புதன், 10 நவம்பர், 2021

மதுரைக்கு ஒரு பயணம் - ஆதி வெங்கட் - பகுதி ஆறு



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகரிலிருந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DON’T PLAN TOO MUCH, LIFE HAS ITS OWN PLANS FOR US.  ALWAYS REMEMBER, SOME OF THE MOST BEAUTIFUL MOMENTS OF OUR LIFE ARE ACTUALLY UNPLANNED.


******






மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி மூன்று


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி நான்கு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஐந்து


சென்ற பகுதியில் மதுரையிலிருந்து புறப்பட்டு குலதெய்வக் கோவில் வழிபாட்டிற்காக அம்பாசமுத்திரத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்ததை பற்றி எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் அந்தப் பயணத்தின் மீதிக்கதைகளை பார்க்கலாம்.


விருதுநகரைத் தாண்டியதும் கோவில்பட்டி அருகே தான் எங்கள் காலை உணவை எடுத்துக் கொண்டோம். அடுத்து கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலின் முன்பு நிறுத்தியதும் காஃபி, டீ , குட்டி பாப்பாவுக்கு பால் என்று அவரவருக்கு விருப்பப்பட்டதை வாங்கிட நானும், மகளும் வேண்டாமென மறுத்து விட்டோம். நாக்கில் சுழட்டிக் கொண்டே இருக்கும்! கோவில்பட்டி கடலை மிட்டாய் மிகப் பிரபலமானது ஆச்சே! அதையும் வேண்டுமென்பவர்கள் வாங்கி சுவைக்க மீண்டும் தொடர்ந்தது எங்கள் பிரயாணம். 


மதுரையிலிருந்து அம்பாசமுத்திரம் வரையிலுமே அருமையான சாலைகள். ஆங்காங்கே மழைத்தூறலுடன்  சுகமான பிரயாணமாக இருந்தது என்று சொல்லலாம். விருதுநகர், கோவில்பட்டி, கயத்தாறு, கடையம்,  திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் என்று எங்கள் வழித்தடம் இருந்தது.


குலதெய்வக் கோவில் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள 'பாப்பான்குளம்' என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதற்கு தென்காசி வழியாகவோ அல்லது திருநெல்வேலி வழியாகவோ செல்லலாம். நாங்கள் சென்றது திருநெல்வேலி வழியாகத் தான், இது ஒருநாள் பயணம் தான் என்பதால்  இப்போது நெல்லையப்பர் கோவிலுக்குச் செல்ல நேரமில்லை. என்னவரும், நானும் 2004ல் நெல்லையப்பர் கோவில், கருங்குளம், அங்கிருந்து ஒருநாள் பயணமாக கன்னியாகுமரி போன்றவற்றுக்கு சென்று வந்திருக்கிறோம்.


இந்தப் பிரயாணத்தில் என் மாமன் மகன்கள் சைகையால் திரைப்படங்களை உணர்த்த முயல, எல்லோருமாக அதில் பங்கேற்று கண்டுபிடிக்க முயற்சி செய்து மகிழ்ந்தோம்.  நல்லதொரு பொழுதுபோக்காக இருந்தது. நேரம் போனதே தெரியலை..:)


திருநெல்வேலியில் என் மாமா இறங்கி அபிஷேகத்திற்கு உண்டான சாமான்களை வாங்கி வர தொடர்ந்தது எங்கள் பயணம். 1 மணியளவில் தான்  கோவிலை சென்றடைந்தோம். பூர்ணா புஷ்கலா சமேத சடையுடைய சாஸ்தாவின் கோவில் இது. அருகே கிராம தேவதைகளாக வன்னியராயன், இருளப்பர், மாடத்தி, சுடலை, தளவாய்  அருள்பாலிக்கின்றனர். எங்கள் மூதாதையர்கள் இந்தப் பகுதியில் வசித்திருக்கிறார்கள். என் அம்மாவே இந்தக் கோவிலுக்கு வந்ததில்லையாம். சரி! கோவிலுக்குள்ளே செல்வோம்.


