சஷ்டியப்த பூர்த்தியின் போது என் மாமி அடுத்த நாள் போகப் போகும் பயணத்திற்காக என்னை அழைத்தார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா! அது எங்கு என்றால் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள குலதெய்வக் கோவில் வழிபாட்டுக்காகத் தான். என் அம்மா வழி குலதெய்வமான 'சடையுடைய சாஸ்தா'வை தரிசிப்பதற்காக!


அதிகாலையிலேயே எழுந்து ஒவ்வொருவராக குளித்து தயாரானோம். எங்கள் பயணத்திற்காக வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பதினான்கு பேரும், காரில் நான்கு பேருமாக மொத்தம் பதினெட்டு பேர் கொண்ட குழுவாக மண்டபத்திலிருந்து புறப்பட்டோம்.  இந்தப் பயணத்தில் இரண்டு குட்டீஸும் எங்கள் குழுவில் இருந்தனர்.


காலை உணவும், மதிய உணவும் மண்டபத்திலிருந்தே பேக் செய்து எடுத்துக் கொண்டோம். தண்ணீர் கேனும் எடுத்துக் கொண்டாச்சு. இனியென்ன! பயணத்தை துவக்க வேண்டியது தான். காலையிலேயே டேஷுக்கு மாத்திரையும் போட்டுக் கொண்டேன். யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாது இல்லையா! வண்டியை விட்டு இறங்கிக் கொண்டேயிருந்தால் நேரமும் ஆகி விடுமே!


முதல் நாளே சிவகங்கை மாமி, 'நாளைக்கு நம்ப கோவில்ல இருந்து திரும்பும் போது எங்களோடயே நீயும் சிவகங்கைக்கு  வந்துடு புவனா! அடுத்த நாள் ஞாயித்துக்கிழம தானே! இருந்துட்டு சாயங்காலமா திருச்சிக்கு போலாம்!' என்று சொல்லி விட்டதால் மதுரையிலிருந்து குலதெய்வக் கோவிலுக்கு கிளம்பும் போதே எங்களுடைய லக்கேஜையும் எடுத்து வேனில் வைத்துக் கொண்டு, சஷ்டியப்த பூர்த்தி தம்பதிகளான மதுரை மாமா, மாமியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டோம். அவர்கள் இந்தப் பயணத்திற்கு வர வில்லை.


சில்லென்ற சூழலில் சிறு தூறலுடன் காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பிய பயணம் கோவில்பட்டி அருகே ஒரு கோவிலில் காலை உணவுக்காக தான் நிறுத்தப்பட்டது. தனித்தனியாக ஃபாயில் டப்பாக்களில் பேக் செய்யப்பட்ட இட்லிகளும், தொட்டுக்கையாக டப்பா ஒன்றில் சட்னியும் தரப்பட்டிருந்தது. 


சிவகங்கை மாமா, கோவிலில் எங்கள்  எல்லோரையும் அமர வைத்து ஆளுக்கொரு டப்பாவைத் தந்து அதில் சட்னியும் போட்டுத் தர சாப்பிட ஆரம்பித்தோம். நாங்கள் வேண்டியதை வாங்கிக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும், இப்போ நான் சாப்பிட உக்காரட்டுமா! என்று கேட்டு விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தார்...:) இவரின் செயல்கள் எப்போதும் என் பாட்டி மற்றும் என் அம்மாவை தான் நினைவுபடுத்தும்...:) எல்லோரையும் அதட்டி உக்கார வைக்க இவரால் மட்டுமே முடியும்..:)


எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் காலியான அட்டை பெட்டி ஒன்றை வைத்து, சாப்பிட்ட ஃபாயில் டப்பாக்களை அதில் போட்டோம். எங்கு சென்றாலும் சமூகத்தின் மீதான அக்கறையும் வேண்டுமல்லவா!  அதேபோல் எதேச்சையாக இரண்டு பேரல்களில் பக்கத்திலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்க அதை உபயோகித்து எல்லோரும் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டோம்.


இனி என்ன! பயணத்தை தொடரலாம்! இப்போதல்ல அடுத்த பகுதியில்..:)


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முகநூலிலேயே எல்லாவற்றையும் வாசித்திருப்பீர்கள்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பயணத்தில் எதையும் ஒழுங்குபடுத்தவும், நேரத்தை மெயின்டெய்ன் செய்யவும், உணவு போன்றவற்றை ஒழுங்கு செய்யவும் சிவகங்கை மாமா போல ஒருவர் தேவைதான்.

    இல்லைனா இடையில் இறங்கும் இடத்தில் ஆளாளுக்கு கடைகண்ணி பக்கம் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். மாமா எப்போதும் இப்படித்தான்.உங்கள் பின்னூட்டத்தை மாமாவுக்கு அனுப்பி வைத்தேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. பயணம் சுவாரஸ்யமாக செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  6. சமூகத்தின் மீதான அக்கறை போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. சிவகங்கை மாமா வாழ்க.
    அருமையான தொடர். வாழ்த்துகள் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமா எப்போதும் அப்படித்தான். எல்லாவற்றையும் ஆர்கனைஸ் செய்து, யார் யாருக்கு என்னென்ன வேலைகள், எப்படி செய்யணும் என்றும் சொல்லி விடுவார்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  8. சிவகங்கை மாமா போல ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இருப்பார்கள். தன்னால் விஷேசங்கல் சிறப்பாக நடக்கும் கவலை இல்லாமல்.

    உறவுகளுடன் பயணம் மிக அருமையாக போகிறது, தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. அவர்களின் இருப்பில் நாம் கவலைகளின்றி குழந்தைகளாக மாறி விடுவோம்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. ஆஹா ஆதி அம்பாசமுத்திரம் போனீங்களா?!!!! அழகான ஊர். தாமிரபரணி ஃபுல் ஸ்விங்க்ல போயிருக்குமே! செம மழை அந்தப் பக்கம் எல்லாம். ஆனா நீங்க போன சமயம் இத்தனை மழை இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

    உங்கள் சிவகங்கை மாமா போல டீம் லீடர் ஆர்கனைஸர் இருந்தா ட்ரிப்ல எல்லாரும் ஒழுங்கா இருப்பாங்க. எல்லாம் ஒழுங்கா நடக்கும் நான் பார்த்தவரையில் பொதுவாக எல்லார் வீட்டிலயும் ஒருவர் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். உறவுகளுடன் இனிமையான பயணம் மகிழ்வான ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்ற சமயம் அவ்வளவு மழை இல்லை. கோவில் அருகே குறுகலாக தான் ஓடிக் கொண்டிருந்தது.

      மாமா மாதிரி ஒருவர் இருந்தால் கவலையின்றி இருக்கலாம்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  10. சிவகங்கை மாமா மாமி பற்றி முன்னரே நீங்க சொல்லி நினைவு இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சில வருடங்களுக்கு முன் சிவகங்கை பயணம் மேற்கொண்ட போது எழுதியிருப்பேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....