செவ்வாய், 29 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது


ஜான் சல்லிவன் பூங்கா:


சென்ற பகுதியில் கோத்தகிரியை சற்று சுற்றி விட்டு கோவைக்கு கிளம்பலாம் என எண்ணி காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்! அதில் முதலாவதாக சென்ற ஜான் சல்லிவன் மெமோரியல் அன்று புதன்கிழமை என்பதால் மூடியிருந்தது! வெளியே நின்று அந்த நினைவகத்தை படம் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சற்று தூரத்தில் இருந்த பூங்காவுக்குச் சென்றோம்!










சிறிது தூரத்திலேயே ஜான் சல்லிவன் பூங்கா என்ற வளைவு நுழைவாயில் தென்பட்டது! அதன் வழியே உள்ளே சென்று படிகள் வழியாக மேலே பூங்காவுக்கு செல்லலாம்! அவ்வளவு தூரம் படியேற வேண்டாம் என்று மாற்றுப் பாதையில் மேலே வரை காரிலேயே சென்றோம்! இந்த பூங்கா காலை 10 மணிக்கு திறக்கப்படும்! நுழைவுக் கட்டணமும் உண்டு! அமைதியான சூழலில் ஒரு மலர்த்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது! ஒருபுறம் மலைகளும் பசுமையுமாக இயற்கையின் அழகு என்றால் மறுபுறம் கண்ணுக்கு குளிர்ச்சியாக பல வண்ணங்களில் மலர்கள்!


பெண்கள் சிலர் அங்கே மலர்த்தொட்டிகளை பராமரிக்கும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்! சிறு புன்னகையுடன் அவர்களைக் கடந்து மலர்களை பார்வையிடத் தொடங்கினேன்! மேடும் பள்ளமுமான சற்று கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு ஏதுவாக பாதையை அமைத்து அதில் தோட்டமாக செய்திருப்பது சிறப்பு! இங்கேயே குழந்தைகள் விளையாடவும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது!


ஆங்காங்கே இருக்கைகளும் இங்கு போடப்பட்டுள்ளன! அந்த சமயத்தில் எங்கள் எல்லோருக்கும் ஒரே சிந்தனை தான் தோன்றியது! இப்படியொரு இடத்தில் ஒரு புத்தகம் மட்டும் கையிலிருந்தால் ஆழ்ந்து போகலாமே என்று..🙂 அந்த அமைதி மிகவும் ரசிக்கச் செய்தது! ஆங்காங்கே மலர்களோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்! அடுத்து நாங்கள் எங்கு போகலாம் என்று யோசித்தோம்! 


Catherine falls இருக்கிறது ஆனால் அது காட்டுப்பாதையில் நிறைய படிகள் இறங்கி ஏற வேண்டும் என்றார் நண்பர் மோகன்! நடக்கவும் வேண்டும் என்றார்! அது என்னால் ஆகாது என்பதால் என்னவர் வேண்டாமென சொல்லி விட்டார்! அதுவும் போக நாங்கள் சென்றது வாரநாட்களில் என்பதால் அங்கு யாருமே இருக்கமாட்டார்களாம்! அந்த குளிரில் குளிப்பதெல்லாமும் சாத்தியமில்லை! அதனால் அடுத்து நாங்கள் சென்ற இடம் Tea factory!


நீலகிரியின் சிறப்பே தேயிலைத் தோட்டமும் சுவையான தேநீரும் தான்! அதைப் பார்க்காவிட்டால் எப்படி இல்லையா! நண்பர் மோகன் எங்களை அடுத்து அழைத்துச் சென்ற இடம் Darmona Tea factoryன் free Tea tourக்கு! ஆமாங்க! அவர்களே இப்படித்தான் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்கள்! நண்பர் மோகன் உள்ளே சென்று அனுமதி கேட்டதும் ஒரு பெண்மணி வந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்! அவரின் பெயர் சுமதி! இனி சுமதியுடன் ஒரு தேநீர் உலாவை பார்க்கலாம்!


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

29 ஜூலை 2025


6 கருத்துகள்:

  1. ஜான் சல்லிவன்...  யார் அவர்?    முன்னாள்  நீலகிரி மாவட்ட கலெக்டரா?  படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரிட்டிஷ் காலத்தில் கோவை கலெக்டராக இருந்தவர், ஸ்ரீராம், இவர் நீலகிரியின் தந்தைனும் சொல்றாங்க.

      போன பதிவில் ஆதி சொல்லியிருந்தாங்க, இவர் நீலகிரியில் பலவற்றையும் உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது என்றும்.

      கீதா

      நீக்கு
    2. இதற்கான் பதிலை கீதா சேச்சி சொல்லியிருக்காங்க பாருங்க சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    3. ஆமாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  2. பூங்காவும் மலைக்காட்சிகளும் அழகு.

    படங்கள் சூப்பர். அந்தப் பூங்காவில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து சுற்றிலும் மலைகளை ரசிக்கும் தருணத்தை நினைத்துப் பார்த்தேன். சுகம் சுகம்....அப்படியே தியானத்தில் ஆழ்ந்துவிடலாம். நீங்க சொல்லியிருப்பது போல் கையில் ஒரு புத்தகமும் இருந்துவிட்டால்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அருமையான இடம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....