அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஆலய உலா பதிவாக இன்றைக்கு விஜி வெங்கடேஷ் அவர்களின் பக்தி உலா உங்கள் பார்வைக்கு - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ், புது தில்லி.
உக்கடம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தரிசனம் (28.06.25)
இந்தக் கோவிலுக்கு போகலாம் என்று 2 மாதங்களாகவே பேச ஆரம்பித்து மழை அழிச்சாட்டியம் செய்ய, தள்ளித் தள்ளிப் போய் இன்று போக நாள் குறிக்கப் பட்டது. 14 பேர்கள் போவதாய் நிச்சயிக்கப் பட்டு அது சுருங்கி 10 பேராகி காலை 10 மணிக்கு மூன்று வாகனங்களில் எங்களை ஏற்றிக் கொண்டு கோவில் நோக்கிப் பயணம். நல்ல வெயில். போகும் வழியெங்கும் பச்சைப் பசேல் (சமீபத்திய மழையின் கொடை!). அரட்டை அடித்துக்கொண்டு சென்றதால் சுற்று வழியில் (road block) 20 நிமிடங்கள் கொண்ட பயணம் 45 நிமிடங்களானது தெரியவில்லை (fare கொடுக்கும்போது தெரிந்தது🙂)
கோவில் சென்றடைந்து வரிசையில் நின்றோம். மீதிப் பேரும் வந்து சேர்ந்து கொண்டனர். சனிக்கிழமை ஆதலால் நல்ல கூட்டம். நான் பார்த்த கோவிலுக்கும் (சுமார் 25 வருஷங்களுக்கு முன்) இன்று பார்த்ததற்கும் மெகா மகா வித்யாசம். நன்றாக விரிவாகப் பட்டு பல சன்னதிகளுடன் ஜே ஜே என்றிருந்தது. எங்கும் சுத்தம். எங்கள் எல்லோர்க்காகவும் திருமதி.தவமணி அவர்கள் அர்ச்சனை சீட்டு வாங்கி நீட்ட அதை ஒருவர் க்ளிக்கிக்கொண்டு நகர, வரிசை நடுவிலேயே பல சிறிய குங்குமப் பொட்டலங்களுடன்கூடிய ஒரு மூங்கில் தட்டோடு அர்ச்சகர் அர்ச்சனை சீட்டு photo பார்த்து எங்கள் பெயர் நக்ஷத்திரம் கேட்டு மின்னல் வேகத்தில் எல்லோர்க்காகவும் சங்கல்பம் செய்து கையில் குங்கும பொட்டலத்தை வைக்க நகர்ந்தோம்.
நினைத்த அளவு நேரமாகாமல் விரைவிலேயே சன்னதி அடைந்து வாங்கி வந்த துளசி மாலையை கர்ப்ப கிரகத்துக்கு முன்னாலேயே, அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் (எல்லா மலர்களும் துளசியும் அந்த உதவியாளர் கூடையில் தஞ்சம் அடைகின்றன - பெருமாள் பின்னர் வந்து அதை ஏற்றுக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் சமர்ப்பித்தோம்).
அவசரமாக உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு நிமிர கண் முன்னே அந்தக் கனல்! இரணியனின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக் கொண்டு நகங்களில் ரத்தம் சொட்டச் சொட்ட அண்ட சராசரமும் நடுங்க கர்ஜித்து பின் பிரகலாதனை பார்த்து குளிர்ந்து தணிந்த அந்த மாபெரும் உக்கிரக பிரபஞ்ச சக்தி அழகாகத் தன் மடியில் லட்சுமியை அமர்த்திக் கொண்டு சாந்தமாய் அருள் பாலிக்க கண் சிமிட்டும் நேரத்தில் நம் மனதை ஒரு வெற்றிடமாக்கி எதுவுமே வேண்டத் தோன்றாமல் நம்மை அடித்து அனைத்துத் தனக்குள் சேர்த்துக் கொண்டது! அவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே நாம் கையை நீட்ட அதில் வந்து சேர்ந்தது துளசிப் பிரசாதம்!
