புதன், 2 ஜூலை, 2025

மின்னூல் வெளியீடு - சதுரகிரிக்கு ஒரு பயணம் - பாம்பின் சிகரம் - தகவல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வலைப்பூவில் எழுதிய பயணக் கட்டுரைகளைத் தொகுத்து மின்னூலாக அமேசான் தளத்தில் வெளியிடுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக அந்த வழக்கம் தடைபட்டிருந்தது. சில சிக்கல்கள் இருக்க அதை சரி செய்ய எந்த முயற்சியும் செய்யாமல் விட்டுவிட்டேன். தற்போது மீண்டும் ஒரு முயற்சி. அதன் விளைவு மீண்டும் இரண்டு மின்னூல்களை வெளியிட முடிந்தது. 


சதுரகிரிக்கு ஒரு பயணம்:



சதுரகிரி குறித்து சில இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களில் படித்து இருக்கிறேன். அவர் எழுதிய தகவல்கள் என்னை பிரமிக்க வைப்பதாக இருந்தது. அது மட்டுமல்லாது நான்கு வருடங்களுக்கும் முன்னர் இருக்கலாம்… எனது ஒரு தமிழகப் பயணத்தில், வலையுலக நண்பரும், மிகச்சிறந்த எழுத்தாளரும் ஆன திரு ரிஷபன் ஶ்ரீநிவாசன் அவர்களுடன் அவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சமயம், அவர் சென்று வந்த சதுரகிரி மலைப்பயணம் குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். அவர் தனது நண்பருடன் சென்று வந்த அந்த மலைப்பயணம் குறித்து மிகவும் ஸ்லாகித்து பேசியபோதே, அவரிடம் விரைவில் நானும் நீங்களும் சேர்ந்து அங்கே பயணிக்க வேண்டும் என்று எனது ஆசையைச் சொல்லி இருந்தேன்.


ஈசன் அருளிருந்தால் தான், அவன் அழைப்பிருந்தால் தான் சதுரகிரி உறையும் சந்தன மஹாலிங்கம் மற்றும் சுந்தர மஹாலிங்கம் ஆகியோரைச் சந்திக்க முடியும் என்பதை முழுவதுமாக உணர்ந்தே இருந்தேன். வாய்ப்பு அமைந்ததும் சென்று வந்து விட்டேன். அந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் - எனது வலைப்பூவில் கட்டுரைகளாக வெளிவந்தவற்றைத் தொகுத்து இதோ அடுத்த மின்னூலாக வெளியிட்டு உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறேன்.


மின்னூலை வாசிக்க சுட்டி கீழே...


சதுரகிரிக்கு ஒரு பயணம்


******


பாம்பின் சிகரம்:




Nag Tibba என்ற ஒரு மலைச் சிகரம், உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் அருகே இருக்கும் உயரமான ஒரு மலைச்சிகரம். ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Serpent’s Peak - அதாவது பாம்பின் சிகரம்! இந்த மலைச் சிகரத்தினை அடைய முதலில் நாம் கடல் மட்டத்திலிருந்து 4640 அடி உயரத்தில் அமைந்திருக்கும் அழகான சிறு கிராமம் ஆன பந்த்வாடி வரை வாகனத்தில் சென்று அடைய வேண்டும்.


அங்கிருந்து மலையேற்றம்... நடந்து தான் செல்ல வேண்டும். நடக்க நடக்க நாம் பாம்பின் சிகரம் என அழைக்கப்படும் சிகரத்தின் உச்சியை அடைந்து விடுகிறோம். இந்தச் சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 9915 அடி உயரம். அப்படி நடந்து சென்ற போது கிடைத்த அனுபவங்களின் தொகுப்பாக நேற்று எனது அடுத்த மின்னூலை அமேசான் kindle தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன். 


மின்னூலை வாசிக்க அதன் சுட்டி கீழே தந்து இருக்கிறேன். நண்பர்கள் அனைவரும் வாசித்து தங்களது கருத்துக்களை வழங்க வேண்டுகிறேன். 


பாம்பின் சிகரம்


முந்தைய நூல்களுக்கு தந்த ஆதரவினை தொடர்ந்து தர வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

2 ஜூலை 2025


7 கருத்துகள்:

  1. இரண்டு மின்னூல் வெளியீட்டிற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. வாழ்த்துகள் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. Super Venkat. உங்கள் பயண ஆர்வமும் அதை எழுத்தில் வடித்து அதன் மூலம் வாசகர்களையும் அழைத்துச் செல்வது மிகச் சிறப்பு.மேலும்.மேலும்.பல சிகரங்களை(எழுத்திலும்) நீங்கள் தொட என் வாழ்த்துக்கள். படித்தபின் கருத்தை வெளியிடுகிறேன்.

    விஜி வெங்கடேஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி வெங்கடேஷ்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்களது பயண கட்டுரை மின்னூல் வடிவில் வந்தமை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தொடரட்டும் தங்கள் எழுத்துலகப் பணி. நாங்களும் உங்கள் அருமையான எழுத்துக்களை படிக்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இரண்டு மின்னூல் வெளியீட்டிற்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....