வண்டியை விட்டு இறங்கியதும் அபிஷேக ஆராதனைகளுக்கு உண்டான சாமான்களை இறக்கி வைத்து,  ஒருபுறம் பிரசாதங்களை தயார் செய்ய, உதிரி புஷ்பங்களை எடுத்து வைத்து, வாங்கி வந்திருந்த அகல் விளக்குகளை தண்ணீரில் போட்டு வைத்து பின்பு துடைத்து திரி போட்டு எண்ணெய் விட்டு என்று எல்லோருமாக பங்கெடுத்துக் கொண்டு ஆளுக்கொரு வேலையாக செய்தோம். இடையில் பழங்கதைகள் முதல் வெப் சீரிஸ் வரை எங்கள் பேச்சும் களைகட்டியது.


அடுத்து அபிஷேக ஆராதனைகள் துவங்கின. என் மாமா பெண்ணின் கணவர் மந்திர உச்சாடனம் செய்ய, கோவில் குருக்கள் அபிஷேகம் செய்ய மனம் இறையைத் துதித்து பிரார்த்தனை செய்ய நல்லதொரு தரிசனம் கிடைக்கப் பெற்றது. சன்னிதிக்கு வெளியே இருந்த வன்னியராயன் சன்னிதியிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


இந்த ஆராதனைகள் எல்லாம் முடியவே மதியம் மூன்று மணியாகி விட்டது. அடுத்து மதிய உணவை எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்பணுமே! என்னென்ன சாப்பிட்டோம்? எப்போது கிளம்பினோம்? போன்றவை அடுத்த பகுதியில்..:)


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. சமீபத்தில்தான் நாங்களும் எங்கள் குலதெய்வம் கோவில் சென்று வந்தோம் என்பதால் எனக்கும் அந்த அபிஷேக, பூஜை நினைவுகள்...  பயணத்தின்போது லேசான மழை பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள்.  இப்போது சென்னை எதிர்நோக்கி இருப்பது பயமுறுத்தும் மழை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். சென்னையை பயமுறுத்துகிறது மழை.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. அபிஷேக சாமான்கள் வாங்குவதற்காக மட்டும் திருநெல்வேலியில் ஒருவர் இறங்கினார். மற்றபடி நேரம் இல்லை.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  5. வாசகமும் பயண அணுபவமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  6. எங்கள் ஊர் பக்கம் போய் வந்து இருக்கிறீர்கள்.அம்பாசமுத்திரம் பக்கம் தான் எங்கள் குலதெய்வ கோயில்.
    திருநெல்வேலியில்தான் கோவிலுக்கு வேண்டிய பொருட்கள், வஸ்திரங்கள் வாங்குவோம்.
    உறவுகளுடன் பொழுது போக்கி , இறை தரிசனம் செய்து வந்தது மகிழ்ச்சியான தருணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் குலதெய்வமும் அம்பாசமுத்திரம் அருகில் தான் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சிம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. என்னவரும், நானும் 2004ல் நெல்லையப்பர் கோவில், கருங்குளம், அங்கிருந்து ஒருநாள் பயணமாக கன்னியாகுமரி போன்றவற்றுக்கு சென்று வந்திருக்கிறோம்.//

    அட கருங்குளம் போயிருக்கீங்களா? கருங்குளம் கோயில் என் அத்தையின் புகுந்தவீட்டினர் குலதெய்வக் கோயில்.

    தென்காசி வழி இன்னும் அழகாக இருக்கும்.

    அடுத்த பகுதிதான் முக்கியமானதாச்சே அதாங்க லஞ்ச் என்ன சாப்பிட்டீங்கன்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.அப்போது திருநெல்வேலியில் ஒரு நண்பர் வீட்டில் தான் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் தான் எங்களை கருங்குளத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தென்காசி வழி இன்னும் அழகாக இருக்குமா!!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. எங்க வீட்டிலும் பயணத்தின் போது டம்ப்ஷரட்ஸ் விளையாடுவோம். ரொம்பவும் பிடித்த விளையாட்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வீட்டிலும் இந்த விளையாட்டு உண்டா! சூப்பர்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. அன்பின் ஆதி,
    நல்லதொரு பயணம் . அதை நீங்கள்
    விவரமாகச் சொல்லி இருப்பதும் அருமை.
    சென்னையில் மழை மிகவும் பயம் கொடுக்கிறது. இறைவன்
    அருளால் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. நலமே விளையவேண்டும் - அது தான் எல்லோருடைய அவாவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....