ஓம் பிரஹ்லாத வரதாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
சீக்கிரம் நகருங்கம்மா குரலால் அடுத்த நிமிடம் வெளிச் சுற்றில் நாம். கண்களிலும் கருத்திலும் அவ்வுருவமே தேங்கி நிற்க, மெதுவாக சுற்றுப் பிராகாரத்திலுள்ள சக்கரத்தாழ்வார், அவர் பின் பக்கம் இருந்து அருளும் யோக நரசிம்மர், ஹயக்ரீவர், ஆஞ்சநேயரை தரிசித்துவிட்டு மீண்டும் சன்னதிக்கு முன்னால் லக்ஷ்மி நரசிம்மரை நோக்கி கை குவித்து வணங்கும் கருடாழ்வார் தயவில் (அவர் பின்னாலிருந்து) மீண்டும் நரசிம்மப் பெருமாளை அங்கிருந்தே திவ்ய தரிசனம்.
பின்னர் வெளிச் சுற்றில் ஒரு ஹால் போன்ற இடத்தில் நாலா புறமும் ராமானுஜர், மத்வர், மூர்த்திகளும் அஷ்ட லட்சுமிகள், லக்ஷ்மி நரசிம்மர் மூர்த்திகள் சுவற்றில் அமைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றிற்கு மக்கள் சாரி சாரியாய் கையில் தாங்கிய தட்டுகளில் எரியும் விளக்குகள் வைத்து தங்கள் கையால் சுற்றி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். அந்த ஹாலின் வெளியே ஒரு பெரிய board இல் அங்கு விளக்கேற்றுவதால் என்னென்ன பலன் என்று ஒரு 20,25 பலன்களை வரிசைப் படுத்தியிருந்தார்கள் (அந்த வரிசையில் இல்லாததே இல்லை… விரைவில் Elon Musk போல் multi billionaire ஆக - என்பது தவிர😁 மன்னிக்க, in a lighter note🙏🏻😊)
நாங்கள் பார்த்தவரை லக்ஷ்மி நரசிம்மருக்கு மாலை சாற்றுவதோ அர்ச்சனை செய்வதோ கற்பூர ஆரத்தி காட்டுவதோ நடை பெறவில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் நடக்கும் போலிருக்கிறது! உள்ளேயும் யாரையும் அனுமதிப்பதில்லை. ஒரு 10, 15 அடி தள்ளித்தான் அந்த தெய்வம் காட்சி கொடுக்கிறது. அதனாலென்ன! அதன் சக்தியின் விஸ்தீரணம் மிகப் பெரிது! குறையொன்றுமில்லை🙏🏻
சுற்று பிரகாரத்திலேயே மற்றவர்க்காக அமர்ந்து காத்திருந்தோம். அனைவரும் வந்து சேர, மறுபடி திருமதி.தவமணியின் தயவால் (🙏🏻) சுவையான புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தட்டை, அப்பம் etc etc போன்ற பிரசாத வகைகள், பெருமாள் தரிசனத்தால் கண்ணும், மனமும் நிரம்பியிருந்த எங்கள் வயிற்றையும் நிரப்பியது (இதைப் படித்துவிட்டு எங்களுடன் வராதவர்கள் ஏங்கலாம்!😁 உங்களைக் கொக்கி போடவே இதை எழுதினேன்😊)
பின்னர் நாங்கள் லக்ஷ்மி நரசிம்மரை தரிசிக்க வந்ததை என்றும் நினைவில் கொள்ள புகைப் படங்கள் எடுத்துக்கொண்டு (பின்னே! அது இல்லாமையா?!) taxi book செய்து கொண்டு வீடு நோக்கிப் பயணம்.
வரும் வழி முழுதும் வாய் இன்னபிற செய்திகளை அசை போட, மனம் மட்டும் அருளை அள்ளிச் சொரியும் அந்த மிக அழகான அந்த லக்ஷ்மி நரசிம்மரின் எழிலிலேயே........
இனி உனை எப்போது மறுபடி காண்போம்.....
ஓம் நமோ நரசிம்மாய🙏🏻🙏🏻🙏🏻
*******
இன்றைய பதிவு உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
4 ஜூலை 2025
கோவிலுக்குள் செல்,,,,,,, கேமிரா எடுத்துச் செல்லக்கூடாது என்று அளவீடு இருக்கும் நிலையில் கர்ப்பகிரகம் அருகே செல்லில் படம் பார்த்து அர்ச்சனை.. அருமை.
பதிலளிநீக்குஇறைவனைப் பார்த்த நொடியின் வர்ணனை ரசித்தேன். அந்த உணர்வு மாறாமல் நீண்ட வரிகளில் மறந்து விடுமோ என்பது போல ஒரே மூச்சில் சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி ஶ்ரீராம்ஜி.
நீக்குவிஜி.
ஆ.. புளியோதரை... தொன்னை எடுங்கள், கொண்டாடுங்கள். புகைப்படத்தில் எது நீங்கள் என்று சொல்லவில்லையே...
பதிலளிநீக்குகண்டு பிடிப்பவர்களுக்கு பொற்கிழி பரிசு!
நீக்குவிஜி.
ஒன்பது வெவ்வேறு புனைப்பெயர்களில் வந்து கண்டுபிடித்து விடுவேன்! பாவம், உங்களுக்கு ஒரு பொற்கிழியை நஷ்டப்படுத்த வேண்டாம் என்று பார்க்கிறேன்!!
நீக்குஆஹா.சரி ஒரு clue.ஆஞ்சநேயருக்கு தொடர்புடைய ஒன்று என்னிடம் இருக்கு.
நீக்குவிஜி
புரிகிறது. ஆனால் அது இருவரை தொடர்பு படுத்துகிறதே....
நீக்குசரி ஒரு clue.ஆஞ்சநேயருக்கு தொடர்புடைய ஒன்று என்னிடம் இருக்கு.//
நீக்குஎங்கேங்க கதை!!!!!!!??? ஹாஹாஹா....சும்மா...ஆஞ்சுவுக்குத் தொடர்புடைய----ஆஞ்சுவின் முகம் போன்று மாஸ்க் போட்டுக் கொண்டிருக்கீங்க!
கீதா
சரி ஒரு clue.ஆஞ்சநேயருக்கு தொடர்புடைய ஒன்று என்னிடம் இருக்கு.//
நீக்குஎங்கேங்க கதை!!!!!!!??? ஹாஹாஹா....சும்மா...ஆஞ்சுவுக்குத் தொடர்புடைய----ஆஞ்சுவின் முகம் போன்று மாஸ்க் போட்டுக் கொண்டிருக்கீங்க!
கீதா
நல்லவேளை ஜாடை மாருதி மாதிரி இருக்குன்னு சொல்லலை.சொல்லியிருந்தா ஆஞ்சநேயர் வருத்தப் பட்டிருப்பார்.அவர் சுந்தரர் ஆச்சே.
நீக்குவிஜி.
விஜி வழக்கம் போல இன்ட்ரெஸ்டிங்காகச் சொல்லியிருக்கீங்க. நானும் 25 வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். அதன் பின் கோயம்புத்தூர் போயிருந்தாலும் உக்கடம் கோவிலுக்குப் போகவில்லை. கோயம்புத்தூரில் 3 வருடங்கள் இருந்த போது சென்றது.
பதிலளிநீக்குஇப்ப நிறைய மாறியிருப்பதையும் தெரிந்து கொள்கிறேன்.
கீதா
நன்றி கீதா mam
நீக்குஅதானே புளியோதரை இல்லாமல் நரசிம்மர் கோவிலா!!!!
பதிலளிநீக்கு//நீங்க (இதைப் படித்துவிட்டு எங்களுடன் வராதவர்கள் ஏங்கலாம்!😁 உங்களைக் கொக்கி போடவே இதை எழுதினேன்😊) //
ஹாஹாஹா நாங்க இங்க இப்ப பெங்களூர்ல தினமுமே கோவில் பிரசாதத்துல!!! அருகிலுள்ள சிவன் கோவிலில். ஆனா புளியோதரை மட்டும் என்னதான் சொல்லுங்க தமிழ்நாட்டுப் புளியோதரை அதுவும் எங்க திருனெல்வேலிப் பக்கம் திருக்குறுங்குடிக் கோவில் புளியோதரையை சாப்பிட்டுப் பார்த்தீங்கனா.....ஆனால் அங்கு தினமும் எல்லாம் கிடைக்காது.
கீதா